ரொம்ப நன்றி கலைவேந்தன் சார் பதிவுகளை வாசித்து தங்கள் இனிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு.
அதே போல தங்கள் எழுத்து நடையை ரசித்து வினோத், கோபால், கிருஷ்ணா போன்றவர்களிடம் அலைபேசியில் பேசி மகிழ்ந்ததுண்டு. சரளமான நடையில் தனித்தன்மையான பாணி தங்களுடையது. இது உண்மை. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல.
'எதிர்பாராமல் விருந்தாளி' பாடலைத் தாங்கள் கேட்டவுடனே முடிவு செய்து விட்டேன் கலைவேந்தன் சார் நம்மைப் போல ரசனை உள்ள ரசிகர் என்று. அதிகமாக யாரும் கேட்காத பாடல். நீங்கள் அருமையாக எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் 'அந்த சிவகாமி மகனை'க் கூப்பிட, நம் போன்றவர்கள் 'எதிர்பாராமல் விருந்தாளி'யை அழைத்து வித்தியாசப் படுத்துவோம். இப்படி ஒரு ரசனை எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடாது. ஆனால் 'மதுர கானங்கள்' திரி இத்தகைய ரசிகர்களை பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
http://vi.raaga.com/movieimages/31b6...b308fa8107.jpg
நான் அந்தப் பாடலை தினம் தினம் கேட்பேன் கலை சார். அத்துடன் சேர்த்து அதே 'பட்டணத்தில் பூதம்' படத்தில் என் ராட்சஸி பாடிய, ஜோதி லஷ்மி சீனப் பெண் மாதிரி வேடம் பூண்டு ஆடிய 'இதழை விரித்தது ரோஜா'வும் தினம் தினம் என் இசைத் தோட்டத்தில் மலரும். இந்தப் பாடலைக் கேட்கும் போது சடாரென திரு எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தில் அதே ஜோதிலஷ்மி அசோகனிடம் ஆடிப் பாடும் பாடலான 'கட்டு மெல்லக் கட்டு' பாடல் ஞாபகம் வராமல் இருக்காது.
என்ன சரிதானே கலை சார்?
ரிலாக்ஸுக்காக அடிகடி இங்கே வாருங்கள். இது போன்ற அபூர்வ முத்துக்களைக் கொடுங்கள். நாங்கள் அதைக் கோ(சே)ர்த்து வைத்துக் கொள்கிறோம்.
நன்றி!

