Kovai Royal Entrance - Sandhippu
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w996-h544
அன்புடன்
Printable View
Kovai Royal Entrance - Sandhippu
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w996-h544
அன்புடன்
Thanks Vasu for updating the information.
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w996-h544
Regards
மாற்று திரி நண்பர் பதிவு செய்த காவல்காரன் ஒரு சிறந்த வெற்றிப்படம் என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
மாற்று திரி நண்பர் மீண்டும் பதிவு செய்த ஆவணமாக ஏற்றுக்கொள்ளமுடியாத
"ரசிகர் மன்ற நோட்டீஸ்" ஒரு தகவல் தந்துள்ளது. அதில் ஒரு மாபெரும் உண்மையும் வேண்டுமென்றே புதைத்துவைக்கபட்டுள்ளது !
முதலில் அந்த ரசிகர் மன்ற நோடிசில் நம்மை பற்றிய தகவல் என்ன என்பதை பார்ப்போம் பிறகு புதைந்து கிடக்கும் உண்மைக்கு வருவோம் !
http://i501.photobucket.com/albums/e...psb06a7452.jpg
மேலே இவர்கள் அச்சடித்துள்ள நோட்டீஸ் - அதில் 107 நாள் வேலூர் ராஜாவில் நம்முடைய நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த பாவ மனிப்பு திரைபடம் ஓட்டபட்டதாம். இவர்களுடைய இந்த தில்லு முல்லு திசை திருப்பும் வேலை என்ன என்பதை சற்று பாருங்கள் !
வேலூரில் நம்முடைய படம் 107 நாள் ஓடியது .....இவர்களுடையது ஓடவில்லை !!!!.
அதனால் இவர்களுக்கு அப்படி ஒரு வயிதெரிச்சல் அதை இப்படி எழுதி தனித்து ஒரு நோட்டீஸ் விட்டுள்ளார்கள் அந்த காலத்தில் !!
இது ஒரு விஷயம் ! சாதாரணமான எப்போதும்போல நடக்கும் விஷயம் !
இதில் புதைந்துள்ள உண்மை என்ன தெரியுமா ?
இவர்கள் குறிபிட்டுள்ள வசூல் பற்றியது !
பாவமன்னிப்பு வெளியான தேதி: [U]16-03-1961[/U]
காவல்காரன் வெளியான தேதி : 15-01-1967
பாவமன்னிப்பு வெளிவந்து ஆறு வருடம் ( AFTER 6 YEARS )கழித்து இவர்கள் காவால்காரன் அதுவும் குண்டடிபட்டபிறகு வெளிவரும் முதல் திரைப்படம்..அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருந்த திரைப்படம் கூட !
1961இல் பாவமன்னிப்பு வெளியானபோது வேலூர் ராஜா திரை அரங்கில் டிக்கெட் நுழைவுகட்டணம் இவர்களுடைய 1967இல் வெளியான காவல்காரன் திரைப்படம் வெளியானபோது உள்ளகட்டனத்தைவிட சரிபாதிக்கும் கீழாகும் என்பதே உண்மை !
மேலும் நம்முடைய 1961இல் வெளிவந்த பாவமன்னிப்பு திரைப்படத்தை நாட்கள் விகிதம் படி வெற்றிகொள்ளமுடியவில்லை என்பது ஒன்று. மேலும் இவர்களுடைய திரைப்படம் வெளிவந்தபோது உள்ள கட்டணத்தின் படி நாம் கணக்கிட்டால் நம்முடைய வசூல் அதே 50 நாளுக்கு எங்கோ போய்விடும் என்பது மாபெரும் உண்மை. !
அப்படி வசூலில் பாவமன்னிப்பு திரைப்படத்தைவசூலை வெற்றிகண்டதாக ஒரு வாதத்திற்கு வைத்துகொண்டாலும்.....பாவமன்னிப்பின் வசூலை முறியடிக்க 6 வருடம் மற்றும் டிக்கெட் விலை உயர்வு தேவைப்பட்டது என்பதே இதிலிருந்து புரிந்துகொள்ளவேண்டியது !
1952இல் வெளியான பராசக்தியுடன் 1967இல் வெளியான காவல்காரன் திரைப்பட வசூலை ஒப்பிடிருந்தால் காவல்காரன் வசூல் வித்தியாசம் இன்னும் பிரம்மாண்டமாக மக்களுக்கு பார்வையில் பட்டிருக்கும் !
அதே வருடம் வெளியான ஓடாத வசூலாகாத வேருபடத்தை ஒப்பிட்டு சொன்னால் கூட பரவா இல்லை அதை விடுத்து 1961இல் வெளிவந்த படம் ஒரு சரியான ஒப்பீடா ?.
அதே 1967 வருட படம் ஒப்பிடவே இல்லையே அந்த நோடிசில். இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் அந்த வருடம் நடிகர் திலகம் அவர்களுடைய சுமார் வெற்றி பட வசூலை கூட மற்ற படங்கள் முறியடிக்கவில்லை என்றே முடிவாகிறது !!!
ஆக எந்தகாலத்திலும் மேற்கூறிய உதாரணத்தின் மூலம் இவர்களின் சமகால படங்கள் நடிகர் திலகத்தின் வசூலை வெற்றிகொண்டுள்ளதா என்பதை கேள்விக்குறியாக படிப்பவர் யூகத்திர்க்கே விட்டு விடலாம் !
RKS
பொன்மனச் செம்மலின் காவல்காரன் வெளியான தேதி 15-1-1967 அல்ல நண்பரே, 7-9-1967ல் வெளியானது அந்தப் படம். இந்த தவறான தகவலில் இருந்தே உங்களின் மற்ற கருத்துக்களில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதையும் படிப்பவர்கள் யூகத்திற்கே விட்டு விடலாம். எல்லாம் அந்த சுப்பிரமணியனுக்கே வெளிச்சம். (நான் முருகக் கடவுளை சொல்கிறேன்).
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
மற்ற தகவல்...அது என்ன தகவல் நண்பரே ?
தகவல் முழுவதும் கொடுத்துள்ளது அந்த ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ்.
தேதியில் தவறு உள்ளதற்கு காரணம் ...அதை நான் எடுத்த இடம் !
சற்று கவனக்குறைவினால் வந்த விளைவுதானே ! தேதி தான் தவறு நண்பரே...! சரியான தேதியை மட்டும் குறிப்பிட்டு சொன்ன தங்களுக்கு எனது நன்றி !
நான் குறிப்பிட்ட வருடம் தவறு அல்ல !
தவறு எதனால் என்று கீழே கொடுத்துளேன்...பார்த்துகொள்ளவும்..!
http://i501.photobucket.com/albums/e...ps4b3021fb.jpg
அதில் காவலன் என்று எழுதியதை கவனிக்க வில்லை. காரணம் கீழே காவல்காரன் பற்றி தகவல் இருந்ததால் ..!
எனினும் ரிலீஸ் செய்த வருடம் 1967 குறித்து நான் எந்த தவறான தகவலையும் அந்த நோடிசில் உள்ளதுபோல வேண்டுமென்றே செய்யவில்லையே !..!
மேலும் பாவ மன்னிப்பு ரிலீஸ் செய்த வருடம் 1961....AND A PROOF FOR THIS !
http://i501.photobucket.com/albums/e...psf17c2237.jpg
இதை பார்ப்பவர்கள் எதில் உண்மை உள்ளது எது பொய் கலந்தது, எது தவறான துற்பிரசாரம் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்வார்கள் ! தெரிந்துகொள்ளட்டுமே !
நடிகர் திலகம் பற்றிய உண்மை தகவல்கள் காழ்புணர்ச்சியால் எப்படியெல்லாம் அந்த BLACK & WHITE நாட்கள் முதலே மறைக்கப்பட்டு, திரித்து எழுதப்பட்டு பொய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அங்கு பதிவு செய்த ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் பார்த்து இப்போதாவது உணரட்டுமே !
சுப்ரமணியனுக்கு வெளிச்சம் என்றாலும் சரி...ஐயப்பனுக்கு வெளிச்சம் என்றாலும் சரி..!
வெளிச்சம் வந்து இருட்டு விலகினால் சரி !
"பொய்கள்" இருட்டுள்ள குன்று போல குவிந்து கிடக்கும் இடம் எல்லாம் இருள் நீக்க அந்த சுப்பிரமணியர் வருவார் அன்பரே !
நானும் அந்த முருககடவுளை தான் சொன்னேன் !
ஒரு சில நாட்களுக்கு முன்பு இங்கே இரண்டு திரி பங்களிப்பாளர்களுக்கு இடையே மோதல், வாக்குவாதம் ஏற்பட்டபோது நண்பர் கோபால் அவர்கள் இதை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அதை நண்பர் செல்வகுமார் அவர்களும் வழி மொழிந்தார். அதன் பிறகு இங்கே எந்த எதிர்மறை விமர்சனமும் முன் வைக்கப்படுவதில்லை. ஆனால் மோதல் போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பது என்ற எண்ணத்தை முன் நிறுத்தி ஒரு சில நண்பர்கள் நடிகர் திலகத்தை தாக்கி பதிவிடுவது பழைய நாட்களில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவர்தம் படங்களைப் பற்றியும் அவதூறு கூறும் ரசிகர் மன்ற நோட்டிஸ்களை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
நண்பர் செல்வகுமார் அவர்களே இந்த செயல் உங்களுக்கு ஏற்புடையதுதானா? நீங்கள் திரிக்கு வழிகாட்டியாக செயல்படுவதாக சொல்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் இதை மேலும் தொடர விடாமல் தடுத்து நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.
RKS,
As told earlier, please ignore such comments.
அன்புடன்
ராஜபார்ட் ரங்கதுரை. இந்த படத்தை மெருகேற்றி டிஜிட்டல் வடிவில் வெளியிட இருக்கும் நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்தம் முயற்சிக்கு வாழ்த்துகளை சொல்லி விட்டு பேசிக் கொண்டிருந்தேன். படம் இது போன்று DI செய்யப்பட்டு வெளியாகப் போகிறது என்ற தகவல் பத்திரிக்கை விளம்பரம் மூலமாகவும் போஸ்டர்கள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. அதில் தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் வந்த அழைப்புகளை நண்பர் விவரித்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அவரிடம் தொடர்பு கொண்டிருக்கின்றனர். அழைத்த அனைத்து எண்களையும் store செய்து வைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் அலைபேசியின் limitations காரணமாக எண்கள் அவரால் store செய்ய முடியவில்லை. பிறகு வந்த எண்களை ஒரு நோட்டு புத்தகத்தில் குறித்து வைத்திருக்கிறார். அழைத்த ஆயிரம் பேரில் பாதிக்கு மேல் பொது மக்கள். சில நேரங்களில் மகிழ்ந்து, சில நேரங்களில் கலங்கி, சில நேரங்களில் நெகிழ்ந்து, சில நேரங்களில் பிரமித்து போயிருக்கிறார்.
ரசிகர்கள் கூப்பிடுவது பெரிதல்ல. ஆனால் பொது மக்கள் அழைத்து வாழ்த்தியதை பற்றி சொல்லும்போது பலர் உணர்ச்சிப்பூர்வமாக பேசியதை நண்பர் பகிர்ந்துக் கொண்டார்.
முதன் முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் வந்த அலைபேசி அழைப்பு ஸ்ரீரங்கம் கோவிலருகே வசிக்கும் ஓர் பெண்மணியிடமிருந்து. காலையில் பால் வாங்க சென்றபோது போஸ்டர் பார்த்துவிட்டு அழைத்து தன மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் இந்த படத்தை டிஜிட்டலில் மறு வெளியீடு செய்வதன் மூலம் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும் என்று ஆசி கூறியிருக்கிறார்.
திருவண்ணாமலை திருக்கோயில் குருக்கள் ஒருவர் தொடர்பு கொண்டு ஆசி வழங்கி இந்த படம் வெற்றி பெற தானே பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைப்பதாகவும் கூறியதை புல்லரிப்போடு பகிர்ந்துக் கொண்டார் நண்பர் பால்கிருஷ்ணன்.
ஓசூரில் தொழிர்சாலியில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் சொன்ன வாழ்த்து, கிருஷ்ணகிரி பெண்ணாகரம் போன்ற இடங்களில் வாழும் அடித்தட்டு மக்களின் அழைப்பு, சேலம் நாமக்கல் சங்ககிரி போன்ற இடங்களில் இருந்து பொது மக்கள் அழைத்து படத்தைப் பற்றியும் அவர்களின் விருப்பமான காட்சிகளைப் பற்றியும் சொன்னது.
மணப்பாறையில் மருத்துவர்களாக பணிபுரியும் கணவன் மனைவி இரண்டு பேரும் அரை மணி நேரம் படத்தை பற்றி பேசி படத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசியது மனதிற்கு எவ்வளவு உற்சாகத்தை தந்தது என்பதை நண்பர் விளக்கினார்.
விருத்தாசலம் அருகே ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் பேசியது உண்மையிலே பெரிய மகிழ்ச்சி என்றால் இரண்டு மூன்று நாள் கழித்து அதே மாணவன் தன் மூன்று நான்கு நண்பர்களையும் சேர்த்து பேச வைத்தது அதை விட சந்தோஷமாக இருந்தது என்று சொன்னார்.
இப்படி மதுரை திண்டுக்கல் தேனி, காரைக்குடி, ராமநாதபுரம்,விருதுநகர் பழனி,சிவகாசி ராஜபாளையம் கோவை, கோபி பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, ஈரோடு திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் என்று தமிழகத்தின் அனைத்து நகரங்களிலுமிருந்து பல்வேறு தரப்பினர் அழைத்த விவரங்களை பகிர்ந்து கொண்டார் நண்பர்.
இந்த அழைப்புகளை வைத்து நண்பர் புரிந்துக் கொண்ட விஷயங்களை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இப்படி கூறலாம்.
ஜாதி மத மொழி இன அரசியல் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி நடிகர் திலகத்தின் மேல் தமிழ் மக்கள் வைத்திருக்கும் அன்பு. அதற்கு எல்லையே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை படம் என்பது தமிழ் மக்கள் பலருக்கும் மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக இன்றும் திகழ்கிறது என்ற நிதர்சன உண்மை.
அவர்கள் அந்தப் படத்தை பெரிய திரையில் டிஜிட்டல் வடிவில் காண வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு ஆர்வமாக ஆவலாக இருக்கிறார்கள் என்ற உண்மை.
தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிருந்தெல்லாம் ரசிகர்கள் அழைத்து தங்கள் ஊருக்கு போஸ்டர் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்பதையும் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் எந்தளவிற்கு மக்களை கவர்ந்திருக்கிறது என்பதை அவர்கள் பேச்சிலிருந்தே புரிந்துக் கொள்ள முடிகிறது என்பதையும் நண்பர் விவரித்தார்.
இந்த எதிர்பார்பெல்லாம் நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு புறம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தாலும் இத்தனை பேரின் எதிர்பார்ப்பை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற பயமும் மனதில் தோன்றியிருக்கிறது என்றார்.
இதுவரை இந்த டிஜிட்டல் வெளியீடு முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சென்னை வாழ் மக்கள்.முதன் முறையாக தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஒரு உண்மை சிவாஜ ரசிகன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நாகர்கோவில் மண்ணின் மைந்தர் என்று சொன்னாலே நடிகர் திலகம் மற்றும் பெருந்தலைவரின் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என கூறினேன்.
படத்தின் டிஜிட்டல் வேலைகளை முன்னெடுத்து செல்லும் நேரத்தில் மீண்டும் நம்முடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்வதாக நண்பர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மீண்டும் அவர்தம் முயற்சிக்கு தனிப்பட்ட முறையிலும் நமது நண்பர்கள் மற்றும் நமது நடிகர் திலகம் திரியின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கு நன்றி கூறி பேச்சை நிறைவு செய்தேன்.
அன்புடன்
From the earlier posting of Saradha Madam
சமீபத்தில் அந்த நாளைய கவர்ச்சி நடிகை 'ஜெய்குமாரி'யை ஒரு டி.வி.சேனலுக்காக பேட்டி கண்டிருந்தார்கள். அவருடைய மலரும் நினைவுகளை அசை போட்டார். (பார்க்க மிகவும் கலையிழந்து பொலிவிழந்து காணப்பட்டார். வயது மட்டும் காரணமல்ல, அவருடைய தற்போதைய வறுமைச்சூழலும் தான். கணவர் இறந்து விட்டாராம். நான்கும் பெண்குழந்தைகள். இன்னும் ஒன்றுக்கும் கல்யாணம் ஆகவில்லையாம். கேட்க மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த நிலையிலும் பழையவற்றை சுவையாகச் சொன்னார்).
அப்போது நடிகர் திலகத்தைப்பற்றிச் சொன்னது:
1973 ஜனவரி மாதம்னு நினைக்கிறேன். ரொம்ப நாளைக்குப்பிறகு சிவாஜி அண்ணாவை நடிகர் சங்க விழாவில் சந்தித்தேன். "என்னம்மா, எப்படியிருக்கே" என்று விசாரித்தார். சிறிய ப*டங்களில் சிறு சிறு வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடிப்பதாக சொன்ன நான் "அண்ணே.. 'எங்கிருந்தோ வந்தாள்' படத்துக்குப்பிறகு உங்களோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கலியேண்ணே" என்றேன். அதற்கு அவர் "அம்மாடி நீ இப்ப சொன்னதை (அவர் நெஞ்சைத் தொட்டுக்காட்டி) இங்கே வச்சிருக்கேம்மா. கூடிய சீக்கிரமே உனக்கு வாய்ப்பு வரும்" என்றார். அந்த நேரத்தில் சகுந்தலா அக்காதான் (சி.ஐ.டி.சகுந்தலா) அவருடைய படங்களில் அதிகம் நடித்து வந்தார்.
ஒரு மூன்று நான்கு நாள் கழித்து சுந்தரம் அண்ணன் (வியட்நாம் வீடு சுந்தரம்) போன் செய்து அவருடைய ஆஃபீஸுக்கு வரச்சொன்னார். போனேன்.என்னைக்கணடதும் சுந்தரம் அண்ணன் "வாம்மா, உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. சிவாஜி சாருடைய புதுப்படம் 'கௌரவம்' படத்துல நடிக்க சான்ஸ் வந்திருக்கு. உனக்கு சம்மதம்தானே" என்றார். எனக்கு சந்தோஷத்தில் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. "என்னண்ணே இப்படி கேட்கிறீங்க?. எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர் சொன்னார் "நேத்து சாயந்திரம் அவருடன் 'கௌரவம்' கதை பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தபோது "அந்த காக்கா வலிப்பு டான்ஸ்காரி ரோலுக்கு யாரைப் போட்டிக்கே"ன்னு கேட்டார். நான் "நம்ம சகுந்தலாவைத்தான் போட்டிருக்கேன்"னு சொன்னேன். "வேண்டாம். அவளை மாத்திட்டு ஜெய்குமாரியைப்போடு" என்றார். "ஏண்ணே?" என்று கேட்டேன் "சகுந்தலாவுக்கு நிறைய படம் இருக்கு. பாவம் இந்த பொண்ணுக்கு படமே இல்லையாம். நான் சொல்றேன் போடுறா" என்று அதட்டினார். நானும் போட்டுட்டேன். அது மட்டுமல்ல உனக்கு சம்பளத்தையும் சொல்லிட்டார்" என்று சொல்லி ஒரு தொகையைச் சொன்னார். நான் அசந்துட்டேன். நான் நடிக்க வந்து இதுவரை வாங்காத தொகை அது.
உடனே சிவாஜி அண்ணா வீட்டுக்கு போன் செய்து அண்ணன் இருக்கிறாரா என்று கேட்டேன். ஸ்டுடியோ பெயரைச்சொல்லி ஷூட்டிங் போயிருப்பதாக சொன்னார்கள். டாக்ஸி பிடித்துக்கொண்டு ஸ்டுடியோவுக்கு ஓடினேன் (அப்போது என்னிடம் காரெல்லாம் கிடையாது). அங்கே 'ராஜபார்ட் ரங்கதுரை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் அண்ணன் காலில் 'பொத்தென்று' விழுந்தேன். பதறிப்போன அவர் "அடடே எழுந்திரும்மா, இந்தாம்மா அவளைத்தூக்கிவிடு" என்று சொல்ல நடிகை ஜெயா என்னைத் தூக்கி விட்டாங்க. எனக்குப் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.
அதில் என்னுடைய ரோல் வெறுமனே 'காபரே' ஆடுவது மட்டுமல்ல, அந்த காக்காவலிப்பு ரோல் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கதையில் முக்கிய திருப்பமான ரோலாகவும், கதையின் பின்பகுதி என்னுடைய கொலையைச் சுற்றியே வருவதாகவும் அமைந்திருந்தது. நான் சொன்ன ஒரு வார்த்தையை மனதில் வைத்து உடனடியாக வாய்ப்பு தந்த அண்ணனை நான் எப்போதும் மறக்க முடியாது".
நடிகை ஜெய்குமாரி இந்த சம்பவத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவருடைய படங்கள் மட்டுமல்ல. அவர் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் கூட உணர்ச்சி மயமானவைதான்.
எங்க மாமா" (part - i)
நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா' வுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அழகான கதை, நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் மற்றும் அருமையான நடிப்பு, துறு துறுவென மழலைப்பட்டாளங்கள், அழ்கான கதாநாயகிகளாக ஜெயலலிதா மற்றும் நிர்மலா ('வெண்ணிற ஆடை' நமக்குத் தந்த இரு அற்புதங்கள்), வில்லனாக பாலாஜி (ரொம்ப பேர் இதை அவருடைய சொந்தப்படம் என்றே நினைத்திருக்கிறார்கள்), நகைச்சுவையில் கலக்கும் சோ, தேங்காய் மற்றும் ஏ.கருணாநிதி, என்றென்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அருமையான பாடல்கள் என பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஒரு அழகான படம்தான் 'எங்க மாமா'.
'ஜேயார் மூவீஸ்' என்ற நிறுவனம் இதற்கு முன் 'வேறொரு' கறுப்பு வெள்ளைப் படத்தை தயாரித்த பிறகு, நடிகர் திலகத்தை வைத்து வண்ணத்தில் தயாரித்த படம் இது. (இதன் பிறகு இதே நிறுவனம் நடிகர் திலகத்தை வைத்து 'ஞான ஒளி', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். அவையிரண்டும் நூறு நாட்களைத் தாண்டி ஒடின).
'எங்க மாமா' திரைப்படம் இந்தியில் வெளியான 'பிரம்ம்ச்சாரி' என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. (ஒரு சில காட்சிகள் மாற்றப்பட்டிருந்தன. இந்திப்படத்தில் இருந்த பாம்பு கடிக்கும் காட்சி தமிழில் இல்லை). இந்தியில் ஷம்மி கபூர், ராஜஷ்ரீ, மும்தாஜ், பிரான் ஆகியோர் நடித்திருந்தனர்.
கதைச்சுருக்கம்:
திருமணம் ஆகாத 'கோடீஸ்வரன்' (பெயர்தான் கோடீஸ்வரன், மற்றபடி அன்றாடம் காய்ச்சிதான்) பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞன். அத்துடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதி நேரப் பாடகன். குழந்தைகள் மேல் அன்பு கொண்ட அவர் ஒரு வாடகை வீட்டில் தங்கி தன்னுடன் பல அனாதைக்குழந்தைகளை வைத்து அவர்களுக்கு உண்வு, உடை, கல்வியறிவு என அனைத்தையும் வழங்கி ஒரு தந்தையாக இருந்து அன்புடன் வளர்த்து வருகிறார். தன் வீட்டின் முன்பு ஒரு தொட்டில் கட்டி வைத்திருக்க அதில் அனாதைக்குழந்தைகளை மற்றவர்கள் போட்டு விட்டுப் போவதும் அதை இவர் எடுத்து வளர்ப்பதும் இப்படியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் வழக்கமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர், இனிமேல் குழந்தைகள் படம் கொண்டு வந்தால் பணம் தமாட்டேன், மாறாக அழகான இளம்பெண்களின் கவர்ச்சியான படங்கள் வேண்டும் என்று கண்டிஷன் போட, வேறு வழியில்லாத இவர் கடற்கரையில் குளிக்கும் இளம்பெண்களை படம் எடுக்கும்போது, ஒரு பெண் (ஜெயலலிதா) தற்கொலை செய்து கொள்ள ஆயத்தமாக நிற்பதைக் கண்டு பதறி ஓடிப்போய் அவளைக் காப்பாற்றுகிறார். வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடைய கதையை கேட்க, அவ, தன்னுடைய பெயர் சீதா என்றும் தன்னுடைய தாய் தந்தையர் இறந்து விட்டனர் என்றும் கிராமத்திலிருந்து வந்த தன்னை, தனக்கென ஏற்கெனவே திருமணம் செய்ய முடிவு செய்து வைத்திருந்த தன் அத்தை மகன் முரளி கிருஷ்ணன் (பாலாஜி) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறாள்.கோடீஸ்வரனும் (சிவாஜி) குழந்தைகளும் சீதா மேல் இரக்கப்பட்டு அவளை அவள் அத்தை மகன் முரளியுடன் சேர்த்துவைக்க முடிவெடுக்கின்றனர். அதே சமயம், குழந்தைகளை வளர்க்க தன்னுடைய வருமானம் போதாமல் கஷ்டப்படும் கோடீஸ்வரன், முரளியுடன் சீதாவை சேர்த்து வைத்து விட்டால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் (அப்போ அது பெரிய தொகை) முரளியிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று, சீதாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.
முதலில் முரளியின் நடவடிக்கைகளை அறிய விரும்பும் கோடீஸ்வரன், தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே பிறந்த நாள் கொண்டாட வரும் முரளியிடம் அந்த ஓட்டலின் பாடகனாக அறிமுகம் ஆகிறார். முரளியின் வேண்டுகோளுக்கிணங்க, முரளியின் காதலி 'லீலா' (வெண்ணிற ஆடை நிர்மலா)வுடன் ஒரு பாடலும் பாடி ஆடுகிறார். கோடீஸ்வரனுக்கு ஒன்று தெளிவாகிறது. முரளி ஒரு ஷோக்குப் பேர்வழி. அவனைச் சுற்றி எப்போதும் இளம் பெண்களின் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பட்டிக்காட்டு சீதாவை அவன் ஏற்றுக்கொள்வது என்பது நடக்காத காரியம். முரளி (பாலாஜி)யின் கவனத்தை சீதா (ஜெயலலிதா)வின் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், அவளை மற்ற பெண்களைக்காட்டிலும் நவநாகரீக மங்கையாக மாற்றியே தீர வேண்டியது அவசியம் என்று உணர்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும் சீதாவிடமும், குழந்தைகளிடமும் இது பற்றி விவாதிக்கிறான். வேறு வழியின்றி சீதா நாகரீக மங்கையாக மாற சம்மதிக்கிறாள்.
படிப்படியாக கோடீஸ்வரன் அவளை நாகரீக மங்கையாக மாற்றி, கிட்டத்தட்ட முரளிக்கே அவளை அடையாளம் தெரியாத அளவுக்கு கொண்டு வந்து, தான் பாட்டுப்பாடும் ஓட்டலிலேயே அவளை அழைத்து வந்து, வழக்கமாக முரளி அமரும் மேஜைக்கருகிலேயே அவளை அமர்த்தி விடுகின்றார். பெண்பித்தனான முரளி அங்கே வரும்போது, தன்னை அசர வைக்கக்கூடிய அப்ஸரஸ் ஆக ஒரு இளம்பெண் அமர்ந்திருப்பதை அறிந்து, மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக்கொடுக்கிறான். தான் பெரிய பணக்கார வீட்டுப்பெண் என்றும், தன்னை மணக்க பல கோடீஸ்வரர்கள் காத்திருப்பதாகவும் சொல்ல, முரளி மயங்கிப்போய் எப்படியும் அவளை அடைய தீர்மானிக்கிறான். தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வைர மோதிரம் பரிசளிக்க அவள் அதை அலட்சியப்படுத்துகிறாள். தொடர்ந்து பேசும்போது உண்மையில் தான் சீதா என்ற உண்மையை வெளியிட அசந்து போன முரளி அப்போதும் அவளை வெறுக்கவில்லை. அவளை மணந்தே தீருவது என்று முடிவெடுக்க சீதா அதை மறுத்து வீட்டுக்கு திரும்புகிறாள்.
முரளியின் மீது அவள் கொண்ட வெறுப்பு கோடீஸ்வரன் (சிவாஜி) மீது காதலாக மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோடீஸ்வரன் மனமும் அவள் பக்கம் திரும்ப ஒரு கட்டத்தில் காதலர்களாகிறார்கள். கோடீஸ்வரனிடம் இருந்து எப்படியும் சீதாவை பிரித்து தான் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கும் முரளி, பலநாள் வாடகை தராமல் கோடீஸ்வரனும் குழந்தைகளும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் தன்னுடைய நண்பருமான செந்தாமரையை அணுகி, கோடீக்கு நெருக்கடி தருமாறு கூற, செந்தாமரையும் சம்மதித்து அமீனாவுடன் வீட்டை காலி செய்ய வருகிறார். அப்போது அங்கு வரும் முரளி தான் ஏதோ பரோபகாரி போல, ஜப்தி செய்ய வந்தவர்களை கடிந்து கொள்கிறார். அந்நேரம் வெளியில் 'சோ'வென மழை பெய்து கொண்டிருக்க, பாத்திரம் பண்டங்கள், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் மழை நீரில் வீசியெறியப்படுகின்றன. இதுதான் பேரம் பேச சரியான சமயம் என்பதை உணர்ந்த முரளி, இந்த நெருக்கடியில் இருந்து கோடீயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், சீதாவை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்க, கோடீஸ்வரன் செய்வதறியாது திகைக்கிறார். குழந்தைகளோ தங்களுக்காக அக்காவை இழந்து விடாதீர்கள், நாங்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று கூற, அதே சமயம் முரளி கோடீயின் தியாக உள்ளத்தை கேலி செய்து 'நீ குழந்தைகள் மேல் கொண்ட அன்பெல்லாம் வெறும் வேஷம். நீ ஒரு சுயநலக்காரன்' என்று கூறி கேலி செய்ய, ஆடிப்போன கோடீஸ்வரன், குழந்தைகளின் நலனுக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறார்.
முரளியின் தூண்டுதலால் கோடீஸ்வரன் வீட்டிற்கு வரும், சீதாவின் 'திடீர்' சித்தி (சி.கே சரஸ்வதி)யும் அவரது எடுபிடி ஓ.ஏ.கே.தேவரும், சீதாவை கோடீ-யிடம் இருந்து பிரித்து முரளிக்கு சொந்தமான ஒரு இடத்தில் கொண்டு விடுகிறார்கள். அமீனா தன் வீட்டை காலி செய்ய வந்தபோது தனக்கு உதவிய முரளியிடம் அவன் வாக்களித்தபடி சீதாவை மணமுடித்து வைக்க வேண்டுமே என்று எண்ணும் கோடீ, அவள் தானாக வெறுக்க வைக்க ஒரு செட்டப் செய்கிறார். அதன்படி, தனியே பேசுவதற்காக ஓட்டலுக்கு சீதாவை கோடீ அழைத்து வர, அங்கே வரும் பெண்ணொருத்தி அவரிடம் தனியே பேச விரும்புவதாக கூறி அழைத்துச் செல்ல, அந்த உரையாடலை சீதா கேட்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பர்ஸை கீழே தவற விடுவது போல விட, எதேச்சையாக அவர்களின் உரையாடலை சீதா கேட்க நேரிடுகிறது. அந்தப்பெண்ணுக்கும் கோடீ-க்கும் ஏற்கெனவே தொடர்பு இருப்பது போலவும், அதன் காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் அவர்கள் பேசிக்கொள்ள, சீதா (ஜெயலலிதா) மனம் உடைந்து போகிறார். ஏற்கெனவே செய்துகொண்ட செட்டப்பின்படி முரளி (பாலாஜி) அங்கே வர, அவரிடம் சீதா சென்று தன் மனக்குறையைச் சொல்லி அழ, அவன் கோடீ-க்கும் அந்தப்பெண்ணுக்கும் ஏற்கெனெவே தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தனக்கும் தெரியும் என்று கூற அதை நம்பி அவனுடன் செல்கிறாள். அவளை முன்னே போக விட்டு, முரளி பின்னே திரும்பி கோடீ-க்கு சைகையால் நன்றி தெரிவித்து விட்டுப்போகிறான்.
ஏற்கெனவே தன்னுடைய குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் தன் காதலி லீலாவை ஏமாற்றி அவள் தனக்கு ஆதாரமாக வைத்திருந்த தான் எழுதிய கடிதங்களை திருடி தன் பர்ஸில் வைத்து முரளி எடுத்துபோக, குடிகாரனாக வரும் தேங்காய் அந்த பர்ஸை பிக்பாக்கெட் அடித்துப்போய் அவைகளை நண்பன் சோவிடமும் அவன் மனைவி ரமாபிரபாவிடமும் படித்துக் காட்டுகிறான். இந்நிலையில் திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளும் லீலா, அதை கோடீஸ்வரனின் அனாதை இல்லத்தில் போட வரும் போது அவரிடம் மாட்டிக்கொள்கிறாள். அவளைப்பார்த்த கோடீ-க்கு அதிர்ச்சி. 'இவள் முரளியின் பிறந்த நாளில் தன்னுடன் நடனம் ஆடிய பெண்ணல்லவா' என்று எண்ணி விசாரிக்க, அக்குழந்தைக்கு தந்தை முரளிதான் என்று அவள் சொல்லி அதற்கு ஆதாரமான கடிதங்களை முரளி எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்றும் சொல்கிறாள். அப்போது அந்த இடத்தில் இருக்கும் சோ 'கடிதங்கள் எங்கும் போய் விடவில்லை தன் நண்பனிடம் தான் இருக்கிறது' என்று சொல்ல, அவரும் கோடீயும் தேங்காயிடம் போய் நாலு போடு போட்டு கடிதங்களை வாங்கி, லீலாவை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்டு முரளியின் வீட்டுக்கு செல்கிறான். இதனிடையில் ஜெயலலிதாவை மீட்டு அழைத்து வரலாம் என்று செல்லும் குழந்தைகள் முரளியின் கஸ்டடியில் மாட்டிக்கொள்கிறர்கள். லீலாவை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொன்று விடுவதாக முரளி மிரட்ட, இருவருக்கும் பெரிய சண்டை நடக்க சண்டையின் முடிவில் முரளி கடிதங்களை பிடுங்கிக்கொண்டு, குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் வேனில் தப்பியோட, கோடீஸ்வரன் ஜீப்பில் விரட்ட, ஒரு ரயில்வே லெவெல் கிராஸிங்கில் தண்டவாளத்தின் குறுக்கே வேனை நிறுத்தி விட்டு முரளி ஒளிந்திருந்து, குழந்தைகள் சாகப்போவதை வேடிக்கை பார்க்க, அதே நேரம் ஜீப்பில் வரும் கோடீ, தண்டவாளத்தின் குறுக்கே வேன் நிற்பதையும், ரயில் வேகமாக வந்து கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு பார்த்து, ரயில் வருவதற்குள் ஜீப்பினால் வேகமாக வேனை முட்டித்தள்ளுவதோடு, சடாரென ஜீப்பையும் ரிவர்ஸில் எடுக்க குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர். அப்போது தன்னிடம் இருக்கும் கடிதங்களை முரளி கொளுத்தப்போக, மீண்டும் கோடீ அவனுடன் சண்டையிட்டு அவைகளை கைப்பற்றுகிறான். அப்போது காரில் லீலாவுடன் வந்து இறங்கும் முரளியின் அம்மா, கடிதங்களைப் படித்து உண்மையறிந்து முரளியை அறைந்து, லீலாவை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்க, வேறு வழியில்லாமல் முரளி சம்மதித்து லீலாவுடன் சேருகிறான். மீண்டும் கோடீ-யும் சீதாவும் ஒன்று சேர, குழந்தைகள் குதூகலிக்க*...... முடிவு 'சுபம்'.
(கதைச்சுருக்கமே இவ்வளவு நீண்டு விட்டது. என்ன செய்வது?. எதையும் விட முடியாதே. இத்தனைக்கும், ஒரு செல்வந்தர் கோடீயின் அனாதை இல்லத்தில் இருந்து சேகரை தத்தெடுத்துப் போகும் காட்சிகளையெல்லாம் 'கட்' பண்ணிட்டேன்)
பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியிருக்க...
இசை...????, வேறு யார். "மெல்லிசை மாமன்னர்தான்". பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டியது. இன்றைக்கும் தெவிட்டாத தேன் விருந்தாக மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.
முதல் பாடல், தன்னுடைய அனாதை இல்லக்குழந்தைகளை காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு (அந்தக் காரை பார்த்தாலே சிரிப்பு வரும். 'காதலிக்க நேரமில்லை'யில் ரவிச்சந்திரன் வைத்திருப்பாரே அது போன்ற ஒரு கார்) நடிகர் திலகம் சென்னையைச் சுற்றி வரும் பாடல்.
நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டுப்பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை... முல்லை... முல்லை
சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள்
சொல்லசொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
அள்ளிஎடுக்கையில் துள்ளிக் குதித்திடும்
முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
பிள்லை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு
பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை
வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு ஏசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பலநிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலை போல் உருமாறும்
இந்தப்பாடல் காட்சி சென்னை மெரீனா கடற்கரை, பழைய உயிரியல் பூங்காவில் இருந்த குட்டி ரயில், தீவுத்திடல் பொருட்காட்சியின் குடை ராட்டினம், ஜயண்ட் வீல் போன்றவற்றில் படமாக்கப் பட்டிருக்கும். நடிகர் திலகம் வழக்கத&