Makkal thilagam mgr in thaayin madiyil 48th anniversary on 15-12-2012.
Released in 5 theatres at chennai .
Dummy horse song - rajaththi kaththirundhaa ....... Super hit song .
Printable View
Makkal thilagam mgr in thaayin madiyil 48th anniversary on 15-12-2012.
Released in 5 theatres at chennai .
Dummy horse song - rajaththi kaththirundhaa ....... Super hit song .
Dinamalar - rajini speech - comment portion
திரு ரஜினி அவர்கள் தனது பிறந்தநாள் விழாவில் சிகரெட் -மது இரண்டின் பாதிப்பு பற்றி விரிவாக கூறி தனது ரசிகர்களுக்கு சிகரெட் -மது இரண்டையும் அடியோடு விட்டு விடும் படி வேண்டுகிறார் .
மக்கள் திலகம் அவர்கள் தனது திரை படத்தில் ஆரம்பம் முதல் நல்ல பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வசனங்கள் - பாடல்கள் மூலம் பல்லாயிரம் மக்களின் தீய பழக்கங்களை மாற்றிட உதவினார் .
எனவேதான் மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக பூஜித்து வருகிறார்கள் .
உண்மையிலே மக்கள் திலகம் அவர்கள் ஒரு சமுதாய சிற்பி .
செல்வநாயகம் -மதுரை
Dinamalar - comment portion - ccg.kumar.
ரஜினி எடுத்த முடிவு நல்ல முடிவு. எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற காரணம் அவர் பாபுலர் நடிகர் மட்டுமில்லை, நல்ல திறமைசாலி. அதானால் தான் அவரால் மிக ஏழ்மையில் இருந்து வந்தாலும் சினிமாவில் சாதிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர் மீது ஒரு சில குறைகள் இருந்தாலும், அவர் மனித நேயத்துடன் செய்த உதவிகள் ஏராளம். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாக நடந்து காட்டியவர். குடிப்பழக்கம் இல்லை. உடலை மிக கட்டுக்கோப்புடன் வைத்திருந்த ஒருவர். பேச்சில் நாகரீகம் உண்டு. எதிரிகளை கூட மன்னிக்கும் சுபாவம் உள்ளவர். அந்த காலத்தில் படங்களில் புது புது ஐடியாக்களை புகுத்தி தொழில் முறையில் வெற்றிகரமாக இருந்த ஒருவர். பாடலுக்கு டி.எம்.எஸ், கவிதைக்கு வாலி, கண்ண தாசன் என்று திறமை சாலிகளை பிடித்து போட்டவர். ஆட்சியிலும் நல்ல நிர்வாக திறமை உள்ள பண்ருட்டி, நெடுஞ்செழியன்,பொன்னையன் என்ற திறமையான அமைச்சர்களை போட்டு நல்ல ஆட்சி கொடுத்தவர். எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற ஒருவர். ரஜினிக்கோ, விஜய் காந்துக்கோ, வரவிருக்கும் விஜயக்கோ அந்த திறமைகள் இல்லை. எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம். இனி நமக்கு தேவை நல்ல திறமையான நிர்வாகிதான் முதல்வராக வேண்டும். ஒரு மோடி போல், ஒரு நிதிஷ் குமார் போல்... ரஜினி ஒரு நடிகர் என்பதுடன் விட்டு விடுவோம். விஜய் காந்த், ரஜினி, விஜய் போன்றவர்கள் எம்.ஜி.ஆர் போல ஆக நினைப்பது புலியை பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட மாதிரி தான் ஆகும்.