-
மலேசியா*நாட்டில்*பல அரங்குகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ஆயிரத்தில் ஒருவன் 27/08/20 முதல் தினசரி ஒரு காட்சியில் வெளியீடு .
----------------------------------------------------------------------------------------------------------------
2014ல் சென்னையில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி ஆல்பட் காப்ளக்சில் 190 நாட்களும் சத்யம் காம்ப்ளக்சில் 161 நாட்களும் ஓடி மகத்தான சாதனை புரிந்த*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்* வெற்றி பயணம்**தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தாக்கம் தீவிரம் அடையும் வரை தொடர்ந்தது .
தற்போது மலேசியா நாட்டில் இதுவரை வெளிவராத அளவில் பழைய படங்களின் மறு வெளியீட்டில்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க* *lfs* திரையரங்குகளில்* டிஜிட்டல் வடிவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் கீழ்கண்ட 11 அரங்குகளில் வரும் வியாழன் முதல் (27/08/20)தினசரி இரவு காட்சியில் மட்டும் (இரவு 8.30 மணி காட்சி )வெற்றி பயணத்தை தொடர உள்ளது .
Theater* * * * * - city---------------* * * * * *------
lfs state cinemaa* - pj*
lfs coliseum - kl*
lfs seri intan - kilang
lfs capitol* *- selayaang
lfs plaza metro - kajang*
lfs tasek central* -* jb
lfs skudai parade* * -jb*
lfs seri kinta -* * * *ipoh
lfs butterworth*
lfs sitiawan*
lfs sun rawang*
விளம்பரம் செய்தி : மக்கள் ஓசை,மலேசியா* தினசரி -25/08/20
தகவல் உதவி ;: திரு.மேகநாதன்,,*மலேசியா -செல் :+6018-397 3720
இந்த செய்தியை வெளியிட்ட திரு.மேகநாதன்,மலேசியா* அவர்களுக்கு*தமிழ்நாட்டின்* அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்*
-
1964 ஆம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை நடிகர் வீ. சி கணேசன் நடித்த திரைப்படங்களில் 7 படம் மட்டுமே நகரில் 50 நாள் ஓடியுள்ளது.
கை கொடுத்த தெய்வம் திருவிளையாடல் , சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் சிவந்தமண், வசந்தமாளிகை தங்கப்பதக்கம் ஆகியவையாகும்.*
அடுத்து திண்டுக்கல் விருதுநகருக்கு பிறகு பழனி நகரில் மக்கள் திலகத்தின் சாதனை காவியங்கள் இன்றுவரை முன்னணி வகிக்கிறது....
நகரில் 100 நாட்களை கடந்து ஓடிய ஒரே திரைப்படமாக மதுரை வீரன்* திகழ்ந்துக்கொண்டு வருகிறது.* எங்க வீட்டுப் பிள்ளை 83 நாட்களும், நாடோடி மன்னன் 80 நாட்களும், மலைக்கள்ளன், குலோபகாவலி அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படங்கள்* 75 நாட்களும் ஓடியுள்ளது.*
நகரில் மக்கள் திலகத்தின் 48 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து 2020 ஆம் ஆண்டு வரை மக்கள் திலகத்தின் காவியமே சாதனையில் முன்னணியாக திகழ்கின்றது.
நடிகர் வீ.சி கணேசனின் சில படங்கள் மட்டுமே 50 நாட்கள் ஓடியுள்ளது. அதில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் தில்லான மோகனம்பாள் சிவந்தமண், வசந்தமாளிகை தங்கப் பதக்கம் ஆகியவை ஆகும்.
அடுத்து மதுரை ஏரியாவில்* முக்கிய நகரான காரைக்குடி நகரில் மக்கள் திலகத்தின் காவியங்கள்.... அதிகமாக*
50 நாட்களும், எழுபத்தி ஐந்து நாட்களும் ஒடி மகத்தான வரலாற்றை படைத்துள்ளது. நகரில் அதிக நாள் ஓடிய திரைப்படங்கள் மதுரைவீரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் 75 நாட்களை கடந்து இன்று வரை சாதனையாகும். மக்கள் திலகத்தின்*
38 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சில படங்கள் மட்டுமே 50 நாட்கள் திருவிளையாடல், வசந்த மாளிகை 2 படம் மட்டுமே 50 நாட்கள்..........
-
அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராம்நாட் என்று சொல்லக்கூடிய இந்நகரில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களை தவிர மற்ற நடிகர்களின் சாதனைகளை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.* அடிமைப்பெண் சண்முகா திரையரங்கில் 84 நாட்கள் ஓடி ஒரு அசுர சாதனையை படைத்தது. அதேபோல் நாடோடி மன்னன் மதுரை வீரன் 75 நாட்கள் ஓடியது இத்திரைப்படம் மகத்தான வெற்றியாகும்....
நகரில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் கிட்டத்தட்ட 22 திரைப்படங்கள் 50 நாட்கள் கடந்து ஒடி உள்ளது.*
ஆனால் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1977 வரை எந்த படமும் 50 நாள் கிடையாது.
தேனி நகரில் மக்கள் திலகமே சாதனையில் முன்னணி.*
நாடோடி மன்னன்*
மதுரைவீரன் திரைப்படங்கள்*
70 நாட்களும்.... அதன் பின்பு 12 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மாட்டுக்கார வேலன் திரைக்காவியம் லட்சுமி டூரிங் தியேட்டரில் 70 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. மற்றும் மக்கள் திலகத்தின் 12 திரைப்படங்கள் தேனி மாநகரில் 50 நாட்களைக் கடந்து ஓடி உள்ளது. வேறு எந்த நடிகரின் படமும் 1977 வரை 50 நாட்கள் ஒரு படம் கூட கிடையாது..
ராஜபாளையம் நகரில் மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில் 18 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து ஓடிய உள்ளது.*
அலிபாபா, நாடோடி மன்னன், மதுரைவீரன் மலைக்கள்ளன் திருடாதே, எங்க வீட்டுப் பிள்ளை, மாட்டுக்கார வேலன், குடியிருந்த கோயில், என் அண்ணன், நம் நாடு, நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் 50 நாட்களை கடந்துள்ளது.
வேறு எந்த நடிகரின் திரைப்படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகர் சிவாஜி கணேசனின் சவாலே சமாளி படம் மட்டும் 44 நாட்கள் ஒட்டப்பட்டது மிகப் பெரிய போராட்டத்திற்கு இடையில்.............
-
கம்பம் நகரில் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் திரை காவியம் தான் முதன் முறையாக 100 நாட்கள் ஓடியது. நகரில் மக்கள் திலகத்தின் 7 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்துள்ளது.வேறு எந்த நடிகருக்கும் சாதனை என்ற பேச்சுக்கு இடமில்லை.
பரமக்குடி நகரில் புரட்சி நடிகரின் மகத்தான காவியமான மதுரைவீரன் 105 நாட்கள் ஓடி முதன் முறையாக 100 நாட்கள் ஒடிய சாதனையாகும்.*
நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன்* மாட்டுக்கார வேலன், உரிமைகுரல் 50 நாட்கள் ஒடியுள்ளது.
சிவகாசி நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்*
75 நாட்களும், மதுரைவீரன் 63 நாட்களும் ஓடி உள்ளது. அதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 50 நாட்களை கடந்து வீறுநடை போட்டு உள்ளது.*
உரிமை குரல் திரைப்படம் 43 நாட்கள் ஓடி நகரில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாகும்.
போடி நகரில் பொன்மனச் செம்மலின் மதுரை வீரன் திரை காவியம் 100 நாள் ஓடிய ஒரே சாதனை காவியமாக இன்று வரை திகழ்கிறது.*
நாடோடி மன்னன்,அலிபாபா எங்கவிட்டுபிள்ளை,*
ஒளிவிளக்கு, நம் நாடு, நல்ல நேரம், திரைப்படங்கள் 50 நாட்கள் ஓடி சாதனையை பெற்றுள்ளது.*
அருப்புக்கோட்டை மாநகரில் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் அலிபாபா திரைப்படங்கள் அதிக நாள் அதாவது 70 நாட்கள் ஓடி சாதனை ஆகும். 7 திரைப்படங்கள் இங்கு 50 நாட்கள் ஓடியுள்ளது. எங்க வீட்டுப் பிள்ளை,*
ஆயிரத்தில் ஒருவன், மதுரைவீரன் குலேபகாவலி, உலகம் சுற்றும் வாலிபன், மாட்டுக்கார வேலன் ஆகியவையாகும். வேறு எந்த நடிகருக்கும் 50 நாள் கிடையாது.*
சிவகங்கை நகரில் நாடோடி மன்னன், மதுரைவீரன் திரைப்படத்திற்குப் பின் 12 ஆண்டுகள் கழித்து 50 நாள் ஓடிய ஒரே திரைப்படம் நம் நாடு ஆகும் அதன் பிறகு நல்லநேரம் திரைப்படம் 44 நாட்கள் ஓடியது.* வேறு எந்த நடிகரின் படமும் எங்கு இரண்டு வாரம் தாக்குப் பிடிப்பதே ரொம்பவும் கஷ்டமாகும்..........
-
மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் 50 நாள்* ஒடிய திரைப்படம் நாடோடி மன்னன் மட்டுமே.... அதன் பின்பு அடிமைப்பெண், நம் நாடு, உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள்*
5 வாரங்களை கடந்து வெற்றி நடைபோட்டு உள்ளது. வேறு எந்த நடிகரின் படமும் பத்து நாட்கள் ஓடுவது இங்கு கஷ்ட காலம் ஆகும்.
வத்தலகுண்டு நகரில் மக்கள் திலகத்தின் காவியங்களில் பல சாதனைகள் புரிந்து உள்ளது
நாடோடி மன்னன் திரைக்காவியம் 50 நாட்களும், மதுரை வீரன் திரைப்படம் 50 நாட்களும் அதன் பின்பு எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல்* திரைப்படங்கள்**
40 நாட்களும் ஒடி நகரில் வேறு எந்த படமும் ஒரு வாரம் இரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காது.*
பெரியகுளம் ரஹீம் அரங்கில்
மதுரைவீரன் நாடோடி மன்னன் எங்கவீட்டுப்பிள்ளை* 50 நாட்கள் ஒடி சாதனையாகும்.
மதுரை ஏரியா இன்னும் பல ஊர்களை கொண்டது....
அங்கெல்லாம் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே சாதனையாகும்.
மதுரையை தவிர சி.கணேசனின் படங்களின் நிலவரம் உட்பட ஏனைய நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் வசூல், ஓட்டம் மட்டமானதாகும்..... நீயூ சினிமாவை வைத்து டிக்கட் கிழித்து தன் படங்களை மட்டமாக ஒட்டியது கேவலமாக இன்று வரை உள்ளது....
தொடரும் பதிவுகள்..............
-
கதாநாயகனாக
மக்கள் திலகம் வலம் வந்த 115 திரைப்படங்களில்
முதல் வெற்றியை அனைத்து ஏரியாவிலும் பெற்றக்காவியங்கள்.....
ராஜகுமாரி
மந்திரி குமாரி
மர்மயோகி
சர்வாதிகாரி
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களூம்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
திருடாதே
தாய்சொல்லைத் தட்டாதே
தாயைக்காத்த தனயன்
பெரிய இடத்துப்பெண்
பணக்கார குடும்பம்
எங்கவீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
அன்பேவா
காவல்காரன்
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என்அண்ணன்
ரிக்க்ஷாக்காரன்
நல்லநேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
நீதிக்குத்தலைவணங்கு
மீனவ நண்பன்.
இப்படங்கள் முதல் வெளியீட்டில்
40 அரங்குகளுக்கு மேல் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான திரைப்படங்கள்
35 முதல் 40 திரையரங்குகளில்
முதல் சுற்றில்
50 நாட்களை கடந்து சாதனையாகும்.
குறிப்பாக...
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபா
மதுரைவீரன்
தாய்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
திருடாதே
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
ரிக்ஷாக்காரன்
நல்லநேரம்
உலகம் சு.வாலிபன்
உரிமைக்குரல்
இதயக்கனி
மீனவ நண்பன்
தமிழகத்தில் திரையிட்ட 38,40,42,44 திரையரங்குகளில்
50 நாட்களை கடந்து சாதனையாகும்.
இதுப்போல் ஒரு சாதனைகள்....
எந்த நடிகருக்கும்
கிடையாது.....
நடிகர் சி.கணேசனுக்கு
மனோகரா
கட்டபொம்மன்
பாகபிரிவினை மட்டுமே....
நடிகர் ஜெமினி
வஞ்சிக். வாலிபன்
கணவனே கண் கண்ட தெய்வம்
கல்யாணபரிசு
2020 வரை மக்கள் திலகத்திற்கே அதிக திரைப்படங்களின் வெற்றியாகும்.... இச்சாதனையாகும்....
அடுத்த இரண்டாவது ரவுண்டிலும் மக்கள் திலகமே முன்னனி ஆவார்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மறைந்தும் மறையாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் எத்தனையோ படங்களில், நகரங்களில், ஊர்களில் ,விழாக்களில், வெற்றி கண்ட நாயகனின்*சாதனை தொடர் சகாப்தம் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .* நாம் ஒவ்வொரு நாளும் ஒரு படிப்பினையை, பாடத்தை வாழ்க்கையில்* தெரிந்து வைத்து வருகிறோம்*
நான் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றி வரும் சமயம்*அ .தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தான் முதன்முதலாக எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்தேன் .அன்று மாலையே அரசு பொது மருத்துவமனையில் வெள்ளை உடை அணிந்த செவிலியர்* இருபுறமும்**ரோஜாபூக்களை தூவி வர ,நடுவில் தலை குனிந்தவாறு, இருகரம் கூப்பி வணங்கியபடியே ,தங்கநிறம் கொண்ட திரையுலகின் தலைமகன் அழகாக நடந்துவந்த காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது .
அன்பே வா திரைப்படத்தில் அறிமுக காட்சியில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து புத்துணர்ச்சியுடன், அழகுற இறங்கி வருவார் . முக்கிய விருந்தினர்கள்,நண்பர்கள்,பத்திரிக்கை நிருபர்கள், பொதுமக்கள் மாலைகள், பூச்செண்டுகளுடன் விமான நிலையத்தில் குவிந்து இருப்பார்கள் . கோடி மாலைகள் தாங்கியவை* எம்.ஜி.ஆரின் தோள்கள்* இந்த காட்சியிலும் ஏராளமான மாலைகள் சூட, அவற்றை ஒவ்வொன்றாக கழற்றியவாறே ,நிருபர்களுக்கு பேட்டியும் அளித்து வருவார் . அதில் களைப்போ, அசதியோ , சோர்வோ தெரியாத வகையில் மிகவும் சுறுசுறுப்பாக அந்த காட்சியில் நடித்திருப்பார் . பொதுவாக 24 மணி நேரத்தில் சுமார் 12 மணி நேரம் படப்பிடிப்பில், வீட்டில், பொது நிகழ்ச்சிகளில், கட்சி பொது கூட்டங்களில் அவருக்கு மாலைகள் விழுந்து கொண்டே இருக்கும் .அதனால்தான் கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் என்று*குறிப்பிடப்படுகிறார் . இப்போது எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தால் எப்படி பேட்டி அளித்திருப்பார் என்பதற்கு கற்பனையாக திரு.துரை பாரதி நிருபரை போல* சில கேள்விகள்**கேட்க* அதற்கு எம்.ஜி.ஆர். பதில் அளித்த விதம் பின்வருமாறு*
கேள்வி ;தமிழ்நாட்டில் தற்பொது பெருகியுள்ள கல்லூரிகளின்* கல்வி தந்தையரை பற்றி என்ன சொல்கிறீர்கள் ?* * *பதில் : முழுக்க முழுக்க வியாபாரம்*
கேள்வி : தமிழகத்தின் அடுத்த பொது தேர்தலில் இ .பி.எஸ்./ ஓ.பி.எஸ். அணியினர் இடையே முதல்வர் பதவி குறித்து போட்டி நிலவுகிறதே அது பற்றி*பதில்: அது என்னை கேட்க வேண்டிய கேள்வி அல்ல ,அங்கே என்று வானில்*ஆண்டவனிடம்கேள்வி :அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் தேர்வு பெற வாய்ப்புண்டா ?பதில்:* .தர்மசங்கடமான கேள்வி. இப்படியெல்லாம் கேட்கக்கூடாது .
இப்படியான வாழ்க்கையில் வரும்* பல கேள்விகளுக்கு தன் திரைப்படங்களில் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் மூலம் தகுந்த பதில் அளித்திருக்கிறார் .**குறிப்பாக இன்றைக்கு நீங்கள் கேட்டால்கூட நெகிழ்ந்து போகிற ஒரு கேள்வி , நீங்கள் யார், எதற்காக வருத்தப்படுகிறீர்கள் ,எதற்க்காக மகிழ்ச்சி அடைகிறீர்கள்*என்று* அடுக்கு அடுக்காக*கேட்டால்கூட தகுந்த பதில் அளித்திருப்பார்***
ஒவ்வொரு படத்திலும்* கருத்துக்களாக பதிந்து வைத்துள்ளார் .இன்றைக்கும்*அந்த பாடல்கள், படங்கள்*ஏழை மக்களின்*நம்பிக்கை நட்சத்திரமாக*ஏன் பலருக்கு*வாழ்க்கையின் ஒளிவிளக்காகவே தெரிந்து கொண்டிருக்கிறது .சத்யபாமா அம்மையாருக்கு ஐந்தாவது குழந்தையாக எம்.ஜி.ஆர். அவர்கள்* பிறந்ததற்கு பின்னால் ,சந்தர்ப்ப சூழ்நிலை*,தந்தையாரின் மறைவு ,பொருளாதார*பிரச்னை*ஆகிய காரணங்களால் குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடியதோடு*,வீழ்ச்சியை*நோக்கி சென்றது .அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர். அவர்கள் இப்படிப்பட்ட இந்த தமிழகத்தையே ஆளுகின்ற மன்னனாக*திகழ்ந்தார் என்றால் அவருக்கு*நேர்ந்த*எத்தனை அவமானங்கள் , தோல்விகள் ,தடைகள் ,பிரச்னைகள் ,சிக்கல்கள் எப்படியெல்லாம் வந்திருக்கும் ..இவற்றையெல்லாம் கடந்து* அவர் வெற்றி எனும்*சிகரத்தை அடைந்தார்***என்பது*ஒரு படிப்பினை ,பாடம் அல்லவா*அவர்தானே*நமக்கு முன்னோடியாக திகழும் ஒரு பல்கலை*கழகம் .ஒவ்வொரு நாளும்*அவர் வாழ்வதற்கான அர்த்தமிழந்த நாட்களாக*கழிந்து*கொண்டேயிருந்தது .தனது*இளமை பருவத்தில் அழகு, திறமை எல்லாம் இருந்தும்கூட பட வாய்ப்புகளுக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் அலைந்து*இளமை பருவத்தின்*பெரும்பகுதியை கழிக்க வேண்டியதாயிற்று .முதல் படத்தில்*போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம், மற்ற படங்களில் துணை தளபதி போன்ற சிறு*வேடங்களில் நடித்தும்*கூட*சுமார்*11 ஆண்டுகள்*கதாநாயகன் வேடத்திற்கு காக்க*வேண்டியதாயிற்று .அவருடைய முகம் எந்த சுவரொட்டியிலாவது இடம் பெறாதா, டைட்டிலில் முன்வரிசையில் தன் பெயர் இடம் பெறுவது*எப்போது என்று அவர் துடித்த*துடிப்பானது*ஏழு வயதில்*இருந்தே*ஆரம்பித்தது .* படிப்பதற்கு வசதியில்லை .,நல்ல பள்ளியில்*சேர்ந்து*படிக்க பணம் செலவழிக்க வழியில்லை . பட்டினியை*வெல்வதற்கும் முடியவில்லை*இப்படியொரு வாழ்க்கை நிலையில்*இருந்துதான்*நாடக*உலகத்தில் நடிக்க தள்ளப்படுகிறார் .*
தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றுவது எப்படி என்று* நீங்கள் நூலகத்தில்*பெரிய புத்தகங்களை படிக்க தேவையில்லை . எம்.ஜி.ஆர். எனும்*வாழ்க்கை சரித்திரத்தை புரட்டினாலே போதும் .ஏனென்றால் அப்படி அவர் வாழ்ந்து காட்டியுள்ளார் .படிப்பதற்கு வழியில்லை. பட்டினியில்*இருந்து மீள முடியவில்லை . தந்தையை*இழந்து*தாய் நிர்கதியாக*குடும்ப வருமானத்தை எதிர்பார்த்து*காத்து*கொண்டிருக்கும் சமயம்*,ஏதாவது வீட்டு வேலைக்கு சென்றால் தான் குழந்தைகளுக்கு உணவளிக்கவாவது முடியும் .இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் நடிப்புஎன்பது அவர் தானாக* விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்தது*அல்ல. இயற்கையாகவே திணிக்கப்பட்டது .ஒருவருக்கு*எதை*நீங்கள் பாரமாக*தலையில்*சுமத்துகிறீர்களோ, அதையே*வாழ்க்கையில்*வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் .நாடக மேடையில்*பாடவேண்டும், நடிக்க வேண்டும் ஆட*வேண்டும் .என்று* நிர்பந்திக்கப்பட்டபோது ,பசியையும், வறுமையையும் வெல்வதற்காக* அவர்* பல படிப்பினைகளை கற்று கொண்டார்*அதுவே*அவருக்கு*நாட்டை ஆளக்கூடிய*சிம்மாசனத்தை தந்தது என்றால்*ஒருபோதும், பிரச்னைகள், கஷ்டங்களுக்காக வாழ்க்கையில்*பயந்துவிடாமல்*எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள*முயலவேண்டும்*என்பதற்கு எம்.ஜி.ஆர். ஒரு சிறந்த*உதாரணம் .*மற்றவை*அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசும் காட்சி*- சங்கே முழங்கு*
2.வெற்றிமீது வெற்றி வந்து* என்னை சேரும்*- தேடிவந்த மாப்பிள்ளை*
3.சின்னப்பயலே,சின்னப்பயலே- அரசிளங்குமரி*
4.எங்கே, என் இன்பம் எங்கே ,என் இதயம் எங்கே -நாடோடி மன்னன்*
5.கண்ணை*நம்பாதே உன்னை ஏமாற்றும்*-நினைத்ததை முடிப்பவன்*
6.உன்னை அறிந்தால்*-வேட்டைக்காரன்*
7.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்*- நம் நாடு*
1.
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/08/20 அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் மலைக்குகையில் கிடைக்கும் புதையல் போல ,ஜீபூம்பா விளக்கை தேய்த்தால் தோன்றும் அற்புதங்கள் போல , எம்.ஜி.ஆர் என்கிற ரகசிய புதையல், அற்புத புதையல், மானிட குலம் எப்படி வாழ வேண்டும் . எப்படி வாழ்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு தன்னம்பிக்கை விதை எம்.ஜி.ஆர். என்கிற வரலாறு*
அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருந்தார் . ஒரு காட்சியில் அவர் கோழிக்கறி சாப்பிடுவது போல இருந்தது .ஆனால் அவர் சுத்த சைவம் . கோழிக்கறி கொண்டுவந்து வைத்தாகிவிட்டது. ஆனால் அதை தொடவோ ,பார்க்கவோ அவருக்கு பிடிக்காது என்பதால் ,மசாலா கோழியை போல தோற்றமுள்ள சைவ கேக்கை எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படி ஏ.வி.எம்.நிறுவனத்தினர் தயார் செய்தனர் . .அதற்காக ஒருநாள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது .இதுகுறித்து எம்.ஜி.ஆர். பேசியதாவது, ஒரு காலத்தில் அவர் கதாநாயகனாக நடித்தபோது அவர் பெயருக்கு முன்னால்* என் பெயரை சொல்லவே தயங்கியவர் .அப்படி ஒரு இக்கட்டான நிலைமை .குறிப்பாக ஒரு மனிதனின் குணம், தாய்,மொழி,மதம் ,தெய்வம் போன்றவற்றில் யாரும்* கருத்து சொல்வதோ, அல்லது மாற்று கருத்தை திணிப்பதோ கூடவே கூடாது என்கிற மிக உன்னதமான கொள்கையை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் கோழியின் தோற்றத்தை போலவே சைவ கேக் ,நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுக்கு செய்துதர உதவினார் என்பதுதான் .
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தை பார்த்து, அலங்கரிக்கப்பட்ட உலோகம் ,குதிரை முகம் ,ராசியில்லாதவர், முதல் படமான சாயாவில் கதாநாயகனாக நடித்து வெளிவரவில்லை என்பது போல கிண்டல்களும்* கேலிகளும்* அந்த கால இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் போன்ற சிலர்*பரிகாசாம் செய்தனர் .* ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகி கோட்டையில் இருந்தபோது அதே பழைய இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன்* ஊட்டியில் தனக்கு இருந்த ஒரு சொத்து பிரச்னைக்காக அவரை சந்தித்து முறையிட்டார் . எம்.ஜி.ஆர். பழைய நிகழ்ச்சிகள் , தன்னை பரிகாசம், கிண்டல், கேலி செய்தது எதை பற்றியும் ஆலோசிக்காமல் அவருடைய பிரச்னையை உடனடியாக தீர்த்து வைத்தார் என்பது வரலாறு .அதற்கு இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் கண்ணீர்* பெருக்குடன் நன்றி தெரிவித்துக்கொண்டார் ..அதுதான் எம்.ஜி.ஆரின் சிறந்த குணம் .எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் சேர்ந்து , கட்சி கொள்கைகளை திரைப்படங்களில் பரப்புவதையும்,அதை மக்கள் அளித்த வரவேற்பையும் அறிந்த, உணர்ந்த பேரறிஞர் அண்ணா உன் முகத்தை காட்டு ,கட்சிக்காக லட்சக்கணக்கில் ஒட்டு விழும் ,என்று பேசினார் என்றால் அவரை பார்ப்பதற்காக, அவர் குரலை கேட்பதற்காக லட்சோப லட்சம் மக்கள் விடிய விடிய காத்திருந்தார்கள் என்று* சொல்வார்களே அப்படியான முகம்தான் ஆரம்ப காலங்களில் பரிகாசம் செய்யப்பட்டது .திரையிலே காட்டுவதற்கு கூட யோசித்தார்கள் .கதாநாயகன் ஆனபின்பு கூட மந்திரி குமாரி படத்தில் தாடையில் குழி உள்ளதை சரிசெய்ய சிறிய தாடி ஒன்று* இயக்குனர் எல்லீ ஸ் ஆர். டங்கனால்* ஒட்டப்பட்டது . ஆனால் பிற்காலத்தில் அந்த தாடையில் உள்ள குழிதான் அவர் முகத்திற்கு அழகு சேர்த்தது .இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் வெகு சுலபமாக வெற்றி எனும் சிகரத்தை அடைந்துவிடவில்லை .படிப்படியாக வெற்றிக்கான படிகளை அமைத்து முன்னேறினார் . தனக்கு எதிர்ப்பட்ட தோல்விகள், அவமானங்கள் ,பரிகாசங்கள் ஆகியவற்றை துச்சமாக எண்ணி, எதிர்நீச்சல் போட்டு,கூடுதல் அக்கறையுடன் கவனமாக செயல்பட்டு சிகரத்தை அடைந்து வாழ்ந்து காட்டிதன்னை எதிர்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார் எம்.ஜி.ஆர்.*
உலகின் தலைசிறந்த நடிகர்களாக மார்லன் பிராண்டோ, ஏரால்* பிளைன்*போன்றவர்கள் இருந்தார்கள் .தமிழ் திரையுலகில் கூட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர். பேசியுள்ளார் .ஆனால் உலகத்திலேயே தான் இட்ட கட்டளையை தயாரிப்பாளர்கள் திரையுலகில் செயல்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்தான் . மார்லன் பிராண்டோவுக்கு அவரது படங்களுக்கு* முதல் தயாரிப்பாளர் எம்.ஜி.எம். நிறுவனம் என்றால் இரண்டாவது தயாரிப்பாளர் அவரே என்று அந்த காலத்தில்* ஒப்பந்தம் போடுவார்களாம்*அதாவது இதுதான் பட்ஜெட், நடிகர், நடிகர்களுக்கான சம்பளம் , இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும்* ஆனால் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில்*நிரந்தர கதாநாயகன் ஆன பிறகு அவர்தான் முதல் தயாரிப்பாளர் . பட நிறுவனத்தார் இரண்டாவது தயாரிப்பாளர் .அது மட்டுமல்ல. ஒவ்வொரு படத்தின் ஒப்பந்த பத்திரத்தின் பின்னால் , இந்த படத்தின் கதையில், வசனங்களில், காட்சிகளில், பாடல்களில் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் அதை மாற்றக்கூடிய உரிமை எனக்குள்ளது என்ற நிபந்தனையுடன்*கையெழுத்திடுவாராம் .எந்த திரையுலகத்தில் சிலரால் பரிகாசம் செய்யப்பட்டாரோ ,அதே திரையுலகின் லகானை லாவகமாக பிடித்து தன்* கைவசம் வைத்து சவாரி செய்து வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர்*
பல துறைகளில் வெற்றி பெற்றவர்கள் ஊடக துறையில் தோல்வி அடைந்துள்ளார்கள்* பல ஊடக துறை ஜாம்பவான்கள் கூட திரைத்துறையில் ,அரசியல் துறையில்*தோல்வி அடைந்துள்ளனர் .ஆக யார் எப்படி எந்த துறையில் வெற்றி பெறுவார்கள், தோல்வியுறுவார்கள் என்று கணிக்கமுடியாத பட்சத்தில்தான் தொட்ட ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றதோடு, உச்சத்தை அடைந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்பதற்கு ஒரு வாழ்ந்து மறைந்த சாட்சி, நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிற சாட்சி, அவருடைய* அந்த சாட்சியை நமது வாழ்க்கை* துணையாக வைத்து**வழி நடப்போம், வென்று காட்டுவோம் .மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .......
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.ஏன் என்ற கேள்வி, கேட்காமல் வாழ்க்கை இல்லை -ஆயிரத்தில் ஒருவன்*
2.முகத்தை பார்த்ததில்லை - அரச கட்டளை*
3.கட்டான கட்டழகு கண்ணா - குடும்ப தலைவன்*
4.மந்திரி குமாரி படத்தில் வசனம் பேசும் எம்.ஜி.ஆர்.
5.தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
6.அச்சம் என்பது மடமையடா* - மன்னாதி மன்னன்*
-
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .
எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....
1950 முதல் 1960 வரை வந்த படங்களில்
மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை
புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .
இது வரலாறு .
ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .
இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .
மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .
என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார்.........
-
எம்.ஜி.ஆர்.
பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.
‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.
எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.
படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.
தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.
அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.
தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.
கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
.........
courtesy -கோவி.லெனின்.
-
"கணவன்". 1968 ஆக 15 ம் தேதி வெளியான கருப்பு வெள்ளை படம்.
கணவனுக்கு கதை எம்ஜிஆர் என்றவுடன் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகி மதுரை தங்கத்தில் இரண்டு தலைவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி உயிரை இழந்த சோகம் முதல் நாளன்று அரங்கேறியது. அதன்பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை உதவியுடன் காட்சிகள்
நடந்தேறியது.
எல்லா ஊர்களிலும் முதல் நான்கு நாட்கள் கட்டுக்கடங்காத கூட்டம். ஆக 15ல் வந்த கணவன் அடுத்து செப் 20 ல் வெளியான தலைவரின் 100 வது படம் பெரும் வரவேற்பை பெற்றதால் அதன்பிறகு கூட்டம் ஒரளவு குறைந்து விட்டது. அதையும் தாண்டி சென்னை மதுரை போன்ற ஊர்களில் தீபாவளி வரை ஓடியது.
அக் 21 ல் தீபாவளி அன்று வெளிவந்த தேவர் பிலிம்ஸின் "காதல் வாகனம்" படத்திற்கு பல ஊர்களில் 6 காட்சிகள் நடைபெற்றது. அனைத்து காட்சிகளும் ரசிகர்களின் பேராதரவோடு அரங்கம் நிறைந்து காணப்பட்டது. 1968 ம் ஆண்டு வெளியான அனைத்து படங்களுமே வெற்றி அடைந்ததால் மிகவும் எதிர்பார்த்த "காதல் வாகனம்" அதுவும். தலைவர் கையில் சவுக்கையை வைத்திருந்ததால் ஒரு சில ரசிகர்களுக்கு எங்க வீட்டு பிள்ளை ஞாபகம் வந்து விட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யாமல் போனதால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த "ஒளிவிளக்கு" மீண்டும் பிரகாசமாக எரிய தொடங்கி வெற்றியின் எல்லைக்கோட்டை விரைவாக தாண்டியது.
"கணவன்" அதிகபட்சமாக 67 நாட்கள் வரை சென்னை மற்றும் மதுரை போன்ற a சென்ட்டரில் ஓடினாலும், 50 நாட்களை தாண்டி நெல்லை உட்பட பல ஊர்களில் ஓடியது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்த படம். தூத்துக்குடியில் கணவன் 37 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. C. சென்ட்டரில் கணவன் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது..........
-
எம்ஜிஆர் அடிப்படையில் ஏழைகளான தனது ரசிகர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார்.
உலகம் சுற்றும் வாலிபன் படப் பாடல்களை எம் எஸ் விஸ்வநாதன் ஒரு விலை உயர்ந்த நவீன ஒலிக் கருவியில் போட்டுக் காட்டியபோது, எம் ஜி ஆர் அதை கிராமபோனில் போட்டுக் காட்டச் சொன்னார் .
காரணம் கேட்டபோது என் ரசிகன் இதை இப்படித்தானே கேட்பான் . அதான் நானும் அவனுக்குரிய வசதியில் இருந்தே கேட்கிறேன் ‘ என்று பதில் சொன்னார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம். வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து.
1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாப்பத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.
இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு, பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழையும் அவருக்கு பெற்று தந்தது..........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் சென்னை பெருநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் அன்றாடம் சகாப்தம் நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .அவருடைய ஆதரவாளர்களுக்கு எல்லாம் இந்த செய்திகள் கொண்டு போய் சேர்ப்பதற்காக 10,000 சி.டி.க்கள் தேவை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் .அவரால் என்னென்ன தகவல்கள் திரட்டி தரமுடியுமோ அவற்றை பல்வேறு அலுவல்களுக்கு* இடையே நமக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் .இப்படியான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது .தேனீ பிரேமலதா, மும்பை புலவர் ராமச்சந்திரன், சென்னை திரு.சைதை துரைசாமி போன்றவர்கள் ஒரு முன்மாதிரியானவர்கள் . எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாபெரும் தலைவரால் ஈர்க்கப்பட்ட கோடிக்கணக்கான பக்தர்களின்* முன்மாதிரிகள்*
திருச்சியில் இருந்து திரு.மஜீத் எனும் பக்தர் ,இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்புங்கள். நாங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகிறோம் என்று கடிதம் எழுதியுள்ளார் .இந்த காலத்தில் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ் அப் செய்திகள், இ மெயில் என்று பல வசதிகள் உருவான* காலத்திலும் எம்.ஜி.ஆரின் பக்தர் ஒருவர் மிகவும் சிரத்தை எடுத்து கடிதம்* வாங்கி தன கைப்பட எழுதி அதை தபாலில் அனுப்பும் அளவிற்கு செயல்படுகிறார் என்றால் எம்.ஜி.ஆரின் சிறப்புக்கும், புகழுக்கும், பெருமைக்கும்* காரணமாய் திகழுகிறார்கள் என்பதுடன்* இதுபோன்ற பக்தர்கள் இந்த காலத்திலும் இருந்து கொண்டிருப்பது எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த பாக்கியம்தான் என்று சொன்னால் மிகையாகாது .மும்பை தாராவி பகுதியில் இருந்து திரு.புலவர் ராமச்சந்திரன் , அவர் மகன் பானு முருகேசன், மகள் அன்னபாக்கியம் ஆகியோர் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்தியும், உற்சாகம் அளித்தும் வருகிறார்கள் .
தேனியில் இருந்து திருமதி பிரேமலதா என்பவர் தொடர்பு கொண்டு , சகாப்தம் நிகழ்ச்சியில் தொடரின் எண்ணிக்கையை 90,91 என்று* சொல்லிக்கொண்டே*போகிறீர்கள்* எங்கே அவருடைய வயதைமட்டும்* குறிப்பிட்டு பேசுவீர்களோ*என்று பயமாக இருக்கிறது . தயவு செய்து அப்படி பேசிவிடாதீர்கள் நான் வாழும் காலம் வரை* என்று கூறி அழுதார் . அவர் திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளாரே தவிர, நேரில் பார்த்ததே இல்லையாம் .ஆனாலும் கூட , நீங்கள் சொல்லுகிற தகவல்கள் ,அளிக்கின்ற செய்திகளை பார்த்தால் இப்படி ஒரு நல்ல மனிதர்* ஏன் இவ்வளவு சீக்கிரம் மறைந்தார் என்று நினைக்கும் போது, மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது .நாங்கள் குடும்பத்துடன் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .அவரை பொறுத்தவரை*மறைவு, இறுதி என்பது இல்லை .அதை மட்டும் குறிப்பிட்டு சொல்லிவிடாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டார் .நிச்சயமாக சொல்கிறேன் . திருமதி பிரேமலதா அவர்களே, உங்களை போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான உள்ளங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .அவர் மனிதகுலம் மறையும்வரை அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் .அவருக்கு மறைவு,இறுதி என்பதேயில்லை. அப்படிப்பட்ட அரிய வகையான ஒரு மாமனிதர்* எம்.ஜி.ஆர்.*
நீங்கள் எங்கு படித்தீர்கள் என்றால் நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்பார்*என்ன படித்தீர்கள் என்றால் சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா என்பார்*கடவுள் பற்றி உங்கள் அபிப்பிராயம் கேட்டால்* கடவுள் இருக்கின்றார் ,அதுஉன் கண்ணுக்கு தெரிகிறன்றதா* என்பார் ஏழைகளின் சிரிப்பில் கடவுள் இருக்கின்றார் என்றும் பேசியிருக்கிறார் . கடவுள் ஏன் கல்லானான் .மனம் கல்லாய் போன மனிதர்களாலே என்றும் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் .
தியாகம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணமாக தாயை தான் குறிப்பிட முடியும் என்று கூறுகிறார் .பெற்றெடுத்த தன குழந்தைக்கு முன்னால் தன பெயரை இனிஷியலாக போடுவதற்கு தன்* கணவனுக்கு விட்டு கொடுக்கும் அவள் உண்மையில் ஒரு தியாகிதான் என்று இதயவீணை படத்தில் ஒரு காட்சியில் விளக்கி இருப்பார் .காந்தீய கொள்கைகளை கூடுமான அளவில் அதிக திரைப்படங்களில் போதித்து உள்ளார் .மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அவர் கடைபிடித்தார் என்பதை அவரது பல்வேறு படங்களில், ,காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் நாம் கண்டறியலாம் .நான் ஏன் சண்டை போட வேண்டும், எதற்காக போர் பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும் ,எதிரிகள் என்றால் யார் ,கடமை என்றால் என்ன என்று பல கேள்விகளுக்கு விடை அளித்திருப்பார் அடிமைப்பெண் படத்தில் .இப்படி ஒரு அகிம்சாவாதியாக நிஜ வாழ்க்கையிலும், திரை உலகிலும், அரசியல் உலகிலும் வாழ்ந்து காட்டிய ஒரு மகான், மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். அவர்கள் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள் - நல்லவன் வாழ்வான்*
2.அன்பு மலர்களே, நம்பியிருங்களேன் நாளை நமதே*- நாளை நமதே*
3.நீங்க நல்லா*இருக்கோணும்*நாடு முன்னேற - இதயக்கனி*
4.ஹலோ, ஹலோ*சுகமா*- தர்மம் தலைகாக்கும்*
5.அச்சம் என்பது*மடமையடா*- மன்னாதி மன்னன்*
6.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - நல்லவன் வாழ்வான்*
7.காஷ்மீர்*பியுட்டிபுல் - இதய வீணை*
8.நாடு அதை நாடு* - நாடோடி*
9.பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர்.*
10.தாய் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
11.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
12.நாளை உலகை* ஆள வேண்டும் - உழைக்கும் கரங்கள்*
13.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
-
மேடையில் நன்கொடை தருவதை தவிர்த்த #எம்ஜிஆர். !
ஒருமுறை ஒடிசா மாநிலத்தில்
(அப்போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.
அதற்காக, நடிகை
வைஜெயந்திமாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக்
காட்சியாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும், திரை உலகில் முதல் நிலையிலும் இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு
வருவாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர்களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத்தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.
வட மாநிலங்களில் ஓடிக்கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப்பாடி வருவார். அருகே கதாநாயகி
வைஜெயந்திமாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.
படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம்.
‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட
படத்துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா
ஏற்பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத்
தெரிவிப்பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப்பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்து
கொள்ளலாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார்.
திரையரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாணவர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.
‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந்தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பையும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும்
வேதனைப்பட்டேன். என்னைப் போலவே தமிழ் மக்களும் வேதனை அடைந்துள்ளனர். நாட்டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச்
செய்யக்கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
அதே நேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும், அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.
நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடியாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.
இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்கலாமே?’ என்று மாணவர்களுக்கு சந்தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.
ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!
சிறுகுறிப்பு:
‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை! (இந்த பாடலை எழுதியவர் இந்திப்படவுலகில்
பிரபலமாக இருக்கும் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் தந்தை
சந்தோஷி)
(திருத்தப்பட்டது)
வி.டி.எஸ். ராஜ்வேலு, பெரியகுளம்.
இந்த விபரங்களெல்லாம் 'பொம்மை' சாரதி எழுதிய புத்தகத்திலிருந்து, இது
போன்ற முக்கிய விசயங்களை பத்து
ஆண்டுகளுக்கு முன் '#இதயக்கனி'
இதழில் சிறு தொடராக எழுதியவர்
திண்டுக்கல் திரு டி.எம்.அர்ஜுனன்.
சாரதியின் பெயருடனேயே அந்த தொடர் இடம்பெற்றது.
-
மலேசியாவில் மெர்டேக்காவை முன்னிட்டு*பி.ஜெ.ஸ்டேட் திரையரங்கில்*
இன்றிரவு 8.30 மணிக்கு*ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியீடு*
------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஜி.ஸ்டேட் திரையரங்கில் இன்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளியேறும் .* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா , நாகேழ் ,நம்பியார் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது .
இத்திரைப்படத்தைக் காண தாமரை குழும தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் , நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர் .மேலும் மலேசிய எம்.ஜி.ஆர்.* சுரேஷ், விஜய்சேகரும் வருகை புரிவர் .மெர்டேக்காவை முன்னிட்டு* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்படுவதாக லோட்டஸ் பைவ் ஸ்டார்* கருணாமூர்த்தி தெரிவித்தார் .
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்*ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்று வெளியீடு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா*நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைபடம் லோட்டஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது . பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் திரையரங்கில் இத்திரைப்படம் இரவு 8 மணிக்கு திரையிடப்படுகிறது*
இதில் மலேசிய எம்.ஜி.ஆர்களான விஜய் சேகர் , டாக்டர் எம்.ஜி.ஆர். சுரேஷ்,ராம் மற்றும் பல உள்நாட்டு கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .*
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற ரசிகர்களும்* கலந்து கொள்ளுமாறு லோட்டஸ் பைவ் ஸ்டார் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது .
-
என்ன பெயர் வைப்பது
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு..?
ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.
அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க , அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .
எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !
ஆம்... அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
Mother Teresa Women's University !
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...
# அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்த நாம் ...
இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிற்கிறோம்.
.
# இந்த வேளையில் எம்.ஜி.ஆர்.ஒரு மேடையில் பேசியது நினைவுக்கு வருகிறது :
“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து...”
.
# எனக்கு ஒரு சந்தேகம்..?
எந்தப் பல்கலைக்கழகம் சொல்லிக் கொடுத்தது
எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடத்தை...?.........
-
ஒரு சில சிவாஜி ரசிகர்கள் முகநூலில் சிவாஜி படங்களின் வெற்றியை பற்றி தாறுமாறாக பதிவிடுகிறார்கள் சம்பந்தபட்ட தயாரிப்பாளர்கள் உயிரோடு இல்லாத காரணத்தை
பயன்படுத்தி. உதாரணமாக 'நவராத்திரி' "முரடன் முத்து "படகோட்டி மூன்று படத்தின் வெற்றியை பற்றி. அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
"நவராத்திரி" அப்படி ஒரு வெற்றிப் படமாகயிருந்தால் பாவம் A P நாகராஜன் இப்படி கடனாளி ஆகியிருக்க மாட்டார். கூட வெளிவந்த "முரடன் முத்து" தயாரிப்பாளர் பந்துலுக்கு சிவாஜியுடன் அதுதான் கடைசிபடம்.
இன்னும் ஒரு படம் சிவாஜியை வைத்து எடுத்திருந்தால் இன்னும் 10 வருடங்கள் வாழ்நாளை அவர் இழந்திருக்கக் கூடும். ஏனென்றால் கடன்பட்டார் நெஞ்சம் கலங்கினால்
உயிரையே பலி வாங்கி விடும்.
எம்ஜிஆருக்கு ஏன் 8 மடங்கு சிவாஜியை விட சம்பளம் அதிகம் கொடுக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டாமா?
எந்த சூழ்நிலையிலும் உயிருக்கும் மானத்துக்கும் பங்கம் வராமல் இருக்க வேண்டும், என்பதற்காகத்தான் எம்ஜிஆரை
நம்பி வருகிறார்கள். A சென்ட்டரை
தவிர B & C யில் எம்ஜிஆர் படத்தின் முதல் வார வசூலை சிவாஜியின் படங்கள் மொத்த வசூலாக கூட
பெறமுடியாமல் போவதை பல இடங்களில் பார்க்கலாம்.
நீங்கள் A சென்ட்டரில் அதாவது மதுரையில் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் வெளியான எதிரொலி மொத்தம் 4 வாரம் கூட ஓட முடியாமல் 19 நாளிலே பகல்காட்சியை நிறுத்தி விட்டு தினசரி 2 காட்சிகள் போட்டு 28
நாட்கள் ஓட்டியும் தங்கத்தில் வெளியான எம்ஜிஆர் படத்தின் முதல் வார வசூலை மொத்த வசூலாக பெறமுடியாமல் போன கதை சிவாஜி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சிவாஜி படங்களை பெரும்பாலும் தீபாவளி பொங்கல் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் பார்த்துதான் திரையிடுவார்கள். பண்டிகை காலத்தில் மக்கள் சினிமா பார்ப்பதற்காக வருவார்கள், எம்ஜிஆர் படம் பார்க்க முடியாமல் போனவர்களை ஏமாற்றி அதை வைத்து 4 நாட்களாவது கல்லா கட்டலாம் என்று பண்டிகை நாள் பார்த்து ரிலீஸ் பண்ணுவார்கள்.
அதனால்தான் பல சிவாஜி படங்கள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இரண்டிரண்டு படங்களாக திரைக்கு வருவதை பார்த்திருக்கிறோம். எ.வ.,சொர்க்கம், Dr.சிவா,வைரநெஞ்சம், இருமலர்கள் ஊ.வ.உறவு, ப்ராப்தம்,சு.எ.சுந்தரி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எம்ஜிஆர் படங்கள் எந்த நாளில் ரிலீஸானாலும் அன்றுதான் ரசிகர்களுக்கு பண்டிகை நாள். அன்றிலிருந்து தினமும் தீபாவளிதான். படகோட்டி முதல் வெளியீட்டில் 32 திரையரங்குகளில் 50 நாட்களும் 10 திரையரங்குகளில் 10 வாரங்களும். (அதுவும் பொங்கல் குறுக்கீட்டால் எ.வீ.பிள்ளையின் வருகையால்) ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனால் நவராத்திரி மொத்தமே 11 தியேட்டரில் 50 நாட்களை ஓட்டி 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டியது ஊரறியும்.
வரலாறு தெரியாத ஒரு சிவாஜி ரசிகர் கனடா நாட்டிலிருந்து கரடி விடுகிறார். அதை கேட்டு இங்குள்ள குள்ள நரிகள் ஊளையிடுகின்றன. "நவராத்திரி" 6 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியதாம்.
"படகோட்டி" ஒரே தியேட்டரில் தான் ஓடியதாம். அதையும் RMV ஓட்டச்சொல்லி ஓட்டினார்களாம். அப்படியானால் எம்ஜிஆரின் 100 வது படமான "ஒளிவிளக்கை" 92 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே. "உழைக்கும் கரங்கள்" சேலத்தில் 96 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே? அது மட்டுமா?
R M V யின் சொந்த படம் "கண்ணன் என் காதலனை"சிந்தாமணியில் 93 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே? கரடி விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அதை தான் சென்ற பதிவில் குறிப்பிட்டேன். "சொர்க்கத்தை" நெல்லை பாப்புலரில் 100 நாட்கள் ஓட்டி ரு85000 வசூலாக காண்பித்து என்ன பயன்?
தயாரிப்பாளர் தலையில் துண்டுதான். ஒரு வார தியேட்டர்
வாடகை ரு4000 என்று எடுத்துக் கொண்டாலும் 15 வாரத்துக்கு தியேட்டர் வாடகையே ரூ 60000 ஐ
தாண்டி விடும். மீதமுள்ள ரூ25000 ல்
வரி, தியேட்டர்காரர் பங்கு, இதெல்லாம் போக விநியோகஸ்தர்கள் கையில் என்ன கிடைக்கும். மீண்டும் திரும்பி பார்ப்பானா சிவாஜி நடித்த படத்தை.
இப்படித்தானே, சிவாஜி மார்க்கெட் இழந்ததோடு கூட நடித்தவர்களின் மார்க்கெட்டையும் காலி பண்ணியதால் சிவாஜியை துணை நடிகராக்கினார்கள். அதையும் தாங்க முடியாமல் சினிமாவை விட்டே ஓரங்கட்டிய கதை ஊரறிந்த கதை. அதை போல் ஒவ்வொரு ஊரிலும் 1 லட்சத்திக்கும் 1.25 லட்சத்துக்கும் 100 நாட்கள் ஓட்டி அவர்கள் அடைந்த நஷ்டத்துக்கு அளவேது.
இன்று 70 வயதில் ரஜினி
கமல் எல்லாம் பல கோடி சம்பளம் பெறும்போது சிவாஜி அந்த வயதில் Y G யோடு மல்லாந்து படுத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
"நவராத்திரி" சென்னை நகர வசூலை வெளியிடுங்கள்,பார்த்து விடுவோம்.
4 திரையரங்குகளிலும் சேர்த்து 6 லட்சத்தை கூட பெறமுடியாமல் விநியோகஸ்தர்கள் கதறிய கதை தெரியாமல் உளறுகிறார்கள். இன்றும் "படகோட்டி" உரிமை கோடியை தாண்டி விலை பேசியும் தேவி பிலிம்ஸ் அதிபர் தர மறுக்கிறார். இதோ படகோட்டி பலமுறை சென்னையில் வெளியாகியும் 4 தியேட்டர்களில் திரையிட்டு அதற்கு ரிசர்வேசன் நடந்து ஓடியது. நவராத்திரியை சும்மா கொடுத்தாலும் எவனும் வாங்க மாட்டான். வாங்கி திரையிட்டால் கரண்ட் பில் கட்டக்கூட
படம் ஓடாது என்பதை நன்கு அறிவார்கள்.
ஆனால் 100 நாட்களில் "எங்க வீட்டு பிள்ளை" "காவல்காரன்" பெற்றால்தான் பிள்ளையா போன்ற படங்கள் 9 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது தெரியுமா? சிவாஜி ரசிகர்களுக்கு.
RV உதயகுமார்,அமீர்,பழ.கருப்பையா
மயில்சாமி போன்றோருக்கு இன்னும் தெளிவாக தெரியும். ஏனென்றால் இவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் அல்லவா?
அவர்கள் மட்டுமல்ல
சினிமா தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர் ஓனர்கள் அத்தனை பேரும் அறிவார்கள். "கண்ணன் என் காதலன்" ரிலீஸுக்காக "கலாட்டா கல்யாணத்தை" 13 நாட்களில் தூக்கி எறிந்தனர் திருநெல்வேலி ரத்னா தியேட்டர்காரர்கள். எம்ஜிஆர் பட வெளியீட்டுக்காகத்தான் அத்தனை சிவாஜி படங்களையும் மற்ற படங்களையும் கேப்பில் போடுவார்கள் என்பதை தியேட்டர் காரர்களும் விநியோகஸ்தர்களும் நன்கு அறிவார்கள்.
இதை நன்றாக தெரிந்து கொண்ட ஒருவன் கனடாவில் இருந்து கதையடித்தால் நம்புவதற்கு
இங்குள்ளவர்கள் என்ன இளிச்சவாயர்களா?. சிவாஜிக்கு அப்படி ஒரு வசூல் பண்ணும் திறமையிருந்தால் பாவம் எம்ஜிஆர் 10 லட்சம் வாங்கும் போது 1லட்சத்திற்கே உயிரைக் கொடுத்து கத்தி கதறி அதை நடிப்பென்று நம்ப வைக்க அடிப்பொடிகளை ஏவி விட்டு கூவி கூவி வியாபாரம் பார்த்தாலும் எத்தனை படங்கள் போணி ஆகாமல் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அந்த படத்தயாரிப்பாளர்கள் பஸ் ஸ்டாண்டிலும், கோயில்களிலும் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட கதை(புனர் ஜென்மம்) தெரிந்திருந்தும் வாய் கூசாமல் பொய் பேசும் சிவாஜி ரசிகர்களே ஐயோ! பாவம், நீங்களும் உங்க ஐயனும்.
அது மட்டுமா? நடிப்பு போட்டிக்கு எம்ஜிஆரை அழைத்தாராம். ஏற்கனவே நடிப்பு போட்டியில் சிவாஜியை வென்று 'பாரத்' விருதை வாங்கியதோடு நடிப்பில் சிவாஜியை
குப்புற தள்ளி நட்சத்திரத்தை எண்ண வைத்த கதை மறந்து விட்டதா? இந்தியாவிலேயே தலை சிறந்த நடுவர்களால் சிறந்த நடிகர் என்று தேர்ந்தேடுக்கப்பட்ட எம்ஜிஆர் எங்கே? நீங்க எங்கே? இன்னொரு போட்டி எதற்கு? நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் நடுவர்களாக சின்ன அண்ணாமலை, சித்ரா லட்சுமணன், Y G மகேந்திரன் போன்ற அரைவேக்காடுகள் நடுவராக இருந்தால்தான் முடியும்.
இறுதியில் எம்ஜிஆர் பாணியில் "புதியவானம்" படத்தில் கையை எம்ஜிஆர் போல் தூக்கி புரட்சி தலைவா என்று பாடவைத்தோமே?
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் காசுக்காக எதையும் செய்யக்கூடியவர் கணேசன் என்று. சரி, சினிமாவில் எம்ஜிஆரிடம் தோற்று புறமுதுகு காட்டியவர் அரசியலிலாவது வென்றாரா? வயது குறைந்த ஒரு பெண்ணிடம் தோற்று
புறமுதுகு காட்டிய கதை சிவாஜி ரசிகர்களின் கண்ணீரால் எழுதப்பட வேண்டியது. அவரிடம் அரசியலில் மட்டும் தோற்கவில்லை, நடிப்பிலும் தோற்றதை அன்றைய பத்திரிகைகள் சுட்டிக்காட்ட தவறவில்லை(எ.வந்தாள்,ப.பட்டணமா,சவாலே சமாளி).
இப்படி சாதனை எதுவும் செய்ய முடியாத சிவாஜி ரஜினி, கமல் படங்களின் வெற்றியில் குளிர்காய ஆரம்பித்து உள்ளது கேவலமாக உள்ளது. அதுவும் பாரதிராஜாவும் கமல்ஹாசனும் தங்கள் படத்தில். சிவாஜியை நடிக்க வைப்பதற்கு அவர்கள் பட்ட பாட்டை T V பேட்டியில் கூறியிருப்பதை கவனிக்கவும். கொஞ்சம் விட்டிருந்தால் படத்தையே கெடுத்து குட்டி சுவராக்கி இருப்பாராம் நம்ம சிவாஜி. அவருடைய கத்தலையும் கதறலையும் 10 மடங்குக்கு மேல் குறைத்து படமெடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லியிருப்பதை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஒரு கத்தி குத்துக்கு படப்பிடிப்பு தளத்தையே உலுக்கியவராயிற்றே நம்ம ஆளு.
இப்படி திரையிலும் அரசியலிலும் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவரை பச்சைத்தமிழன் என்று எப்படி ஏற்பது? தோல்வியை பரிசாக பெறுபவன் தமிழனா? தோல்வியை எதிரிக்கு பரிசளிப்பவன் தமிழனா?
இவரை தோற்க வைத்து விட்டு இப்போது கொடி பிடிக்க துவங்கியிருக்கும் சிவாஜி ரசிகர்களை என்னவென்று அழைப்பது என்றே தெரியவில்லை..........
-
இதயக்கனி!!
---------------------
எம்.ஜி.ஆர் சினிமாவை அலசி ரொம்ப நாளாச்சு!!
இதயக்கனி!
குண்டு துளைக்க முடியாத இதயத்தில்-
வண்டு துளைக்குமா??
எப்படியோ,,
கருணாவுக்கு அன்று இருந்த வெறியில்,,அவரது-
கரு நாவுக்குள் வந்த வார்த்தையினால் நமக்கு-
எம்.ஜி.ஆர் ஆட்சி கிடைத்தது?
அது சத்தியா மூவீஸ் இதயக்கனி படம்!
இந்தப் படத்தைப் பற்றிய மூன்று விஷயங்களே இன்றையக் கரு!!
அந்த நடிகை தான் அந்தப் படத்துக்கு ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பது?
மேக்கப் டெஸ்ட் முடிந்து,,படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்ட நிலையில்,,
திருமணம் நிச்சயமாகிவிடவே,,,,அவரது கணவரின் தந்தை,,எம்.ஜி.ஆரிடம் நிலைமையை விளக்க,,
அந்த நடிகை பெற்றுக் கொண்ட முன் பணத்தை,,அவரது திருமணப் பரிசாக வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு--
தோரஹா படப் புகழ்,,நாயகி,,ராதாசலூஜாவைக் கதா நாயகி ஆக்கினார் எம்.ஜி.ஆர்!
முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த நடிகை??
நீத்துசிங்!
ரிஷி கபூரின் மனைவி!
ரிஷிகபூரின் தந்தை ராஜ்கபூர் தான் எம்.ஜி.ஆரிடம் பேசியது!!
சாதாரணமாக எல்லாத் திரைப்படங்களிலும் தொழில் நுட்ப விஷயங்களில் எம்.ஜி.ஆரின் கை வண்ணமும் கலந்திருக்கும்!
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ பாடலுக்குப் பொருத்தப் பட்டிருந்த கேமரா ஆங்கிள்,,எம்.ஜி.ஆருக்கு திருப்தியைத் தரவில்லை?
டைரக்டர் ஜெகன்னாதனுக்கோ எம்.ஜி.ஆரை வைத்து முதன் முதலில் இயக்குவதால்,,மனிதருக்கு ஏக டென்ஷன்?
எம்.ஜி.ஆர் ஒரு யோசனையைக் கூற-
யூனிட் முழுதும் உற்சாகத்தில்??
ஆம்! அந்தப் பாடல் காட்சி முழுவதற்கும் எம்.ஜி.ஆர் தான் முழு ஒளிப்பதிவாளர்??
படத்தைப் பார்த்தால்--
இயற்கை சூழலோடு பனிப் பொழிவை வெகு தத்ரூபமாகக் காட்டியிருப்பார் எம்.ஜி.ஆர்!!
இன்பமே பாடலின் படப்பிடிப்பு!--இயக்குனரோ-
டென்ஷனில் படபடப்பு??
காரணம்??
காட்சிப்படி கதா நாயகி ஓடி வர வேண்டும்!
ஓடி வரும் ஹீரோயின்,,,,ஓடி வரும் ஹீரோவுடன் முட்டிக் கொண்டு நிற்க வேண்டும்!
பின்னணி இசையுடன் பாடல் ஆரம்பமாகும்!
எம்.ஜி.ஆர் ஓடி வந்தவர்,,அப்படியே ரா.சலூஜாவைத் தூக்கிவிட்டார்??
எல்லோரும் பிரமிப்புடன் பார்க்க--
கடைசி வினாடிக் காட்சி மாற்றத்துக்கு எம்.ஜி.ஆர் விளக்கம் சொன்னாராம் இப்படி--
ஒரு மாதக் காத்திருப்புக்குப் பின் இருவரும் ஓடி வந்து நிற்பதை விட,,இப்படிச் செய்வது காட்சியின் துள்ளல் ஓட்டத்துக்குத் துணை சேர்க்கும்!!
தூக்கியதோடு ஒரு சின்ன ஜெர்க் அசைவு காட்டுவார் எம்.ஜி.ஆர்!
இப்போதும் இந்தப் பாடல் காட்சியில் ஆரவாரம் அள்ளும்!
ஹீரோயின் ராதாசலூஜா இக்காட்சியில் போதை தரும்
ஹெராயின்??
எம்.ஜி.ஆர் படத்தின் ஹைலைட்டு சமாச்சாரங்கள்-
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல???!!!.........
-
பழைய நினைவுகள்...
அந்நாட்களில் வீரப்பாவின் சிரிப்பை வைத்து குழந்தைகளை அச்சுறுத்துவார்களாம். அந்த அளவிற்கு வீரப்பா திரையில் சிரித்தால், அரங்கிலுள்ள குழந்தைகள் அலறி அழுதுவிடுமாம்.
சக்கரவர்த்தி திருமகனில் தொடங்கிய அந்த வெற்றிச் சிரிப்பு அதன்பிறகு அவரது தனித்த பாணியாகி விட்டது. ஒவ்வொரு படத்தில் கதையின் சூழலுக்கு ஏற்றபடி தனது அக்மார்க் சிரிப்பை பயன்படுத்த தவறவில்லை வீரப்பா. முருகன் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார் வீரப்பா. அந்தப் படத்திலிருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை தொடர்ந்தது. பொன்மனச் செம்மல் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில் தனக்கு எதிர்நாயகனாக வீரப்பாவையே போடும்படி கேட்டுக் கொள்வாராம். கே.பி.சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, எம்.ஜி.ராமச்சந்திரன் வழிநடத்த, பி.எஸ்.வீரப்பாவின் திரைவாழ்க்கை தலைநிமிர்ந்து பயணித்தது.
மக்களிடையே இந்தக் கூட்டணி அமோக வரவேற்பையும் பெற்றது. எம்.ஜி. ஆருக்கு சரி சமமான வில்லன் நடிகர் வீரப்பாதான் என்று எழுதினர் அன்றைய திரை விமரிசகர்கள். காரணம் ஒரு நாயகனுக்கு தக்கபடியாக, அவனை எதிர்கொண்டு அவனுடன் சமர் செய்ய அதே அளவு சக்திவாய்ந்த வில்லன் இருந்தால்தான் நாயகனின் சாகஸங்கள் எடுபடும். வீரப்பாவின் உடற்கட்டும் முகவெட்டும், வில்லனாக நடிக்கும்போது அவர் அப்பாத்திரமாகவே மாறிவிடும் மாயமும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு படத்திலும் பிரத்யேகமாக ஒரு பாணியை முயற்சி செய்து அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் வழக்கமும் வீரப்பாவிடம் இருந்துவந்தது. அதனால் தன்னிடம் வந்த எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார் வீரப்பா. காலப்போக்கில் தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக் கொண்டார்.
வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர்தான் வீரப்பாவிற்கு வாள் வீச்சு கற்றுக் கொடுத்தவர். திரையில் இருவரும் அதி அற்புதமாக கனல் தெறிக்க சண்டையிடுவதன் பின்னணியில் இருவரும் எடுத்த தீவிர பயிற்சிகள்தான் காரணம். ஒருமுறை படப்பிடிப்பின் போது வீரப்பாவுக்கும் எம்.ஜி.ஆரும் நடிக்கும் வாள் சண்டை படக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மறந்து திடீரென்று பள்ளத்தில் உருண்டு விழப் போனார் வீரப்பா. எம்.ஜி.ஆர் மட்டும் அச்சமயத்தில் கவனித்து காப்பாற்றா இருக்காவிட்டால், விபத்துக்குள்ளாகி வீரப்பா எனும் கலைஞரை திரைத்துறை இழந்திருக்கும். அடிக்கடி இவ்விஷயத்தை நினைவுகூரும் வீரப்பா எம்.ஜி.ஆர் ஒரு மாமனிதர், தனக்கு திரைவாழ்க்கையில் கைகொடுத்தது மட்டுமின்றி, உயிரைக் காப்பாற்றவும் செய்தார். தோள் கொடுப்பான் தோழன் எனும் பதத்துக்கு உதாரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர் என நெகிழ்ச்சியாகக் கூறி மகிழ்வார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் வீரப்பா ஜோடி பல படங்களில் நடித்து வெற்றிக் கூட்டணியாக வாகை சூடிக் கொண்டிருந்தது திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் அவருக்கு வீரப்பாதான் வில்லன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனோவா, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி நண்பன், மீனவ நண்பன், ராணி லலிதாங்கி, பத்தினி தெய்வம், பதிபக்தி, நாடோடி மன்னன், ராஜராஜன், யார் நீ, நவரத்தினம், நீலமலை திருடன், பார்த்திபன் கனவு, கைதி கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பாற்றலால் கதாநாயகன் அளவிற்கு, அதிலும் சில படங்களில் நாயகனை விட வில்லன் கதாபாத்திரத்தை வியந்தோகிப் பேசச் செய்தவர் வீரப்பா.
வீரப்பா பேசும் அனல் தெறிக்கும் வசனங்களும் அந்நாட்களில் மிகவும் பிரபலம். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில், எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த மகாதேவி என்ற படத்தில் வீரப்பா பேசிய வசனங்கள் காலம்கடந்தும் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்த ஒன்று. அப்படத்தில் நடிகை சாவித்திரியின் பெயர் மகாதேவி. வீரப்பா சாவித்ரியை காதல் பொங்க பார்க்கும் பார்வையும், ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி’ என்று பேசும் வசனமும் காலத்தால் அழிக்க முடியாத வல்லமை பெற்றது. அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் இந்த வசனத்திற்கு கைதட்டல்களையும் விசில்களை பலத்த கரகோஷத்தையும் திரை அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் காதலிக்கும் இளைஞர்கள், தங்கள் காதலியின் பெயரை சேர்த்து ‘மணந்தால் மீனாட்சி, இல்லையேல் மரணதேவி’ என்று கூறி மகிழ்வார்களாம்.
1956-ம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பி.எஸ்.வீரப்பா தலைமையில் திருடர்கள் அனைவரும் அணிவகுத்து குதிரையில் வரிசையாக வரும் காட்சி, அழகியலுடனான ஒரு திரை அனுபவத்தை அள்ளித் தரும். ‘அண்டா காகசும் அபு காகசம் திறந்திடு சீசே’ என்று அவர் ஒரு மந்திரத்தைக் கூறி அந்தக் குகைக் கதவைத் திறக்கச் செய்யும் காட்சி அன்றைய ரசிகர்களை சொக்கிப் போகச் செய்தது. ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலைதான்’ என்று வீரப்பா பேசிய வசனமும் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கதாபாத்திரம்.........
-
#மக்கள் திலக*த்துட*ன் நாகேஷ் ப*லப*ட*ங்க*ளில் ந*டித்து பிஸியாக இருந்த காலம்!
அப்போதெல்லாம் எம்ஜிஆர் ப*ட*ங்க*ளில் ந*டிப்ப*தாயின் முத*லில் அவ*ர் ச*ம்ப*ந்த*ப்ப*ட்ட* காட்சிக*ளை முடித்து அனுப்ப* சொல்லிவிடுவார் எம்ஜிஆர்.
காஷ்மீரில் சித்ரா ப*வுர்ணமி ஷூட்டிங்கின்போது ச*ரிவ*ர உண*வு கிடைக்காம*லும், வ*யிற்றுவலியாலும் நாகேஷ் அவ*திப*ட்ட*போது எம்ஜிஆர் அப்போது காஷ்மீரில் நேற்று இன்று நாளை, நினைத்த*தை முடிப்ப*வன் ப*ட*ப்பிடிப்பில் இருந்தார். விஷ*ய*ம் அறிந்த* எம்ஜிஆர் நாகேஷின் ரூமிற்கே நேரில் வ*ந்து ந*ல்ல* ம*ருத்துவ* வ*ச*தி, உண*வு ஏற்பாடு செய்து கொடுத்து கையில் 30 ஆயிரம் ப*ணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தார்.
வெளிநாட்டில் உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*ப்பிடிப்பின்போது நாகேஷே எதிர்பாராத வ*கையில் அவ*ரின் பிற*ந்த* நாளை சிற*ப்பாக கொண்டாடி த*ங்க* மோதிர*ம் அணிவித்தார் எம்ஜிஆர்.
நாகேஷ் திரைய*ர*ங்க*ம் க*ட்டும் வேளையில் இருந்த சிக்க*ல்க*ளை நீக்கி தானே முன்னின்று தீர்த்து வைத்து திற*ந்தும் வைத்தார். அப்போது பாண்டி ப*ஜாரில் நாகேஷ் தியேட்ட*ருக்கு எதிரே பிர*ப*ல
மான த*னியார் ப*ள்ளி ஒன்று இருந்த*து.. தியேட்ட*ர் உருவானால் மாண*வ*ர்க*ள் க*ட் அடித்துகொண்டு ப*ட*த்திற்கு செல்வார்க*ள் என்ப*து அவ*ர்க*ள் வாத*ம்..என*வே கார்ப்ப*ரேஷ*னில் ப*ர்மிஷ*ன் கிடைப்ப*தில் இழுப*றியாக* இருந்த*து.. எம்ஜிஆர் அந்த* ப*ள்ளி முத*ல்வ*ரை அழைத்து உங்க*ள் ப*ள்ளிக்குதான் இர*ண்டு வ*ழி உள்ளதே. ம*ற்றொரு வாச*லை உப*யோகியுங்க*ள்..தியேட்ட*ர் எதிர்புற* வாச*லை அவ*சிய*த்திற்கு மட்டும் உப*யோகியுங்க*ள்..மேலும் க*ட் அடித்து ப*ட*ங்கள் செல்ல வேண்டும் என ஒரு மாண*வ*ன் நினைத்தால் எதிரில் உள்ள தியேட*ருக்கு எப்ப*டி செல்வான்..பாண்டி ப*ஜார் அருகில் வேறு தியேட்ட*ர்க*ளே இல்லையா? என*வே ந*ம்மையெல்லாம் சிரிக்க* வைத்த* நாகேஷ் அவ*ர்க*ளை நாம் அழ*விட*லாமா? என்று அன்போடு கேட்க* அப்போதே அந்த* பிர*ச்ச*னை தீர்க்க*ப்ப*ட்ட*து.
1980ல் நாகேஷ் உட*ல் ந*லிவுற்று உயிருக்கு ஆப*த்தான நிலையில் ம*ருத்துவ*ம*னையில் இருந்தார். எம்ஜிஆர் மருத்துவ*ம*னைக்கு சென்று வெளிநாட்டிலிருந்து ம*ருந்துக*ளை உட*னே வ*ர*வ*ழைத்து நாகேஷை காப்பாற்றினார்.
நாகேஷ் எம்ஜிஆரைப்ப*ற்றி கூறிய*து " எம்ஜிஆருக்கு அவ*ரே ஒரு விள*ம்ப*ர*ம்தான்! த*னியாக வேறு விளம்ப*ர*ம் தேவையில்லை என்று".........
-
#கேள்வி : தாங்கள் வரி பாக்கிக்காக மத்திய அரசிடம் தங்களுடைய வீட்டை அடகு வைத்திருக்கிறீர்கள். தாங்கள் ஒரு வார்த்தை கூறினால் தங்களுடைய ரசிகர்கள் நொடிப்பொழுதில் அந்தக் கடனை அடைத்து விடுவார்கள் தாங்கள் இதற்கு ஆவன செய்வீர்களா ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எனக்கு என் உடம்பில் இன்னும் உழைக்கும் சக்தி இருக்கிறது. வேலையும் கிடைக்கிறது. பணமும் வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் கடனைத் தீர்க்க வரும் நீங்கள், தமிழக அரசின் கடன்காரர்களாக லட்சக்கணக்கான நெசவாளர்கள், விவசாயிகள் துன்பச் சூழ்நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்களே , அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமா ? அதற்கு என்ன செய்வது என்பது பற்றி, என் உடன்பிறப்புகளோடு ஆலோசித்து வருகிறேன். விரைவில் நற்காலம் மலரும் அவர்களுடைய கடனை தீர்ப்போம்.
நான் தமிழகத்திலே மூன்று, நான்கு பருவத்திலே அடியெடுத்து வைத்தபோது இத்தகைய வீடும் இல்லை. காரும் இல்லை. வேறு எந்த வசதியும் எனக்கில்லை. எனக்கு இருப்பதாக சொல்லப்படுகின்ற வீட்டையோ, சொத்துக்களையோ இந்தியப் பேரரசு எடுத்துக்கொள்ளுமானால் , அந்த வீடு அலுவலகமாக மாறி, அதில் குடியேறுபவர்களோ , வசிப்பவர்களோ தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியுண்டு. எனவே ஏமாற்றம் அடையும் நிலையில் நானில்லை.
- நாடோடி மன்னன், ஆகஸ்ட் 1975
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
நன்றி மறவா நல்ல மனம் போதும் அதுவே என் மூலதனம் ஆகும்
எம்ஜிஆர்
சத்தியா தாய் ஈன்றாள்
தமிழ் தாய் ஆளாக்கினாள்
அந்த தமிழ் தாய்க்கு ஒரு பல்கலை கழகம் வேண்டும் என தமிழ் அறிஞர்கள் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பதாம் ஆண்டு முதலே கோர எவ்வளவோ ஆட்சிகள் வந்தன எத்தனையோ முதல்வர்கள் வந்தார்கள் வரவில்லை தமிழுக்கு பல்கலைகழகம் தமிழ் அன்னை வளர்த்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வர் ஆகிறார் அழைக்கிறார் அறிஞர்களை உடனே அமையுங்கள் தமிழ் அன்னைக்கு பல்கலைகழகம் ஐநூறு ஏக்கர் வேண்டும் என கேட்க அன்னைக்கு ஆயிரம் ஏக்கரில் மிகபிம்மாண்டமாக கட்டுங்கள் மேல் பார்வைக்கு தமிழ் நாடு என குறிக்கும் வகையில் கட்டங்கள் கட்டுங்கள் என கட்ட வைத்து திறக்கிறார் எம்ஜிஆர்
பெண்களை தெய்வமாக தன்னை வாழவைத்த பெண்களுக்கு தனியாக ஒரு பல்கலை கழகம் வேண்டும் என அமைக்கிறார் அதற்க்கு தன் தாய்யின் பெயரை சூட்டவில்லை எம்ஜிஆர் ஏழைக்காக வாழும் அன்னை தெரசா பெயர் சூட்டி அவரையே திறக்க வைக்கிறார் அதில் காஷ்மீர் முதல்வர் கலந்து கொள்ள் மதம் தாண்டி ஒரு மனிதநேய சங்கமத்தில் அன்னை தெரசா பல்கலை கழகம் தொடங்கியது எம்ஜிஆரால்
கன்னியாகுமாரியில் ஐயன் வள்ளுவனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க அன்றைய பிரதமர் மொராஜி தேசாயயை கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் எம்ஜிஆர்
ஆண்டுகள் பல ஆனதால் எம்ஜிஆருக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆகி திருவள்ளுவர் சிலை திறக்க எம்ஜிஆர் கல்வெட்டை நீக்கி விட்டு
சுயநலம் இல்லாமல் தற்ப்பெருமை இல்லாமல் மனிதநேயத்தோடு ஒரு பொற்கால ஆட்சியை எம்ஜிஆர் தந்ததால் இன்றும் உலகம் எங்கும் எம்ஜிஆர் புகழ் பாடபடுகிறது
வாழ்க எம்ஜிஆர் புகழ்.........
-
தமிழக அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு சட்டமன்ற பொது தேர்தலிலும் எதிர்க் கட்சியை தொடர்ந்து பலமிழக்க செய்த ஒரே தலைவர் என்ற பெருமையை நம் மக்கள் திலகம் அவர்கள் பெற்றுள்ளார்.
1977 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 48 இடங்களை கைப்பற்றியது.
1980 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 37 இடங்களை கைப்பற்றியது.
1984 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 28 இடங்களை கைப்பற்றயது.
புரட்சித் தலைவர் அவர்கள் ஆட்சி செய்த போழ்து, எதிர்க் கட்சியாக இருந்த தி.மு.க. பலம் வாய்ந்ததாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !.........
-
#புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.
சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார்.
அவர்கள் திறமையாளர்களாக இருந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
மக்கள் திலகம் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘#ஆயிரத்தில்_ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல்.
அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று #எம்ஜிஆர் கூறியதில்லை.
'எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன்' என்று அந்த கவிஞரும் சொன்னதில்லை.
மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர்.
அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘#ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது.
படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘#மாட்டுக்கார_வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமையான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
-என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
-என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன்.
நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார்.
இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார்.
‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘#அரசவைக்_கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன்,
‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.
கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.
கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்.,
‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர்.
என்றாலும்கூட கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
-என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘#நீதிக்குப்_பின்_பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘#மன்னாதி_மன்னன்’ படத்தில் அவர் எழுதிய
‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்.
காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*07/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சி உங்களுடைய பேராதரவுடன்**மனமார்ந்த , நெஞ்சார்ந்த பாராட்டுக்களுடன் தொடர்கிறது .சென்னையில் ஒரு காலத்தில் நாடகப்புலி என்று பேசப்பட்ட திரு.கே.பி.கேசவன் நடித்த படம் திரை அரங்கில் வெளியானது .அதை பார்க்க செல்கிறார் .படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டு, கைகளை பிடிக்கிறார்கள், கன்னத்தை கிள்ளுகிறார்கள் .ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட ,எம்.ஜி.ஆர்*அவரை தன் தோளில் சுமந்து கொண்டு வெளியே வந்து, ஒரு டாக்சியை பிடித்து*அவரை பாதுகாப்பாக ஏற்றி அனுப்புகிறார் .எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைப்படம் சில வருடங்கள் கழித்து வெளியாகிறது .எம்.ஜி.ஆருடன், கே.பி.கேசவன் படம் பார்க்க செல்கிறார் . இடைவேளையில் ரசிகர்கள் எம்.ஜி.ஆரை பார்த்ததும் மொய்த்துவிடுகிறார்கள் .அவரை கட்டிப்பிடிக்கிறார்கள்,கன்னத்தில் கிள்ளுகிறார்கள்,கைகளை தொட்டு பார்க்கிறார்கள் .அன்பு தொல்லையால் அவதிப்படுகிறார் . ஆனால் அதே ரசிகர்கள் கே.பி.கேசவனை கண்டு கொள்ளவேயில்லை .எம்.ஜி.ஆர். அருகில் இருந்த கேசவனை பார்த்து ,பழைய நினைவுகளை நினைத்து சிரித்துக் கொண்டாராம் .வாழ்க்கையில் யாருக்கும்* எந்த விஷயமும், எப்பொழுதும் நிரந்தரம் இல்லை .எந்த புகழும், பெருமையும், பெயரும் யாருக்கும், எப்பொழுதும் கிடைத்துக் கொண்டு இருக்காது .எப்பொழுது வரும்,நிலைக்கும்* எப்பொழுது போகும் ,என்பது நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து* தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்கிற தொடரில் எழுதியவர் மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வையும், தாழ்வையும் சமமாக பாவிக்க தெரிந்த அதிசயிக்கத்தக்க திறன், அனுபவத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர்.
1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் மத்திய அரசான காங்கிரஸ் அரசால்*தி.மு.க. வின் நிர்பந்தத்தால் கலைக்கப்படுகிறது . அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.*ராமாவரம் தோட்டத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படம்*பொதிகை டிவியில் ஒளிபரப்பானதை பார்த்துக் கொண்டிருந்தார் .அரசு அதிகாரிகள் மெல்ல தயங்கி தயங்கி எம்.ஜி.ஆரிடம் சென்று அவர் காதில் விவரத்தை தெரிவிக்கிறார்கள் .பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்த ஆட்சியை கலைத்துவிட்டார்களா, வீட்டில் என்ன இனிப்பு இருக்கிறது .உடனே*அனைவருக்கும் இனிப்பு வழங்குங்கள். கூடிய சீக்கிரத்தில் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி மீண்டும் அமையும் .என்று கூறி தொடர்ந்து படம் பார்க்கிறார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் எப்பொழுதும்*அதில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் .உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக குன்னக்குடி வைத்யநாதனை இசை அமைக்க ஒப்பந்தம் செய்துவிட்டார் .படத்திற்கு பாடல்கள் எழுத கவிஞர் கண்ணதாசன் வரவழைக்கப்படுகிறார் .பாடல்கள் எழுதுவது பற்றியும் ,இசை அமைப்பாளர் பற்றியும் எம்.ஜி.ஆருடன் பேசி கொண்டிருந்த கண்ணதாசன்*வீட்டுக்கு போய் எழுதி கொண்டுவருகிறேன் என்று புறப்பட்டார் . கண்ணதாசனுக்கு எப்பொழுதும் வெள்ளை மனம் .அதாவது உள்ளதை உள்ளபடியே சொல்லும் குணம் உண்டு . வீட்டுக்கு சென்ற கண்ணதாசன் எம்.ஜி.ஆரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தின் பாடல்கள் ,இசை அமைப்பு குறித்து உங்களிடம் தனியே பேசவேண்டும் என்று கேட்டு கொண்டார் .இருவரும் சந்தித்தனர் .அப்போது கண்ணதாசன் எம்.ஜி.ஆரிடம் ,நீங்கள் எடுக்கப்போகும் படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது . மேலைநாட்டு இசைக்கு* முன்னுரிமை தரவேண்டியது அவசியம், அதற்கு குன்னக்குடி வைத்யநாதன் சரிப்பட்டு வரமாட்டார் . தமிழ் திரைஉலகில் உச்சத்தில் உள்ள இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால்தான் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியும் .ஆகவே என் கருத்தை நன்றாக யோசித்து*முடிவு செய்யுங்கள். உங்களது படம் நன்றாக வரவேண்டும் .இசை, பாடல்கள் நன்றாக அமையவேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்கிறேன் குன்னக்குடி வைத்யநாதனுக்கு வேண்டுமென்றால் வேறொரு படத்திற்கு வாய்ப்பு அளியுங்கள் .என் மனதில் பட்டதை வெளிப்படையாக, உங்களின் நன்மைக்காக சொல்கிறேன் .தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார் .*.அதன்பிறகு இருவரும் ஒரு மாதகாலம் சந்திக்கவேயில்லை . கண்ணதாசனின் நண்பர்கள் கண்ணதாசனை கடிந்துகொண்டார்கள் .இவருக்கு இது வேண்டாத வேலை.எம்.ஜி.ஆர். யாரையாவது வைத்து இசை அமைக்கட்டும் .கவிஞருக்கு*இந்த படத்தில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்க போவதில்லை என்று பேசி கொண்டார்கள் . ஆனால் ஒரு மாத காலத்திற்கு பிறகு கவிஞர் கண்ணதாசனை*தொலைபேசியில் அழைத்து எம்.ஜி.ஆர். பேசினார் . நீங்கள் அளித்த யோசனைகளை பற்றி சிந்தித்து பார்த்தேன் . உங்களின் கருத்தும், வாதமும் சரிதான் .நல்ல நேரத்தில் அளித்த யோசனைக்கு நன்றி என்று கூறி பாடல்களை விரைவாக எழுதும்படியும் , இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்து உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார் . ஏற்கனவே ஒப்பந்தம் செய்த இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதனை அழைத்து ,உங்களுக்கு வேறு படத்திற்கு கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் .இந்த படத்திற்கு எம்.எஸ்.வி. இசை அமைக்கட்டும் என்று கூறி ,சில ஆண்டுகள் கழித்து ஏ.பி.என்.தயாரித்த நவரத்தினம் படத்திற்கு வாய்ப்பு அளித்தார் .உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தக்க சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு யோசனை தெரிவித்தார் கண்ணதாசன் .அதே சமயத்தில் தான் ஒப்பந்தம் செய்த இசை அமைப்பாளரை மாற்ற மனமில்லாமல் வேறொரு படத்திற்கு வாய்ப்பு அளித்ததோடு , கவிஞர் கண்ணதாசன் அளித்த சரியான*யோசனையையும் நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது .
அண்ணா பத்திரிகை நாராயணன் மற்றும் சில பத்திரிகையாளர்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார் எம்.ஜி.ஆர். அவர்கள் எல்லோரும் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தனர் .சிறிது நேரம் பேசிய பிறகு யாருடைய கையிலும் அண்ணா உருவம் பொறித்த பச்சை குத்தப்படாததை எம்.ஜி.ஆர். அறிந்து கொள்கிறார் .நீங்கள் எல்லாம், ஒருவரும்* பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் கொள்வதில்லை போலும் . அப்படித்தான் பத்திரிகையாளர்கள் இருக்க வேண்டும் என்று பாராட்டினாராம் . பத்திரிகையாளர்கள் யாவரும்* எந்த விஷயத்திலும், எந்த நேரத்திலும் ஒரு சார்பு நிலையில் இருக்க கூடாது . நடுநிலையில்தான் இருக்கவேண்டும் என்று அறிவுரை சொன்னாராம் .
எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான ஒரு மூத்த அமைச்சர் அவருடைய பேச்சுக்கள் அண்ணா பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் .இந்த செய்திகள் வெளிவர சில நாட்கள் தாமதம் ஆவதால் அமைச்சருக்கு கோபம் வருகிறது .ஒருநாள் ஒரு கூட்டத்தில் அண்ணா பத்திரிகையை சார்ந்த சில ஊழியர்கள் முதல் வரிசையில் அமர்ந்துள்ளார்கள்*அந்த சமயம் அந்த மூத்த அமைச்சர் ,பத்திரிகை ஊழியர்களிடம் ,இப்போதெல்லாம் உங்கள் பத்திரிகையில் வரும் செய்திகள் நன்றாக இல்லையாமே என்றாராம் .எந்த பத்திரிகை என்று ஊழியர்கள் கேட்க, அண்ணா பத்திரிகை பற்றித்தான் சொல்கிறேன் என்றாராம் பலர் முன்னிலையில். ஊழியர்கள் முகம் வாட்டம் கொள்கிறது .இந்த சம்பவம் பற்றி எம்.ஜி.ஆர்**எப்படியோ .தகவல்களை அறிந்து கொள்கிறார் . மறுநாள் அந்த மூத்த அமைச்சர்* பத்திரிகை அலுவலகம் வரும்போது எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார் ..எம்.ஜி.ஆரை பார்த்ததும் அமைச்சர் அதிர்ச்சியடைந்து, நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் நமது நண்பர்கள்தானே என்று கொஞ்சம் ஜாலியாக பேசி விட்டேன் என்றுவருத்தம் தெரிவித்தாராம் .அப்போது எம்.ஜி.ஆர். கூறியதாவது,பத்திரிகையாளன் பத்திரிகையாளன்தான் எந்த கட்சியிலே, எந்த பத்திரிகையிலே,எந்த ஊடக அலுவலகத்தில்**வேலை பார்க்கிறான்* என்பது முக்கியமல்ல பத்திரிகையாளனுக்கு ஒரு மரியாதை இருக்கிறது .மரியாதைக்காவது இப்படி நீங்கள் பேசியிருக்க கூடாது என்று சொன்னவுடன் அமைச்சர் மிகவும் வருத்தப்பட்டாராம் .ஆகவே, எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்து, தன் கட்சி பத்திரிகை அலுவலகத்தில் , தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீது அபாண்டம் கற்பிப்பதை அனுமதிக்க முடியாது என்கிற வகையில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள்,திறமை வாய்ந்தவர்கள், உண்மை ஊழியர்கள் ,நல்ல செய்திகளை பிரசுரம் செய்யக்கூடிய புத்திசாலிகள்,என்பதை மதித்து, அமைச்சரிடம் வலியுறுத்தி சொல்லி ,ஊழியர்களிடம் வருத்தம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதுதான் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் சிறந்த பண்புகளில் ஒன்று .
*.ஆகாயத்தில் இருந்து ,விழுந்து கிடைக்கப்பெற்ற ஒரு சூரிய சிதறல்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் .அந்த சூரிய சிதறல்களில் இருந்து நாம் சில நட்சத்திரங்களை பொறுக்கி நம்பிக்கை வாசல்களை திறந்து வைக்கிறோம்.*அந்த நம்பிக்கை வாசல்களில் இருந்து நடந்துகொண்டு, நாம் வெற்றியை நோக்கி பயணப்படுவதற்கான வழிகாட்டியாகத்தான் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சியை* தொடர்ந்து வருகிறோம் . தொடர்ந்து மற்ற செய்திகளை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.வீரமகன் போராட, - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்*
2.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் - நினைத்ததை முடிப்பவன்*
3.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
4.லில்லி மலருக்கு கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன்*
5.எம்.ஜி.ஆர்.-எம்.ஆர்.ராதா உரையாடல் - சந்திரோதயம்*
6.நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர்.பேட்டி - அன்பே வா*
7.பேசுவது கிளியா ,இல்லை பெண்ணரசி மொழியா-பணத்தோட்டம்*
.**
-
முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.
இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.
மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.
இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :
"மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.
சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :
"ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.
சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ==== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.
ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.
நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ==============================
சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.
ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்..........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 100 படங்களின் நெகடிவ் பத்திரமாக தமிழக அரசின் பெட்டகத்தில உரிய பாதுகாப்புடன் வைக்கப்படும் .
.
1957 முதல் 1987 வரை மக்கள் திலகம் பங்கேற்ற அரசியல் கூட்டங்களின் நிழற் படங்கள் , கலந்து கொண்ட விழாக்களின் நிழற் படங்கள் அனைத்தும் பிரமாண்ட ஸைசில் டிஜிட்டல் படங்களாக மாற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .
தமிழக அரசின் செய்தி துறை வசம் உள்ள மக்கள் திலகத்தின் 11 ஆண்டு அரசியல் விழாக்கள் வீடியோ பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு மக்களுக்கு காணொளியாக காண்பிக்கப்படும் .
மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் பொது மக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும் .
அதி நவீன வசதிகள் கொண்ட ''மக்கள் திலகம் எம்ஜிஆர் ''இலவச மருத்துவ மனை 234 சட்ட மன்ற தொகுதிகளிலும்
நிறுவப்படும் .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா சிறப்பு மலர்
இப்படிப்பட்ட அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு நாளே மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவு நிறைவேறும் நாள் .
கனவு நிறைவேறுமா ?!.........
-
நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!
‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.
அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.
பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.
- தி இந்து ..........
-
MGR the legend..
இவர்கள் #எதிர்காலத்தூண்கள்
தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...
அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்..................
-
புரட்சித்தலைவர் அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமில்லாமல் மறைந்த பிறகும் பல சாதனைகள் படைத்தவர் .இந்த சாதனைகள் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது .அவைகள் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கபட வேண்டும். கின்னஸ் சாதனைக்கு எடுத்து செல்லபட வேண்டும் .கின்னஸ் சாதனைக்கு கீழ்க்கண்ட தலைப்புகளில் முயற்சி செய்யலாம்
1 தலைவர் மறைந்த பிறகு பல புத்தகங்கள் அவர் புகழ் பாடி வந்துவிட்டன ,இன்னும் வந்து கொண்டிருக்கன்றது .இவைகளை முறை படுத்தி கின்னஸ் சாதனைக்கு எடுத்து செல்லலாம் .
2 தலைவரின் நூற்றாண்டு இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்றது .உலகெங்கும் தலைவரின் பக்தர் விழா கோண்டாடினர் .அவ்வாறு சுமார் 200 விழாக்களுக்கு மேல் நடைபெற்றது .இந்த நிகழ்வு உலகில் வேறு எந்த தலைவருக்கும் நடக்காத சாகனை.இதையும் கின்னஸ் ரெக்கார்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் .
3 திரைபடம் என்பது mass media .ஒரு கருத்தை ஒரே சமயத்தில் உலகின் எல்லா ஊரிலும் பரப்பலாம் .அந்த media வை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொன்னவர் உலகிலேயே நம் தலைவர் ஒருவர் தான் .படிப்பினை சொல்லும் பாடல்களை மொழிபெயற்புடன் தொகுத்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம் .
4 திரைபடங்களில் தலைவர் பல விதமான சண்டை காட்சிகளில் நடித்திருக்கறார் .ஒவ்வொரு விதமான சண்டை காட்சிகளையும் வர்ணனையுடன் தொகுத்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம் .
மேற்கூறியவை சில மட்டும் தான் .வேறு ஏதாவது விடுபட்டிருந்தால் தெரிக்கும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் .
கினன்னஸ் சாதனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பணியை ஒருவராக செய்ய முடியாது , பேரவை மூலமாக நடவடிக்கை எடுக்கலாம்...........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*08/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிறைய ராஜா ராணி, படங்களில்,சரித்திர படங்களில் நடித்து கத்தி சண்டை, வாள் சண்டை போட்டு பிரபலம் ஆகியிருந்தார் .அப்போது நடிகர்* சிவாஜி கணேசன்* சில சரித்திர படங்கள், சமூக படங்கள் என்று நடித்திருந்த காலம் . ஒருமுறை இருவரும் சந்திக்க நேர்ந்தபோது ,அண்ணே,கத்தி சண்டை, வாள் சண்டை போட்டு நடிப்பது போல் சமூகப்படங்களில் கோட் சூட் அணிந்து நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று கிண்டலாக* ஒரு கருத்தை வெளியிட்டார் .ஆனால் எம்.ஜி.ஆர். தன்னால் சமூகப்படங்களிலும் திறம்பட நடிக்க முடியும் என்று முதன் முதலில் திருடாதே படத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றார் .தொடர்ந்து தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்ப தலைவன் ,நீதிக்கு பின் பாசம் என* தனது ஆத்ம நண்பர்* தேவரின் படங்களில் கோட் சூட் அணிந்து நடித்து நடிகர் சிவாஜி கணேசனே வியந்து போகும் அளவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தினார் .தொடர்ந்து இயக்குனர் ராமண்ணா படங்கள், நாகிரெட்டியின் எங்க வீட்டு பிள்ளை, ஏ.வி.எம்மின் அன்பே வா, சத்யா மூவிஸ்,சரவணா பிலிம்ஸ்* படங்கள் ஆகியவற்றில்பிரத்யேக உடைகள் அணிந்து* நடித்து, அந்த கால கட்டத்தின் ட்ரெண்ட் செட்டராக எம்.ஜி.ஆர். இருந்துள்ளார் .ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், சங்கே முழங்கு போன்ற பல படங்களில் தொப்பி,உடைகள்,ஷூ என்று அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருக்கும்படி அணிந்து , புதுமையை புகுத்தி, ரசிகர்களை பரவசம் அடைய செய்தார் . பல வண்ணப்படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வண்ண உடைகள் ,பார்ப்பதற்காகவே, பல்லாயிரம்* ரசிகர்கள் படங்களை பலமுறை பார்த்து ரசித்த காலம் உண்டு .*
தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அவமானங்கள், கஷ்டங்கள்,பிரச்னைகள், பசிக்கொடுமை, பட்டினி என்று அவதிப்பட்டு,அவற்றையெல்லாம் சாதனைகளாக மாற்றுவது குறித்து சிந்தித்து செயல்பட்டதால்தான் திரைப்படங்களின் ஒவ்வொரு பிரேம்களையும், தனக்கான வாழ்க்கையின் படிக்கட்டுகளாக கட்டமைத்தார் . மற்றவர்களெல்லாம் திரைப்படம் என்பது*பணம்,புகழ்,பெயர் போன்றவற்றிற்கு என்று* மதிப்பளித்து நடித்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் நடிப்பது தொழிலுக்காக மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை, சாதனைகளாக மாற்றி ,வெற்றியின் சிகரத்தை அடைவதில் முனைப்புடன் திட்டமிட்டு செய்தார் .அவரது ஒவ்வொரு படத்தில் இருந்தும் பாடங்களாக கற்று கொண்டவர்கள் ,பல்லாயிரம் நபர்கள், பல உயர் பதவிகளில், குறைந்த பட்சமாக ஒரு கிராம நிர்வாக அதிகாரியாகவோ, அரசு அலுவலகங்களில் குமாஸ்தாவாகவோ ,அதிகாரியாகவோ இருக்கிறார்கள் என்பது அவர் கற்று தந்த பாடங்களின் சான்று .
நல்லவனாக வாழ்வதால்,என்ன தீமைகள் உண்டாகும், என்ன எதிர்ப்புகள் உண்டாகும் எந்த தடைகள் வந்தாலும் சரி, எந்த தோல்விகள் வந்தாலும் சரி,நல்லவனாக வாழ்வதால் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்கு மிக பெரிய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு மிக பெரிய உதாரணமாக அவர் வாழ்ந்து காட்டினார் . அவர் படாத அவமானங்களோ, சந்திக்காத பிரச்சனைகளோ* இல்லை .,எல்லா எதிர்ப்புகளையும் தன்னுடைய சாதனைகளுக்கான* படிகளாக *மாற்றுவதற்கு அவர் துணிந்து எடுத்துக்கொண்ட ஒரே லட்சியம் நல்லவனாக வாழ்வது, நல்லதை செய்வது, அவ்வை சொன்ன* அறம் செய்ய விரும்பு என்கிற* வரிகளின்படி அறம் செய்பவராகவே வாழ்ந்து காட்டியதால்தான் காலம் கடந்து*மறைந்தும் மறையாத நிலையில் மக்கள் அவரை நேசிக்கிறார்கள் .
1980ல் எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்படுகிறது அது நியாயமற்றது என்பதை எம்.ஜி.ஆர்.உணர்கிறார் .திரைப்படங்கள் தயாராகி வெளியிடுவதில் பிரச்னைகள் ஏற்பட்டால் நான் வெளிநாடு சென்றுவிடுகிறேன் என்று சொன்ன சில நடிகர்கள் மத்தியில் அந்த கால கட்டத்தில் ஆட்சியை கலைத்ததற்கு, நான் வேண்டியவர்களுக்கு அரசு அதிகாரம் மூலம்* தவறான வகையில்* உதவிகள் செய்தேனா,,பதவிகள் அளித்தேனா லஞ்சம் வாங்கினேனா ,ஊழல் செய்தேனா ,எந்த வகையில் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள்* நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது என்று வாக்காளர்களுக்கு அறிக்கை விட்டார் .அடுத்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வரும்போது நான் ,குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் உள்ளது .அதன்பிறகுதான் என் வாழ்க்கை நிலை, அரசியல் நிலை குறித்து நான்*முடிவு எடுப்பேன் என்று மக்களிடம் துணிந்து நேரடியாக வேண்டுகோள்வைத்து வாக்கு கேட்ட ஒரே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் .ஒரு பொது கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.பேசியதாவது : நான் உங்களிடம் கேட்க விரும்புவது, தாய்மார்களிடம்*கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்* நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் என்னை பதவியில் இருந்து இறக்கினார்கள்* நான் லஞ்சம் வாங்கினேன் என்று சொல்கிறார்களா, இல்லை ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா , இல்லை*இந்திரா காந்தி அம்மையார் சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்கள் .அப்போது* ஒரு வார்த்தை அதுபற்றி சொல்லவில்லை.ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் .நீதியில் நான் குறுக்கிட்டதாக சொல்கிறார்களா இல்லை. நிர்வாகத்தில் நான் தலையிட்டேனா இல்லை .என் நண்பர்களுக்கு ஏதாவது முறைகேடாக பதவிகள் ,உதவிகள் அளித்தேனா இல்லை.பின் எதற்காக நீங்கள்* வாக்களித்து**தேர்ந்தெடுத்த மந்திரிசபையை, சட்டமன்றத்தை கலைத்தார்கள் .காரணங்கள் இருந்து, நான் குற்றவாளி என்று சந்தேகித்து ,விசாரணை கமிஷன் அமைத்து,அதன்மூலம்* குற்றவாளி என்று தீர்மானித்து* அதற்கு போதிய ஆதாரங்கள் இருந்து கலைத்து இருந்தால் நான் நிச்சயமாக மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கவலைப்பட்டிருக்க மாட்டேன் .
அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா, என்மீது அன்பை காட்டிய தாய்மார்களே, பெரியோர்களே,நண்பர்களே* உங்கள்மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள் கடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்தீர்களாம் .நீங்கள் அவர்களை ஆதரித்து தேர்ந்தெடுத்து உள்ளீர்களாம்*எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாம் ஆகவே சட்டமன்றத்தை கலைத்து விட்டார்களாம் .எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதை வரும் பொது தேர்தலில் நீங்கள் வாக்களித்து பதில் சொல்லியாக வேண்டும் .நானும் தெரிந்து கொண்டாக வேண்டும் . இந்த ராமச்சந்திரன் மீது எந்த குற்றத்தையும் காணாமல் இருக்கிற நிலையில் ஆட்சியில் இருந்து இறக்கிய பிறகு ,நான் குற்றவாளி என்கிற நிலையில் இல்லாத போது* குற்ற தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட அவமானத்தில் இருந்து*விடுவிக்கப்படுவதோடு எனக்கு சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்ற வகையில்*.நான் நிரபராதியா இல்லையா என்று நிரூபிப்பதற்கு நீங்கள் வரும் தேர்தலில் அளிக்க போகும் வாக்குகள் தான் முடிவு செய்யும் , நல்ல தீர்ப்பை தரும். பேரறிஞர் அண்ணா அவர்கள் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள் .பிரச்னைகள் வரும்போது நான் மக்களை சந்திப்பேன் . ஏனென்றால் மகேசன் தீர்ப்பே மக்களின் தீர்ப்பு என்று அமரர் அண்ணா சொல்லியிருக்கிறார் .அந்த உங்களின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, தீர்ப்பை எதிர்பார்த்து ,சில காலம் காத்திருப்பேன் . ஜூன் மாதம் முதல் வாரம் இதே பவானி நகருக்கு நான் வந்து உங்களிடம் பேசுவேன் .நீங்கள் அளிக்கும் தீர்ப்பை பொறுத்துதான் ,என் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல ,தமிழகத்தில் நான் எப்படி வாழ்வது என்பது பற்றி முடிவு எடுப்பேன் என்று சொல்லி ,அனைவரும் நமது வெற்றி சின்னமாகிய இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வீர்கள், நான் நிரபராதி என்று நிரூபிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ,அண்ணா நாமம் வாழ்க, என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி ,வணக்கம் .*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.அன்று வந்ததும் அதே நிலா* - பெரிய இடத்து பெண்*
2.எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி உரையாடல் -நீதிக்கு பின் பாசம்*
3.திருவளர்செல்வியோ* - ராமன் தேடிய சீதை*
4.பாடும்போது நான் தென்றல் காற்று -நேற்று இன்று நாளை*
5.நல்ல நேரம் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.
6.எம்.ஜி.ஆர்.- எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம்நாடு*
.
-
29.8.1970
flash back.
முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போதுரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .
அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை அமைந்தது.........
-
இனிய காலை வ*ண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே.. நேற்று நாகேஷிற்கு காஷ்மீரில் புர*ட்சித்த*லைவ*ர் செய்த* உத*வியைப்ப*ற்றி ப*திவிட்டேன்..உட*னே சிவாஜி க*ணேச*ன் ரசிக*ர்க*ள் சில*ர் ந*ல்ல
க*ற்ப*னை..நான் நினைச்சேன் என்று கிண்ட*ல*டித்துள்ளன*ர். அவ*ர்க*ளுக்கான* பின்னூட்ட*மே இது..யூடியுப்க*ளில் சித்ரால*ட்சும*ண*ன் பேட்டி ம*ற்றும் நாகேஷின் நேர*டி பேட்டி ஒன்றிலும் இன்றும் தேடினால் க*ட்டாய*ம் கிடைக்கும்..
முத**லில் இந்த* விவ*ர*ங்க*ள் தின*ம*ல*ர் நாழித*ழில் க*ட்டுரை வ*டிவிலும், நாகேஷ் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியிலும் அளித்துள்ள*தை பார்த்து, ப*டித்து ப*கிர்ந்துள்ளேன். எந்த* க*ற்ப*னை விஷ*ய*த்தையும் சேர்த்து த*லைவ*ருக்கு கொடி பிடிக்க* வேண்டிய* அவ*சிய*ம் யாருக்குமில்லை. காஷ்மீரில் ஒரே நேர*த்தில் வெவ்வேறு இட*ங்க*ளில் சித்ரா ப*வுர்ண*மி, நினைத்த*தை முடிப்ப*வ*ன், நேற்று இன்று நாளை, இத*ய*வீணை ப*ட*ப்பிடிப்பு ந*டைபெற்ற*து..எம்ஜிஆரை பொருத்த*வ*ரை லோக்க*ல் ஷூட்டிங் அல்ல*து வெளிப்புற* ப*ட*ப்பிடிப்பு எதுவானாலும் த*ன்னுட*ன் ந*டிக்கும் இணை ந*டிக*ர்க*ள் முத*ல் துணை ந*டிக*ர்க*ள் வ*ரை அவ*ர்க*ளுக்கு வ*ழ*ங்க*ப்ப*டும் உண*வு, ச*ம்ப*ள*ம், பாதுகாப்பு போன்ற*வ*ற்றில் முக்கிய* க*வ*ன*ம் செலுத்துவார்..அதில் ஏதேனும் பிசிறு த*ட்டினால் அவை ச*ரிப்ப*டுத்த*ப்ப*டும்வ*ரை ப*ட*ப்பிடிப்பே ந*ட*க்காது. என*வே அவ*ர் ந*டிக்கும் ப*ட*ங்க*ளின் முத*லாளிக*ள் ம*ற்ற* ந*டிக*ர்க*ளின் விஷ*ய*த்திலும் ந*ல்ல*வித*மாக*வே ந*ட*ப்பார்க*ள்..இதில் சிவாஜி ந*டித்த சித்ரா ப*வுர்ண*மி தொட*ர்பான ச*ம்ப*வ*ம் ஆன*தால் உங்க*ளுக்கு க*ற்ப*னையாக* தோன்றுகிற*து..இதே வேறு ஒரு ப*ட*த்தின்போது ந*ட*ந்த* ச*ம்ப*வ*ம் என்றால் ந*ம்புவீர்க*ள்..
மேலும் சித்ரா ப*வுர்ண*மி ப*ட*ம் சிவாஜியின் ஆடிட்ட*ர்க*ள் த*யாரித்த* முத*ல்ப*ட*ம். என*வே அவ*ர்க*ளுக்காக குறைந்த* ச*ம்ப*ள*ம் பெற்றுக்கொண்டு சிவாஜி ந*டித்தார். மேலும் அவ*ர் ப*ட*ங்க*ளில் ந*டிக்கும் பிற* ந*டிக*ர்க*ளின் ந*டிப்பு தொட*ர்பான விஷ*ய*ங்க*ள் அன்றி பிற*ருக்கு ஏற்ப*டுத்த*ப்ப*ட்டுள்ள வ*ச*திக*ள், ச*ம்ப*ள*ம் போன்ற*வ*ற்றில் சிவாஜி த*லையிட*மாட்டார். இதுவும் அனைவ*ரும் அறிந்த*தே..
சிவாஜி, க*மலா அம்மாள் ம*ற்றும் ஜெய*ல*லிதாவிற்கு ந*ல்ல ஓட்ட*ல்க*ளிலும் பிற* ந*டிக*ர் ந*டிகைக*ளுக்கு சாதார*ண* லாட்ஜுக*ளையும் ஏற்பாடு செய்திருந்த*ன*ர் ஆடிட்ட*ர்க*ள்..நாகேஷும் ஏதோ 4 நாட்க*ளில் த*ன் ப*குதி முடிந்துவிடும் என்றே ந*ம்பி வ*ந்தார். ஆனால், த*யாரிப்பாள*ரின் சிக்க*ன* ந*ட*வ*டிக்கை, ப*ட*ப்பிடிப்பிற்கு போதிய* வெளிச்ச*மின்மை ஆகிய* கார*ண*த்தால் ப*ட*ப்பிடிப்பு தாம*த*மாகிக்கொண்டே போன*து..நாகேஷ் இய*ல்பாக*வே த*யாரிப்பாள*ரே எல்லாம் பார்த்துக்கொள்வார் என்ற* நிலையில் முன்னேற்பாடுக*ளின்றியே செல்வார். இங்கு த*லைகீழாக* போன*து. நாகேஷுக்கு ஏற்க*ன*வே இருந்த* அல்ச*ர் தொந்த*ர*வுட*ன் உண*வும் ச*ரியில்லாம*ல் போக*வே உட*ல்நிலை மோச*ம*டைந்த*து..ரூமிலேயே முட*ங்கிப்போனார்.. எம்ஜிஆருக்கு இந்த* விவ*ர*ங்க*ள் செவிவ*ழிச் செய்தியாக* வ*ந்த*து. பிற*குதான் எம்ஜிஆர் நேராக* நாகேஷ் இருந்த* லாட்ஜுக்கே உரிய* ம*ருத்துவ*ருட*ன் வ*ந்து சிகிச்சை அளிக்க* வைத்தார். ந*ல்ல* உண*விற்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார். கையில் ப*ண*ம் 30000த்தையும் கொடுத்து ப*ட*ப்பிடிப்பில் உன்ப*குதியை விரைவில் முடிக்க*ச்சொல்லிவிட்டு விமான*ம் பிடித்து விரைவில் ஊர் போய்ச்சேரும்ப*டி அறிவுறுத்தினார் எம்ஜிஆர்..மேற்சொன்ன* நிக*ழ்வு முற்றிலும் உண்மை..........( இது போன்ற பல உண்மை விடயங்களை சிலர் மறுத்து நம்பாமல் அவர்களாகவே ஆறுதல் அடைந்து கொள்கின்றதை நாமெல்லாம் அறிந்ததுதானே).........
-
#எம்ஜிஆர்_தொண்டர்கள்_நலன்
m.g.r. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டு அரசியலில் உயர்ந்தாரே தவிர, ரசிகர்களையும் தொண்டர்களையும் தனது சுயநலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்துப் போய்விடுவார். அவர்களது குடும்பம் அதிலிருந்து மீள உதவும்வரை ஓயமாட்டார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள் என்றால் அதில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வருவார்கள். ஒருமுறை மதுரையில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். கூட்டத் துக்கு வெளியூரில் இருந்து வந்த சில தொண்டர்கள், இரவு திரும்பிச் செல்லும் போது வாகன விபத்தில் பலத்த காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பு வதாக ஏற்பாடு. ஆனால், விபத்து பற்றி கேள்விப்பட்டு தனது பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். காயமடைந்த தொண்டர்களை சந்திக்க மறுநாள் காலை யில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வருவது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. திடீரென மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர். வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொண்டர் ஒருவர் படுத்திருந்த இடத் துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். படுக்கை யில் கிடந்த அந்த தொண்டரின் அருகே உதவிக்கு அவரது மனைவி மட்டும் இருந்தார். அந்தப் பெண்மணியின் கோலமே அவர்களது குடும்ப நிலை மைக்கு கட்டியம் கூறியது.
எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி, கண வனின் நிலையால் துயரம், அந்தத் துயரை சமாளிக்க தோள் கிடைத்த நிம்மதி என எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலாய் அந்தப் பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஐயா, எப்பப் பார்த் தாலும் உங்க பெயரையும் பெருமையை யும் சொல்லிக் கொண்டிருப்பாரய்யா. அவருக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று சொல்லிக் கதறினார். கிழிந்த ஆடை யுடன் பரிதாபமாகக் காட்சி அளித்த அந்தப் பெண்மணியின் கதறலைக் கண்டு எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின.
‘‘கவலைப்படாதே அம்மா. உன் கணவருக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். நான் இருக்கிறேன்’’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்டில் இருந்த டாக்டரிடம் தொண்டரின் உடல் நிலை குறித்து விசாரித்து, அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரிடம் பேசிவிட்டு அந்த தொண்டர் படுத்திருந்த கட்டில் அருகே சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தலையைத் தடவிக் கொடுத்து கையை இறுகப் பற்றி, ‘‘நீ எதுக்கும் கவலைப்படாதே. டாக்ட ரிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நீ வீடு திரும்பலாம். தைரிய மாய் இரு’’ என்றார். தனது அபிமான தலைவர் தன் கையைப் பிடித்து பேசு வதைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் பதில்கூட சொல்லமுடியாமல், அந்த தொண்டரின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அந்தத் தொண்டர் உட்பட காயமடைந்த தொண்டர்களின் உடல்நலம் தேறும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும்போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.
முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்துபோன தொண் டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.
சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்து போன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கைபோட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்த னர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள் வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!
அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். ஆறுதலாய் பேசினார். அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!
எம்.ஜி.ஆர். நடித்த ‘புதியபூமி’ திரைப் படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அந் தப் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் சூப்பர் ஹிட் பாடல் இது…
‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை!’
அதிமுகவின் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர்.தான். கட்சியின் பெயரி லும் கொடியிலும் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கியத் துவம் அளித்தார். கட்சி உறுப்பினர் அட்டையிலும் தனது படத்தைவிட அண்ணாவின் படமே பெரிதாக இருக்கும்படி செய்து, தலைவரை மதிக்கும் தொண்டர் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்தார்!.........
-
1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் "நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது" என பொதுவாக சொன்னார்
நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் "கீலாசேபம்" என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்
ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.
அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது, அது தீவிரமாகவும் நடந்தது , வாரியாரின் தாக்குதல் முன் பேரறிஞன் பதுங்கினார்
அதே நேரம் மணியம்மையுடன் ராம்சாமி இரண்டாம் திருமணம் , ராம்சாமியுடன் மனகசப்பு என காட்சிகள் வந்ததால் டிராக் மாற்றினார் அண்ணா
வாரியார் சுவாமிகள் தன் இயல்பில் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார், அவ்வப்போது திமுக வாரியார் மோதல் நடந்து கொண்டே இருந்தது
வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்காமல் தன் அடிபொடிகள் மூலம் எழுதி தாக்கி கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.
1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் , அப்பொழுது வாரியார் சுவாமிகள் நெய்வேலி பக்கம் ஆன்மீக கூட்டங்களில் பேசினார் அப்பொழுது "கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது, மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது" என்றுதான் பொதுவாக சொன்னார்
ஆனால் அவர் அண்ணாதுரையினை சொல்லிவிட்டார் என திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர், மக்கள் கூட்டம் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டது, காயமின்றி வாரியார் தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன*
ஆம், அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள் விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் , ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது.
அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல*
வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு
விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தது, வாரியாருக்கு இருந்த மிகபெரும் நற்பெயரை தமிழகம் கண்டது, மக்கள் அபிமான கிருபானந்தர் திமுகவினரால் தாக்கபட்டது மிகபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திற்று
ராஜாஜி மனம் வருந்தி எழுதினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்
முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்
ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.
நிலமை எல்லை மீறி சென்றதை அவதானித்த கருணாநிதி அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த mgr சரியாக பழிவாங்கினார்
ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்
ஆனால் அதுதான் அவரின் வாழ்வில் மிகபெரும் தவறு, கடைசிவரை அவர் தலையில் அடித்து அடித்து அழுத தவறு,
தெய்வத்தின் தண்டனை அப்படி சரியாக இருந்தது.
வாரியாரை நேரில் சந்தித்து உண்மையினை விளக்கினார் mgr, வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக* தலைவர் அவர்தான், அப்பொழுதுதான் அவரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார்
அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் mgr, அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது
வாரியாரால் mgr ஆசீர்வதிக்கபடும் காட்சியே mgrக்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது
"பொன்மன செம்மல்" என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே ராமசந்திரனுக்கு அடையாளமாகி, மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது
சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு ரmgr மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது, அத்தோடு போலி நாத்திக அடையாளம் இங்கு ஒழிய ஆரம்பித்தது
அதன் பின்பே அம்மா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார், இன்று முதல்வர் பழனிச்சாமி அனுதினமும் தான் ஒரு இந்து என்பதை பகிரங்கமாக சொல்கின்றார்
வாரியாருடன் மோதியதில்தான் திமுகவின் அழிவு தொடங்கிற்று, முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்
ஆம் வாரியார் மேலான தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை, முருகபெருமானின் அடி அப்படி இருந்தது
வரலாற்றின் மிக பெரிய சான்று இது, ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் கோவில் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட பெரும் வரலாறு அது
அந்த தோல்விதான் கந்த சஷ்டி கவசம் வரை திமுகவின் முதுகில் சாத்தி கொண்டிருக்கின்றது, இன்னும் சாத்தும்
இப்பொழுது முருகனுடன் பிள்ளையாரும் சேர்ந்து திமுகவினை சாத்த தொடங்கியிருக்கின்றார்
(இன்றுவரை வாரியார் தாக்கபட்டதற்கு திமுக தரப்பில் விளக்கமுமில்லை, மன்னிப்பு கோரவுமில்லை )........
-
திருமிகு .
*கிருபாணந்த*
*வாரியார்*
ஏற்பாட்டில்*
கட்டப்பட்டுவந்த *முருகன் கோவில் ஒன்றின்* *திருப்பணிக்காக*
*புரட்சித் தலைவர்*
*எம். ஜீ. ஆரை சந்தித்து*
*நன்கொடை கேட்க* *வந்தார் வாரியார்.*
*புரட்சித் தலைவர், உடனே "பிளாங்க் செக்" ஒன்றினை வாரியாரிடம் கொடுத்தார்.*
பிளாங்க் செக்கை பார்த்த வாரியார்
*தொகை எதுவும் எழுதாமல் தருகிறாரே ?*
என *வியப்புடன்*
*எம். ஜீ. ஆர் முகத்தை பார்த்தார்!*
அப்போது வாரியாரிடம்
எம்ஜிஆர்,
*நான் எவ்வளவு தொகை என எழுதாமல் பிளாங்க் செக் தந்தது ஏன் என நினைக்கிறீர்களா ?*
*என்னை தேடி உதவி கேட்டுவந்த, நீங்கள்*
*மக்களுக்கு நல்ல ஒழுக்கமான விசயங்களை சொல்லி வரும் உண்மையான ஆன்மீக வாதி*
*என்பது எனக்கு தெரியும்.*
*நீங்கள் என்னிடம் உதவி கேட்டு வந்த பின் ,வேறு யாரிடமும் சென்று சிரமப்பட கூடாது.*
*"நீங்கள் கட்டும் ஆலயத்துக்கு*
*உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ"*
*அவ்வளவு தொகையையும் எனது வங்கி கணக்கில் இருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்*
*அதற்காக தான் பிளாங்க் செக் தருகிறேன்*
*மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லி கொடுத்து அவர்களை நல்லவர்களாக மாற்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்*.
என கூறியதை கேட்டதும் வாரியார் ஆச்சரியமடைந்து நன்றி கூறினார்.
*(வாரியார் பேரன்* *சொன்ன தகவல்*)
------------
*சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் வாரியார்*
, காரணம்
*அவர் மதவாதியல்ல*
*உண்மையான*
*ஆன்மீக வாதியாக வாழ்ந்து மறைந்தவர்*
mgr tv ஹமீது.........
-
"கண்ணன் என் காதலன்" 1968 ஏப் மாதம் 25 ம் தேதி வெளியான சத்யா மூவிஸாரின் மூன்றாவது படம்.
முதல் படம் "தெய்வத்தாய்" இரண்டாவது படம் "நான் ஆணையிட்டால்". இரண்டு நாயகிகளில் ஒருவர் ஜெயலலிதா மற்றவர் வாணிஸ்ரீ. எற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட்டான "குடியிருந்த கோயில்" வெளியாகி 40 நாளிலே வெளியான படம்.
நாங்கெல்லாம் "குடியிருந்த கோயில்" பார்த்த வியப்பே இன்னும் அடங்காமல் இருக்கும் போது "கண்ணன் என் காதலன்" உடனடி வரவை அவ்வளவாக விரும்பவில்லை. அது "குடியிருந்த கோயிலி"ன் வெற்றியை பாதிக்கும் என்று நினைத்து ஒதுங்கி இருந்தோம். "குடியிருந்த கோயில்" ஓடாமலிருந்தால் "கண்ணன் என் காதலன்" ஒரு சில ஊர்களில் 100
நாட்கள் ஓடியிருக்கும்.
இருப்பினும் தமிழகத்திலேயே அதிகமாக மதுரை சிந்தாமணியில் 93 நாட்கள் ஓடி ரூ 2,07,112.60. வசூலாகி கணேசனின் பல 100 நாட்கள் படங்களை துவம்சம் பண்ணியிருந்தது. கர்ணன், ராமன் எத்தனை ராமனடி, என் மகன்,மோட்டார் சுந்தரம் பிள்ளை இன்னும் நிறைய சிவாஜி படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
சிங்கம் குட்டியாக இருந்தாலும்
சிங்கம் சிங்கம்தானே.
அடுத்து ஜீலை 27 ல் வெளியான "தில்லானா மோகனாம்பாளு"க்காக படத்தை எடுத்து விட்டார்கள். "தில்லானா" ஒரு வாரம் லேட்டாக வந்திருந்தால் நிச்சயம் "கண்ணன் என் காதலன்" 100 நாட்கள் ஓடியிருக்கும்.
மேலும் 60 நாட்களிலே அடுத்த படமான "புதியபூமி" ஜீன் 27 ல் வெளியானதால் அதுவும் படத்தின் நீடித்த ஓட்டத்தை தடை செய்தது.
தூத்துக்குடியில் "குடியிருந்த கோயில்" ஓடிய அதே பாலகிருஷ்ணா தியேட்டரில்தான் வெளியாகியது கண்ணன் என் காதலன். அதனால் ரிலீஸ்
தேதிக்கு வெளியாகவில்லை..
"குடியிருந்த கோயில்" 70 நாட்கள் ஓடிய பிறகு "பணமா பாசமா" வை திரையிட்டார்கள்.
அதுவும் 71 நாட்கள் ஓடிய பிறகுதான்
அதே திரையரங்கில் "கண்ணன் என் காதலன்" வெளியானது. தலைவரின் அடுத்த. படமான புதியபூமி. ஜீன்27ல்.
வெளியாகி காரனேஷனில் ஓடிக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு மேல் லேட் ரிலீஸ். ரசிகர்கள் நெல்லையில் சென்று பார்த்ததால் படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைந்து காணப்பட்டது. திருநெல்வேலியில் ஏப் 13 ல் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த "கலாட்டா கல்யாண"த்தை 13 நாளில் தூக்கி விட்டு "கண்ணன் என் காதலனை" திரையிட்டார்கள். சென்னையில் ஸ்டார் பிரபாத் மேகலா நூர்ஜஹானில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்கள் ஓடி (மொத்தம் 224 நாட்கள்) நல்ல வசூலுடன் திரை மாற்றம் செய்யப் பட்டது. மொத்தத்தில் "கண்ணன் என் காதலன்" சத்யா மூவிஸுக்கு முதல் ரவுண்டிலேயே லாபத்தை கொடுத்த
தொடர் வெற்றிப்படமாக அமைந்தது.
நெல்லையில் அதன்பின் "கலாட்டா கல்யாண"த்தை தொடர்ச்சியாக ஷிப்டு பண்ண முடியாமல் "குடியிருந்த கோயில்" பார்வதியில் ஓடி முடித்தபின் மீண்டும் திரையிட்டார்கள் என்றாலும் "கலாட்டா கல்யாணம்" ஓடிய கணக்கு நெல்லையில் 13 நாட்கள்தான். 1968 தலைவருக்கு ஒரு திரைத்திருவிழாதான்.
அந்த ஆண்டு முழுவதுமே தலைவர் படம் ஏதாவது ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டேயிருந்தது ரசிகர்களுக்கு ஒரு இன்பத்திருவிழா
என்றே சொல்லலாம். மீண்டும் கிடைக்குமா அது போல் ஒரு வசந்த காலம். ஆனால் கணேசனுக்கு சக நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பால் ஓடிய தில்லானாவை தவிர மீதி எல்லா படங்களுமே அவரது ரசிகர்களுக்கு கசந்த காலம்தான்..........
-
எம்.ஜி.ஆர்., போல மனிதாபிமானி யாருமில்லை!
எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கணேசன் பற்றி, அவர்களுடன் சின்னக் குழந்தையாக நடித்துள்ள, குட்டி பத்மினி:
எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கூட, நிறைய படங்களில் நடித்துள்ளேன். எம்.ஜி.ஆர்., நடிக்கும் படத்தின் ஷூட்டிங் என்றால், யாருக்கும் வயிறு காயவே செய்யாது. தடபுடல் விருந்து தான் நடக்கும்.
அவர் நடிக்கும் படத்தின் இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் போது, லைட் பாய் முதல், படத்தின் துணை இயக்குனர் வரை, அனைவருக்கும் சம்பளம் சென்றடைந்து விட்டதா என, அவருக்கு நெருக்கமான நபரிடம், கண் பார்வையில், கண்ணை அசைத்து கேட்பார்.
இல்லை, கொஞ்ச பேருக்கு பாக்கி இருக்கிறது என தெரிய வந்தால், கிளைமாக்ஸ் காட்சியை நடித்து கொடுக்காமலேயே, காரில் ஏறி கிளம்பி போய் விடுவார். உடனே, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு புரிந்து விடும். 'யாரோ நம்மை போட்டுக் கொடுத்து விட்டனர்' என்பதை அறிந்து, சம்பள பாக்கியை செட்டில் செய்வார். அதை அறிந்ததும், மீண்டும் படப்பிடிப்பில், எம்.ஜி.ஆர்., கலந்து கொள்வார்.
அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது, பை நிறைய பணத்துடன் அவரின் அசிஸ்டென்ட், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருப்பார். அங்கே இருக்கும் ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன் என, யாருக்காவது பணக்கஷ்டம் என்றால், அசிஸ்டென்ட் இடம் வாங்கி கொடுப்பார்.அந்த அளவுக்கு மனிதநேயம் மிக்க ஒருவரை, நான் இதுவரை பார்த்ததே இல்லை.
'பங்சுவாலிட்டி' எனப்படும் நேரம் தவறாமைக்கு, சிவாஜி கணேசன் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு, நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். 7:00 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6:00 மணிக்கே, ஸ்பாட்டிற்குள் நுழைந்து விடுவார். படத்தின் காட்சிக்கு ஏற்ப, மேக்கப் போட்டு, 7:00 மணிக்கு தயாராக இருப்பார்.
படப்பிடிப்புக்கு இடையே ஓய்வு நேரத்தில், என் அருகே வந்து உட்கார்ந்து கொள்வார். பக்கத்து செட்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் - நடிகையர் பற்றி ஆர்வமாக கேட்பார். யார் யாருடன் சண்டை போட்டனர்; என்ன கிசுகிசு என்பதை கிண்டலாக கேட்பார். நானும், சின்னப் பிள்ளையாக இருந்ததால், அந்த ஹீரோயின், அந்த ஹீரோவிடம் இப்படி சண்டை போட்டார்; அதற்கு அவர் இப்படி பதிலளித்தார் என, நடந்ததை நடந்தபடி அப்படியே சொல்வேன்.
நான் சொன்ன நடிகர் - நடிகையருடன் இணைந்து அவர் நடிக்கும் காட்சிகள் வரும் போது, அந்த கிசுகிசு விஷயங்களை சொல்லி, அவர்களை கிண்டல் செய்வார்; செட்டே கலகலப்பாக இருக்கும்!✌✌.........
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வுகளில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை அவர் ஒருவருக்கே கிடைத்துள்ளது .
1988 முதல் 2019 எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பெருமைகள் - சாதனைகளின் சிகரம் .
1988ல் மத்திய அரசின் ''பாரத ரத்னா '' விருது .
மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம்.
மெரினாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம் .
மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தூண்.
அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலை
எம்ஜிஆர் நினைவு இல்லம் .
ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம் . சென்னையில் எம்ஜிஆர் ஆலயம்.
சென்னை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன் .
சென்னை - கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் .
சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டி .
சென்னை - எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம் .
சென்னை - மாதவரம் எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகம் .
சென்னை போரூர்- பூந்தமல்லி எம்ஜிஆர் சாலை .
எம்ஜிஆர் ஸ்டாம்ப் வெளியீடு .
எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
1989ல் ஒன்று பட்ட அதிமுக - இடைத்தேர்தலில் வெற்றி.
1989ல் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி .
1991ல் அதிமுக ஆட்சி .
2001ல் அதிமுக ஆட்சி.
2011ல் அதிமுக ஆட்சி .
2016ல் அதிமுக ஆட்சி .
2019ல் அதிமுக ஆட்சி தக்க வைத்தது .
2000ல் ராஜ் டிவி நடத்திய 2000ல் ஒருவன் - எம்ஜிஆர் நிகழ்ச்சி .
2016ல் விஜய் டிவி நடத்திய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் நிகழ்சி .
பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை .
எம்ஜிஆர் புகழ் பாடும் இதயக்கனி மாத இதழ்.
எம்ஜிஆர் புகழ் பாடும் எம்ஜிஆர் தொடர் விழாக்கள் .
ஆல்பர்ட் அரங்கில் நடந்த நாடோடிமன்னன் விழாவில் பங்கு பெற்ற முன்னணி அந்த கால நடிகர்கள் - நடிகைகள் .
கலைஞர் டிவி நடத்திய மறக்க முடியுமா ? எம்ஜிஆர் சிறப்பு ஒளி பரப்பு .
டிஜிட்டல் - ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் வெள்ளிவிழா .
டிஜிட்டல் - அடிமைப்பெண் 300 அரங்கில் வெற்றி பவனி .
டிஜிட்டல் - ரிக் ஷாக்காரன் .
டிஜிட்டல் - நினைத்ததை முடிப்பவன் .
டிஜிட்டல் - எங்கவீட்டுப்பிள்ளை . டிஜிட்டல் ரகசிய போலீஸ் 115,
எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் - கோவை .
2வது இடம் - மதுரை . 3வது இடம் - சென்னை .
எம்ஜிஆரின் 73 பழைய படங்கள் மறு வெளியீடுகளில் வெற்றி பவனி தொடர்கிறது.
புதிய தமிழ் படஙக்ளில் எம்ஜிஆர் பாடல்கள் - எம்ஜிஆர் காட்சிகள் இடம் பெற்றது .
திரை உலக பிரமுகர்கள் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகிறார்கள் .
ஜெயா டிவியில் தினமும் எம்ஜிஆர் பாடல்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள் .
உலகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .
திராவிடர் கழகம் - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது .
மதிமுக வைகோ - காமராஜர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார் .
வேலூர் வி ஐ டி கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் உலக பேரவை மாநாடு வேல்ஸ் வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் சிலையை ஏ.சி. சண்முகம் நடிகர் ரஜினி வைத்து எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகத்தில் திறந்தார் .
பி ஆர் ஓ -பொன்விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்ஜிஆரை பாராட்டிய நடிகர்கள் - நடிகைகள் .
டிஜிட்டலில் வெளிவர தயாராக உள்ள எம்ஜிஆர் படங்கள் அன்பே வா , அலிபாபாவும் 40 திருடர்களும் , மாட்டுக்கார வேலன் . குறிப்பாக காவல்காரன் படம் வண்ணத்தில் உருவாக உள்ளது .
டாக்டர் பெரியசாமி - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
டாக்டர் ஹண்டே - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
இந்து பத்திரிகை வெளியிட்ட காலத்தை வென்ற எம்ஜிஆர் புத்தகம் . 25000 புத்தகங்கள் விற்று சாதனை .
பம்மல் சாமிநாதன் வெளியிட்ட எம்ஜிஆர் பட ஆல்பம் .
சத்யா வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் ,
31 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் .
பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமயில் நடிகை சௌகார் ஜானகி ஜானகி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
பெங்களூரில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
சமூக வலை தளங்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் வகிக்கிறது .
வல்லமை - இனணய தளத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி - மிகவும் அருமை .
எம்ஜிஆர் - remembered தொடர் கட்டுரை 7 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது .
தமிழகத்தில் எல்லா ஊடகங்களும் ,பத்திரிகைகளும் எம்ஜிஆர் -100 சிறப்பித்தார்கள் .
அமெரிக்கா , இங்கிலாந்து , சவூதி ,மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் எம்ஜிஆர் -100 கொண்டாட்டம் .
மய்யம் இணைய தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் விரைவில் ஒரு லட்சம் பதிவுகளை கடக்க போகிறது .
எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலை முறைகள் கடந்து புதிய தலை முறை எம்ஜிஆர் ரசிகர்களளோடு இணைந்து எம்ஜிஆரை நேசித்து கொண்டாடி வருகிறார்கள் .
டிஜிட்டல் -எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரையிட தயார் நிலையில் உள்ளது.
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் பெயர் சுழன்று கொண்டு வருகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை ஒட்டு வங்கி நிலைத்து விட்டது .
எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 2022ல் பொன்விழாவை நிறைவு செய்கிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் வெற்றி . இன்றும் வெற்றி . என்றென்றும் வெற்றி.........