http://i49.tinypic.com/zxlh1k.jpg
Printable View
உலக மொழிகளில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளிவந்துள்ளன .அந்தந்த மொழிகளில் பல திறமையான நடிகர்கள் அற்புதமாக நடித்து அந்த மொழிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் .
என்னுடைய பார்வையில் நான் பார்த்துள்ள பல மொழி படங்களில் என்னை கவர்ந்த முதல் நடிகர் மக்கள் திலகம் .
http://i47.tinypic.com/9amhyr.png
மக்கள் திலகத்தின் நடிப்பில் நான் கண்ட சிறப்புக்கள் .
இயல்பான ,இயற்கையான நடிப்பு .
பாத்திரத்தின் தன்மை அறிந்து உணர்ச்சிகளை வெளி படுத்தும் ஆற்றல் .
வீரம் - காதல் -சோகம் -சிரித்த முகத்துடன் எதிரிகளிடம் மோதுவது .
ராஜ உடையில் அசல் மன்னனை போல் தோற்றமளிக்கும் உருவம் .
படத்துக்கு படம் புகுத்தும் புதுமை காட்சிகள் .
சமூகத்திற்கு தேவையான தத்துவங்கள் - பாடல்கள் வழங்கிய விதம் .
தீய பழக்கங்கள் எதனையும் தனது படத்தில் இடம் பெறாமல் பார்த்து கொண்டது .
தாய் பாசத்தை பெருமைபடுத்திய பல படங்கள் .
http://i50.tinypic.com/2ivi5hl.jpg
ராஜகுமாரி - சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -
குலேபகாவலி -அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் -
புதுமைபித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் -அரசிளங்குமரி -ராஜாதேசிங்கு -காஞ்சித்தலைவன் - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - போன்ற ராஜா காலத்து படங்களில் அவர் ஏற்ற கதா பாத்திரங்கள் நிஜ மன்னர்களை போல் ஜொலித்து காட்டினார் .
http://i45.tinypic.com/smvhfk.jpg
சேர -சோழ -பாண்டிய மன்னர்களாகவும் - காஞ்சி பல்லவ மண்ணாகவும் நடித்து
இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார் நம் மக்கள் திலகம் .
கால் போக்கில் மாறி வரும் கலை உலகில் மக்கள் திலகமும் தனது நிலையினை மாற்றி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக பல சமூக படங்களில் அபாரமாக நடித்து கோடிக்கணக்கான் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் என்பது உலகமறிந்த வரலாற்று உண்மை .
தன்னாலும் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டி படங்கள் .
மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - திருடாதே - நல்லவன் வாழ்வான் - சபாஷ் மாப்பிளே - தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன் - பணத்தோட்டம் - பெரிய இடத்து பெண்- ஆனந்த ஜோதி - வேட்டைக்காரன் -பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டுபிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -
காவல்காரன் - குடியிருந்த கோயில் -ஒளிவிளக்கு - அடிமை பெண்- நம்நாடு - மாட்டுகார வேலன்- ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - நான் ஏன் பிறந்தேன் - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவநண்பன் போன்ற படங்கள் .
இனிமையான பாடல்கள் - மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் தத்துவ பாடல்கள் .புதுமையான சண்டை காட்சிகள் - தனது வாழ்வில் நடந்த துப்பாக்கி தாக்குதல் மூலம் குரல் வளம் பாதிக்க பட்டாலும் அந்த குறை தெரியாமல் ,ரசிகர்கள் ஏற்று கொண்ட விதம் , 50 வயதுக்கு மேல் எந்த ஒரு உலக நடிகருக்கும் கிடைக்காத இளமை குன்றாத பொலிவான முகம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் என்று நடித்து இன்றும் உலகளவில் பேசப்படும் முதல் நடிகர் எங்கள் மக்கள் திலகம் .
http://i46.tinypic.com/y1oy9.jpg
அவரது சாதனை பட்டியல் தொடரும் .
esvee
FROM NET-
தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப் போற்றுவதில் உள்ள குணம் தெளிவாகிறது.
இன்றைக்கு Brand image பற்றி பேசுபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரிடம் பாடம் கற்க வேண்டும். அந்தளவிற்கு ஆரம்பம் முதலே மிகக் கவனமாக தனது பொது ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். நடிகர் எம்.ஜி.ஆரை விட அரசியல்வாதி எம்.ஜி.ஆரே எனக்கு பிடித்தமானவர். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் அவருடைய போக்கு விதிவிலக்கான ஒன்று.
சினிமாவில் கூட அவரது கவனம் அடித்தட்டு மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடலொன்றிற்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டி எம்.ஜி.ஆருக்கு ஒலிப்பதிவுக் கூடத்தில் போட்டுக் காட்டினாராம். (திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர்களை மீறி கதாநாயகர்களின் தலையீட்டை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆராக இருக்கலாம்). உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.
வடசென்னையில் உள்ள நடராஜ் தியேட்டரை கடக்கும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அப்போது வெளியிடப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்குக்கூட நட்சத்திர அட்டைகளும், காகித மாலைகளும் அணிவிக்கப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது 1978-ல் என்று நினைக்கிறேன். ஒருவர் நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகள் கழித்தும் கூட அவரது ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது வியப்புக்குரியது. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு முதல்வரானது கூட இதற்கொரு துணைக்காரணமாக இருக்கலாம். 'எம்.ஜி.ஆர் இறந்து போய் பல வருடங்களாகிறது' என்று சொன்னதை நம்ப மறுத்து அவ்வாறு சொன்னவரை அடிக்கப்போன ஒரு குக்கிராமத்து மூதாட்டியைப் பற்றி எதிலோ படித்த நினைவு. இது பத்திரிகைகள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம் என்றாலும் யோசித்துப் பார்க்கும் போது அது உண்மையாகக் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
கோவை - திருப்பூர் - கோபி - பொள்ளாச்சியை தொடர்ந்து தாராபுரத்தில் (dharapuram vasantham theatre) ரகசிய போலீஸ் 115 - (11.12.2012) செவ்வாய் முதல்.