THANKS RAVINDHRAN SIR .
VERY NICE PICS 1974 & 2014 ANDRUM INDRUM .
http://i62.tinypic.com/1o2bdz.jpg
Printable View
THANKS RAVINDHRAN SIR .
VERY NICE PICS 1974 & 2014 ANDRUM INDRUM .
http://i62.tinypic.com/1o2bdz.jpg
THANKS VELLORE RAMAMOORTHI SIR
KANCHEEPURAM - BALASUBRAMANIYAM THEATER
NOW RUNNING
MAKKAL THILAGAM MGR IN ''PATTIKATTU PONNAYA''- DAILY 4 SHOWS
http://i60.tinypic.com/24ky6ht.jpg
இனிய நண்பர் ராமமூர்த்தி சார்,
முதற்கண் என்னுடைய வணக்கங்கள்
திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் இரண்டு திரைப்படங்களின் வசூலையும் விட பறக்கும் பாவை வசூல் அதிகம் என்று காட்டும் ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் பார்வைக்கு பதிவிட்டமைக்கு நன்றி !
அடுத்த முறை ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் அடிக்கும்போது கீழ்கண்ட logical points இன்னும் திறமையாக கையாள அறிவுரயுங்கள். அப்போதுதான் ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் கூட உண்மையாக தெரியும்.
ஓடிய நாட்கள் மற்றும் வசூல் தொகை வித்தியாசம் ஒரே நுழைவு கட்டணமாக இருக்கும்பட்சத்தில் , 2) ஒப்பீடு செய்யும் படம் முதலியன.
31 நாட்களில் பறக்கும் பாவை இந்த வசூல் உண்மையிலேயே பெற்றிருந்தால் அல்லது அந்த திரை அரங்கில் ஒப்பிட்ட சரஸ்வதி சபதம், திருவிளையாடல் வசூலை ( நோட்டீஸ் இல் அச்சடித்த அந்த வசூல் உண்மையாக இருந்தால் ) விட அதிகம் 31 நாட்களில் பெற்றிருந்தால், அந்த இரு படங்கள் போல அதிக நாட்கள் ஓடியிருக்கும் என்பது இதை பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.
காரணம் வசூல் அதிகபட்சம் என்ற நிலையில் திரை அரங்கு உரிமையாளரே பறக்கும் பாவை 31 நாட்களில் தூகியிருக்க மாட்டார் !
அல்லது திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் திரைப்படம் திரையிட்ட திரை அரங்குகளின் நுழைவுகட்டணம் பறக்கும் பாவை திரையிட்ட அரங்கின் நுழைவு கட்டணத்தை விட சரி பாதியாக குறைந்து இருந்தால் தான் இது சாத்தியமாகும் !
நடிகர் திலகம் அவர்கள் படங்கள் ஒப்பீடு செய்யப்பட்ட நோட்டீஸ் பதிவிட்டதால்தான் நான் இங்கு என் எண்ணங்களை பதிவிட்டேன் என்பதை தாழ்மையுடன் கூறிகொள்கிறேன். தயவு செய்து தவறாக கருதவேண்டாம். எந்த கருத்து மோதல்களுக்கும் நான் இங்கு பதிவிடவில்லை.
Regards
rks
அழகு, அருமை நிறைந்த தங்களுடைய பதிவிற்கு நன்றி திரு. ராமமூர்த்தி சார். இந்த திரையரங்கில் புரட்சித்தலைவரின் பல படங்கள் வெளியாகி உள்ளன. அதைத் தாங்களே பல முறை பதிவிட்டுள்ளீர்கள். அந்த திரையரங்கம் மூடப்படுவது மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
WISH U HAPPY FRIENDSHIPDAY
http://i1170.photobucket.com/albums/...ps6fa1e3c8.jpg
http://www.oocities.org/vijayalakshm...koondukili.jpg
Wish all our friends here a long and happy and prosperous future on this auspicious day of FRIENDSHIP DAY
FRIENDSHIP DAY
http://i60.tinypic.com/331lr3c.jpg
‘எனக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – இன்னல்கள் – இடையூறுகள் ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
அது யாதெனில் –
ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்! "
- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் ' தொடரிலிருந்து
புதையல்....புதையல்....புதையல்....
பொக்கிஷம்....பொக்கிஷம்....பொக்கிஷம்...
மனோகரா...மனோகரா...மனோகரா...
http://i61.tinypic.com/hulvdg.jpg
http://i61.tinypic.com/64gfwx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia