http://i61.tinypic.com/2ia3ptw.jpg
Printable View
எம்*ஜி*ஆர் ஒரு இயக்கம் மட்டுமல்ல ஒரு வித மயக்கம் எனக்கு மட்டுமல்ல எம்*ஜி*ஆர் படங்கள் இன்றும் பாடங்களாகதான் பலருக்கும் தெரிகின்றன
இன்றும் நான் கல்லூரியில் உரை ஆற்றும்ரும்போது கூட அவரது பாடல்கள் உதவி புரிந்திருக்கின்றன நல்லதை பார்த்தவுடன் புரிவதற்க்கு அவருடைய தோற்றமும் செயலும் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன அவையனைத்தும் மிக கவனத்துடன் கையாளபட்டவை, ஒரு டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு 100 பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம் அவரது சத்துணவு திட்டம் ஒரு தலைமுறைக்கு சாப்பாடு போட்டுவிட்டது என்பது உண்மை இப்பொழுது நடக்கும் அரசியல் நிலமைகளை பார்க்கும்போது அவருடிய ஆட்சி காலம் மிக சிறந்ததாகவே தெரிகிறது அதை பற்றி மிக விரிவாக பேசலாம்
மிகவும் பின் தங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்கள் பின்னாளில் IIT இல் படிபதர்க்கும் ஏ*பி*ஜெ*ஏ KALAM உடன் பணி புரியும் நிலை அடைவதற்க்கும் தூண்டுகோலஆக எம்*ஜி*ஆர் படங்கள் இருந்தன என்பது நான் கண்ட உண்மை
courtesy -Prof Elan- FB
தமிழ் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.
அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.
எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.
என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.
அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது.
அவர் மறைந்து 27 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான்.
Courtesy - seshadhri