[quote]சுந்தர்ராஜன் சார்
மதுரையில் பாவமன்னிப்பு ரசிகர்கள் அளப்பரை பதிவுகள் மிகப்ரமாதம்.. மதுரை சிவாஜி ரசிகர்கள் ஈடுஇனை யில்லாதவர்கள் என்பதை நிருபித்து விட்டீர்கள்.
ஞாயிறு அன்று மதுரையிலும் திருச்சியிலும் சிவாஜி புயல் வீசியிருக்கிறது
Printable View
murali sir will be on cloud nine for the madurai record !!!! : :-D
ரவிகிரன் சூர்யா சார்Quote:
திருச்சி சிவாஜி ரசிகர்களின் மாசை மீண்டும் நிருபிப்போம் என்னைப்போல் ஒருவன் வரவேற்பு விழாவில்
மலைக்கோட்டை ஹைட்டைப்பாரு --- சிவாஜி வெயிட்டைப்பாரு
we are waiting........................................
An old advertisement I found in a book 'attai' done about 55 yrs ago! Interesting!
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...67edcb62e0e991
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
' மயக்கம் என்ன -இந்த
மவ்னம் என்ன ..-மணி
மாளிகை தான் கண்ணா ...''
1972-ஆம் வருடம் மகாதேவனின் இசையில் நடிகர் திலகம் - வாணிஸ்ரீ இணைந்து நடித்த வசந்த மாளிகை படப்பாடல் !
1972 ல் வெளி வந்த இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ,
அவற்றில் கே.வி. மகாதேவனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது !
முதல் முதலாக தமிழ் சினிமா டூயட் பாடலில் , ஸ்லோமோஷன் முறையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் காட்சி இது தான் !.
கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கின்றன.!
உயிரோடு இருக்கும் காதலிக்காக வசந்த மாளிகை கட்டி தன் காதலை நாயகன் வெளிப்படுத்தியபிறகு இருவரும் இணைந்து பாடும் பாடல் இது !
இந்த பாடலுக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு !.
"வசந்த மாளிகை" படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நடிகர் திலகத்தின் ஆருயிர் அன்னையான ராஜாமணி அம்மாள் காலமாகிவிட..... தாயின் மரணத்தால் படிப்பிடிப்பு தடைப் பட்டிருந்த நேரம்...
ராஜாமணி அம்மாள் மறைந்த ஐந்தாவது நாள் நடிகர் திலகம் , படத்தின் தயாரிப்பாளரையும் , இயக்குனரையும் தொலைபேசியில் அழைத்து
"வீட்டில் இருந்தா அம்மாவோட நினைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாளைக்கே ஷூட்டிங் வச்சுக்கலாம். .... நான் வரேன்".
என்று கூற
அவசர அவசரமாக படப்பிடிப்பு குழுவினர் ஒன்று சேர ....
மறுநாள் காலையில், தனது வழக்கப்படி குறித்த நேரத்தில் நடிகர் திலகமும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார் !
தனது தாயார் மறைந்த சோகத்தை சற்றுக்கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடிக்க வந்த அன்று படமாக்கப்பட்ட காட்சி இந்த பாடல் காட்சி தான் !
ஆனால் , பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் கூட அந்த மாபெரும் கலைஞனின் ஈடுபாடு நம்மை பிரமிக்க வைக்கும். தனது சொந்த சோகத்தின் வெளிப்பாடு கடுகத்தனை அளவுகூட தெரியாத வண்ணம் அற்புதமாக இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார் நடிகர் திலகம் !
https://youtu.be/ipjrLKWwJXM?t=13
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
//// நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா? ////
இந்த பாடலின் வெற்றிக்கு சிவாஜியின் நடிப்பே முக்கிய காரணம்
அதற்க்கு அடுத்துத்தான் வரிகளும், இசையும்.
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?
ஆஹா..ஹா..ஓஹோ..ஹோ....
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
அன்பே..ஆருயிரே..
இன்பமே..இனியவளே..
பண்போடு..அன்போடுப் படியேறி வந்தவளே..
பார்த்துப் பார்த்து மயங்க வைத்து
காத்துக் காத்து நிற்க வைத்த கண்ணே - உன்மேல்
பாட்டுப் பாட..பாட்டுப் பாட
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில்
பெண்மை இல்லையே?
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா?
அம்மா தாயே..தாயே..
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
படம் : படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
https://youtu.be/o17JQ6TWP30
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
சுந்தரராஜன்
பாக்ய சக்கரம்... நிஜமாகியிருந்தால்.. சூப்பர் ஸ்டார்களின் சங்கமமாகியிருக்கும் ...
இருந்தாலும்...
தங்களுடைய நிழற்படம்... கோடானு கோடிக்கும் ஈடாகாது.. அதற்கும் மேலே...
https://lh4.googleusercontent.com/-l...titled1234.png
மதுரை ... என்ன... திருச்சி.. என்ன....Quote:
murali sir will be on cloud nine for the madurai record !!!! :
என்னதான் சொல்லுங்க...
எங்கள் சென்னைக்கு ஈடாகுமா...
எவ்வளவு படங்கள்... சென்னையில் 100 நாட்களையும் வெள்ளி விழாக்களையும் லகுவாக கடந்து வெற்றி வாகை சூடியுள்ளன..
அது மட்டுமா மறுவெளியீட்டில் முதன் முதலில் வெள்ளி விழா கம்பத்திற்கு மிக அருகில் வந்து நின்ற வெற்றிக் குதிரை கர்ணனுக்கு வெண்சாமரம் வீசிய நகராயிற்றே...
எந்தத் தலைமுறையானாலும் எந்தத் திரையரங்கானாலும் சூப்பர் வசூல் சக்கரவர்த்தி என்று பட்டயம் கட்டியது எங்கள் சென்னை தானே...
சரஸ்வதியானால் என்ன சத்யம் ஆனால் என்ன.... பிவிஆரானால் என்ன, பிரபாத் ஆனால் என்ன..
எங்கும் எதிலும் என்றும் வெற்றிக் கனியைத் தருவது சென்னை யன்றோ..
கட்டபொம்மன் கர்ஜிக்கத் தானே போகிறான்...
வெற்றிக் கொடி நாட்டத் தானே போகிறான்...
டி எம் எஸ்ஸின் உணர்ச்சி மிகுந்த குரல், கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள், சின்ன சின்ன பாங்கோஸ் ஒலிகள், மௌத் ஆர்கனின் பின்னணி இசை, கொஞ்சம் எதிரொலி effect, சிவாஜியின் நடிப்பு இவைகள் இந்த பாடலை எங்கோ கொண்டு செல்கின்றன. இப்படியெல்லாம் பாடல்கள் இனி வரவே வராது, அது உண்மை
https://youtu.be/56JMIqJZ5xY
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.