http://i1300.photobucket.com/albums/...ps15295aa5.jpg
Printable View
Post copied from -தாரை கிட்டு:
................மக்கள் திலகத்தின் குணத்துக்குச் சாட்சி!!.................
* ஒரு பாடகர் மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணிநேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீகள்............அது உங்கள் ஈகைக்குச் சாட்சி!
*நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்ற போது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுகிறீர்கள்........................ ..............................................அது உங்கள் ஈரத்திற்கு சாட்சி!!
*திமுக மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக் கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து விட்டுப் போவீர்களே!! .................................அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி!!
*தொலைபேசி இணைப்பிலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படும் சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க “டொக்” என்ற அந்தச் சின்னச் சத்ததிலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து ஃபோனை வையுங்க” என்று உடனே உத்திரவிட்டீர்களாமே!...................அது உங்கள் கூர்மைக்கு சாட்சி!!
*வெளிநாட்டில் கொடுத்த பணத்தைன் பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தர வந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்க்கிறீகளா?” என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே!!...................அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி!!
*நீங்கள் முதலமைச்சர் ஆன பிறகும் காரில் போகும் போது கலைஞர் பேச்சுக்களின் ஒலியிழைகளைக் கேட்டுக் கொண்டே பயணிப்பீர்களாமே!!.............அது உங்கள் தமிழ்க் காதலுக்குச் சாட்சி!!
----------- கவிப்பேரரசு வைரமுத்து!!
http://s9.postimg.org/9dpibjt9r/WP_20140823_026.jpg
FROM 22/2/2015
AT COIMBATORE SHANMUGHA THEATRE
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''தேர் திருவிழா ''
23.2.1968
47 ஆண்டுகள் நிறைவு . 1968 பொங்கலுக்கு முன் வந்த ரகசிய போலீஸ் 115 மற்றும் 15.3.1968ல் வந்த குடியிருந்த கோயில் படத்திற்கு இடையில் 23.2.1968ல் வந்த படம் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பு , இனிமையான பாடல்கள் என்று பொழுது போக்கு அம்சத்துடன் வந்த படம் . மக்கள் திலகம் பரிசல் ஓட்டியாக வும் ,போலீஸ் காரராகவும் , நடிகராகவும் வித்தியாசமாக நடித்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆராக நாகேஷ் - மனோரமாவை பாராட்டும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார் .மறு வெளியீடுகளில் தேர்த்திருவிழா சக்கை போடு போட்ட படம் .
watch from 7th minutes.....MGR POWER......NAGESH SAYS
http://youtu.be/_P0GtO90ZfY