ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்ற சிவாஜி நாடக வசனத்தை நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள் நடிக்கும் காணொளி
http://www.youtube.com/watch?v=eznzJASBm9k
Printable View
ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்ற சிவாஜி நாடக வசனத்தை நண்பர் பாலாஜி சுந்தர் அவர்கள் நடிக்கும் காணொளி
http://www.youtube.com/watch?v=eznzJASBm9k
இதோ பாலாஜியின் இன்னொரு காணொளி..
http://www.youtube.com/watch?v=J2pOR...Sz8T5axzNB6s1Q
இதைப் பார்க்கும் போது நம்மை நாமே பார்ப்பது போல இல்லை? நம் ஒவ்வொருவரையும் அல்லவா அவர் பிரதிபலிக்கிறார். !
by HarishQuote:
Quote:
நாம் நாமாகவே இருப்போம். அந்த நண்பர்களின் சந்தோஷத்தை நாம் குறை கூற வேண்டாம். அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி தவறாக பேசினால் மட்டும் பதிலளிக்கலாமே. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
மண்ணிலிருந்து பூதவுடல் மறைந்தாலும் மக்கள் மனதில் புகழுடல் குறையாமல் தத்தமக்குரிய சிம்மாசனத்தில் அமரராக அமர்ந்திருக்கும் மாந்தர்குல மாணிக்கங்களின் சாதனை நினைவுகளை அசை போடும் திரிகள் இசையாமல் திரிந்து வசை பாடும் பொறிகளாக தீப்பொறி வசவுகளை நெசவு நெய்யும் தறிகளாக நெறி பிறழ்ந்து தறிகெட்டு ஓடுவது வேதனையே!
The Softy of filmdom trying to pacify the Hardy clashing titans!
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
Today's Hindu Blast from the past The article on PUDHAIYAL. If anyone have the facility
can upload the same.
Regards
From the old posting of Mr Partha Sarathy
8. "அந்த நாள் ஞாபகம்"; படம்:- உயர்ந்த மனிதன் (1968); பாடல்:- வாலி; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் மேஜர் சுந்தரராஜன் (வசன நடை); இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- கிருஷ்ணன்/பஞ்சு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தரராஜன்.
இந்தப் பாடலை இயற்றியது வாலியா அல்லது கவியரசா என்றொரு குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்த டிக்ஷனரி திரு. முரளி அவர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் பதிவிட்ட "மாமா மாப்ளே" (பலே பாண்டியா படம்) பாடலில் நடிக வேளுக்குக் குரல் கொடுத்தது எம்.எஸ். ராஜு என்று கூறிய திரு. ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்னும் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும், ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதும், கடந்த கால நினைவுகளை அசை போடுவது எந்த ஒரு ஊடகத்தில் விவாதிக்கப் பட்டாலும், மேற்கோள் காட்டப்பட்டாலும், மேற்கூறிய வரிகள் "அந்த நாள் ஞாபகம்" - உடனேயே ஒவ்வொருவராலும் எடுத்துரைக்கப்படும். ஒருவராலும் தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு, காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.
இரு நண்பர்கள் - சமூகத்தில், அவர்கள் வேறு அந்தஸ்தில் இருந்தாலும், அடிப்படையில் நண்பர்கள். இதில், ஏழை டிரைவர் அந்த அளவுக்கு வாழ்க்கையில் அடிபடா விட்டாலும், பணக்காரன் மட்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விடுகிறான். அந்தப் பணக்காரன் பல வருடங்களுக்குப் பிறகு சிறு வயதில், அவனும் அவனது காதலியும் பழகிய ஊட்டிக்குச் செல்ல நேரும்போது (அந்தக் காதலியை ஒரு கோர தீ விபத்தில் இழந்து விடுகிறான் - அவனது பணக்காரத்தந்தை திட்டம் போட்டுச் செய்த கொலை - காரணம் ஏழை என்கிற அந்தஸ்து பேதம்!), தன்னை அறியாமல் அவனது கடந்த கால ஞாபகங்கள் அலை மோதுகிறது. அப்போது, அவன் அந்த நினைவுகளைக் கூறும்படியாக அமைகின்ற பாடல்.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வரிகள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே; அது ஏன்? ஏன்? நண்பனே!" அவனது இந்த நாள் அனுபவங்கள் கசப்பாக உள்ளன என்பதை உடனே எடுத்துரைக்கும் வரிகள்!
முதல் சரணத்தில், பள்ளி வாழ்க்கையை இலேசான நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வரிகள் "உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்" அன்று போல் இன்று இந்த சமூகத்தில் பழக முடியவில்லையே எனும் ஏக்கம். அந்த மனிதனின் உண்மையான குணாதிசயத்தை இயம்பும் வரிகள்.
இரண்டாவது சரணம் இலேசான சோகம் - பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகள். கடமையும் வந்தது; கவலையும் வந்தது - என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள். எல்லா வசதிகளும் எல்லா சொந்தங்களும் வந்த பின்பும் அமைதி மட்டும் இல்லை என்னும் கூற்று நிறைய பேருக்குப் பொருந்தும்.
மூன்றாவது சரணம் - பல நாட்கள் வானொலியில் வராமல் இருந்தது. இப்போதெல்லாம் வருகிறது. அந்த மனிதனின் கடந்த கால சோகம் தெறித்து விழும் வரிகள். "தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்." தன் காதலியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து நினைத்துத் துடிக்கும் அந்த மனிதனின் குமுறல்கள் வெடிக்கும் வரிகள். வாலி அவர்கள் எழுதிய அத்தனை பாடல்களிலும் இன்றளவும் அவர் பேர் சொல்லும் முதல் இரண்டு பாடல்களில் இது ஒன்று எனலாம்.
இப்போது பாடியவர். முதலில் நடிகர் திலகம் ஓட்டப் பந்தயம் வைத்து, ஓடி முடித்து, நின்று, மூச்சு வாங்கிக் கொண்டே பாடத் துவங்குவதாக ஆரம்பிக்கும் போது, அந்த மூச்சிரைப்பைக் கண் முன் நிறுத்த ஆரம்பிப்பவர், அந்தப் பாடலில் தெறிக்கும், அத்தனை உணர்வுகளையும், அற்புதமாக வடித்திருந்தார். மறுபடியும், நடிகர் திலகம் தான் பாடினார் என்கிற அளவுக்குப் பாடிய திரு. டி.எம்.எஸ்ஸைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அடுத்தது இசை. கொஞ்சம் அசந்தாலும், வெறும் வசனமாகி விடக்கூடிய பாடல். இந்தப் பாடலின் தன்மையை அழகாகப் புரிந்து கொண்டு, நகைச்சுவை வரும்போது ஒரு இசை, சோகம் வரும்போது ஒரு இசை, மிடுக்கு வரும்போது ஒரு கம்பீர இசை என்று மிக லாகவமாக இசை அமைத்து, இடையிடையே, மேஜர் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூட அந்த இசை பிசகா வண்ணம் அமைத்து, அவரையும் மிகச் சரியாக குரல் கொடுக்க வைத்து, இந்தப் பாடல் முழு வெற்றியடைய வைத்து விடுகிறார்.
அடுத்து இயக்கம். நண்பர்கள் ஊட்டிக்குச் செல்லுவதாகக் கதையமைத்து, உடனேயே, ஒரு பாடலையும் அமைத்து, பழைய நினைவுகளை அசை போடுவதாக வைத்து, அந்தப் படத்தின் சுவாரஸ்யம் மேலும் மெருகேற வழி வகுத்து, முழு வெற்றி அடைகிறார்கள் இயக்குனர் இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள். அப்போதெல்லாம், ஒரு படத்தின் இடைவேளைக்குப் பின் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்தன. ஆனால், இப்போதோ?
இப்போது நடிப்பு. இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் இயக்கமும் சற்றேறக்குறைய நடிகர் திலகம் தான் செய்தார் எனலாம் (இன்னும் இது போல் பட படங்கள்; காட்சிகள்; பாடல்கள் உண்டு என்றாலும்!). பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளி வந்த கட்டுரையில் படித்தது. முதலில், இந்தப் பாடலை நடிகர் திலகமும் மற்றவர்களும் காரில் போய்க் கொண்டே பாடுவதாகத் தான் வைத்தார்களாம். நடிகர் திலகம் தான், "வேண்டாம் இந்தப் பாடல் சிறு வயது நினைவுகளை அசை போடுவதாக வருகிறது. சிறு வயது என்பதால், ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாக வைத்தால் பொருத்தமாக இருக்கும். என்னைக் கேட்டால், ஓட்டப் பந்தயம் வைத்து, கடைசியில், மூச்சு வாங்கிக் கொண்டே பாடுவதாய் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்" என்று செட்டியாரிடம் சொல்ல, அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.
தனக்கேயுரிய ஸ்டைலில் ஓடத் துவங்கி, மூச்சு வாங்கிக் கையிலுள்ள தடியை ஒரு வித சுழற்று சுழற்றி அதை மேஜரின் மார்பில் வைத்து எடுக்கும் விதம் அற்புதம் என்றால்; முதல் சரணத்தில், புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே என்று சொல்லி சிரிக்கும் விதம் அதியற்புதம். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் என்று சொல்லி வேகமாய் நடந்து அந்தப் பாடலின் டெம்போவை எகிறச்செய்யும் விதம்; உயர்ந்தவன் என்று சொல்லி தடியை வானுக்கு உயர்த்துபவர்; ஒரு வித ஸ்டைலுடன் தாழ்ந்தவன் என்னும் போது சிலிர்க்கும்!! (இந்த ஒரு விதத்தைப் பார்த்தால் தான் புரியும்!)
இரண்டாவது சரணம் - பாசமென்றும் - ஒரு வித ஸ்டைல்; நேசமென்றும் - வேறொன்று; வீடு என்றும் - இன்னும் ஓர் ஸ்டைல்; மனைவி என்றும் - பிய்த்து உதறுவார்; நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே என்று இலேசாக துயரத்தை வெளிப்படுத்துவார். உடனேயே, சமாளித்துக் கொண்டு வேகமாக அந்த நாள் ஞாபகம் என்று நடை போடத்துவங்கும் சரளம் பிரமாதமாக இருக்கும்.
மூன்றாவது சரணம் - பெரியவன், சின்னவன், நல்லவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாவம், கடைசியில், கெட்டவன் என்னும்போது கையை ஒரு மாதிரி அசைப்பார் - மற்றொரு இலக்கணம். எண்ணமே சுமைகளாய் (வலது புருவத்தை தனக்கேயுரிய பாணியில் உயர்த்துவார்), இதயமே பாரமாய் - ஒரு மாதிரி. மறுபடியும், சோகம் - தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான், அழுகிறான் எனும்போது எப்படி அவர் முகத்தை சோகம் கவ்வுகிறது! மறுபடியும், சமாளித்து, பல்லவி, அந்த நாள் ஞாபகம் என்று கடைசியில், கைத்தடியை லாகவமாக சுழற்றியபடியே செல்லும்போது, மேஜர், சிவகுமார், பாரதி மட்டுமல்லாமல், பார்க்கும் அனைவரும் அல்லவா வியந்து மெய் மறக்கிறார்கள்!!
இந்தப் பாடலில், மேஜர் அவர்களும், நடிகர் திலகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து, இந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார் என்பதை மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து, இப்படத்திற்குப் பின்னர் தான், இவர்களின் காம்பினேஷன் தொடர்ந்து வரத் துவங்கியது.
இந்தப் பாடலும், ஒரு சிறப்பான பாடலுக்குரிய அனைத்து அம்சங்களிலும் முதல் இடத்தைப் பிடித்து, பாடல் வெளி வந்த நாள் முதல், இன்று வரை, அனைவராலும் ஒரே மாதிரி ரசிக்கப் படுவதால், இந்தக் கட்டுரையில், அதாவது நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் இடம் பெறுகிறது
Analysis by the one & only Mr Neyveli Vasudevan - from old posting
கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.
25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
' பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும்,'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், மெல்லிசை மாமன்னரின் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர்திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.
சரி! கதைக்கு வருவோம்.
அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால்
வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.
முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.
தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.
ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.
தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துக்கிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள், ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.
சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும்
கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர துடிதுடித்து மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்ப பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.
தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப் படுத்துகிறார்.
எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.
குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.
மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.
தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.
இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.
வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.
இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
தாதாவாக உலா வரும்போது.....
வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!
அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.
அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது...
நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.
'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.
The movie Pudhiya Paravai will be screened next week i.e on 14.09.14 at the Russian Centre, Chennai as the magnus opus will be celebrating 50th year in
2014. For further details contact Mr Raghavendra & Mr Murali. It is only a prior information anyhow the details will be posted shortly here.
Regards
இப்போழுது நம் காணும் பாடலில் நடிகர்திலகத்தின் அழகை பாருங்கள். இது போன்ற ஒரு முகத்தை ஆண்டவன் இனி படைக்க முடியாது. என்ன ஒரு அழகு என்ன ஒரே கம்பீரம் என்ன ஒரு முகபாவனை, ஒரு தேர்ந்த பாடகர்கூட எந்த அளவு உன்னற்சியுடன் பாட முடியுமா என்பது சந்தேகமே.
இப்பௌழுது அந்த பாடலை பாருங்கள். பிரம்ஹா பார்த்து பார்த்து செதுக்கிய அந்த சுந்தர அழகு முகத்தை பாருங்கள். பாடலை கண்டு களியுங்கள்.
http://youtu.be/n6Pt-dKwvwQ
Our Thalaivar Nadigar thilagam's Birthday Celebrations will be conducted by S. Annadurai and Thillainagar R. Baskar of Trichy District Sivaji Makkal Iyakkam on 12-Oct-2014 at Trichy TAMIL SANGAM
CHIEF GUESTES ARE MR.MARUTHU MOHAN AND MR.B. KANNAN (PHOTOGRAPHER OF MUDHAL MARIYATHAI).
All are Requested to attend the function.
For this Function in all over Trichy District in 10 places of Trichy town Wall Painting is going on
https://scontent-a-sin.xx.fbcdn.net/...3e&oe=54869580
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...079e8a1b5959f9
SP CHOWTHRY'S RECORD AT TRICHY GAIETY THEATRE
ON 06-SEP-14 - SATURDAY 4 SHOWS - TOTAL AUDIANCE - 458
ON 07-SEP-14 - SUNDAY 4 SHOWS - TOTAL AUDIANCE -554
TODAY EVENING SHOW FIRST CLASS FULL AT 6 PM AND HEAVY ALAPPARAI IN EACH AND EVERY ACTION OF CHOWTHRY
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...972309bae29fbd