http://i50.tinypic.com/ossar7.jpg
Printable View
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சி (கட்டுரை 1983ஆம் ஆண்டு எழுதப்பட்டது).
எம்.ஜி.ஆர் கதையில் வரும் சிறப்புக் காட்சி.
பன்னீர் செல்வம் என்னும் பெயர் படைத்தவர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெஞ்சைப் பறிகொடுத்தவர். பெருந்தலைவர் படம் மட்டும் வீட்டில் காட்சி தரும். தீவிர கட்சிப் பற்றும் மிகுதி. இதன் மூலம் நடிகர் திலகத்திடம் மதிப்பு அதிகம். சிவாஜி ரசிகரும் கூட.
பன்னீர் செல்வம் தாய் சாட்சியாக இன்றைக்கும் சொல்லும் பச்சை உண்மைதான் இந்தக் காட்சி.
பன்னீர் செல்வம் ஒரு எலக்ட்ரீசியன். படப்பிடிப்பு நிலையத்தில் மின்சார பகுதியில் அவருக்கு வேலை.
அருணாசலம் ஸ்டூடியோ. ஆனந்தஜோதியில் ஒரு காட்சி. மேடை மீது தமிழ்த்தாயின் சிலை. தாயின் சிலைக்கு முன்பாகச் சிறுவர் கூட்டம். வளரும் தலைமுறை சூழ்ந்து நின்கின்றனர்.
படப்பிடிப்புக்கு எல்லாம் தயார்.
கதாநாயகன் எம்.ஜி.ஆர் தமிழ்த்தாயின் சிலையின் அருகே கம்பீரமாக நிற்கின்றார். குரலெடுத்துப் பாடுகிறார். ஒரு தாய் மக்கள் நாமென்போம்.
முன்னும் பின்னுமாக நகர்ந்து படம்பிடக்க உதவும் டிராலியில் காமிரா இருக்கிறது,.
எம்.ஜி.ஆர் முகத்திற்கு அருகில் காமிரா போகவேண்டும். டிராலியைத் தள்ள எலக்ட்ரீசியன்கள் தயார்.
ஒளிப்பதிவாளர் விஜயனும், படித்தின் இயக்குநர் சாமியும் ரெடி என்று சொல்கிறார்கள்.
எல்லா விளக்குகளும் ஒரே சமயத்தில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின.
ஒருதாய் மக்கள் நாமென்போம் பாடல் ஒலிக்கிறது.
அப்போது
அய்யோ அம்மா என்ற அலறல்
டிராலியை பிடித்துக் கொண்டிருந்த சிவாஜி ரசிகர் பன்னீர் செல்வம் அலறிச் சாய்கிறார்.
மின்சாரத் தாக்குதலில் பேச்சு மூச்சற்று கிடக்கிறார், பன்னீர் செல்வம்.
காமிராவை அப்படியே விட்டு விட்டு ஒளிப்பதிவாளர் விஜயன் கீழே உருண்டு விழுகிறார். சூழ்ந்து நின்ற உதவி காமிரா மேன்கள், படத்தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பா , நடன ஆசிரியர் எவருக்கும் எதும் தோன்றவில்லை. திக்பிரமை பிடித்து நிற்கின்றனர். மின்சாரத் தாக்குதலால், கீழே கிடக்கும் பன்னீர் செல்வத்தை யாரும் தொடவில்லை. தொட்டுத் தூக்கினால் அவர்களையும் மின்சாரம் தாக்கிடுமே
அதிர்ச்சி எல்லோருக்கும் செயல்பட முடியாத பெரிய அதிர்ச்சி. செயலற்று நின்றனர்.
எல்லோருமா அப்படி . அதுதான் இல்லை. கதாநாயகன் எம்.ஜி.ஆர் மேடையில் இருந்து மின்னல் வேகத்தில் பாய்கிறார்.
மறுகணம் பன்னீர் செல்வத்தை தமது கரங்களில் அள்ளி எடுத்துக் கொண்டு வெளியே பாய்ந்தோடுகிறார்,
பேச்சு மூச்சற்று கிடந்த பன்னீர் செல்வத்தை கீழே படுக்க வைக்கிறார். கை கால்களை நீவி விடுகிறார். இங்கிதமாக பிடித்து விடுகிறார். உதவியாளரை நொடியில் சோடாவை எடுத்து வரச் செய்து மகத்தில் கொட்டுகிறார். தனக்காக வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழச்சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுகிறார்.
பரிவான உபசரணை. பழச்சாறு வேறு உள்ளே சென்றது . பன்னீர் செல்வத்தின் உடலில் பாய்ந்த மின்சார அதிர்ச்சி எங்கோ பறந்தோடிவிட்டது.
கண்விழித்தார் பன்னீர் செல்வம். சட்டென எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டு கொண்டார். அன்பிற்கு அடிமையாகிறார்.
எம்.ஜி.ஆர் - நல்ல மனிதர் அவர்.
எம்.ஜி.ஆரைப் பற்றிய இதயக்கணிப்பு மேலோங்கியது.
இதே ஆனந்த ஜோதி படத்தில் மற்றொரு பாடல். கடவுள் இருக்கின்றார். அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
ஆம். கடவுள் பன்னீர் செல்வத்தின் கண்ணுக்குத் தெரிந்தார். எம்.ஜி.ஆர் உருவில்.
தானும் மின்சார அதிர்ச்சியில் பாதிக்கப்படுவோம் என்பதை சிறிதும் நினைக்காமல் பன்னீர் செல்வத்தைப் பாய்தோடிக் காத்த எம்.ஜி.ஆர் மேலும் சில செய்தார்.
16-10-1983 ராணி வாரஇதழில் மு.நமச்சிவாயம் அவர்கள் எழுதிய எம்.ஜி.ஆர் கதை கட்டுரையிலிருந்து
FROM NET
http://i46.tinypic.com/2d7wy81.jpg