-
டியர் வாசு சார்,
'இன்றைய ஸ்பெஷலாக' நீங்கள் தந்திருக்கும் "என் காதல் கண்மணி" பாடல் மிகவும் நன்றாக இருந்தது. (என்னடா இவன் கி.மு.வில் வந்த பதிவுக்கு கி.பி.யில் பதிலளிக்கிறான் என்று யாரும் கேலி செய்ய வேண்டாம். பக்கங்கள் பேய்த்தனமாக ஓடினால் நான் என்ன செய்ய முடியும்?.)
வெறும் பாடலைமட்டும் பார்க்கும்போது ஷீலாவின் சோர்ந்த முகமும் ரவிச்சந்திரனின் களிப்பான முகமும் நமக்கு வித்தியாசமாக தெரியும். படத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது அல்லது படத்தின் கதையறிந்து பார்க்கும்போது நமக்கு புரியும். அதாவது நடிகர்திலகம் படப்பாடல்கள் போல கதையோடு ஒன்றிய பாடல். 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே' பாடலை வெறும் பாடலாக மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன சிவாஜி டூயட் பாட்டில் இவ்வளவு கோணங்கித்தனம் செய்கிறார் என்று தோன்றும். கதை தெரிந்தவர்களுக்கு அவர் அப்படி நடிப்பதன் காரணம் தெரியும்.
பாடலை மிகவும் நன்றாக ஆய்ந்துள்ளீர்கள். (ரவி திரியில் சாரதா இப்படத்தின் முழுமையான ஆய்வை எழுதியிருந்தார். படித்திருப்பீர்கள்)
வாழ்த்துக்கள்...
-
டியர் ராகவேந்தர் சார்,
பொங்கும் பூம்புனல் அருமையோ அருமை. என்னுடைய வேண்டுகோளையேற்று பாடல்களுக்கு விரிவான விளக்கங்கள் அளித்திருப்பது சூப்பர்.
ஏற்கெனவே நான் சொன்னது போல லாரியில் கொண்டுவந்து கொட்டுகிறீர்கள். பல பாடல்கள் கேட்டும் லேசான நினைவில் இருப்பவை, சில கேட்டு மறந்தவை, சில அறவே கேட்காதவை என தங்கள் சப்ளையில் பல ரகம். அசத்துங்கள்...
-
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். கணேசனின் கணேச வணக்கம்.
https://www.youtube.com/watch?v=IWZB-XkYXFU
-
டியர் கோபால் சார்,
நினைக்காதபோது திடீரென்று 'நிற்பதுவே நடப்பதுவே' பாடலை அதிரடியாக ஆய்வு செய்து கலக்கிவிட்டீர்கள். மிக மிக அருமை. நீங்கள் சொன்னது உண்மை. பாரதி பாடல்கள் என்றாலே "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்று ஒரு பாட்டிலுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தவர்கள் மத்தியில் வித்தியாசமான பாரதியை காட்டியவர் ஞான. ராஜசேகரன். இவருடைய இன்னொரு வித்தியாசமான முயற்சியான தி.ஜானகிராமனின் 'மோகமுள்' படம் மக்களால் சரியாக வரவேற்கப்படாமல் போனதில் எனக்கு மிகவும் வருத்தம்.
'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது' பாடலின் மீள்பதிவும் அருமை. எத்தனைமுறை படித்தாலும் புதிதாகவே தோன்றுகிறது.
வாழ்த்துக்கள்...
-
டியர் கார்த்திக் சார்
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
This post is dedicated to கார்த்திக்...
1954 ஆனால் என்ன 2014 ஆனால் என்ன நான் நான் தான் ... என மெல்லிசை மன்னர் சூளுரைத்து சவால் விட்டிருக்கும்... பாடல்...
காலம் மாறிப் போயாச்சே... யாவும் வேகமாயாச்சே...
ஸ்ரீநிவாஸ் இசையில் சிரிஷாவின் சிறகடிப்பேன் ஆல்பத்திற்காக மெல்லிசை மன்னர் சிரிஷாவுடன் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டால்...
நான் சொல்வது சரி என தாங்களும் ஒத்துக் கொள்வீர்கள்..
https://www.youtube.com/watch?v=Ppw-dj01gEg
-
டியர் மது சார், ராஜேஷ் சார், வினோத் சார், கிருஷ்ணாஜி..
உங்கள் அனைவரின் அரிய உழைப்பினால் கிடைக்கும் அத்தனை வீடியோ பதிவுகளுக்கும் நன்றி. பாவாடை, தாவணிப்பாடல்கள் வரிசையில் கலக்கி விட்டீர்கள். சீனியர் பானுமதி முதல். மஞ்சுளா வரை ஒருத்தர் தாவணியையும் விட்டுவைக்கவில்லை. (தப்பா எடுத்துக்க வேண்டாம், எல்லாபாடல்களையும் ஒரு கை பார்த்துட்டீங்கன்னு சொன்னேன்)
சின்னக்கண்ணன் சார், ...
கலக்குறீங்க. அன்றைய பத்திரிகைகள் வரிசையில் கொய்யா, கொக்கரக்கோ எல்லாம் படித்ததில்லையா...
-
அது மட்டுமல்ல ,கண்ணன்,கோகுலம்,பாலகன் (விஜயா), ஜிங்லி என்று ஏக பட்டது.
-
டியர் வாசு சார், மது சார்,
நடன மேதை கோபிகிருஷ்ணா பற்றிய பதிவுகளும், நிழற்படங்களும் ரொம்ப அற்புதம். காணக்கிடைக்காதவை. அவரைப்பற்றிய பதிவுகள் தொடர்ந்து, பாட்டும் பரதமும் வரை வந்து முடிவுற்றிருப்பது ரொம்பவே பொருத்தம். 'உலகம் நீயாடும் சோலை' பாடல் முடிவு எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும்.
நடன இயக்குனர் சலீம் பல்வேறு தமிழ்ப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். நடிகர்திலகத்தின் 'பாபு', மக்கள் திலகத்தின் 'சிரித்துவாழ வேண்டும்' படங்களும் அவற்றில் அடக்கம். பாபுவின் 'வரதப்பா வரதப்பா' நடனத்தை மறக்க முடியுமா?...
-
-
இப்போது கொஞ்சம் ரொம்ப நாள் விட்டதை தொடர்வோம். இசையமைப்பாளர்களுக்கு pentatonic scale என்ற ஐந்து ஸ்வர ராகங்கள் என்றால் உயிர். ஒரு Octave இல் ஐந்து ஸ்வரங்கள் மட்டுமே.
உதாரணம் மோகனம்
http://www.ragasurabhi.com/carnatic-...--mohanam.html
இந்த மோகன ராகம் நமது பண்டை கால முல்லை பண் முதல் இந்தோனேசியா,சீனா,ஜப்பான்,எகிப்து,கொரியா தாய்லாந்து,ஐரோப்பா,ஆப்பிரிக்கா ,லத்தின் அமெரிக்கா,நிறைய பழங்குடி சங்கீதங்கள் எங்கு சுற்றி வந்தாலும் ,நிறம்,குணம்,தரம் மாறாமல் பல பாடல்களுக்கு அடிப்படை.
ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , இசையமைப்பாளர்கள் இஷ்டத்துக்கு விளையாடி முத்தெடுக்கலாம். மோகனம், மத்யமாவதி போன்ற pentatonic ராகங்களில் நூற்று கணக்கான பாடல்கள் மொய்க்க இந்த fexibility காரணம்.மெல்லிசைக்கு படு தோதானது.
நான் சொல்வதை நிரூபிக்க கீழ்கண்ட pentatonic ,பலவேறு நாடுகளை சார்ந்த இசையில் அழைக்க படும் பெயர்களை பாருங்களேன்!!!
G Pentatonic: G - A - C - D - F
Yo: Japan, Suspended Pentatonic, Raga Madhyamavati, Madhmat Sarang, Megh, Egyptian, Shang, Rui Bin, Jin Yu, Qing Yu: China
G Pentatonic: G - A - C - D - E
Ritusen, Ritsu (Gagaku): Japan, Zhi, Zheng: China, Raga Devakriya, Durga, Suddha Saveri, Arabhi, Scottish Pentatonic, Ujo, P'yongjo: Korea, Blues Major, Major complement