-
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
டியர் mr_karthik,
தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கும், திரு.யாழ் சுதாகர் குறித்த நற்கருத்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களது உணர்வுபூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
டியர் ராகவேந்திரன் சார்,
"உலகம் பல விதம்", "நானே ராஜா" நெடுந்தகடுகளாக வருகிறதா ! ஆஹா !! ஆஹா !!!
அன்புடன்,
பம்மலார்.
-
-
விண்ணுலக முதல்வரான கணேச பெருமானைப் போற்றும் நன்னாளில்
கலையுலக முதல்வரான சிவாஜி கணேசப் பெருமானின் புகழ்பாடும் கட்டுரை
வரலாற்று ஆவணம் : தினமணி : 3.10.1997
http://i1094.photobucket.com/albums/...EDC4479a-1.jpg
குறிப்பு:
1. 1964லேயே 5 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடின. [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி]
2. ஒரே நாளில் இரு படங்கள் முதன்முதலில் வெளியானது 13.4.1954 அன்று. [அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி]
3. எம்கேடி பாகவதருக்குப்பின் ஒரே ஆண்டில் ஒரு கதாநாயக நடிகர் நடித்து இரு படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியது 1959-ல். [வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை][பாகவதருக்கு 1937-ல் இரு பொன்விழாப் படங்கள் : சிந்தாமணி, அம்பிகாபதி][ஒரே ஆண்டில் இரு வெள்ளிவிழாக்கள் என்ற சாதனையை 1959-க்குப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என மொத்தம் 6 முறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நமது நடிகர் திலகம் !]
4. இந்தக் கட்டுரை ஒரு Overviewதான். இந்தத் தலைப்பில் விளக்கமாக ஒரு தனிப்புத்தகமே எழுதலாம் !
பக்தியுடன்,
பம்மலார்.
-
திரு.சந்திர சேகரன் சார்,
தங்கள் அன்புக்கு நன்றி!
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.
திரு.சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,
தங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.
திரு.பார்த்தசாரதி சார்,
தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களை போன்ற அனுபவசாலிகளின் வாழ்த்துதல்கள் அடியேனின் பாக்கியம்!
தங்களின் குமுதம் விமர்சனங்கள் பற்றிய அட்டகாசமான விமர்சனத்தை எப்படி விமர்சனம் செய்வது என்று எனக்குத் தெரிய வில்லை. சூப்பர் சார்!
மூன்று முகம் பற்றி சாவியில் வெளிவந்த அந்த வஞ்சப் புகழ்ச்சி விமர்சனத்தை நானும் படித்திருக்கிறேன்.அது பற்றிய என் நெஞ்சில் உள்ள குமுறல்களை அப்படியே ஜெர்மன் கண்ணாடி போல் பிரதிபலித்து விட்டீர்கள்.
'நான் நினைத்தேன் நீ சொல்லி விட்டாய், ' என்று பேச்சு வாக்கில் அடிக்கடி சொல்வோம். அது அப்படியே தங்கள் குமுறல்களின் மூலம் நடந்து விட்டது.
எல்லாப் படங்களுக்கும் ஏடா கூடமாக விமர்சனம் எழுதும் 'கல்கண்டு' பத்திரிகை கூட 'எங்கள் தங்க ராஜா' வை அருமையாக விமர்சனம் செய்திருந்தது. அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் நடிப்பைப் பாராட்டும்,
'நடிகர்திலகத்தின் நடிப்பு பட்டை தீட்டப்பட்ட வைரம் போல அற்புதமாய் ஜொலிக்கிறது'
என்ற வரிகள் என்றும் மறக்க முடியாதவை.
நடிகர் திலகமே 'ஸ்ரீவள்ளி' படத்தைப் பற்றிய தன் சொந்தக் கருத்தாக குமுதம் விமர்சனம் போலவே "முருகா..முருகா.. முருகா...என்று தான் கூறியிருப்பார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி! 'உலகம் பலவிதம்' மற்றும் 'நானே ராஜா' நெடுந்தகடுகள் விரைவில் வெளிவரப் போகின்றன என்ற செய்தியை தந்து,இரு படங்களின் டீவீடீ வடிவங்களையும் தந்து வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள்... விரைவில்,
'மண்டமாருதம்' தவழப் போவதையும், 'சந்திரன் வானிலே' திகழப் போவதையும் 'ஆசைக் கனவு' நனவாகப் போவதையும் நினைத்தால் இப்போதே உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விட்டது.
மகிழ்ச்சியடையச் செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள் சார்!
அன்பு பம்மலார் சார்,
மாசு மருவில்லாத அந்த ரஹீமின் முகம். ஆஹா!..கள்ளம் கபடமில்லாத மழலை முகம். இப்படி ஒரு வசீகர வதன முகத்தை இனி இந்த உலகத்தில் யாரிடம் காண முடியும்?...அதி அதி அதி அற்புதமான நிழற்படம் அளித்து அதலகதளப் படுத்தி விட்டீர்கள். நன்றி.
முதல் சாதனைகளின் முடிசூடா மன்னன் ஆவணக்கட்டுரையை அளித்து முத்தமிழ் வித்தகரின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்
பதித்துள்ளீர்கள். நூறாவது நாள் மற்றும் வெள்ளி விழா சாதனைகள் விவரங்களும் அருமை.
இவை எல்லாவற்றுக்கும், தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கும் சேர்த்து என் மகிழ்வான நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
அனைவருக்கும் இனிய 'விநாயக சதுர்த்தி' நல்வாழ்த்துக்கள்.
http://www.punjabigraphics.com/image...omment-028.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
திரு குமரேசன் பிரபு சார்,
தங்களுக்கு என் நெஞ்சு நிறைந்த, மனப்பூர்வமான, இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் பல்லாண்டு.
-
'விநாயக சதுர்த்தி' ஸ்பெஷல்
ஆனை முகனே! ஆதி முதலானவனே!...
பானை வயிற்றோனே! பக்தர்களைக் காப்பவனே!...
மோனைப் பொருளே! மூத்தவனே! கணேசா! கணேசா!...
ஏனென்று கேளுமைய்யா! இந்த ஏழை முகம் பாருமைய்யா ...
கணேசனின் புகழ் பாடும் நம் 'கணேசரின்' புகழை நாம் பாட வேண்டாமா?...விநாயகர் சதுர்த்தியான இன்று...
இதோ..இந்தப் பாடலின் மூலம் நாம் அவருக்கு புகழாரம் சூட்டலாம்..
http://www.youtube.com/watch?v=GatmR...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார்,
தாங்கள் இன்று நடு இரவிலும்,அதிகாலையிலும், செய்த post-களின் நேரத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்....
12:12 AM
02:11 AM
02:28 AM
02:41 AM
03:16 AM
04:37 AM
உடம்பு என்னத்துக்கு ஆவது ?........
உடல் நிலையையும், தூக்கத்தையும் முடிந்த வரை கவனித்துக் கொள்ளவும். இது என் அன்பான வேண்டுகோள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
டியர் பம்மலார்,
கள்ளம் கபடமில்லாத அப்துல் ரகீமின் அழகு முகமும், பின்னணியில் அமைந்த மெக்கா, மதீனா படங்களும் அருமை. நிச்சயம் இப்படம் இஸ்லாமியர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இடம்பெறும் வண்ணம் அழகுற அமைந்துள்ளது.
'பாவ மன்னிப்பு' அப்துல் ரகீம்
'இமைகள்' அக்பர் பாஷா
'எழுதாத சட்டங்கள்' நஸீர் வாப்பா
என அனைத்து இஸ்லாமிய ரோல்களிலும் தூள் கிளப்பியவர் நடிகர்திலகம்.
தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், பேச்சில் எல்லா தமிழர்களையும் போல சரளமாகவே பேசுவார்கள். வேலூர் மாவட்டம் போன்ற இடங்களிலுள்ளவர்கள் சற்று உருது கலந்து பேசக்கூடியவர்கள். மற்ற எல்லா மாவட்டங்களிலும் சாதாரண த்மிழே பேசுவார்கள். அதையே பின்பற்றி, நடிகர்திலகமும் தான் ஏற்று நடித்த எல்லா முஸ்லீம் ரோல்களிலும் சாதாரண தமிழே பேசியிருப்பார். அதுபோல உடைகளும் தமிழ்நாட்டிலுள்ள மற்ற முஸ்லீம்களைப்போலவே அணிந்திருப்பார்.('சிலர்' தாங்கள் தாங்கள் முஸ்லீம் ரோல் ஏற்கும்போது, நடைமுறைக்கு ஒவ்வாத உடை அணிவதோடு, 'நம்பள்', 'நிம்பள்' என்றெல்லாம் பேசி, பார்ப்போரை படுத்துவார்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு முஸ்லீமும் நம்பள், நிம்பள் என்று பேசுவது கிடையாது).
'எழுதாத சட்டங்கள்' படத்தில் தன் குடிசைக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும் நடிகர்திலகம், எரியும் குடிசைக்குள் ஓடிப்போய், வேறு எதையும் எடுக்காமல், மறைந்த தன் மனைவியின் புகைப்படத்தை ஒரு கையிலும், குர் ஆன் வேத புத்தகத்தை இன்னொரு கையிலும் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவரும் காட்சி ஒவ்வொரு இஸ்லாமியரின் உள்ளத்தையும் தொட்டது.
பல்வேறு கோயில் திருப்பணிகளுக்கு காணிக்கை செலுத்துவதைப்போலவே, சென்னை மவுண்ட் ரோடு தர்காவுக்கும், நாகூர் தர்காவுக்கும் வருடாவருடம் காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் நடிகர்திலகம். அத்துடன் தன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் சிலர் புனித ஹஜ் யாத்திரை செல்ல பண உதவியும் செய்துள்ளார் அவர். (ஒருமுறை 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியின்போது அண்ணனின் மூத்த புதல்வர் திரு ராம்குமார் வெளியிட்ட தகவல்).
-
டியர் வாசுதேவன்,
தங்கள் தன்னடக்கமான பதிவு என் நெஞ்சைத்தொட்டது. எல்லாம் நடிகர்திலகத்திடமிருந்து வந்ததுதான். அபார திறமைகளைப்பெற்றிருந்தும், அது தன் செயல்களில் பிரதிபலித்துவிடாமல் அடக்கமாக வாழ்ந்தவரல்லவா.
வியட்நாம் வீடு நாடக ஸ்டில் அரிய பொக்கிஷம். 'சாவித்திரி'யாக எஸ்.ஆர்.சிவகாமியும் நடித்திருக்கிறாரா?. நாடகத்தில் 'சாவித்திரி' ரோலில் நடித்தவர் ஜி.சகுந்தலா மட்டுமே என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி.
டியர் பம்மலார்,
தினமணியில் வெளியான, நடிகர்திலகத்தின் சாதனைகளின் தொகுப்புக்கட்டுரையை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. பல விஷயங்கள் விடுபட்டிருந்தாலும், இந்த அளவுக்காவது சிறப்பாகத் தொகுத்தார்களே என்ற வகையில் மகிழ்ச்சி.
பத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது இரண்டையும் குறிப்பிட்டவர்கள் இரண்டுக்கும் நடுவே 'பத்மபூஷண்' விருது பெற்றதை விட்டுவிட்டனர்.
அதேபோல ஒரே நாளில் இரண்டுபடங்கள் வெளியாகி, இரண்டுமே 100 நாட்களைக்கடந்த சாதனையையும் பலமுறை நிகழ்த்திக்காட்டியவர் (உ-ம்: 1967, 1970). அதுவும் அக்கட்டுரையில் இடம்பெறவில்லை.
'அந்தநாள்' படம், திரைப்படக்கல்லூரியில் (நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு பிரிவுகளில்) பாடமாக வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடவில்லை.
இருப்பினும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரையை வெளியிட்டமைக்கு 'தினமணி'க்கு நன்றி.
விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரின் 'ஃபேமிலி போட்டோ' மிக அருமை. பாவம், மனைவியில்லாதவர். அவருக்கு அப்பா, அம்மா, தம்பி ஆகியோர்தானே குடும்பம்.