Originally Posted by Avadi to America
http://www.rajinifans.com/detailview.php?title=1118
‘தனிக்காட்டு ராஜா’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தது. அப்போ கன்னட சினிமா புரொடியூஸர் ஒருத்தர், ரஜினிகிட்டே ரொம்ப நேரமா பேசிக்கிட்டே இருந்தார். அவர் ஏதோ சொல்ல, ரஜினி மறுத்துக்கிட்டே இருந்தாரு. ஒரு கட்டத்துல ரஜினி, ‘மகேந்திரன், இவர் என்ன சொல்றாருன்னு கேளுங்களேன்’னார்.
‘சார், ‘தெய்வ மகன்’ படத்தை கன்னடத்துலே பண்ணலாம்னு இருக்கேன். அந்த மூணு கேரக்டரையும் ரஜினிதான் பண்ணணும்னு சொல்றேன். சம்மதிக்க மாட்டேங்கிறார்’னு அவரு சொன்னதும், எனக்கு சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு.
‘ஏங்க, சிவாஜி சாரை விட்டா வேற எவனாலேயும் அந்த கேரக்டரைப் பண்ண முடியாது... இதுகூடவா உங்களுக்குத் தெரியலை?’னு ஆவேசமா கேட்டுட்டேன்.
உடனே, ‘நீங்க இப்படித்தான் பதில் சொல்லணும்னு எதிர்பார்த்தேன் மகேந்திரன். நீங்க சொன்னது ரொம்பச் சரி’னு பாராட்டினார்.
....
ஒருநாள் ராத்திரி என் வீட்ல உட்காந்து நானும் ரஜினியும் சினிமாவைப்பத்தி பேசிக்கிட்டிருந்தோம். ‘அடுத்து எது மாதிரி கேரக்டர் பண்ணினா நல்லா இருக்கும்?’னார் ரஜினி. ‘உயர்ந்த மனிதன்’ படத்துல சிவாஜி செய்த கேரக்டர் நல்லாயிருக்கும்’னேன். ‘அப்படியா? நான் இப்பவே உயர்ந்த மனிதன் படத்தை பார்க்கணும்’னார். அப்ப சி.டி., வீடியோ கேசட் எல்லாம் கிடையாது. தியேட்டருக்குக் கிளம்பினோம். லதாவும், என் மனைவியும் எங்ககூடப் புறப்பட்டாங்க. நாலு பேரும் பாரகன் தியேட்டர்ல செகண்ட் ஷோ பார்த்தோம்.
படத்தை ஆர்வத்தோடு பார்த்து முடித்த ரஜினி, தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது, ‘சிவாஜி ஒரு பிறவி நடிகர். அவர் மாதிரியெல்லாம் நடிக்கிறேன்னு சொல்லி என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. சிவாஜி படங்களை பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மட்டும் நான் இருக்கவே விரும்புகிறேன். அவரது புகழுக்கும் திறமைக்கும் களங்கம் விளைவிக்க மாட்டேன்...’ என்று சொன்னார். கடைசி வரையில் சிவாஜியை ஒப்பிடமுடியாத ஒப்பற்ற கலைஞராகவே போற்றி வருகிறார் ரஜினி.
......
ஆரம்பத்துல சத்ருகன் சின்ஹாவை ஃபாலோ பண்ணியிருக்கார் ரஜினி. அப்புறம் ஆக்ஷனும் காமெடியும் கலந்து பண்ணும்போது, அமிதாப்பை கவனிச்சுப் பார்த்திருக்காரு. படத்தோட கேரக்டரை நல்லா ஸ்டடி பண்ணுவார். அப்படித்தான் ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்காக ஏவி.எம்-மில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில் சிவாஜி சார் நடிச்ச ‘தெய்வப் பிறவி’ படத்தைப் பார்த்து பாடி லாங்வேஜை ஃபாலோ பண்ணினார்.
இப்ப லேட்டஸ்ட்டா நடிக்கிற ரஜினியைவிட ‘எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன்’ படத்துல நடிச்ச பழைய ரஜினியைத்தான் நான் ரசிச்சு பார்ப்பேன். இன்னிக்கு அவரை பெரிய ஸ்டார் ஹோட்டல்லதான் தங்க வைக்கிறாங்க. ஆனா, என்கூட தங்கினா தரையில துணியை விரிச்சு போட்டுத்தான் தூங்குவாரு.
-சங்கநாதன்