http://i45.tinypic.com/30adf6a.jpg
Printable View
Thanks to Mr. Chandran Veerasamy
" தியாகராய நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.
இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
Makkal Thilagam MGR Rare Unseen Pictures 2
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
= சந்திர மவுலி எழுதிய , ' நான் நாகேஷ் ' நூலிலிருந்து .
மக்கள் திலகத்துடன் நடித்த இதர நடிகைகள் - நிழற்பட பட்டியல் தொடர்கிறது.
பொன்மனசெம்மலுடன் நடிகை வைஜயந்திமாலா
http://i48.tinypic.com/c2c7p.jpg
மக்கள் திலகத்துடன் நடித்த இதர நடிகைகள் - நிழற்பட பட்டியல் தொடர்கிறது.
பொன்மனசெம்மலுடன் நடிகை கீதாஞ்சலி
http://i47.tinypic.com/2w7o4zl.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலுடன் நடிகை சௌகார் ஜானகி
http://i46.tinypic.com/2epsjeh.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலுடன் நடிகை லட்சுமி
http://i50.tinypic.com/hs2xzt.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலுடன் நடிகை B.S. சரோஜா
http://i47.tinypic.com/mw4cvs.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலுடன் நடிகை சந்திரகலா
http://i45.tinypic.com/28hq0s0.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
திரு ஆறுமுகம் மற்றும் ஜாலி இவர்கள் இருவரும் விழா
ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர் இவர்களுக்கு
உரிமைக்குரல் மாதஇதழ் ஒத்துழைப்பு நல்கியது
விழாவில் மிகவும் இனிமையான இன்னிசை நடைபெற்றது ,புகைப்பட கண்காட்சி தலைவரின் பல்வேறு
தோற்றங்கள் ,1000 பேருக்குமேல் அறுசுவை விருந்து ,
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் தலைவரின் கேடயம் வழங்கப்பட்டது ,மக்கள் கூட்டம் நிரம்பியது
விழா காட்சிகள் உங்கள் பார்வைக்கு
http://i46.tinypic.com/nxomqg.jpg