http://i1170.photobucket.com/albums/...ps287e7aae.jpg
Printable View
இதோ என் பதில் என்பது போல சரியான பதில் சொன்னீர்கள் திரு. வினோத் சார். எங்கவீட்டுப்பிள்ளை வசூல் சாதனையை திருவிளையாடல் படம் மிஞ்சியது என்பது வடிகட்டிய பொய். புதுச்சேரியிலும் இதே நிலைதான். ஆதாரம் இல்லாத எதையாவது எழுதி மக்கள் திலகம் திரியில் பதிவு செய்து புரட்சித்தலைவரின் சாதனையை மறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திரு. ரவிகிரண் எழுதுவதும், பின்பு எதிர்ப்பு தோன்றினால் பின் வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. பெருந்தன்மை மிக்க மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இது போன்ற வீண் வேலை பார்ப்பதில்லை. இவர் என் இப்படி இருக்கிறார் என்பது அனைவருக்கும் (நடிகர் திலகத்தின் ரசிகர்கள் உட்பட) புதிராக இருக்கிறது. என்றைக்கும் வசூல் சக்ரவர்த்தி எங்கவீட்டுப்பிள்ளைதான்
என்பது ஊரறிந்த உண்மை. இதில் ஏன் இவர் தேவையில்லாத விவாதத்தை வைக்கிறார் என்றுதான் தெரியவில்லை. திரு. ரவிகிரண் அவர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தாகிவிட்டது. சார். தாங்கள் இது போன்ற கூற்றை வைக்கும்போது ஆதாரத்துடன் பதிவிடுங்கள். please.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திட்ட உத்தமத் தலைவரின் "அடிமைப்பெண் " காவியம் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் மக்கள் திலகத்தின் காவியமாம் "அடிமைப்பெண்" பற்றிய தகவல்களை பரிமாறிக்கொண்ட திரியின் அன்பர்கள் திருவாளர்கள் வினோத், லோகநாதன், கலியபெருமாள், யூகேஷ்பாபு, ஜெய் ஷங்கர், ரூப்குமார், மற்றும் ஏனைய அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி !
http://i60.tinypic.com/oqkj6r.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்று போல் என்றும் வாழ்க திரைப்பட வெளியீட்டினையொட்டி, "திரை உலகம்" இதழ் சிறப்பு மலரிலிருந்து சில புகைப்படங்கள் :
http://i59.tinypic.com/307yf6o.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i58.tinypic.com/6h7v5e.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்று போல் என்றும் வாழ்க திரைப்பட வெளியீட்டினையொட்டி, "திரை உலகம்" இதழ் சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட்டது. அதில் பிரசுரமான நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களின் பேட்டி, திரி அன்பர்கள் பார்வைக்கு ::
http://i59.tinypic.com/f4qq8i.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உலகைக் கவர்ந்த உன்னத புகைப்படத்தை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த தாய் தன் சொந்த மகனைப்போல், யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்று திருஷ்டி கழிப்பதும், அதே போல மக்கள் திலகத்தின் கண்ணில் தோன்றும் அன்பு கலந்த தாய்ப்பாசத்துடன் கூடிய இந்த உயிரோட்டமுள்ள பேசும் படம் உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் ஏராளம். ஒரு நடிகருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட இது போன்ற ஒரு பாசப்பிணைப்பு யாருக்குமே கிடைக்காத ஒரு பேறு.
இந்த பேறு, இந்த உலகில் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? எவருக்குமில்லை என்ற பதிலைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
Ayirathil Oruvan restored version 52nd day in Albert.
http://mgrroop.blogspot.in/2014/05/a...elease-11.html
Video link given below.
https://www.facebook.com/photo.php?v...97668926539757
அருமை சகோதரர் திரு. வினோத் அவர்களின் நெத்தியடி பதில் super..
அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களின் கருத்து மிகச் சரியே !
சகோதரர் திரு. ரவிகிரன் சூர்யா தேவையில்லாமல் நம் திரியில் நுழைந்து வாதங்கள் வைப்பது, பின்பு பின் வாங்குவது என்றே வாடிக்கையாகிவிட்டது.
தமிழ் திரைப்பட உலகின் முடி சூடா மன்னன், ஒரே வசூல் சக்கரவர்த்தி அதுவும் நிரந்தரமான (1956 முதல் இன்று வரை) வசூல் சக்கரவர்த்தி என்பது உலகறிந்த உண்மை. இது அந்த கால கட்டங்களில் வெளிவந்த பல சினிமா பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.
எனவே, ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் ! மக்கள் திலகம் அவர்கள் எவருடனும் ஒப்பிட முடியாத கலியுக கடவுள். அவரது திரைப்பட சாதனைகளை எவராலும் மிஞ்ச முடியாது. அரசியல் சாதனைகளும் அவ்வாறே ! அதனால் வீண் விவாதங்களுக்கு இடம் தர வேண்டாம்.
இன்று மக்களிடையை ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினாலும், என்றும் விரும்பக்கூடிய - ஒரு மகத்தான இயல்பான நடிகரும், மாபெரும் அரசியல் தலைவரும், சிறந்த மனிதாபிமானம் கொண்டவரும், குறிப்பறிந்து உதவக்கூடிய வள்ளலும், பொன்மனம் கொண்ட பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களே ! என்றுதான் தேர்வு செய்வர்.
வேறு எவரும் அவரது நிழலைக் கூட நெருங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
A few days ago in rani weekly - k.bhagyaraj answers for reader's questions... one answer by actor nambiar's statements about our always emperor of cine world makkalthilagam MGR.,
A few days ago in rani weekly - k.bhagyaraj answers for reader's questions... one answer by actor nambiar's statements about our always emperor of cine world makkalthilagam MGR.,
ஆயிரத்தில் ஒருவன் படம் தற்போது ஆம்பூர் - கரூர் மற்றும் 6 சிறு நகரங்களில் நடை பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது .சென்னை நகரில் உள்ள எல்லா எம்ஜிஆர் மன்றங்களும் இணைந்து
ஆயிரத்தில் ஒருவன் 50 வது நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள் .எல்லா எம்ஜிஆர்
மன்ற நண்பர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
"இன்று போல் என்றும் வாழ்க" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் பக்க தோற்றம் : http://i61.tinypic.com/28m1kox.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரை உலகம் 15-05-1977 அன்று வெளியிட்ட "இன்று போல் என்றும் வாழ்க " சிறப்பு மலருக்காக நடிகை ராதா சலுஜா அவர்கள் அளித்த பிரத்தியோக பேட்டி :
http://i58.tinypic.com/67l7rs.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் முதல் நாள் பார்த்த அனுபவம் :
முதல் நாள் (05-05-1977) அன்று நான் வசித்து வந்த திருவொற்றியூரிலிருந்து, எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர்கள் குழு அமைப்பினை சார்ந்த நண்பர்கள் அன்வர், தயாளன், சக்கரபாணி, செல்வம், கே சி. பி. சந்தானம், பி.எஸ்.பாண்டியன், ஜெயகுமார், குருமூர்த்தி (இவர் அனைத்துலக .எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளராக இருந்த நடிகர் கே. கண்ணன் அவர்களின் உறவினர்) மற்றும் புரட்சித்தலைவர் காலத்திய திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. மாணவர் அணி தலைவரும், இன்றும் எனது சிறந்த நண்பராக விளங்கி வரும் வழக்கறிஞர் இரா. பீட்டர் ராஜன் (இவரது தலைமையில்தான், நான் திருவொற்றியூர் நகர மாணவர் அணி செயலாளராகவும், பொன்மனச்செம்மல் அன்பர் குழுவின் செயலாளராகவும் பணிபுரிந்தேன்) ஆகிய நண்பர்கள் அனைவரும் மகாராணி திரை அரங்கிற்கு சென்று, மக்கள் திலகத்தின் மாபெரும் banner களுக்கு மலர் மாலை அணிவித்து, மூங்கில் கொம்புகளையும், வண்ணத்தாள்களையும் கொண்டு மிகப்பெரிய star ஒன்றை தயார் செய்து, அதில். மக்கள் திலகத்தின் அழகிய வண்ணப்படங்களை ஒட்டி, பின்னர் அதனை திரையரங்க வாசலில் கட்டி தொங்கவிட்டு, அழகு பாத்து, எழில் வேந்தன் எம். ஜி. ஆர். புகழ் பாடும் வாழ்த்து முழக்கங்களை முழங்கிய பின்பு, முன்னரே எடுக்கப்பட்ட திரையரங்க நுழைவு சீட்டுக்கள் மூலம், அனைவரும் காவியத்தை காணச் சென்றோம்.
Title முடிந்தவுடன், மக்கள் திலகத்தின் உருவம், திரையில் முதன் முதலில் பாடலுடன் காண்பிக்க தொடங்கியவுடன் எழுந்த மகிழ்ச்சி ஆராவரம் விண்ணைப் பிளந்தது. இக்காவியத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக ரசித்தோம். இடைவேளையில் மகாராணி திரையரங்கில் வெளியிடப்பட்ட மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்களைப் (குறிப்பாக நல்ல நேரம், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம்) பற்றி விவாதித்தோம். பின்பு, இதர எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களின் நிர்வாகிகளுடன் அளவளாவினோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அரங்குகளிலும், இலங்கை மண்ணிலும் மக்கள் திலகத்தின் காவியங்கள் படைத்த சாதனைகளை பற்றியும் தகவல்கள் பரிமாறிக்கொண்டோம்.
காவியம் முடிந்து அரங்கின் வெளியே வந்த போது, மாலைக் காட்சி காண வந்த மக்கள் கூட்டத்திடம், இக்காவியம் பற்றி result அறிய மிகுந்த எதிபார்ப்பு. அவர்களிடம் இக்காவியம் ஒரு வெற்றிக்காவியம் என்ற செய்தினை தெரிவித்த போது, அங்கே ஆனந்த நடனம் புரிய ஆரம்பித்து விட்டது ஒரு கூட்டம். மற்றொரு கூட்டம் வாழ்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டேயிருந்தது.
On the whole, it was a pleasurable & unforgettable days in my life, சுகமான அனுபவம்.
1977 பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளிவந்த சமயம் அது. நமது புரட்சித் தலைவரின் தலைமையிலான அணி அமோக வெற்றி (40க்கு 36 இடங்கள்) பெற்ற பின் வெளியான பொன்மனசெம்மலின் முதல் திரைக்காவியம் என்பதால், ஒரு தனி சிறப்பை பெற்ற காவியமும் கூட. மகாராணி திரையரங்கமே திரு விழாக் கோலம் பூண்டு தேர்தல் வெற்றி விழாவாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/11jrn77.jpg
http://i61.tinypic.com/v3pyd3.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்று போல் என்றும் வாழ்க
மக்கள் திலகத்தின் இன்றுபோல் என்றும் வாழ்க- முதல் நாள் பார்த்த அனுபவத்தைமிகவும் அழகாக பதிவிட்ட இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . மேலும் திரை உலகம் சிறப்பு மலர் பதிவுகள் அனைத்தும் அருமை .
http://i1170.photobucket.com/albums/...ps46b31784.jpg
சர்வாதிகாரி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் வீரவாள் .சர்வாதிகாரி என்று பெயர் மாற்றம் செய்தவர் எம்ஜிஆர்.CHARIOT என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
aayirathil oruvan today 24 seats available in studio 5 eve. Show status taken @1700 hrs
kannan en kadhalan lastweek collection in mahalaxmi rs.73000/- appx.
raman thediya seethai recently screened in mahalaxmi theater total one week collection rs.70500/- appx
தற்போது உள்ள எந்த நடிகருடனும் எம்ஜியாரை ஒப்பிட முடியாது . மக்கள் திலகம் மறைவுக்குப் பின் தயாரிக்கப்பட்டு வரும் , அனிமேஷன் படம் , ' ஆயிரத்தில் ஒருவன் ' . நிதி நெருக்கடியால் அது வெளிவருவது தாமதமாகிக் கொண்டு இருக்கிறது .
ஆனால் ரஜினியின் ' கோச்சடையான் ' முழுக்க ஒரு அனிமேஷன் படம் என்ற தகவல் வந்துள்ளது . தன்னால் முடியாததை இயந்திரம் செய்யும் என்று நம்புகிறாரா ரஜினி ? எப்படியோ அனிமேஷன் படத்தில் கூட முந்திக் கொண்டவர் மக்கள் திலகமே !
Courtesy - net
ஆயிரத்தில் ஒருவன் 50வது நாள் விழா
ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கட்டாயம் பொருந்தும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆயிரத்தில் ஒருவன். படத் தயாரிப்பில் நஷ்டமடைந்து பொருளாதார சிக்கலில் இருந்த பி.ஆர்.பந்தலுவுக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர் தானே முன்வந்து நடித்துக் கொடுத்த படம். இன்றைக்கு பலரது கடனை அடைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கு பி.ஆர்.பந்தலு சிவாஜியை வைத்து தொடர்ந்து படம் எடுத்தவர்.
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றி புதிய தரமான ஒலிப்பதிவை சேர்த்து மீண்டும் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 தியேட்டர்களில் ரிலீசானது. இன்றைய பெரிய ஹீரோக்கள் படமே 25 நாட்களை தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. மக்கள் திலகத்தின் படம் ஆல்பட் தியேட்டரில் 50 நாள் ஓடி சாதனை படைத்து விட்டது.
ஆயிரத்தில் ஒருவன் ஆஃப் செஞ்சுரி அடித்ததை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கட்வுட், பாலாபிஷேகம், வாழ்த்து போஸ்டர்கள் என ஆல்பர்ட் வளாகத்தை ஆட்டிபடைத்து விட்டார்கள். நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 50வது நாள் அன்று படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.
COURTESY DINAMALAR
http://cinema.dinamalar.com//tamil-n...es-50-days.htm
நூறாவது நாட்களை நோக்கி வெற்றி நடைபோடும் ஆயிரத்தில் ஒருவன்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் டிஜிட்டலில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை கொண்டாடுகிறது.
பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் அற்புதமான இசையில் கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 50 வருடங்கள் கழித்தும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
சென்னையில் சத்யம் காம்ப்ளக்ஸில் உள்ள ஸ்டுடியோ 5 மற்றும் பேபி ஆல்பர்ட் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் தினசரி ஒரு காட்சியாக இன்னும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருப்பதை பார்த்தால் இந்த திரைப்படம் நூறு நாட்களை கண்டிப்பாக தாண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த படம் டிஜிட்டலில் வெளியான தினத்தில் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.thedipaar.com/cinema/ayir...ruvan-50thday/
MGR and Jayalalitha starrer Aayirathil Oruvan Movie 50 Days Celebration at Baby Albert Theatre, Chennai. Director BR Panthulu daughter BR Vijayalakshmi, Shanthi Chokkalingam graced the event.
http://cinema.nilavaithedi.com/2014/...tion-stills-3/
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா !
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !
https://www.youtube.com/watch?v=v-tn4VycSPM
OUR GOD MGR MEANS
best actor in the world
best director in the world
best technician in the world
best producer in the world
evergreen boxoffice empereor in the world cinema
evergreen popularity politician of the india
evergreen style king of world cinema
million of people worship god
best humanity person in the world
எங்க வீட்டு பிள்ளை திரைப்பட வசூலை அடிமை பெண் திரைப்படம்
மட்டுமே முறியடித்து உள்ளது என்பதற்கு ஆதாரமாக விவரங்கள்
வெளியிட்டுள்ள நண்பர் திரு.வினோத் , அதை வழிமொழிந்தாற்போல்
செய்திகள் வெளியிட்டுள்ள நண்பர்கள் திரு. கலிய ;பெருமாள், திரு.யுகேஷ் பாபு, திரு. செல்வகுமார் ஆகியோரின் கருத்துக்களை
நான் ஆமோதிக்கிறேன.
அப்போது மட்டுமல்ல எப்போது திரையிட்டாலும் , அன்றும் இன்றும்
என்றும் எங்க வீட்டு பிள்ளை திரைப்பட வசூலை மற்றொரு மக்கள்
திலகத்தின் படம் மட்டுமே முறியடிக்க முடியும்.இதுதான் நிதர்சனமான
உண்மை. அதற்கு ஆதாரமாக பழைய பிரிண்ட் வைத்து கொண்டே
விநியோகஸ்தர்கள் அவ்வப்போது அரங்குகளில் திரையிட்டு லாபம்
ஈட்டுகின்றனர்.
ஆர்.லோகநாதன்.