http://i1039.photobucket.com/albums/...ps5svuruqj.jpg
Printable View
கலைப்பூங்கா கட்டுரை http://i1039.photobucket.com/albums/...pst8cyffin.jpg
http://i1028.photobucket.com/albums/...psnnqptnzp.jpg
ஏதேனும்
ஒரு தேசத்துக்கு
நீங்கள் அரசனாகியிருந்தால்..
அரச சபை நோக்கி
நீங்கள் நடந்து வருகையில்,
"ராஜாதி ராஜ..
ராஜ மார்த்தாண்ட.."
வாழ்த்துத் துதி படிப்பவன்
மிச்சத்தை மறப்பான்...
அந்த ராஜநடை கண்டு
வியந்து.
http://i1028.photobucket.com/albums/...pshygcvlbt.jpg
நானும்,இரண்டு நண்பர்களும்
பேசி மகிழ்ந்திருந்தோம்..
ஒரு மாலை நேரம்.
விடை பெற்றனர்
நண்பர்களிருவரும்.
ஒருவன்
தியான வகுப்பு போனான்.
மற்றொருவன்
கோயிலுக்குப் போனான்.
நான்
நடிகர் திலகம் படம் பார்க்கப்
போனேன்.
மறுநாள் சந்தித்தோம்
மூவரும்.
என்னவோ நேற்று
மனம் ஒன்றவில்லை
என்றான்..
தியானம் பண்ணப் போன
நண்பன்.
கோயிலின் கூட்டத்தில்
அமைதியிழந்தேன்
என்றான்..
மற்றொரு நண்பன்.
"தியானம் போல்
மனம் ஒன்றிய லயிப்பில்..
கூட்டமான கூட்டத்திலும்
அமைதியும்,நிம்மதியுமாய்
மகிழ்ந்திருந்தேன் நேற்று"
என்று சிரித்தேன்..
நான்!
இன்று நானும் என் மனைவியும் இரவு காட்சிக்கு சேலம் அலங்கார் தியடர்க்கு சென்றோம்..dts இல்லை.அந்த படத்திற்கான நவீன தொழில் நுட்பங்கள் ஏதும் இல்லை..இது சம்பந்தமாக..சம்பந்த பட்ட திரையரங்கின் உரிமையாளரை..சந்திக்க முடியவில்லை..சம்பந்தமில்லாத நபர்கள்..படம் பார்த்தால் பார்..இல்லை என்றால்..காசை வாங்கிட்டு போ.. என்றார்கள்..டெக்னிக்கலாக நான் கேட்ட கேள்விக்கு அவர்களளால் பதில் சொல்ல முடியவில்லை..அதிக செலவு செய்து வெளியிடும் படங்களின் நிலை இதுதான்..நானும் என் மனைவியும் பார்க்க சென்ற படம் சிவகாமியின் செல்வன்..என் பேவரிட் சாங் இனியவளே..பாடல்..இந்த பாடலுக்காகதான் நான் படம் பார்க்க என் மனைவியுடன் சென்றேன்..படத்தை பார்க்காமல் திரும்ப வந்து விட்டோம்..ரொம்ப வருத்த மாக இருக்கிறது நண்பர்களே..
http://i1028.photobucket.com/albums/...psg4v2emxn.jpg
ஈவு,இரக்கமில்லாமல்
எத்தனையோ
சினிமாக் கதைகள்
முடிவில் உங்களைக்
கொன்றன.
ஆனால்..
அத்தனை கதைகளும்
உங்களால்
வாழ்கின்றன.
முத்தையன் அவர்களே,
தங்களுடைய உள்ளத்தில் உள்ளது தான் இங்கு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உள்ளது. தமிழ்த்திரையுலகின் வணிகத்தினையே இன்றும் நிச்சயிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த சிவாஜி-எம்.ஜி.ஆர். படங்களைத் திரையிட திரையரங்குகள் முன் வருவதில்லை. அரங்கில் ஒருவர் இருவரே பார்வையாளர்கள் இருந்தாலும் புதிய படங்களைத் திரையிடுகிறார்களே தவிர இன்றும் தமிழ் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இருவரின் படங்களையும் என்னதான் நவீனமயமாக்கினாலும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தர மறுக்கிறார்கள். இந்த நிலை எப்படி உண்டானதோ தெரியவில்லை. வணிக ரீதியாக வெற்றி என்ற சொல்லைக் கேள்விப்படக்கூட வாய்ப்பில்லாத படங்களுக்கு முன்னுரிமை தருவதும் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டித்தரக்கூடிய பழையபடங்களுக்கு இடமில்லை என்பதும் விந்தையாக உள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். இல்லையென்றால் இனிமேல் பழைய படங்களை நவீன மயமாக்கி திரையரங்குகளில் வெளியிட யாருமே முன்வராத நிலை உண்டாகும் அபாயமுள்ளது.
உத்தமன் திரைப்பட பாடல் "தேவன் வந்தான்டி" பாடலுக்கான நிழற் படங்கள்
http://oi67.tinypic.com/xku2it.jpg
உத்தமன் திரைப்பட பாடல் "தேவன் வந்தான்டி" பாடலுக்கான நிழற் படங்கள்
http://oi65.tinypic.com/t9t6o8.jpg