http://i68.tinypic.com/2lauxe.jpg
Printable View
மனிதர்கள் இரண்டே பிரிவு
நான் கஷ்டப்பட்ட போது எவரும் உதவவில்லை அதனால் நான் எவருக்கும் உதவமாட்டேன்
நான் கஷ்டப்பட்டேன் அது போல் கஷ்டத்தை எவரும் படாமல் என்னால் முடிந்த உதவி செய்வேன்
இதில் எம் ஜி ஆர் இரண்டாம் பிரிவு
இறைவனிடம் கேட்டால் வரம் தர சிறு தாமதம் ஆகலாம்
எம் ஜி ஆரிடம் உதவி என்று கேட்டால் உடனே கிடைக்கும்
இது சரோஜா தேவி மட்டும் சொன்னதல்ல பலர் உரைத்த வரி
இல்லை என்று இருக்கும் வரை சொல்லா சொக்க தங்கம் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்
வளர்க எம் ஜி ஆர் புகழ்... Thanks Friends...
எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல*
ஆனால் பின்னாளில் அவரில்லாமல் கட்சி இல்லை எனும் அளவிற்கு அக்கட்சி அவரிடம் சரண்டைந்தது, அனாசயமாக கைபற்றினார் அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது.
இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது.
எதில் வென்று வரலாற்றில் நிலைத்தார் ஜெயலலிதா?
கணக்கிடுவது மிக எளிது, இந்த திமுக என்பது தமிழகத்திற்கு பிடித்தமான கட்சி அல்ல, அதன் பிரிவினை வாதமும் நாத்திகமும் இன்னும் அக்காலத்தில் காமராஜருக்கு எதிரான அரசியலும் அதன் மேல் அதிருப்தியினை கொண்டிருந்தது
ராமசந்திரன் அதில்தான் வெற்றியினை அறுவடை செய்தார், அந்த நுட்பத்தை ஜெயலலிதாவும் அப்படியே பின்பற்றினார். இறுதிவரை திமுகவின் நாத்திக, ஒருமாதிரியான பிரிவினைவாத எதிர்ப்பினை தனக்கான வோட்டு வங்கியாக காப்பாற்றி கொண்டார்.
திராவிட கட்சி ஆயினும் கொஞ்சமும் அவர் ஆன்மீக காரியங்களுக்கு அஞ்சவில்லை, தான் ஒரு பக்தி மிக்க இந்து என்பதில் தெளிவாக இருந்தார், அதே நேரம் எந்த மதத்து எதிரியாகவும் தன்னை காட்டிகொள்ளவில்லை, இதில்தான் ஜெயா வென்றார்
ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தகாரியானார், ஆனால் எந்த இடத்திலும் எதனைபற்றியும் அவர் வருத்தம் தெரிவித்து பேசியதில்லை. நான் அப்படித்தான் என்பது போல அவரின் தோரணை இருந்தது. எந்த வழக்கும் எந்த சிக்கலும் அவரின் அரசியலை பாதித்தில்லை
தமிழகம் அவரை அசைக்க முடியா இடத்தில் வைத்திருந்தது, எத்தனையோ குற்றசாட்டுகளை அவர் எதிர்கொண்டபோதும் தமிழகம் அவரை கைவிடவில்லை, இங்கு அவர் பொருத்தமான முதல்வர் என்பதை நம்பியது
குறிப்பாக பெண்கள் வாக்கு அவருக்கு அதிகம் இருந்தது, தங்களில் ஒருவர் போல அவரை நேசித்தார்கள், அவரும் தாலிக்கு தங்கம், மாணவிகளுக்கு சைக்கிள், இலவச மிக்ஸி கிரைண்டர் என மகளிரின் நாடிதுடிப்பினை அறிந்தே இருந்தார்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஜெயாவின் செயல்பாடு தீவிரமாக இருந்தது, எத்தனையோ என்கவுண்டர் சர்ச்சைகளும் அதில் வந்தது, இதில் தனக்கொரு தனி அடையாளத்தை பெண்களிடையே தேடிகொண்டார்
அந்த அனுதாபம் குறையா வகையில் திமுகவின் வெற்றிகொண்டான் கோஷ்டிகள் மிக ஆபாசமாக பேசி தங்களையும் அறியாமல் ஜெயாவிற்கு உதவியது
ஒரு வித்தியாசமான அரசியல்வாதி ஜெயலலிதா, பெரும்பாலும் தனிமை விரும்பி , அவர் யாரையும் தேடி சென்றதாக தெரியாது, எல்லோரும் அவரை தேடித்தான் சென்று வணங்கி நின்றார்கள், அப்படியும் காலம் இருந்தது
இப்படி எல்லாம் பெரும் உயரத்தில் பெரும் ராணிக்கு நிகரான வாழ்வினை தமிழகம் அவருக்கு கொடுத்திருந்தது, பிரச்சாரத்திற்கு இந்த சிறிய தமிழகத்தில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் மற்றும் கடைசியான கட்சி தலைவி அவர்தான்
வாழ ஒரு காலம் உண்டென்றால் அடிவாங்க ஒரு காலம் உண்டல்லவா?
சொத்துகுவிப்பு வழக்கில் அவரால் தப்ப இயலவில்லை, குமாரசாமி வடிவில் விதி வெளியில் விட்டாலும், அவர் மகிழ்ச்சியடையவில்லை
பெரும் எண்ணிக்கை எம்பிக்களை பெற்று பிரதமராகிவிட்டால் தன் வழக்குகளை இந்திரா ஸ்டைலில் புதைத்துவிடலாம் எனும் கனவும் மோடி வடிவில் தகர்ந்தது
அதன்பின் ஜெயலலிதாவிடம் உற்சாகம் குறைந்தது, அதாவது அவர் ஜாதகம் தென்னிந்தியாவில் பலித்தது, வட இந்தியாவில் முடியவில்லை
தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வரானாலும் அவர் பெரும்பாலும் வெளிவரவில்லை, இந்நிலையில்தான் அவரின் எம்பி சசிகலா புஷ்பா என்னை ஜெயலலிதா அடித்தார் என பாராளுமன்றத்தில் அழுதார்
அதன் பின் காட்சிகள் மாறின, இதனை எதிர்பார்க்காத ஜெயலலிதா குழம்பினார், குழப்பத்திலே அப்பல்லோவில் அனுமதிகபட்டார்
அதன் பின் அப்பல்லோ டாக்டர்களை தவிர யாரும் ஜெயாவினை பார்க்கவில்லை, அவர்களுக்கு அடுத்து பார்த்தது லண்டன் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்
அங்கே வாழ்வு முடிந்து பிணமாக* வெளிவந்தார் ஜெயா.
கட்சி ஆடியது, அவருக்கு பின் யார் என்ற குழப்பம் கட்சியில் ஒடிகொண்டிருக்கும் பொழுதே தீர்ப்பு வந்தது
அவர் நெடுநாள் சிறைவாசம் பெற்று, ஆட்சி நீங்கும் நிலைக்கும் அவர் விதி ஒப்புகொள்ளவில்லை, காப்பாற்றி இருக்கின்றது, அல்லது காபாற்றபட்டிருகின்றார்
ஜெயலலிதா எங்கும் தன் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல, கண்ணீரோ கத்தலோ பொதுஇடத்த்தில் அவரிடம் இருக்காது, எல்லா அவமானங்களையும், நக்கல்களையும் மனதில்தான் வாங்கிகொண்டிருப்பார்
எம்ஜிஆர் சமாதியில் அடித்து சத்தியம் செய்தார், கோபத்தில் சிரித்தார், ஒரு மாதிரி பேசினார் என எங்காவது ஜெயா வாழ்வில் பார்க்க முடியுமா?
அப்படியே பாறைபோல முகபாவம் இருக்கும், உதடுகள் மட்டும் அசையும்
மொத்தத்தில் கிட்டதட்ட 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலை ஆட்டுவிக்க வந்த* ஆன்மா இந்த பூமியினை விட்டு சென்ற நாள் இது
எம்.என் ராஜம் போல, சரோஜா தேவி போல, சச்சு போல ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கவேண்டிய ஜெயாவினை, இன்று மிஞ்சி போனால் கே.ஆர் விஜயா போல டிவி தொடர் நடிகையாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் திமுகவினை எதிர்க்க சரியான நபர் எனும் வடிவில் பெரும் அரசியல் பிம்பமாக மாறி இருந்தார்.
அவர் இருக்கும்வரை அவரின் மர்மங்கள் எல்லாம் தூங்கின*
அவர் தூங்கசென்றவுடன் அவரின் மர்மம் எல்லாம் வெளிவர தொடங்குகின்றன.
உண்மையில் இந்த ஜெயலலிதா என்பவர் பரிதாபத்திற்குரிய பிறவி, அவர் அவருக்காக வாழவில்லை, வாழவே இல்லை
யார் யாரின் சுயநலத்திற்காகவோ பயன்படுத்தபட்டு இறுதியில் கேட்க யாருமின்றி அனாதையாக செத்துவிட்ட ஒரு அபலை அந்த ஜெயலலிதா.
அவர் விதி அப்படி இருந்திருக்கின்றது. தங்கத்தால் அதனை அணிபவருக்கு பலனே அன்றி, அதற்கு என்ன பலன் என்பார் பட்டினத்தார்
அப்படி ஜெயா எனும் தங்கத்தால் மற்றவருக்கு எல்லாம் பயன் இருந்ததே தவிர, அவருக்கு ஒன்றுமே இல்லை, துளி நிம்மதி கூட இல்லை, அப்படி வாழ்ந்த அபலைதான் ஜெயா.
அந்த அபலை நிச்சயம் பரிதாப சோகம், வழக்கம் போல அவரை வைத்து எல்லோரும் பயன்படுத்திவிட்டு அவரை அடக்கம் செய்துமாகிவிட்டது
கோடிகணக்கான சொத்துகள் இருந்தும் அவர் மீது உண்மை அன்புகாட்ட ஒருவருமின்றியே தவித்து செத்த கொடுமை அவருக்கு நடத்தது.
ஆனால் சில விஷயங்களில் அவரை மறக்க முடியாது, அதில் முதலாவது அவரின் நாட்டுபற்று.
அது 1983களிலே வடகிழக்கு மாகாண பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் அட்டகாசமாக பேசியபொழுது தெரிந்தது, இந்திராவே பிரமித்திருந்தார். ஜெயாவின் அந்த நாட்டுபற்று இந்திராவிற்கு அவர்மேல் பெரும் பாசத்தை ஏற்படுத்தி இருந்தது, தன் அருகே பல முக்கிய கூட்டங்களில் ஜெயாவினை அமர்த்தி இருந்தார்
புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் ராஜிவிற்கு அவர் உதவியாக இருந்தார், புலிகளின் குறியில் ஜெயாவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது
தமிழிக பிரிவினைவாத அரசியலை அவர் பேசவில்லை, அவர் இருக்கும் வரை எவனையும் தமிழ்தேசியம், தக்காளி தேசியம் எல்லாம் பேசவிடவில்லை
கருணாநிதி எனும் சாகச அரசியல்வாதி 1991க்கு பின் தேவைபடும்பொழுதெல்லாம் ஈழவிவகாரத்தை கிளறியபொழுது அவருக்கு பொட்டில் அடித்தாற்போல பதில் சொன்னவர் ஜெயலலிதா
பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என சொன்ன தைரியமிக்க இந்தியர் ஜெயலலிதா, அதில் அவருக்கு கொஞ்சமும் தயக்கமோ அச்சமோ வாக்கு பயமோ இல்லை, இந்தியராக நின்றார்
மண்டல் கமிஷன் அறிக்கையினை சட்டமாக்க போராடியவர் ஜெயலலிதா
ராமசந்திரனும், கலைஞரும் காவேரியிலும் முல்லைபெரியாரிலும் செய்த தவறுகளை எல்லாம் நேராக்க கடும் பாடுபட்டு வழக்கு நடத்தினார் ஜெயலலிதா, முல்லைபெரியாரில் வெற்றியும் பெற்றார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட கூடாது என அணு விஞ்ஞானிகளுக்கு முனனதாகவே நுட்பமாக கண்டித்தவர் ஜெயலலிதா
தன் கட்சிக்காரர்களின் கேடயம் என தெரிந்தும் கந்துவட்டி, மதுகடைகளை அரசுடமையாக்குதல், லாட்டரி ஒழிப்பு என மிக தைரியமான முடிவுகளை எடுத்தவர் அவர், மறக்க முடியாது
சந்தண வீரப்பனை ஒழித்து அவனுக்கு தூதாக இருந்த நக்கீரன் கோபாலை எல்லாம் அவர் விரட்டிய அளவு இன்னொருவர் செய்ய முடியாது
2009ல் திமுக ஈழபிரச்சினைக்காக அரசில் இருந்து வெளியேறினால் மறுநொடி காங்கிரஸ் கட்சியினை ஆதரிக்க தயார் என பகிரங்கமாக பேதங்களை மறந்து இந்தியராக நின்றவர் ஜெயா
அந்த தைரியம், நாட்டுபற்றோடு இனி இங்கொரு பெண் வரப்போவதில்லை
தமிழகத்தில் கடவுள் பக்திமிக்க பெண் முதல்வராக பதவியில் அமர்ந்தவர், பெரியார் மண் இது எனும் மாயயினை அடித்து நொறுக்கினார். அவருக்கான ஆதரவு தமிழகத்தில் அவர் சாகும் வரை அப்படியே இருந்தது.
வைகோ எனும் புலி அபிமானி, இந்திய எதிரி இன்று இப்படி பைத்தியமாய் அலைவதில் ஜெயாவின் அடியும் உண்டு
ஈழ புலி பிரிவினை கோஷ்டிகள் எல்லாம் இங்கு இன்று அடக்கி வைக்கபட்டிருக்கின்றன என்றால், அவற்றால் ஒரு எல்லையினை தாண்ட முடியவில்லை என்றால் அதற்கு முழு காரணம் ஜெயலலிதா.
ஒரு தமிழ்தேசியவாதி, ஒரு பெரியாரிஸ்ட், ஒரு பிரிவினைவாதி அவர் ஆட்சிகாலத்தில் பேசியதில்லை எனும் அளவு இத்தமிழகத்தை இந்திய மண்ணாக அட்டகாசமாக வைத்திருந்தார், ஜெயாவின் அந்த சாதனை போற்றதக்கது
காமராஜருக்கு பின் ஒரு முதல்வர் நாட்டுபற்றோடு இருந்தார், இத்தமிழகத்தில் மிகுந்த அதிகாரத்தோடு பிரிவினைவாதிகளை ஒடுக்கி, பிரிவினை பேசுவோரை மிதித்து இந்திய தேசியத்திற்கு பலமாக இருந்தார் என்றால் அது சாட்சாத் ஜெயா ஒருவரே
அந்த பெருமை எந்நாளும் அவருக்கு உண்டு, அவர் மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் இந்த விஷயத்தில் எதிரிகளும் அவரை குற்றம் சொல்ல முடியாது
இன்றும் அவர் கல்லறை தேசபக்திமிக்க பெண் முதல்வர் ஒருவரின் கல்லறையாகவே தமிழகத்தில் அமைந்திருக்கின்றது, காலம் அதனை சொல்லி கொண்டே இருக்கும்
அந்த தேச பக்தியின் பெண் வடிவிற்கு வீரவணக்கம்...... Thanks Friends...
2017
________
ராணி சீதை ஹால்
________________________
வீரப்பன் அவர்கள் தலமையில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா !
___________
இங்கு அனைத்து கட்சியின் தலைவர்களும் எம் ஜி ஆர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை பட்டியல் இட்டனர் இதோ இந்த கடிதம் பாருங்கள் எம் ஜி ஆர் மறைவிற்கு பிரபாகரன் எழதிய கடிதம் இது ஒன்றே போதும் தமிழர்களுக்கு அவர் செய்த உதவிக்கு எடுத்துக்காட்டு !
கடிதத்தை காட்டியவர்
ப ம க தலைவர்
டாக்டர் ராமதாஸ் அவர்கள்!
காமராஜர் அரங்கம்
_____________________
நாம் பிரபாகரன் அவர்களை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினால் அதில் 45 நிமிடங்கள் மக்கள் திலகம் செய்த உதவிகளைப் பற்றித்தான் பேசுவார் !
வை கோ அவர்கள்!
ஹயாத்!... Thanks Friends...
நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழா வேலூரில் 10 -12 - 1958 அன்று நடந்துள்ளது. அதற்கான விளம்பரம் இது. வேலூர் தாஜ் தியேட்டரில் நாடோடி மன்னன் வெற்றி விழா கொண்டாடி உள்ளது. இந்த விளம்பரத்தில் கீழே விழா நடக்கும் அன்று தாஜ் கொட்டகையில் பகல் 12 மணிக்கு ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று உள்ளது. நிச்சயம் அதற்கான செலவு புரட்சித்தலைவர்தான் செய்திருப்பார் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தன் படத்தின் வெற்றி விழாவன்று படம் பார்க்க வரும் ஏழைகளுக்கு சோறு போட வேண்டும் என்ற எண்ணம் எத்தனை நடிகர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு வரும். எந்த நடிகரும் தயாரிப்பாளரும் தங்கள் படத்தின் வெற்றி விழாவில் தியேட்டரிலேயே ஏழைகளுக்கு சாப்பாடு போட்ட வரலாறு இல்லை. இனிமேலும் யாரும் அப்படி செய்யப்போவது இல்லை.
அதிலும் முக்கியமாக இதுபோன்ற அன்னதானம் எல்லாம் புரட்சித் தலைவர் விளம்பரப்படுத்தியதே இல்லை. இந்த போஸ்டரில் கூட இலவச உணவு ஏற்பாடு என்று அவர் பெயர் இல்லை.இதெல்லாம் புரட்சித் தலைவர் செலவு இல்லாமல் யார் அப்பன் வீட்டு செலவு. புரட்சித் தலைவரின் கடல்போன்ற வள்ளல்தன்மையில் இது ஒரு துளிதான். எனவே தொலைக்காட்சி விவாதங்களில் மதி மாறன்கள் புரட்சித் தலைவரை விட வேறு நடிகர்கள் நிறைய தானம் செய்தார்கள் என்று என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் எட்டாவது வள்ளல் என்றால் அது புரட்சித் தலைவர்தான். இது மக்கள் மனதில் கல்வெட்டாக பதிந்து விட்டது. அதை யாரும் அழிக்க முடியாது.... Thanks Friends...
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.
எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி
•
‘உரிமைக்குரல்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அசத்தல் போஸ்.
•
•
எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு நின்றுபோன மற்றும் ஒரு படமான ‘நானும் ஒரு தொழிலாளி’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் தர்.
M.g.r. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.
ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.
‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.
ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
அதுதான் எம்.ஜி.ஆர்.
தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.
மக்கள திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter என்பதை திரை உலகிலும் அரசியல் உலகிலும் நிருபித்து காட்டியவர் .
மலைக்கள்ளன் - நாடோடி மன்னன் - திருடாதே - எங்கவீட்டு பிள்ளை - அன்பே வா - அடிமைப்பெண் ரிக்ஷாக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் - இதயக்கனி போன்ற படங்களின் தாக்கம் எம்ஜிஆர் ஒரு trend setterஎன்பதை நிருபித்து .
1957 / 1962/1967 /1971 தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் பல அரசியல் மாற்றங்களை உருவாக்கியது . 1977/1980/1984 தேர்தல்கள் எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது.1991/2001/2011/ 2016
தேர்தல்களில் எம்ஜிஆர் அரசாங்கம் உருவானது . உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் ..... Thanks Friends...
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .... Thanks Friends...
கோவை
ராயலில்
வெற்றி
நடைபோடுகிறது
தனிப்பிறவி
இன்று முதல் (07/12/18) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது .
http://i66.tinypic.com/2dma97q.jpg
கடந்தவருடம் தீபாவளித்திருநாள் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த ரிக்சாக்காரன் படத்தை தீபாவளிவெளியிடுஎன்றும் ரசிகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் போஸ்டரிலும் பேனரிலும் அறிவித்து தீபாவளிக்கு படத்தைஓட்டாமல் படத்தை எடுத்துவிட்டார்கள் நாங்கள் கோபத்துடன்வெளியேறி திரையரங்கை புறக்கனித்தோம் அது நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் இப்ப எங்களுக்காகவே என்று நமதுதெய்வம் புரட்சித்தலைவரின் நினைவுநாள் அன்று ரிக்சாக்காரன் படத்தை மறுபடியும் வெளியிடுகிறார்கள் நாங்கள் மீண்டும் திரையரங்கிற்கு செல்லலாமா தேவையில்லையா என்று நண்பர்களிடமே கேட்கிறேன் நண்பர்கள் கருத்து எதுவானாலும் ஒருவர்கூட பாக்கியில்லாமல் எனது பிறந்தநாள் விழாவுக்கு வாழ்த்தியதைப்போல அனைவரும் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்மதுரை.எஸ் குமார்... Thanks Friends...
கடந்த வாரம் திருச்சி- அருணா dts தினசரி 3 காட்சிகள் வெற்றி முரசு கொட்டியது... என்றும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் வடிவம்👍 👌...
https://i.postimg.cc/4NVd1wFq/IMG-0604.jpg
https://i.postimg.cc/BZ1QqMsb/IMG-0605.jpg
இதயக்கனி இதழில்
கேள்வி பதில் பகுதி
நன்றி - திரு விஜயன், இதயக்கனி ஆசிரியர்
பாக்யா வார இதழ் -14/12/18
http://i64.tinypic.com/o9gx0m.jpg
http://i66.tinypic.com/izmg3m.jpg
http://i64.tinypic.com/2cibiqf.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு என்றுமே பிடிக்காத செயல்கள் .
1. காலில் விழும் கலாச்சாரத்தை ரசிப்பது .
2. குனிந்து கைகூப்பி வணங்குவது
3. அளவிற்கு மேல் புகழ்வது
4. நான் என்ற திமிர் கொள்வது
5. தொண்டர்களை உதாசீனம் செய்வது
6. ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது
7. நல்லவர்களை ஒதுக்கி வைப்பது
8. கூடா நட்பை விரும்புவது
9. மிரட்டி பணிய வைப்பது ..... Thanks Friends...
மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை .... Thanks Friends...
உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.
எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.
1957 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் 4 முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 41 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்..... Thanks Friends...
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் மற்றும் பாடல்களும்
****************************
சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றாக தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.
நாடோடி:
---------------
படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அதை தர முடியும்.
நம்நாடு:
-----------
எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
தாயைக் காத்த தனயன்:
--------------------------------------
பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.
ஆயிரத்தில் ஒருவன்:
----------------------------------
யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.
விவசாயி:
------------------
நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
கணவன்:
------------------
சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
---------------------------------------------------------------------------
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போய் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
வேட்டைக்காரன்
----------------------------
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே
-------------------------
நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே
நம்நாடு
--------------
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன்
------------------------------------------
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே
-------------------
திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன்
----------------------------
அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி
--------------------
: கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற
கூட்டம் உண்டு.
K.venkatesan.9884105567... Thanks Friends...
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.உன்னத நடிப்பில் உருவான "பெற்றால்தான் பிள்ளையா "வெளியான நாள் 09/12/1966. 52 ஆண்டுகள் நிறைவு [பெற்றுள்ளது .
தலைப்புக்கேற்ற திரைக்கதை, நடிப்பு , பாடல்கள், வசனம் , நகைச்சுவை அனைத்தும் அம்சமாக பொருந்திய படம். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இயல்பாகவும், இயற்கையாகவும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து
ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார் .எனக்கு மிகவும் பிடித்த படம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு என் தங்கை படத்திற்க்கு அடுத்து பெற்றால்தான் பிள்ளையா மிகவும் பிடித்த படம் .
திரைக்கதைக்கு ஏற்ப வசனகர்த்தா ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார் . பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டு . சமுதாய கருத்துமிக்க பாடலாக நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, தாலாட்டு பாடலாக, கண்ணன் பிறந்தான், பிள்ளை பாசத்திற்காக செல்லக்கிளியே மெல்ல பேசு காதல்பாடலாக சக்கரை கட்டி ராஜாத்தி பாடல்கள் மெல்லிசை மன்னரின் இனிய இசையில்
மிக பிரபலம் . பி.சுசீலாவின் குரலில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, செல்லக்கிளியே மெல்ல பேசு பாடல்கள் மீண்டும் எதிரொலித்தன .
இந்த படத்தில் டைட்டில் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இனிமை .
டைட்டிலில் ஆரம்பித்த மக்கள் திலகம் எம். ஜி.ஆரின் வித்தியாசமான நடை படத்தின் இறுதி வரை நீடித்தது . கோயிலில் பிள்ளையை கண்டெடுக்கும்போது டி.எஸ். பாலையாவுடன் உரையாடல், பிள்ளையை வளர்க்கும்போது நடத்தும் உரையாடல்கள் , வழக்கு மன்றத்தில் பிள்ளைக்காகவும், பாசத்திற்காகவும் ,
வாதாடும் காட்சிகள் , பிள்ளையை இழந்து பைத்தியமாக அலையும் காட்சிகள் ,
இறுதி கட்டத்தில் நம்பியாருடன் மோதும் காட்சிகள் இப்படி பல உதாரணங்கள்
சொல்லும் அளவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் நடிப்பாற்றலை அபாரமாக வெளிப்படுத்தியது ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது .
நடிகர்கள் அசோகன், நம்பியார், எம்.ஆர். ராதா, தங்கவேலு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோர் தங்களது பங்களிப்பில் சிறப்பாக
நடித்திருந்ததால் , வெற்றிப்படமாக அமைந்தது .
ஜனவரி 1967ல் பரபரப்பான சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த சமயத்தில், நடிகர் எம்.ஆர். ராதா ,ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை துப்பாக்கியால் சுட்டு,தானும் தற்கொலைக்கு முயன்று , இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூட
இந்த படத்தின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு பக்கம் மருத்துவமனைக்கு அருகில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீரும் கம்பலையுமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோடு, மறு பக்கம் ,பெற்றால்தான் பிள்ளையா திரைப்படத்தின் வெற்றி ஓட்டத்திற்கு துணையாக ரசிகர்கள் பேராதரவு அளித்தனர் . இதன் விளைவாக சென்னை ஸ்டார், மகாராணி அரங்குகளில் 100 நாட்களும், நூர்ஜஹானில் 84 நாட்களும், உமா அரங்கில் 80 நாட்களும் நிறைவு செய்தது .
மக்கள் திலகம் உயரிய, இயல்பான நடிப்பாற்றலில் உருவாகி மகத்தான வெற்றி பெற்ற "பெற்றால்தான் பிள்ளையா" சென்னை மாநகரில் 3 (மூன்று) திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த நாளிதழ் விளம்பரம் இங்கே திரியிலும் ஆவண பதிவு வந்தது சகோதரே...
இயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் .
வாழ்த்து மடல்
பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க ....... Thanks Friends...
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
அவரின் தன்னம்பிக்கை
திறமைக்கு மீண்டும் ஒரு உதாரணம்
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.
மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.
. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. சிவந்தமண் பிரமாதமான பரபரப்புடன் வெளியான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான நம் நாடு பெரிய வெற்றி பெற்றது.
பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.
ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.
இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 🙏.......... Thanks Friends...........
நண்பர் திரு.சுகாராம் அவர்களே,
தங்களின் கருத்து உண்மைதான் . தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி .பெற்றால்தான் பிள்ளையா 100 வது நாள் விளம்பரத்தில் 3 அரங்குகள் இடம் பெற்றுள்ளன .சென்னை ஸ்டார், மகாராணி, உமா . புகைப்படத்தை மறுபதிவு செய்யக்கூடாது என்பதால் 100நாள் விளம்பர பதிவை போடவில்லை .
நக்கீரன் வார இதழ் -12/12/18
எஸ். பூவேந்தராசு,
சின்ன தாராபுரம்
கேள்வி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக சொல்லப்படும் வருமான வரித்துறை மிரட்டல்கள் , அரசியல் வசனம் பேசும் இன்றைய தமிழ் நடிகர்களுக்கு கிடையாதா ?
மாவலி பதில்கள் :
எம்.ஜி.ஆர். ஒரு அரசியல் இயக்கத்தில் 20ஆண்டுகள் பங்கேற்று தனக்கென செல்வாக்கை பெற்றிருந்தவர் . சினிமாவில் அவர் டம்மி கத்தியை பயன்படுத்தினாலும் அரசியல் களத்தில் அவர் கையில் வாக்கு எனும் "வாள் " இருந்தது என்பது மத்திய அரசுக்கு தெரியும் . தற்போது வீரவசனம் பேசும் பலரும் அட்டைக்கத்திகள்தான் .ஆனால் அவற்றை ஊடகங்கள் மூலம் சாணை பிடிக்க பெருமுயற்சி எடுக்கப்படுகிறது . மிரட்டல்களின் தன்மையும் மாறியிருக்கிறது
http://i65.tinypic.com/i5bp6f.jpg
.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான "ஒரு தாய் மக்கள் " வெளியான நாள் 09/12/1971. 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
நல்ல தலைப்பு. நல்ல திரைக்கதை .சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் பிரிந்து வெவ்வேறு இடத்தில வளர்ந்து இறுதியில் ஒன்று சேர்வது தான் மூலக்கதை . மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. இன்னிசையில் ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - டி.எம்.எஸ். மற்றும் சுசீலா பாடல்கள் , பாடினாள் ஒரு பாட்டு - போட்டி பாடல் , இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் - சமுதாயப்பாடல், கண்ணன் எந்தன் காதலன் - காதல் பாடல்கள்
தேனாக இனித்தன . எளிமையான ஆட்டோ மெக்கானிக் வேடத்தை கச்சிதமாக கையாண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார் . குடியினால் விளையும் கெடுதலை நடிகர் முத்துராமனிடம் நாசுக்காக சொல்லி அறிவுறுத்தும் காட்சி அருமை. சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு இருந்தது .
தன்மீது சுமத்தப்பட்ட பழியை எதிர்நோக்கி , பல சோதனைகளுக்கு பின்னர்
தெளிவுபடுத்தி, காதல் பிரச்னையில் தொல்லைகள் தந்து , குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற முத்துராமனை அடித்து திருத்தி, நல்வழிப்படுத்தி
,காதலியின் கரம் பிடித்து பெற்ற தாயிடம் இரு பிள்ளைகளும் இறுதியில் ஒன்று சேர்வது தான் கதை . அனைத்து நல்ல அம்சங்களும் இருந்தும், நீண்ட கால தயாரிப்பில் இருந்ததால் வெளியான பின்பு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை .
இருப்பினும் மறுவெளியீடுகளில் அவ்வப்போது திரைக்கு விஜயம் செய்கிறது .
கடைசியாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் சுற்றுலா சென்று விட்டு நண்பர்களுடன் மதுரை நியூ டீலக்சில் ஞாயிறு மாலை காட்சி பார்த்து, ரசித்து மகிழ்ந்தேன் என்பது சுவையான சம்பவம் .
மக்கள் திலகம் பதிவுகள் பல நம் தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற மனமார வேண்டுகிறோம்...
தமிழ் இந்து -14/12/18
http://i66.tinypic.com/2guw9on.jpg
1981ம் வருடம் சித்ராலயா கோபுவின் மனைவி கமலா சடகோபன் எழுதிய "படிகள் " என்ற நாவலை தமிழ் வளர்ச்சி துறை சிறந்த நாவலாக அறிவித்தது .வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். திருமதி கமலாவுக்கு பரிசளித்தார் .