Originally Posted by aanaa
மூஷிக வாகனம்
பெருச்சாளி எதையும் குடைந்து வழி ஏற்படுத்திக் கொள்ளும். குண்டலினி யோகத்திலும், மூலாதாரத்தை அடைய வழி ஏற்படுத்தும் ஒரு ஆற்றலாகவே மூஷிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிஷப வாகனம்.
காளை மாடுகள் வயல் வெளிகளில் ஓயாது உழைத்து உற்பத்தியான தானியங்களின் பயனை நமக்கு அளித்துவிட்டு,
நாம் ஒதுக்கும் உமி, தவிடு, தோல், வைக்கோல் முதலிய பகுதிகளையே தன் உணவாகக் கொண்டு மகிழ்கிறது.
உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் அத்யந்த விருப்பம். இதனை உணர்த்தவே சிவனும் சக்தியும் காளை வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்
மயில் வாகனம்.
மயில் தோகை விரித்தாடும் போது’ஓம்’கார வடிவில்
காட்சி தரும். தான் பிரணவத்தின் வடிவானவன் என்பதை
உணர்த்தவும் முருகன் மயிலைத் தன் வாகனமாகக் கொண்டிருக்கிறான்.
ஆட்டுக்கிடா வாகனம்
ஆடு, அறியாமையின் சின்னமாகும். கடவுள் திருமுன்னர் அறியாமை அடங்குகிறது என்பதே இவ்வாகனத்தின் உட்கருத்து. ஆட்டுக்கிடா வாகனம் முருகனுக்கே உரிய சிறப்பு வாகனம்.
நாக வாகனம் (சேஷ வாகனம்)
மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி,
சுருண்டு மண்டலமிட்டுப் படுத்திருக்கும் பாம்பு போலத் தோன்றும். குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல் நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே வாகனமாகவும் ஆகிறது.
ஹம்ஸ வாகனம்.
கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை ‘ஹம்ஸம்’ என்பர்.அன்னப் பறவை ,
நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் திறமை படைத்தது.
அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.
கருட வாகனம்
அத்தகைய ஆற்றல் மிக்க கருடனை, காக்கும் கடவுளாகிய திருமால் தமது ஊர்தியாகக் கொண்டுள்ளார்.
குதிரை வாகனம்
எண்ணற்ற ஆசைகளே குதிரைப்படையாகும். அவற்றை நன்னெறிப் படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப் படைத் தலைவி.
காமதேனு வாகனம்.
காமதேனுவின் உடலில் அனைத்து தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம். சத்வகுணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. அடியார்களின் விருப்பங்களை அவள் நிறைவேற்றி வைக்கிறாள். இக்கருத்தை உணர்த்தவே அம்பிகை, காமதேனுவையும் ஊர்தியாகக் கொண்டிருக்கிறாள்.
கஜவாகனம்
மயில் போன்று, யானையும் தன் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினவுபடுத்துகிறது.
காக்கை வாகனம்.
காக்கையிடம் ஒற்றுமைக் குணம் உண்டு. அது பேதம் பார்ப்பதில்லை. அதே போல், அதன் செயல்களுக்காக அதனை விரும்புவோரும் உண்டு. வெறுப்பவறும் உண்டு.
போற்றலும் தூற்றலும் இரண்டுமே காகத்திற்கு உண்டு.
சனி பகவானுக்கும் அப்படித்தான்.
சிம்ம வாகனம்.
தனது கர்ஜனையினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமையும், கம்பீரமும், யாரும் எளிதில் அண்ட முடியாத வீரமும் உடையது சிம்மம். அதே நேரத்தில் தருமம் தவறாதது.
பசியில்லாத வேளையில் வீணாக வேட்டையாடி பிற உயிர்களை மாய்க்காது. அம்பிகை, தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்திடவே சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.
புலி வாகனம்.
ஐம்புலன்களும் சீறிப்பாயும் அடங்காத புலியைப் போன்றவை.
பிரம்மச்சாரியான ஐயப்பன், புலி வாகனத்தில் ஏறிவந்து அடங்காப் புலன்களை அடக்கும் நெறியினை உணர்த்தினார்.