காலை வணக்கம்
Printable View
காலை வணக்கம்
Quote
"தாயின் முகத்தை பாருங்கள் - அதில் தான் என்ன பெருமை !!- சுமையாக கருதப்படாத ஒரு கரு அவளை சுமையாக நினைப்பதேன் ? பாரமாக நினைக்காத ஒரு கருவூலம் , காற்றே வராத சிறையில் அடைபடுவதேன் ? - தியாகத்தின் உருவம் - தீயில் கருகுவதேன் ? - பொன்னில் பதிக்கப்படவேண்டிய வைரங்கள் , தரையில் சிதருவதேன் ? ஒரு தென்றலை சுனாமி ஏன் விழுங்க வேண்டும் ?????? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் !!!!!"
Unquote
CK இவ்வளவு கேள்விகள் கேட்டுள்ளேன் - ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை - இன்னும் என்ன எழுதுவது ??? - எழுதும் திறமை இல்லாததால் தானே வீடியோ போட்டு மழுப்ப வேண்டியிருக்கின்றது ??
சுமக்கும் பாடல்களின் இன்பத்தில் உண்மையில் எழுத்துக்கள் வர மறுக்கின்றது .........
//மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
ஜும்பாயே...ஆகும்பையே//
சின்னா,
நீரல்லவோ மாணவர். வாத்தியார் சொல் தட்டாத மாணவர்.:)
சரி! ஹோம் வொர்க் முடிச்சாச்சு. மார்க் என்னன்னு பார்த்துடலாமா?
அதுக்கு முன்னாடி நண்பர் சின்னாவுக்கு.
உங்க பதிவைப் படிச்சு சிரிக்கிறேன் சிரிக்கிறேன் காலையிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். வயிறு புண்ணா போச்சு சின்னா.
நீங்க போட்ட பதிவிலேயே விழுந்து விழுந்து நான் சிரிச்ச பதிவு.
பாவம் புள்ள. ரொம்பத்தான் வாட்டி எடுத்துபுட்டேன். புள்ளையும் ஒழுங்கா சொன்னத செஞ்சுடுத்து.
சரி பின்னூட்டம் இடுறேன். அப்புறம் முதுகு சொறியறேன்.:)
//ஆஹா வாசு சார்.. நீரல்லவோ கலா ரசிகர் .. இப்படி அனுபவிச்சு எழுதப்பட்ட வரிகளை
அனுபவிச்சு எழுத உங்களால மட்டுமே முடியும்//
நன்றி!
//ஐ திங்க் இந்தப் பாட்டை இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பாங்கன்ணு நினைக்கறேன்.. இந்த ஜூம்பாயே ஆகும்பையே மட்டும் ஒரு கவிஞர் எழுதியிருப்பார்!//
சின்னா! உமக்கும் ரெண்டு மூளை.:)
//காதல் முத்தம் போடு அது தானே பரிசு ( நல்லாக் கேக்கறான்யா)//
யப்பா! விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன் சின்னா. சூப்பர். நல்லாக் கேக்குறான் நாயகன் நான் சொன்னா சின்னா கேக்குற மாதிரியே இல்ல.:)
//(ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு)//
'வெண்ணிற ஆடை' மூர்த்தியை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டீரே அய்யா!:) யப்பா! இன்னும் வயிறு வலிக்குதுடா சாமி.
( நா இந்த ஆட்டைக்கே வரலை!)
சின்னா! இது டாப்போ டாப். ரோட்டில் போகும் போது கூட நெனச்சாலே சிரிப்பு வருது. நீங்க பாட்ட எழுத பட்ட பாட்ட இத விட சோகமா சொல்லி சிரிக்க வைக்க முடியாது.:)
( இது தான் ஓய் நிஜம்ம்மான சதி..பரவால்லை ஹி ஹி)
குழந்தே சமத்து. புரிஞ்சுன்னுட்டுது. ராஜ்ராஜ் சார் வேற அங்க முழிச்சுகிட்டு இருக்கார் ஒண்ணுமே புரியாமலே.:)
//அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்!//
ஓய்! சீட் நுனிக்கு வரவழைத்து விட்டு இப்படி சீட்டிங் பண்ணிட்டேளே. புடி சாபம் !:)
சரி! மனைவியின் தங்கை மூணாங்கிளாஸ் படிச்சா அந்த மனைவியின் தந்தை மகா விஷமக்காரர் போல இருக்கே!:) சும்மா கவிதைக்கு தானா? இல்லே நெசமாவேதானா?:) பாவம் மாமியார். குலமா குணமா?
இன்று பக்தி என்று சொல் கூட இல்லாத படங்கள் வரும் நிலையில்
பக்தி படங்களும் பக்தி ரசம் சொட்ட பாடல்களும் நிறைய வரத்தான் செய்தது அந்த காலத்தில்
ஏதோ பெயருக்கு பக்தி படம் என்றில்லாமல் மிகவும் சிரத்தையாக படமெடுத்து நம்மை கட்டி போட்டவர்களும் உண்டு
குறிப்பாக ஏ.பி. நாகராஜன் போன்றவர்கள் ..
அப்படிப்பட்ட பாடல்கள் கொஞ்சம் அலசலாம்
முதல் பாடல்
சொல்ல சொல்ல இனிக்குதடா
பக்தி பாடல்களை மகாதேவன் மாமா போல் எவரும் செய்யவில்லை செய்யவும் முடியாது
இது போல் பாட எந்த பெண் பாடகியாலும் பாட முடியாது அப்படிப்பட்ட பெண் பாடகி பிறக்கவும் இல்லை
சிலர் வந்து அப்படியெல்லாம் இல்லை பாட சிலர் இருக்கிறார்கள் என்பார்கள் . சொல்லலாம் சொல்லட்டும்
அது அவர்கள் இஷ்டம் .. எனக்கு என்ன நஷ்டம்
சரி விஷ்யத்து வருவோம்..
அப்படிப்பட்ட பாடல்
கவியரசரின் அழகு தமிழ், இசையரசியின் குரல், சாவித்திரியின் நடிப்பு என அமர்க்களமான பாடல்
இந்திய அரசு கண்களை மூடிக்கொண்டு தான் இருந்திருக்கும் இது போன்ற பாடலுக்கு தேசிய விருது தராமல் விட்டது,
அந்த மட்டிற்கும் கே.வி.எம்க்கு கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்
https://www.youtube.com/watch?v=ZCEVEOB7hao
சரி இப்போ உங்க பேப்பர திருத்தப் போறேன் சின்னா!
//அம்மான் கைகள் தொடவும் பூ மலர மலர//
பொன் மலரே மலர
//பெண்மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற//
உன் மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற
//படபடவென இவள்மனம் துடிக்குது அட இளமைக்கு பிடிக்கலையா/இழுக்கில்லையா/விருந்தில்லையா//
மூன்றுமில்ல.:)
இளமைக்கு விடை சொல்லய்யா
//இரு கனிகளும் கிளையின்றித் துடிக்குது
இந்த அணிலுக்கு மனமில்லையா//
இரு கனிகளும் கிளை விட்டு குதிக்குது:)
//இரு இதழுக்கும் இதயத்துக்கும் அறிந்தவன் இவனில்லையா//
இரு இதழுக்கும் இருவகை ருசியென
தினம் அறிந்தவன் இவனில்லையா
//அடி மன்மதன் அம்புக்கு மனிதரில் இடமில்லையா//
அடி மன்மதன் அம்புக்கு மடிதனில் இடமில்லையா
//நீ பகலவன்/பகலுக்கு பத்தினியா…//
பகலுக்கு:)
இருவிழிகளும் ஒருமுறை துடிக்கையில் பல கனவுகள் மலர்கிறதே
சில கனவுகள் மலர்கிறதோ
//தினமொருமுறை உறவுக்கு இவள்மனம்
தவிக்குது கொதிக்குது துடிக்குது//
மிக தவிக்குது
//சுகமென்று சொல்லியதோஒஒ//
சுக அலைகளில் துள்ளியதோ
சலி சம்புடுன்னா சமக்குல்லோ செல்லி செண்டகொச்சிண்டி
செலி செண்டகொச்சே டடுக்குல்லோ கில்லி கிண்டா கிச்சிண்டி..
இடி சக்கனி சிக்கனி செக்கிலி கில்லி…
( நா இந்த ஆட்டைக்கே வரலை!)
நானும்தான்.:)
சின்னா!
பேப்பர் திருத்தியாச்சு. மார்க் பத்துக்கு ஏழு. கண் விழிச்சி வொர்க் பண்ணியதுக்கு பிளஸ் ஒரு மார்க். ஆனா வாத்தியார்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம (ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு) இப்படி எழுதினதுக்கு 2 மார்க் மைனஸ்.:) அதனால் பத்துக்கு ஆறு.
எபோவ் ஆவரேஜ். கீப் இட் அப் கண்ணா.:) இன்னும் நல்ல்லா முயற்சி செய்யணும்:)
ஸாரி ரவி! பேப்பர் திருத்த லேட் ஆயிடுச்சு.
அப்புறம்...
சுமக்கும் பாடல்கள் சுகம் தருகின்றன. ஏன்? ஏன்? ஏன்?
ஏன் இத்தனை கேள்வி? விடை சொல்ல முடியாத கேள்வி. எதிர்க் கேள்வி ஒன்று.
நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா? அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா?:)
இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
ஆமாம்! இன்னும் எஸ்.எம்.எஸ்ஸில் நூறு ரூபாய் வந்து சேரலியே?:) காலையிலிருந்து வெயிட்டிங். பந்தயமா கட்றீங்க பந்தயம்...:)
ரவி!
அக்கையாக்கு சீமந்தம் அமர்க்களம். எனக்குப் பிடித்த கிருஷ்ணகுமாரி. நன்றி. பிற கரு பாடல்களுக்கும் சேர்த்துதான்.
//கவியரசரின் அழகு தமிழ், இசையரசியின் குரல், சாவித்திரியின் நடிப்பு என அமர்க்களமான பாடல்
இந்திய அரசு கண்களை மூடிக்கொண்டு தான் இருந்திருக்கும் இது போன்ற பாடலுக்கு தேசிய விருது தராமல் விட்டது,
அந்த மட்டிற்கும் கே.வி.எம்க்கு கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்//
mmm....
கல்நாயக் வாங்கோ. ஜாலியா இருக்கு. நீங்களும் கலந்துக்கோங்க.
ராகவேந்திரன் சார்,
நன்றி!
அவன் ஒரு பைத்தியக்காரன் டைமிங் பாடலா? அபூர்வ பாடல்களுக்கு நன்றி! ஆமாம். துள்ளி ஓடும் புள்ளி மானை எப்படி பிடித்தீர்கள்? சூப்பர்.
வாசுங்க்ணா..அப்புறம் வாரேன்..இப்ப கொஞ்சம் க்விக் ரிப்ளை
//சரி! மனைவியின் தங்கை மூணாங்கிளாஸ் படிச்சா அந்த மனைவியின் தந்தை மகா விஷமக்காரர் போல இருக்கே! சும்மா கவிதைக்கு தானா? இல்லே நெசமாவேதானா// உடன் பிறந்த தங்கை கிடையாது..சித்தி பொண் உண்டு.. பட் இது சும்மா..கறபனையே
ஆறு மார்க் தானா.. இந்த சுக அலைகளில் துள்ளியதோ, இருவகை ருசி (அதெப்படிங்காணும்!) இதக் கண்டு பிடிச்சதுக்கே உமக்கு ஒரு பெரிய ட்ரீட் தரணும்.. உன் மான் பெண் மான் ரெண்டும் கிட்டத்த்ட்ட ஒண்ணு தானே.. கிளை விட்டு ஓகே..பட் பகலுக்கு பத்தினியா கேப் ஃபில்லர்னு நினைக்கறேன்..அந்த சிலம்பு புலம்பி மழை வருதோ அது ஓகேயா ரொம்ப சிரமப் பட்டேன் அதுக்கு..ஆல்ஸோ இந்த இளமைக்கு விடை சொல்லய்யா.. எப்படி க் கண்டு பிடிச்சீங்க.. கரெக்டாவும் பொருந்துது
அப்புறம் மைனஸ் மார்க்குக்கு ரீவேல்யுவேஷன் அனுப்பலாமா..
இப்படித் திறமையா எழுதின கவிஞர் வைரமுத்துவைப் பாராட்டியே தீரணும் இல்லியோ..
மிக்க நன்றி..மறுபடி அப்புறம் வாரேன்..
வாசு - நான் கடலூருக்கு என் அன்னையுடன் சென்று கொண்டிருந்தேன் - நெய்வேலியைத்தாண்டிக்கொண்டிருந்தேன் . அம்மாவிடம் ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை எழுப்பினேன் ( என் எல்லா கேள்விகளுமே சிறுபிள்ளைத்தனம் கொண்டதுதான் - என்ன செய்வது பால்மனம் இன்னும் மாறவில்லை ) -- அம்மா " சிவகாசிக்கும் , நெய்வேலிக்கும் என்ன ஒத்துமை ?"
என் அம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள் - அவள் எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரசி என்பது உங்களுக்கும் புரியும் .
" ஒற்றுமை என்று ஒன்றும் இல்லை , சில வேற்றுமைகள் உண்டு - ஒரு உதாரணம் சொல்கிறேன் --- சிவகாசியில் காசை கரியாக்குகிரார்கள் - நெய்வேலியில் கரியை காசாக்கிரார்கள் . சிவகாசியில் முதுகை சொறிபவர்கள் உண்டு - நெய்வேலியில் முதுகை வருடி தருபவர்கள் அதிகம் - அணிலுக்கு ராமன் வருடியதைப்போல ---அங்கு இருப்பவர்கள் - நெய்யிற்கு எப்படி என்றும் குறையாத மணம் உண்டோ அதைப்போல - அவர்கள் சொல்லுக்கு என்றுமே பெருமை உண்டு - வார்த்தை மாற மாட்டர்கள் - அப்படி மாறினால் அடுத்த வினாடி உயிர் வாழ மாட்டர்கள் ----"
எவ்வளவு உண்மை அவள் வார்த்தைகளில் வாசு !!
Quote :
எதிர்க் கேள்வி ஒன்று.
நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா? அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா?
இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
ஆமாம்! இன்னும் எஸ்.எம்.எஸ்ஸில் நூறு ரூபாய் வந்து சேரலியே? காலையிலிருந்து வெயிட்டிங். பந்தயமா கட்றீங்க பந்தயம்...
Unquote :
வாழ்வதற்காக சாப்பிடுவதும் இல்லை - சாப்பிடுவதற்க்காகவும் வாழ்வதும் இல்லை - உங்கள் இரண்டு கேள்வியும் தவறு வாசு - பிறர் வாழ்வில் நாம் வாழ்கிறோம் - நாம் மற்றவர்களுக்காக வாழும்போது பிறரின் தவம் பலிக்கின்றது .
நாம் செய்துகொண்ட பந்தயம் - நேற்று நீங்கள் பேப்பர் திருத்தும் வேலையில் இருந்ததால் உங்களுக்கு சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்காது . நான் ஜெய்த்தால் நீங்கள் முன்பு என்னை விலைக்கொடுத்து வாங்கிய அதே தொகையை தர வேண்டும் - நீங்கள் தப்பித்தவறி ஜெயித்து விட்டால் எனக்கு நீங்கள் ஒன்றும் தர வேண்டாம் என்பதே !! நீங்கள் எனக்கு தரும் ஒரு அறிய வாய்ப்பை தவறி விட்டீர்கள் ........
ராஜேஷ் - அருமையான பதிவு - மிகவும் அழகாக , அருமையான பாடலுடன் ஆரம்பித்து உள்ளீர்கள் . இதில் வரும் வரிகள் இன்னும் புதுமையாகவும் , பக்தி மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது - முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் ; அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் ---- ஆஹா - என்ன வரிகள் - உலகத்திற்கே அவள் தாயானாலும் , தன் குழந்தை என்று வரும் போது சற்றே சுயநலம் வரத்தான் செய்கிறது ----- தொடருங்கள் ---
ராகவேந்திரா சார் உங்கள் அபூர்வ கானங்கள் - மதுர கானங்களை விட ஒரு படி முன்னே போய் விட்டது - எப்படி இவ்வளவு புதையல் உங்களுக்கு மட்டும் ? பொறாமையாக இருக்கின்றது
//சிவகாசியில் காசை கரியாக்குகிரார்கள் - நெய்வேலியில் கரியை காசாக்கிரார்கள் // மதுரையிலும் அப்படி கரியைக் காசாக்கிய நபர் இருந்தார்..என் தந்தையார்.. வைத்திருந்தது ஒரு கரிக் கடை.. நகைக்கடை வீதியில். அவரது நகைக்கடை நண்பர்கள் தீபாவளியின் போது அவரிடம் சொல்லும் கமெண்ட் - நாங்கள்ளாம் வெடி வாங்கி காசை க் கரியாக்கறோம்,.. நீங்க கரியைக் காசாக்கறீங்க..
அதுசரி..ரவி..என்னை மட்டும் கவனிக்கவில்லையே :sad: :)
ஒரே வெய்யில் வெளியில்... ம்ம் என்ன பண்ணலாம் .. மழை பெய்ய வைக்கலாம்!
https://youtu.be/lixQIbX06EE
படத்தின் அபூர்வத் தன்மையைக் கருத்தில் கொண்டு இதுவரை அதிகம் யாரும் பார்த்திராத திரைப்படம் துள்ளி ஓடும் புள்ளி மான்...
நம் மதுரகானத் திரி நண்பர்களுக்காக ..
முழுப்படம்...
தரவேற்றிய ராஜ் வீடியோ விஷனுக்கு நன்றி
https://www.youtube.com/watch?v=Rf0zNSUj8cI
இதில் ஒரு விசேஷம்.. இயக்குநர் எல்லா நடிகர்களையும் இயக்கும் போது நடிகர் திலகத்தை நினைத்து இயக்கியிருப்பார் போல.. ஒருத்தர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் அவருடைய நடிப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள்.
குறிப்பாக க்ளைமாக்ஸில் ரவி, ஆவேசம் வந்திருச்சு என்று சண்டைக்கு தயாராகும் கட்டம். மற்றும் ஒரு முகத்தில் ஏனிந்த ஒன்பது பாவம் பாடல் காட்சியில் நாயகனை அப்படியே நடிகர் திலகத்தைப் போல் நடிக்க வைத்திருப்பார்கள்.
இந்தப் பாட்டுக்காக முதல் நாள் முதல் காட்சியில் ரவியைப் பார்க்க ஓடினோம்... ஆனால்..
என் கேள்விக்கென்ன பதிலாய் ஏமாற்றி விட்டது...
ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்.. இந்த பல்லவியை காதலன் காதலியைக் கேட்பது போய் இயக்குநர் தியேட்டரில் ரசிகர்களைப் பார்த்துக் கேட்கும் படி யாகி விட்டது.
இதற்கு மேலும் இந்த படத்தை ஓட வைக்க ரசிகர்கள் இசைவார்களா என்ன... துள்ளி ஓடும் புள்ளி மானாய் படம் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது...
திரை இசைத் திலகத்தின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் இனிய குரலில் அருமையான பாடல்...
துள்ளி ஓடும் புள்ளி மான் படத்திலிருந்து..
இப்பாடலை இதற்கு முன் கேட்டிருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அநேகமாக வாசுவையும் என்னையும் தவிர வேறு யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்..
https://www.youtube.com/watch?v=0JNPs8hgFdU
‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’
வாசு சார்,
//நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன்.:) கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ//
நீங்கள் சிறந்த கலை ரசிகர் என்று எனக்கு தெரியும். ஆனால் கலை மீது (கொலை) வெறி கொண்டவர் இல்லை. அதனால் எல்லாம் நன்றாகவே முடியும். பி கேர் ஃபுல் (எனக்கு சொல்லிக் கொண்டேன்)
ரவி சார்,
உங்களுக்கு கவிதையும் எழுத வருமா? பாராட்டுக்கள். தாய் பற்றி நேற்று நீங்கள் எழுதிய கவிதை அருமை. அதிலும்,
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .
... வரிகள் என்னைக் கண்கலங்க வைத்தன. தாயை இழந்த உங்களின் சோகம் வரிகளில் தெரிகிறது. இயற்கையின் வழியே தாயை காணும் உங்களுக்கு தாயின் ஆசி இயற்கையாகவே உண்டு.
சின்னக்கண்ணன்,
//அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்! //
*
//அப்புறம் வாரேன்..//
..........எங்கே கிளாசுக்கா?
ராகவேந்திரா சார், தங்களின் அபூர்வமான வீடியோ பதிவுகளுக்கு நன்றி.
கிருஷ்ணா சார், கல்நாயக் எங்கே?
..........................................
ஒரு பெரியவர். அவரை ஜகத்குரு என்று அழைப்பார்கள். ஒருமுறை அவர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றபோது, ஒருவர் அவர் தங்கியிருந்த இடத்தில் அவரை சந்தித்து, ஒரு குறிப்பிட்ட மதத்தின் குருவாக இருக்கும் உங்களை இந்த உலகத்துக்கே குரு என்று சொல்கிறார்களே? அதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெரியவர், ‘‘அப்படியா? நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் ஜகத்குரு என்று சொல்லும்போதெல்லாம் இந்த ஜகமே எனக்கு குரு என்பதாகத்தான் நினைக்கிறேன்’ என்றார். கேள்வி கேட்டவர் வெட்கி, அந்தப் பெரியவருக்கு வணக்கம் தெரிவித்து போய்விட்டார். அந்தப் பெரியவர்...
சின்னக் கண்ணன், நீங்கள் பக்தி கொண்டிருக்கும் காஞ்சி மகா பெரியவரேதான் அவர். 1966-ம் ஆண்டு ஐ.நா. சபையில் எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடுவதற்காக அவர் கொடுத்த பாடல்தான் உலகையே அன்பால் வென்று எல்லாரும் சுகமாக வாழ வேண்டும் என்பதை விளக்கும் ‘மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி....’
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாடுகளுக்குள்ளே சண்டை ஏது? போர் ஏது? வசுதேவ குடும்பகம் என்பதுபோல உலகமே ஒரு குடும்பமாகிவிடுமே?
அப்படிப்பட்ட நிலை வந்தால்......... இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனும் ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்...’ என்கிறார்.
உலகமே ஒன்றானால் தனியுடமை கொடுமை ஏது? அந்த நிலை அடையவேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அந்த உணர்வு வந்தால் அயராமல் உழைப்போம். தனியுடமை பேசும் மனிதரையும் ஒதுக்கிவிடுவோம்.
உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்
ஒரு பொருள் தனி எனும்
மனிதரைப் பிரிப்போம்
பிரிப்பது என்றால் அவர்களை பிரித்து துரத்துவது என்று அர்த்தமல்ல. அவர்களை பிரித்து இனம் கண்டு பின்னர் திருத்த வேண்டும். சூழ்நிலையால் தவறு செய்யும் மனிதர்களையும் பண்படுத்தி நேர் வழியில் திருத்தும் கதையமைப்பைக் கொண்ட மக்கள் திலகம் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற புரட்சிக் கவிஞரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்.’ பாடல் மிகவும் அருமையான சிந்திக்கத் தூண்டும் பாடல்.
ஆஹா... எதையோ சொல்ல வந்து எங்கோ போய்விட்டது. மகா பெரியவரை பற்றி சொன்னேனே. இன்று அவரது பிறந்த நாள். அவரது நினைவோடு புரட்சிக் கவிஞர் பாடலை மக்கள் திலகம் பாடும் காட்சியை ரசிப்போமே.
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன்,
நான் எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறேன். வாசு, சி.க., ராஜேஷ், ரவி, ராகவேந்திரா, நீங்கள் எழுதுவதையெல்லாம் படிக்கவே நேரம் போத மாட்டேனென்கிறது. நான் எழுத என் அலுவல் பணி விடமாட்டேன் என்கிறது. அதனால் நீங்கள் கேட்ட (இல்லை இல்லை. சொன்ன) மக்கள் திலகம் பாடல் இதோ (audio only):
https://www.youtube.com/watch?v=RJpSmTTmvFI
மத்தபடி எழுதறப்ப நல்லாத்தான் எழுதறேள். என்னைப் பத்தி மட்டும் தப்பா புரிஞ்சிகறேள். ஏன்?
நன்றி கல்நாயக், வீடியோ கிடைக்கலையா?
காலையிலேருந்து திரியில் பார்க்கலையேன்னு கேட்டேன். மற்றபடி நீங்கள் பெரியவர்னு சரியாத்தானே புரிஞ்சுண்டுருக்கேன்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த "புதியதோர் உலகம் செய்வோம்" சந்திரோதயம் படத்தின் டைட்டில் சாங் என்பதால் வீடியோ தனியாக கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
உங்க பெரிய மனசு யாருக்கு வரும் - வயசுல என்னை விட பல மடங்கு அதிகமானவரு நீங்க, உங்களை விட மிகச் சிறியவனை பெரியவர்-னு மரியாதை போட்டு கூப்பிடறதை பார்க்கிறப்போ, நான் மட்டும் இல்லை உலகத்தில பார்க்கிற எவருமே உங்களை விட (அதாவது கலைவேந்தனை விட) பெரியவர் யாரும் இருக்கவே முடியாதுன்னு சூடம் அணைச்சு சத்தியம் பண்ணுவாங்க.
பூவின் பாடல் 21: "பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அது என்னவோ தெரியலைங்க. இந்த பாட்டுன்னா ஒரு விதமா ஈர்க்குதுங்க. ராசா, பாரதிராஜாவோட கூட்டணி போட்ட இரண்டாவது இன்னிங்க்ச்ல என்னா மாதிரி பாட்டு போட்டிருக்கார் பாருங்க. நடிகர்கள பத்தி இன்னா சொல்லலாம். நாயகன், நடிகை ராதாவின் தம்பியாம் பேரு தெரியலைங்க. நாயகி அஷ்வினி (கிழக்கு சீமையிலே படத்துல கூட ஆக்ட் விட்டதுங்க). எஸ். பி. பி.யும் ஜானகி அம்மாவும் பாடியிருக்காங்க. புது நெல்லு புது நாத்து பத்தலைன்னு இந்த பூப்பூத்த சோலை வேற வருதுங்க.
https://www.youtube.com/watch?v=cSVQRrqHD1M
//சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த "புதியதோர் உலகம் செய்வோம்" சந்திரோதயம் படத்தின் டைட்டில் சாங் என்பதால் வீடியோ தனியாக கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.//எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவனின் குரலோ :) வாங்க மதுண்ணா.. உடம்பு தேவலாமா..
கலை சார் , எனக்கு நன்றாக கிறுக்க வரும் - இதைப்போய் நீங்கள் கவிதை என்று சொன்னால் - காளமேக புலவர்களின் மனம் வலிக்காதா ?
ஒன்று நிச்சயம் சார் , கம்பர்கள் வாழும் இந்த திரியில் கட்டு தரியான எனக்கும் கவி பாடும் திறமை வருவதில் வியப்பில்லையே !!
என் தாயை மட்டும் மனதில் வைத்து கருக்குள் கருவை ஆரம்பிக்க வில்லை - முகம் காணாத எவ்வளவோ தாய் மார்கள் , அழத்தெரியாமல் அழுதுகொண்டிருக்கும் அந்த கற்பகிரகளுக்கு ஒரு சிறிய அஞ்சலி செய்யவ்வே ஆரம்பித்தேன் - அவ்வளவே !
கலை அண்ட் கல்நாயக் - நீங்கள் உங்கள் சந்தேகத்தை கன்னித்தீவு மாதிரி தொடர்ந்துகொண்டே செல்கிறீர்கள் - உங்கள் இருவரையும் விட மிகவும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளான எங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதாக தெரியவில்லை - நீங்கள் இருவருமே இப்படி இருந்தால் அடுத்ததற்கும் அடுத்த தலைமுறையான எங்களுக்கு யார் வழி காட்டுவார்கள் ? சீக்கிரம் ஒருமனத்த முடிவுக்கு வாருங்கள் --- :-d:)
**
உலகத்திலேயே மிகத் துன்பமாய் ஒலிப்பது எது.. வரிசையாக நிறையச் சொன்னாலும் கொஞ்சம் வேதனையைத் தூண்டுவது பெண்ணின் அழுகை..
இப்படித்தான் தோன்றியது அந்த அண்ணனுக்கு.. எப்பொழுதும் இன்னிசை, சிரிப்பொலிகள் என்று கேட்டிருந்த காதுகள் இன்று சோகத்தைக் கேட்கின்றனவே…
யார்..யாரது…
நான் நான் தானண்ணா.. – அழுகையின் குமுறலில் வார்த்தைகள் குழறலாக வர அவனுக்குப் புரியவில்லை
பார்த்தான்..தெரியவில்லை..எனில் வந்தவள் ஒரு மெல்லிய சீலையால் மோவாய் மூக்கு கன்னம் எல்லாம்மூடியிருந்தாள்..கண்கள் மட்டும் கலங்கிச் சிவந்து அழுது களையிழந்து..
யாரிவள்..மிகப் பரிச்சயமான கண்கள்.. இந்தக் குரல்.. மிகப் பரிச்சயமான குரல்..ஓ என் தங்கை..
தங்கையே.. என்ன ஆயிற்று..
அண்ணா – மெல்லிய சீலையை ஒரு கணம் விலக்கி மறுபடி மூடிக்கொண்டாள்.. அடடா.. இது என்ன மாபாதகம்.. மூக்கை யார் வெட்டினார்கள்.. என் தங்கையை அப்படிச் செய்வதற்கு யோசிப்பவர் கூட உண்டா..இருக்காது
இவள் எதன் மீதாவது விழுந்து விட்டாளா.. எந்த ஆயுதமாயிருக்கும்..
என்ன ஆயிற்று தங்கையே…
தங்கை கலங்கிக் கலங்கிக் கூறினாள் “அண்ணா.. கானகத்தில் இருவரை ச் சந்தித்தேன்.. மூத்தவர் பால் ஆசைபட்டேன்..என்னை மணம்புரியச் சொன்னேன்.. மறுத்தார்.. இளையவரைக் கேள் என்றார்..அந்த இளையவரால் எனக்கிந்த நிலை…ஆனால் அண்ணா..அந்த மூத்தவர் இருக்கிறாரே..அவருக்கு ஒரு மனைவி..அவள்…”
என ஆரம்பித்த தங்கை சிரிக்க ஆரம்பித்தாள்..
“என்ன சொல்.. தங்கையே..”
அவள் அழகைச் சொல்லி மாளாது அண்ணா.. அவள் போன்ற அழகி உன்னுடன் இருக்கத் தகுந்தவள் என்று தான் அவளைக் கவரப் பார்த்தேன்..ஆனால் அண்ணா.. “ மேலும் சிரிப்பு..
பெண்கள் சாமான்யமாக பிற பெண்ணை அழகு என்று சொல்வதில்லை..இது அண்ணனுக்கும் தெரியும்..
சொல் இவளே..
“கயிலையில் இருக்கும் பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான்.. திருமாலோ திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான். தன்னுடைய தேவியான கலைமகளைத் தன் நாவிலேயே வைத்திருக்கிறான் பிரம்மன்..இப்படி மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரைத் தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள்..
நீயோ மும்மூர்த்திகளை விடவும் கீர்த்தி பெற்றவன்..
மின்னலை விட மிக நுண்ணிய இடை கொண்ட அந்த அழகு நங்கை – செம்பொன்னால் செய்த சிற்பத்தைப் போன்ற சீதையை- அடையும் போது அவளை எங்கே வைத்துவாழ்வாய் நீ என நினைத்தேன் .. சிரிப்பு வந்தது..”
அண்ணன் ராவணனினுள் சீதையின் அழகு புகுந்து கொண்டது தங்கை சூர்ப்பனகை சொன்ன வார்த்தைகளினால்.
.
இதைத் தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் கீழ்வரும் வரிகளில் சொல்கிறார்..
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!"
சரி.. கம்பனை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ.. கவியரசர் கண்ணதாசனுக்கும் அவரை மிகப்பிடிக்கும்..
கம்பன் சொன்னதை தான் புனைந்தபாடலிலும் கையாண்டிருக்கிறார்..
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பாற் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.
(நெட்டில் படித்ததை கொஞ்சம் பெப்பர் சால்ட் போட்டுத் தந்திருக்கிறேன்)
அழகாய்த் தான் இருக்கிறது..ஆனால் இந்தப் பரமகுரு என்பது பிரம்மனா.. ரெண்டு பக்கம் என்பது நாவுக்கு உண்டு என்பதால் சொல்கிறாரா.. இல்லை.. அவர் சொல்வது பரமகுரு –பரமனுக்கும் குருவான முருகன் தனது தேவியர் இருவரையும் இரண்டு பக்கமும் வைத்தான் என்பது..
அச்சோ.. இப்போ பாட்டை மறுபடி கேட்க வேண்டுமே..
பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போன்றொரு அம்மாஞ்சி ராஜா.. யாரம்மா..
ந.தி. + பத்மினி..
https://youtu.be/eG0R0U_cqWo
கவிதையிலும் கலைகளிலும் பழக்கமில்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே – ந.தியின் முகபாவங்கள் மிகவும் ரசிக்கும் விதமாக இருக்கும்..
*
வியட் நாம் வீடு. இதுவும் மதுரை ஸ்ரீ தேவி தான்..வெகு சின்ன வயதில் ஆஸ்யூஸ்வல் அம்மா கூட்டிச் சென்று காட்டியிருக்கிறார்.. பின் நினைவு தெரிந்த பிறகு பார்த்தது துபாய் தான்..வீடியோ. தான்..
ஆனால் அந்தவாடி ரமணி போடி ரமணி மட்டும் படம் பார்த்து வந்த பிறகு சொல்லிக் கொண்டே இருப்பேன் என சகோதரி சொல்லியிருக்கிறார். (யாராக்கும் அந்த ஆக்ட்ரஸ்) என் அண்ணன் அந்த வீடு ஷேப்பில் இருக்கும் பாட்டுப் புத்தகம் வாங்கிவந்தவுடன் புரட்டிப் பார்த்தது நினைவிருக்கிறது..
குமுதத்தில்கூட ஏதோ போட்டி வைத்து பிரஸ்டீஜின் மூக்குக் கண்ணாடி, கைத்தடி எல்லாம் ந.தியே பரிசாக வழங்கும்படி ஏற்பாடு செய்திருந்ததை பைண்ட் செய்யப் பட்ட புத்தகத்தில் படித்த நினைவு..
ந.தியின் கம்பீரம்..உன் கண்ணில் நீர்வழிந்தாலில் துவளும் மனோபாவம், எஸ்.வி.ராமதாஸின் அலட்சியத்துக்குக் காட்டும் பதில் அலட்சியம்.. ம்ம் மறக்க முடியாது..ம் மறுபடி ஒரு தடவை பார்க்க வேண்டும் பார்த்து ஒரு இருபது வருடம் இருக்கும்..
கலை , ck - நீங்கள் எவ்வளவு அழகாக ஆன்மிகத்தை திலகங்களின் பாடல்களுடன் இணைக்கிறீர்கள் - தனி திறமை வேண்டும் - இவர்கள் சாதித்த சாதனைகளிலே மிக உயர்ந்த சாதனை - இவர்கள் பாடல்களை எந்த சப்ஜெக்ட் உடனும் இணைக்க ஏதுவானவை . நாம் பார்க்கும் கான்னோட்டமும் ஒரு முக்கிய காரணம் . நடத்துங்கள் - ரசிக்க காத்திருக்கிறோம் .
கலை,
நீங்கள் கேட்டது 'பல்லாண்டு வாழ்க' படத்தின் 'புதியதோர் உலகம் செய்வோம்' பாடல். ஆனால் நண்பர்கள் 'சந்திரோதயம்' படத்தின் டைட்டில் பாடல் என்று நினைத்து விட்டனர் போலும். சில நாட்களுக்கு முன் தாங்கள் 'ஒருதாய் மக்கள்' படத்தின் 'நீங்க நல்லா இருக்கணும் எல்லோரும்' பாடல் பற்றி ஒரு ஆய்வு அளித்திருந்தீர்கள். (பதிவு எண் 22) அதற்கு நான் அளித்த பதில் பதிவில் தற்போது நீங்கள் கேட்டிருந்த 'புதியதோர் உலகம் செய்வோம்' பல்லாண்டு வாழ்க படப்பாடலைப் பற்றி குறிப்பிட்டிருந்ததாக நினைவு. சரியாக நினைவில்லை. அதனாலென்ன? இப்போது உங்கள் விருப்பப் பாடல் இதோ.
பை தி பை தங்கள் ஜகத்குரு கதை ஆணவக்காரர்களுக்கு ஒரு சவுக்கடியே. நல்ல உயர்தரமான பதிவு என் உயிர் நண்பரே! சொறிந்து விட்டேன்.:)
https://youtu.be/FK7-9blwaIg
அப்படியே 'சந்திரோதயம்' படத்தின் பாடலையும் கேட்டு விடலாமா?
https://youtu.be/RJpSmTTmvFI
கலை,
'சந்திரோதயம்' படத்தின் டைட்டில் பாடலாக பார்க்க விருப்பம் இருந்தாலும் பார்த்து விடலாம். முழுப்படம் என்று இருந்தாலும் ஆரம்பத்திலேயே டைட்டில் சாங்காக வந்து விடுவதால் சுலபமாக பார்த்து விடலாம். உங்கள் சொறிதலுக்காக வெயிட்டிங்.:)
https://youtu.be/ROu-uUyg4gM
கருவின் கரு - பதிவு 36
கங்கையில் குளிப்பதால் பாவம் தீருமா ?
காட்சி 1: இடம் கைலாசம்
ஒரு முறை இறைவிக்கு பெருத்த சந்தேகம் . உலக அன்னைக்கே சந்தேகம் என்றால் , அந்த இறைவன் தானே தீர்த்து வைக்க முடியும் . தேவி கேட்டாள் , " கங்கையில் குளிப்பவர் எல்லோருக்கும் புண்ணியம் என்றால் , அவர்களுக்கு சொர்க்கம் நிச்சியம் தானே இறைவா ?"
இறைவன் சிரித்தான் - ஒரு உண்மை அவன் சிரிப்புக்கு பின் ஒளிந்து இருந்தது . " தேவி ஏன் இந்த திடீர் சந்தேகம் ? மற்றவர்களுக்கு வரலாம் . எல்லாம் தெரிந்த உனக்கு வரலாமா ?"
" மற்றவர்கள் தெரிந்துகொள்ளத்தான் கேட்க்கிறேன் - கொஞ்சம் சொல்லுங்கள் "
இறைவன் சொன்னான் " தேவி இந்த தடவை சொல்லப்போவதில்லை ; செய்து காட்டுகிறேன் . வா இருவரும் காசிக்கு செல்வோம் சற்றே வயதான தம்பதிகளாக !"
எல்லாம் புரிந்தவள் , புரியாத வண்ணம் திகைத்தாள் .
.
காட்சி 2.: இடம் காசி , கங்கை கரை
ஒரு வயதான மூதாட்டி தன் இளைத்த குரலில் , அழுத வண்ணம் கூக்குரலிடுகிறாள் -- " யாராவது காப்பாத்துங்களேன் - எனது கணவர் - ஓடும் கங்கையில் விழுந்துவிட்டார் . அவருக்கு நீந்த தெரியாது ( எல்லோரையும் நீந்த வைத்து கரை சேர்ப்பவனுக்கு நீந்த தெரியாதாம் !!). அவரின் மூச்சு முட்டுவதைபாருங்கள் ! - யாரவது உதவி செய்யுங்களேன் !"
வழக்கம் போல எல்லோரும் அங்கு கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள் .. இதன் நடுவில் ஒரு வாலிபன் ஓடி வந்தான் . " தாயே கவலைப்படாதீர்கள் . நான் காப்பாத்துகிறேன் உங்கள் ஆசியுடன் !"
அந்த மூதாட்டி உடனே " இருப்பா ! இங்கு உன்னை விட வயதானவர்களும் , பலசாலிகளும் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் - நீ மட்டும் ஏன் காப்பாத்த வருகிறாய் ?. சரி அப்படியே வந்ததும் வந்தாய் - ஒரு நிபந்தனையையும் கேள் !"
வாலிபன் திகைத்தான் ,காப்பாற்ற நிபந்தனையா ??? - என்ன தாயே விரைந்து சொல்லுங்கள் !. பெரியவர் முழுகி விடப்போகிறார் ."
" மகனே ! நீ அவரை காப்பாற்ற வேண்டுமென்றால் , நீ பாவம் இதுவரை எதுவும் செய்யாதவனாக இருக்கவேண்டும் - அப்படி இருந்தால் தான் உன்னால் அவரை காப்பாற்ற முடியும் !"
சுற்றி இருந்த கூட்டம் கலைந்தது - "பார் இந்த கிழவியின் திமிரை ! காப்பாற்ற யாரவது வர மாட்டார்களா என்று அழுதாள் , வந்தவனிடம் conditions வேறு போடுகிறாள் . பாவம் செய்யாதவர்கள் யார் இருக்கிறார்கள் ? இவள் கணவன் செத்து மடியட்டும் - யாருக்குமே பாவம் பார்க்க கூடாது !!"
அந்த வாலிபன் உடனே கங்கையில் குதித்தான் - விரைந்து வந்து " தாயே என் பாவங்கள் எல்லாம் போய் விட்டது - இப்பொழுது அந்த பெரியவரை காப்பற்ற ஆணை இடுங்கள் "
பெரியவரும் மறைந்தார் ! பெரிய நாயகியும் மறைந்தாள் - தேவிக்கு இப்பொழுது அந்த உண்மை புரிந்தது . நம்பிக்கை வேண்டும் - நன்றாகவே எல்லாம் நடக்கும் என்ற மன உறுதி வேண்டும் "
இது எப்பவோ நடந்த கதை - இன்றோ கங்கையில் குளித்தும் - குளித்தால் நம் பாவம் கண்டிப்பாக போகும் என்ற திட நம்பிக்கை இருந்தும் பாவம் சூழ்ந்தவர்களாகத்தானே இருக்கிறோம் . எவ்வளவோ மூதாட்டிகள் இன்றும் என்னை காப்பாற்றுங்கள் , என் கணவனை காப்பற்றுங்கள் என்று தானே கங்கையின் மடியில் அமர்ந்து கொண்டு அழுத வண்ணம் இருக்கிறார்கள் - தாயையும் , தந்தையையும் அங்கு விட்டு செல்பவர்கள் செவிடர்களாகத்தானே திரும்புகிறார்கள் !!!!!!!!
"உலக அன்னையே ! மீண்டும் இந்த சந்தேகத்தை இறைவனிடம் எங்களுக்காக கேட்ப்பாயா ?"
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ----
https://youtu.be/RKvR0aDgsUc
https://youtu.be/bjDz6hFmFRE?list=PL...lB0-4SgqJMUa1H
கருவின் கரு - பதிவு 37
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ----
https://youtu.be/kLr8HJiLH3Y?list=PL...lB0-4SgqJMUa1H
https://youtu.be/of00-2LeHoA
கருவின் கரு - பதிவு 38
சுமக்கும் பாடல்கள் தொடர்கின்றன ----
https://youtu.be/hhRiJ_8AkJI
https://youtu.be/IEebDOrLr0M
வணக்கம்.
திரையில் பக்தி -2
பக்தி என்பது பக்தி படங்களில் தான் என்றில்லை, தெய்வத்தை தொழுவது, கதாகாலட்சேபம் என பல வகையில் அன்று எவ்வளவோ வகையில் பக்தி மலரத்தான் செய்தது.
கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது போல் பல நீதிகளை வெறும் சேதியாக சொல்லாமல்
கதையூடே சொல்லிய திறமை அன்று பலருக்கு இருந்தது..
அப்படி ஒரு படம் செளபாக்யவதி. ஜெமினி சாவித்திரி ஜோடியில் வெற்றி படம்
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையில் பாட்டுக்கோட்டையின் வரிகள்
ஏழிசை வேந்தர் தமிழிசைச்செல்வர் திரு டி.எம்.எஸ் ஐயாவின் கம்பீர குரலில் நடராஜனை தொழுதால் வராமல் இருப்பாரா என்ன
தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4
hi good morning all
ஒருபக்கம் அன்னை (ரவி) ஒரு பக்கம் பக்தி ( ராஜேஷ்) எனக் கலக்கலாகப் போகிறது.. நான் இன்னும் எதுவும் எழுதவே ஆரம்பிக்கலை..
கல் நாயக்கின் பூ பாடல்களும் அமர்க்களம்.. ஆனால் எனக்கு இன்னும் வேண்டுமே..
ஹோம் வொர்க் அனேகமாய் நாளை இரவு தான் செய்வேன் என நினைக்கிறேன்..
ராகவேந்தர் சார்..துள்ளி ஓடும் புள்ளி மானின் கதைச்சுருக்கம் வரைக.. அதைப்போட்டால் ஆப்பரேட்டர் ரூமிலிருந்து வரும் மெஷின் சத்தம் ப்ளஸ் செளண்ட் வேறு கொஞ்சம் கம்மி.. எனில் பார்க்க இயலவில்லை..
கலை நன்றி.. ஜகத்குருபற்றிய கட்டுரையும் பாடலுக்கும்..தொடர்ந்த வாசுவின் பாடல் பங்களிக்கிற்புக்கும் ஒரு ஓ..
பின்ன வாரேன்..
pazhaiya kavithai.. pazhaiya paattu!
வியாதி வர்றதுக்குக் காரணமே
இந்த திருஷ்டி தான்’
மடியில் தம்பியை வைத்து
சூட்த்தை மூன்றுமுறை சுற்றுவதற்கு முன்
அம்மா சொன்னதும்;
வளர்ந்த பின்
‘எட்டு மிளகாய் போட்டு
சுத்திப் போட்டு அடுப்பில போட்டேங்க..
கமறவே இல்லை..
பாருங்க பசங்களுக்கு..ரொம்ப திருஷ்டி’
என்று பதறிச் சொன்னதும்;
காதலித்துக் கடிமணம் புரிந்த
வடக்கத்திய மனைவி என்னிடம்
‘நஸர் உத்தார்னேகேலியே
இந்த கட் பண்ணின நிம்புவை
மூணு டைம் சுத்தி பாஹர் போடு’
என்று மழலைத் தமிழில் சொன்னதும்;
எனக்கு திருஷ்டிக்கு
முற்றுப் புள்ளி வைப்பதை விட.
அவர்களது அன்பின்
’கமா’ வாகத்தான் தோன்றியது...
*
https://youtu.be/TwO31yVw8vY
ரவியின் கருவின் கரு..தொடர்பாக (?!) என்னுடைய பழைய கவிதை (?!)பாட்டுக்குப் பாட்டிலிருந்து எடுத்தது நான்கு வருஷம் முன்னால் எழுதியது..
*
சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்..
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தட்வித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
ம்ற்க்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..
***