I just found this pic 1) from Dinamalar Site ..They have deliberately forgotten to mention Karmaveerar Kamaraj ! We all know about Dinamalar anyway..!
Attachment 2343
Printable View
I just found this pic 1) from Dinamalar Site ..They have deliberately forgotten to mention Karmaveerar Kamaraj ! We all know about Dinamalar anyway..!
Attachment 2343
To
All MT Devotees.
am sure, you will enjoy this ! Ezhaigalin Pasiyai Poakiyavar..Pasiyoadu Unavu arundhum Kaatchi !
Attachment 2344
THANK YOU Mr. VASUDEVAN, FOR HAVING POSTED THE RARE IMAGE OF OUR BELOVED M.G.R.'s 'UTTHAMA BUTHIRAN' STILL.
I AM GRATEFUL TO YOU FOR EXHIBITING SUCH EXCEPTIONAL & ATYPICAL NICE PICTURE AND MADE US TO ENJOY.
EXPECTING MORE FROM YOU, LIKE THIS IMAGE(S)
Ever yours : S. Selvakumar
Endrum M.G.R
Engal IRAIVAN
உண்மை. மக்கள் திலகத்தின் தோற்றம், காஸ்ட்யூம் எல்லாம் அருமையாக இருக்கும். ஆயிரம் நிலாவே வா பாடல் காட்சிகளிலும் மக்கள் திலகத்தின் திரைத் தோற்றம் மிக நன்றாக இருக்கும்.
மக்கள் திலகம் தன்னை நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும், கேமராவுக்கு பின்னும் இசை உட்பட பிற துறைகளிலும் தன்னை தமிழகத்தின் உயர்ந்த கலைஞனாக நிலை நிறுத்தி கொண்டவர். அதனாலேயே, மக்கள் திலகம் திரைத்துறையில் இருந்த காலம் வரை, அவருக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்தார். மக்கள் திலகம் திரைத் துறையை விட்டு விலகும் தருணத்தில் வந்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்கள் கூட நன்றாக இருந்ததற்கு காரணம் மக்கள் திலகம் நடிப்பை தாண்டி, இயக்குனர் மற்றும் பிற துறைகளில் பன்முகம் காட்டியது தான்.
http://i42.tinypic.com/334n4uo.jpg
Thanks to Mr. Muthaiyan Ammu
அடிமைப்பெண்ணில் மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்பை மனதார பாராட்டிய திரு. மாசானம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..மேலும் கலையின் மன்னாதி மன்னனின் பன்முகத்திறமையை பாராட்டிய தாங்கள் எல்லோர் மனத்திலும் நிற்கின்றீர்..மீண்டும் நன்றி ...திரு..மாசானம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
காஞ்சித்தலைவன் -1963
சமீபத்தில் இந்த படம் பார்க்க நேர்ந்தது . மக்கள் திலகம் அவர்களிடம் பானுமதி அவர்கள் பல்லவ நாட்டு அரசவையை மிகவும் கேவலமாக சிரித்துகொண்டே பேசும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசம் -ராஜ நடை -கம்பீரம் .....விவரிக்க வார்த்தைஇல்லை . என்ன ஒரு அற்புதமான நடிப்பு .
மக்கள் திலகமே
உங்கள் இயற்கையான நடிப்பே நடிப்பு.
http://youtu.be/JFSj6CN6xdg
ENGA VEETTU PILLAI - COIMBATORE DELITE - SECOND WEEK
MADURAI VEERAN - COIMBATORE ROYAL YESTERDAY AND TODAY 2 SHOWS (MORNING & MATINEE) TOTAL COLLECTION Rs.23,000/-.
MSG FROM MR.HARIDASS, COIMBATORE.
https://www.youtube.com/watch?v=0VahQ5GvDn0
PATTIKATTU PONNIAH
கோவை நகரில் மக்கள் திலகத்தின் எங்கவீட்டு பிள்ளை இரண்டாவது வாரமாக தொடர்வதும் . மதுரைவீரன் இரண்டு நாட்களில் ரூ 23,000 வசூல் விபரமும் அளித்த திரு ரவி சார் . நன்றி .
பட்டிகாட்டு பொன்னையா படத்தில் மக்கள் திலகம் பேசும் அருமையான காட்சியினை பதிவிட்ட திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .
எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....
1950 முதல் 1960 வரை வந்த படங்களில்
மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை
புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .
இது வரலாறு .
ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .
இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .
மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .
என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது .
ADIMAIPENN- TRAILER
http://youtu.be/UMcJl5D5qU4
திரு வினோத் அவர்களே, மக்கள் திலகத்தின் நடிப்பு குறித்து உங்களின் பதிவு ஏற்புடையது.
/இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல ./
நாமும் பதிலுக்குப் பதில் லாவணி பாடலாம்.ஆனால், அது வாழ்ந்து மறைந்து, ரசிகர்களின் மனதில் வாழும் சாதனையாளர்களை சிறுமைப் படுத்துவது போலாகும்.
/என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது ./
தமிழ்த் திரை வரலாறு ஆகட்டும்..தமிழக அரசியல் ஆகட்டும்..உச்சம் தொட்ட மக்கள் திலகம் வரலாற்றின் பக்கங்களிலும், தமிழர் நெஞ்சங்களிலும் என்றுமே இடம் பெறுவார்.
வினோத் சார்..தங்களின் கட்டுரை அருமை..
அழத்தெரியாது..சோக நடிப்பு வராது..இப்படி சொன்னவர்கள் நீங்கள் சொல்வது போல் எம்ஜிஆரின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள்..
1. தன்னுடைய இயற்கையான சோக நடிப்பால் எல்லோர் இதயத்தையும் கசக்கி பிழிந்து என் தங்கை படத்தை வெள்ளி விழா படமாக்கியவர் எம்ஜிஆர்..ஒரு குடும்பத்தில் நிகழும் அண்ணன் தங்கை பாசத்தை அப்படியே யதார்த்தமாக மிகையில்லா நடிப்பால் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தவர்..பின்னால் வந்த அனைத்து அண்ணன் தங்கை படங்களுக்கு அதுதான் முன்னோடி.
2. தேவருக்கு வாழ்வு தந்து வசூலில் சாதனை ஏற்படுத்திய தாய்க்குப்பின் தாரம் படத்தில் தன் தந்தை இறந்ததும் அந்த சுடுகாட்டில்..தந்தையின் சாம்பலின் மீது அவர் அழுது துடித்து நடிக்கும் நடிப்பு ஒரு உண்மையான தந்தை மகன் பாசத்தை பிரதிபலிக்குமே..அந்த நடிப்புக்கு இணை உண்டோ?
3. பாசம் படத்தில் தாயின் மீது கொண்ட பாசத்தை ஆயிரம் முக பாவங்களைக் காட்டி இயற்கை நடிப்பின் இலக்கணத்தை சொல்லிதருவாரே.. அந்த மிகையில்லா நடிப்பு யாருக்கு வரும்..
4. தாய்க்கு தலைமகன் படத்தில் தன் அண்ணன் அடித்தாலும் உதைத்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தாய்க்காக அண்ணனை (அசோகன்) தன் வீட்டுக்கு வர சொல்லி அவர் காலை பிடித்துக்கொண்டு கதறும் காட்சியை இன்று பார்த்தாலும் நம் இதயம் புண்ணாகுமே..அந்த நடிப்பை குறை சொல்ல முடியுமா?
5. பெற்றால்தான் பிள்ளையா படத்தில் தந்தை பாசத்தை அவர் கொட்டி நடிக்கும் நடிப்பில் இமயமாய் உயர்ந்தாரே..அது யார் நடிப்பு..எம்ஜிஆர் நடிப்புதானே..அந்த படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை பார்த்த நடிகர் திலகம் இந்த கதை என்னிடம் வராமல் எப்படி போனது என்று வியந்தாரே..
6. தாய் சொல்லை தட்டாதே படத்தில் அண்ணன் என்று தெரியாமல் அடித்துவிட்டு அதற்கு தாயிடம் மன்னிப்பு கேட்டு கதருவாறே..கண்ணாம்பாவும் தலைவரும் கதறி நடிக்கும் நடிப்பில் அனைவரும் கலங்கினரே..
7. குடும்பத்தலைவன் படத்தில் தான் காதலிக்கும் ஒருத்தியை அண்ணன் காதலிக்கிறார் என்று அறிந்தும் அவர் படும் வேதனையும் அதை அவர் வெளிப்படுத்தும் விதமும்..அப்பப்பா அசோகனும் எம்ஜிஆரும் போட்டி போட்டு நடிப்பர்களே..
8.தாயை காத்த தனயன் படத்தில் காதலியை வேண்டாம் என்று தாய் சொன்னதும் காதலியையும் விட முடியாமல் தாயின் வார்த்தையையும் காப்பாற்ற அவர் போராடி இயற்கையாய் நடிப்பாரே.
9. இது மட்டுமல்ல இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..திருடாதே, கலங்கரை விளக்கம், எங்க வீட்டுபிள்ளை, பணக்கார குடும்பம் இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..
இந்த படங்களை எல்லாம் பார்த்து விட்டு அவரிடம் குறை கண்டால் அவர் கண்ணிருந்தும் குருடரே..கருத்திருந்தும் மூடரே..பின்னாளில் தலைவரின் சோகங்கள் தன்னுடைய ரசிகர்களை தாக்கவேண்டாம் என்ற எண்ணத்திலும், அவர் சோகமாக இருப்பதை அவர் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்திலும்தான் அப்படிப்பட்ட காட்சிகளை தவிர்த்தார்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகத்தின் சோக காட்சியில் நடித்த படங்களின் பட்டியலும் காட்சிகளும் அருமை .
அன்பே வா - ஓட்டலில் மக்கள் திலகத்தின் நடிப்பு .
உரிமைக்குரல் - அண்ணனிடம் பேசும் காட்சி
சிரித்து வாழ வேண்டும் - விடுதியை மூடிய பின் பேசும் காட்சி
ஒளிவிளக்கு - சௌகார் ஜானகியிடம் பேசும் காட்சி
அடிமைப்பெண் - பண்டரிபாயிடம் பேசும் காட்சி
மறக்க முடியுமா?
http://youtu.be/u_4h2U5eQMo
தெய்வமே அசத்திடீங்க. பார்த்து கொண்டே இருக்கலாம்!
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்
400 பதிவுகளை கடந்த உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
நட்புடன்
வினோத்
திரு கலியபெருமாள் அவர்களுக்கு,
நீங்கள் இடுகை செய்ததை படித்து உண்மையிலயே நான்தான் அதிர்ச்சி அடைந்தேன்..காரணம்...நீங்கள் எழுதிய வரிகள்...நிதானமாக படித்து பாருங்கள்..! உங்கள் தவறு என்ன என்று உங்களுக்கே புரியும்...நீங்கள் எப்படி வசூல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறலாம்...உங்களுக்கு மதுரை வீரன் வசூலாகும் என்ற நம்பிக்கை இல்லாதது போல உள்ளது நீங்கள் எழுதியது. !
உணர்ச்சி மிகுதியில் தாங்கள் தவறாக எழுதியதை தயவு செய்து மாற்றி மீண்டும் இடுகை செய்யவும்.
சந்தேகமே வேண்டாம் மதுரை வீரன் என்றுமே வசூல் வேட்டையாடும் வீரன் தான் நண்பரே !
உண்மையை உண்மை என்று சொல்லும் துணிவு என்னக்கு நிச்சயம் உண்டு !
இனிய நண்பர் சௌரிராஜன் சார்
தங்கள் ஆலோசனைக்கு நன்றி...நீங்கள் சொல்வது போல் நமது தெய்வத்தின் படங்களின் மேல் நம்பிக்கை எப்போதும் உண்டு..நான் சொன்னது மற்றவர்களுக்கு..இந்த கால கட்டத்தில் இந்த படங்களின் வெற்றியை காணும் பொதுமக்களுக்கு இது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுப்பது உண்மை....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சமீபத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் நடிகர் ஆதி நடித்த 'ஆடு புலி' திரைப்படத்தில் அனைத்து நடிகர்களின் பெயர்களும் நமது தெய்வம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பெயர்களாக இருக்கும்..அதில் பிரபுவும் எம்ஜிஆர் ரசிகராக இருப்பார்..கதையின் நாயகன் பெயர் இதயக்கனி என்று நினைக்கிறேன்...உண்மையிலே இளைய திலகம் பிரபு எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது..எம்ஜிஆரை பெரியப்பா என்று அன்புடன் அழைப்பவர் அவர்..
இன்றைய தமிழ் முரசில் (03.05.2013) ஒரு கிளிப்பிங்..
'தேசிங்கு ராஜா' என்ற படத்தில் எம்ஜிஆர் ரசிகராக இதயக்கனி என்ற பாத்திரத்தில் விமல் நடிக்கிறார்..எழில் இயக்குகிறார்.
என்ன ஒரு தேனான செய்தி..தலைவர் திரைத்துறையை விட்ட காலத்திலிருந்தே, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் இன்னும் பல முன்னணி நடிகரெல்லாம் எம்ஜிஆர் ரசிகராகவும், எம்ஜிஆர் படங்கள் மற்றும் பாடல்களை நூற்றுகணக்கான படங்களில் இடம்பெறவும் செய்திருக்கிறார்கள்..அது இன்றைய தலைமுறை நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை என்று சொல்லும்போது..நமது இதய தெய்வத்தின் சக்தியை (power) என்னவென்று சொல்வது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
படம் சொல்லும் பாடம்
http://i41.tinypic.com/30mwtg4.jpg
மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்
இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.
புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..
சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்
நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..
மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.
விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்..
நன்றி. Sri.MGR.com
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் விழா - மலேசியாவில் நடைபெற்ற விழா தொகுப்பு அருமை . திரு ரூப் அவர்களுக்கும் , திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .
எனக்கு வாழ்த்துக்கள் கூறிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் மலர் மாலை -நம்
மன்னவனின் படங்களின் பூஞ்சோலை
மாலை தொடுத்தவரும் -சீர்மிகு
பதிப்புரை வழங்கியவரும் -யார் என்று நோக்கின்
பம்மலார்..... யார் இவர் ?
விழிகளும் -இதயங்களும் ஒன்று சேர
எண்ண அலைகள் சிறகடித்து பறக்க
நாற்பத்தியொரு ஆண்டு திரை களஞ்சியத்தை
நூற்று முப்பத்து நான்கு பக்கங்களில்
வரலாற்று பெட்டகமாய்
ஒரு சரித்திர நாயகனின்
காவிய நாயகனின்
ஒவ்வொரு படத்தின் பல்வேறு நடிப்பின்
கலைவேந்தனின் படங்கள்
உயர் தர தொழில் நுட்பத்தில்
புதுமை படைப்பு .
இது வரை - யாரும் வழங்காத பொக்கிஷம்
யாருமே செய்ய நினைக்காத -ஒரு
சரித்திர சாதனையை படைத்திட்டரே
அவரேதான் நம் பம்மலார் .
உலக திரைப்பட சாதனைக்கு மக்கள்திலகம் ஒரு கலங்கரைவிளக்கம்
அவரது பெயரில் காவிய மலர் படைத்த பம்மலார் [அவன்] ஒரு சரித்திரம் .
malaimalar - news.
மலேசிய தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர். பாடல்கள்: ஓட்டு வேட்டை தீவிரம்
சனிக்கிழமை, மே 04, 12:16 pm
கோலாலம்பூர், மே. 4-
மலேசியாவில் நாளை (5-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் பாரிசான் நேசியனல் கூட்டணியும், எதிர்க் கட்சிகளின் கூட்டணியும் மோதுகின்றன. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.
ஆளும் பாரிசன் நேசியனல் கூட்டணியில் மலாய் கட்சி, மலேசியன் சைனீஸ் அமைப்பு, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே அவர்களை கவர்ந்து வாக்குகளை பெற ஆளும் கட்சி கூட்டணி தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் பட பாடல்களை போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 26 வருடங்கள் ஆகி விட்டன. தமிழகம் மட்டுமின்றி மலேசியாவிலும் இன்னும் அவரது புகழ் மங்க வில்லை. மக்கள் மனதில் அவர் இன்னும் நிலைத்து வாழ்வதையை இது காட்டுகிறது.
இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?
http://i40.tinypic.com/258c5ue.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...