Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி. 70-களில் கர்ணன் பார்த்த விவரத்தை ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷனாகத்தான் சொன்னேன். அதையும் கூட பாராட்டும் பெருந்தகையாளர் தாங்கள்தான்.
எல்லா விஷயங்களிலும் நடிகர்திலகத்தை முன்னிலைப்படுத்துவது தங்கள் வாடிக்கையென்பது அனைவரும் அறிந்தத் விஷயம். அதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம், மறைந்த நகைச்சுவைக் கலைஞர் லூஸ் மோகனுக்கான அஞ்சலிப் பதிவில், அவர் நடிகர்திலகத்தைப்பற்றிக் கூறியிருந்த அருமையான பேட்டியைப் பதிப்பித்து விட்டீர்கள். 'என் திருமணமே நடிகர்திலகத்தின் செலவில்தான் நடைபெற்றது' என்று லூஸ் மோகன் கூறியிருப்பது இதுவரை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?. நம்மவருக்கு செய்யத்தான் தெரியுமே தவிர அதை விளம்பரபடுத்தத் தெரியாதே.
திரைப்படக்கலைஞர்கள் மட்டுமல்லாது, அவரால் பயனடைந்த, பலன்பெற்ற காங்கிரஸ்காரர்களும் ஏராளம். ஆனால் எதையும், பத்திரிகை நிருபரை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு செய்ததில்லை. அப்போது தெரியாவிட்டாலும் இப்போதாவது எல்லோருக்கும் தெரியட்டுமென்று, ஆவணங்களைத் தேடித்தேடியெடுத்து வந்து விருந்து படைக்கும் தங்கள் கருணை உள்ளத்துக்கு பாராட்டுக்கள்.