தீபாவளி அன்றும் , தீபாவளிக்கு முன்பு அல்லது பின்பு வந்த மக்கள் திலகத்தின் படங்களை முதல் நாளில் பார்த்து
மகிழ்ந்த அந்த இனிய தீபாவளி நாட்களை எண்ணி பார்க்கிறேன் .
எனக்கு நினைவு தெரிந்து தீபாவளி அன்று பார்த்த முதல் படம் ''பறக்கும் பாவை '' - 1966
வேலூர் - அப்சரா அரங்கில் பார்த்தேன் . ஏராளமான நட்சத்திர பட்டாளம் . சர்க்கஸ் காட்சிகள் - இனிய பாடல்கள்
சண்டை காட்சிகள் .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகளில் அவருடைய
ஸ்டைல் என்னை மேலும் தீவிர ரசிகனாக மாற்றி விட்டது .
''விவசாயி ''- 1967 தீபாவளி
திருவண்ணாமலை - அன்பு திரை அரங்கில் பார்த்தேன் . கேட்கவா வேண்டும் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில்
மனதை பறிகொடுத்து எம்ஜிஆரின் மீது அளவு கடந்த பற்று வைக்க ஆரம்பித்தேன் .
''காதல் வாகனம் ''- 1968
வேலூர் - கிரவுன் அரங்கில் பார்த்தேன் . மக்கள் திலகத்தின் சாட்டை சுழற்றும் போஸ் - போஸ்டரில் மின்னியது .
மக்கள் திலகம் திலகம் ஆங்கிலோ பெண்மணியாக போட்ட வேடம் மறக்க முடியாது .மிகவும் ரசித்து பார்த்த படம் .
'நம்நாடு'' -1969
திருவண்ணாமலை - மீனாக்ஷி
மறக்க முடியாத தீபாவளி . எம்ஜிஆர் என்ற இமயத்தின் மீது தீவிர பற்றும் பாசமும் உண்டாகிவிட்டது நம் நாடு
படம் . என்ன ஒரு பிரமாண்டம் . மக்கள் திலகத்தின் நடிப்பு - கதை - பாடல்கள் -.வரலாற்று காவியம் .
''எங்கள் தங்கம்'' - 1970
சென்னை - நூர்ஜெஹான்
தீபாவளிக்கு முன் வந்த படம் . எம்ஜிஆரின் அருமையான நடிப்பில் வந்த படம் . கதா காலட்சேபம் சூப்பர்.
மாறுவேட உடையில் ஒரு நாள் கூத்துக்கு மீசையை ...பாடல் அமர்க்களம் . சென்னையில் பல ரசிகர்கள் நட்பு
கிடைத்தது . எம்ஜிஆர் மன்றத்தில் தீவிரமாக என்னை ஈடு படுத்தி கொண்ட இனிய நாட்கள் .
''நீரும் நெருப்பும்'' - 1971
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் சிறப்பு காட்சியில் மக்கள் திலகத்துடன் ரசிகர்கள் படை சூழ
முதல் முறையாக பார்த்த இனிய அனுபவம் மறக்க முடியாது . நீரும் நெருப்பும் படம் ஆங்கில படங்களுக்கு
இணையாக இருந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரண்டு வேடங்கள் அபாரம் .
''இதய வீணை'' - 1972
வேலூர் - தாஜ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''பாரத் '' - புரட்சித்தலைவர் என்ற பெருமையுடன் வந்த படம் . காஷ்மீர் .. பாடல்
பொன்னந்தி மாலை பொழுது ..இரண்டு பாடலே போதும் படத்தின் வெற்றிக்கு .
''உரிமைக்குரல்'' / ''சிரித்து வாழ வேண்டும்'' - 1974
http://i62.tinypic.com/2u960ar.jpg
வேலூர் - தாஜ் / வேலூர் - கிரவுன்
உரிமைக்குரல் - முதல் நாளே படம் வெள்ளி விழா படம் என்று கூறும் அளவிற்கு பிரமாதமாக ரிசல்ட் கிடைத்தது
எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணி - பிரம்மாண்ட வெற்றி . பல சரித்திர சாதனைகள் நடந்தது .
சிரித்து வாழ வேண்டும் - உரிமைக்குரல் பிரம்மாண்ட ஓட்டத்தால் சற்று பாதிக்கப்பட்ட படம் . இருந்தாலும் மதுரையில் 100 நாட்களும் வசூல் ரீதியாக நல்ல லாபம் தந்த படம் .
''பல்லாண்டு வாழ்க'' - 1975
வேலூர் - லக்ஷ்மி
இதயக்கனியின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து வந்த படம் .மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த
புதுமையான படம் . வெற்றி காவியம் .
''ஊருக்கு உழைப்பவன்'' - 1976
பெங்களுர் - லக்ஷ்மி
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த உன்னத காவியம் . சென்சார் பிடியில் சிக்கியதால் சற்று ஏமாற்றமே . இருந்தாலும் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு மற்ற குறைகளை நிவர்த்தி செய்து விட்டது .