http://i59.tinypic.com/110az4j.jpghttp://i58.tinypic.com/zul1ew.jpg
Printable View
உழைப்பே உயர்வு தரும் - வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2vlw1nl.jpghttp://i62.tinypic.com/242bcp2.jpg
http://i60.tinypic.com/1zee44y.jpghttp://i62.tinypic.com/2w4l8qh.jpg
http://i60.tinypic.com/263hsae.jpg
1. இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்.
2. நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே .
3. உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
4. எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்
5. காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்.
6. கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது -
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா ஆ
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது
இனி ஓதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது.
7. நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே.
8. ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன்
9. கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக.
10. உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே.
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா.
11. உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகாளே.
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
12. நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
13. தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி
14. உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
15. கையிரண்டு காலிரண்டு
கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
இதயம் மட்டும் ஒன்று வைத்தான்
சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்
தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
16. சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே
தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!
மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?
எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
பெரும் புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை
17, கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
18. சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
19. ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
20. வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்.
21. உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
http://i62.tinypic.com/2q21po0.png
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்.
[உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
http://i59.tinypic.com/287irfk.png
http://i59.tinypic.com/fxgh86.png
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே .
TODAY 7.00 PM WATCH SUN LIFE TV
http://i1300.photobucket.com/albums/...psea13638a.jpg
http://i1300.photobucket.com/albums/...psb95363da.jpg
இன்று மதியம் கோவை சண்முகா திரை அரங்கம் சென்றேன்.
மக்கள் திலகத்தின் அற்புத நடிப்பில் உருவான காவியம்
புதுமைப்பித்தன் திரையிட்டு வெற்றிகரமாக ஓடி வருகின்றது.
பிரிண்ட் நன்றாக இருந்தது.
சவுண்ட் மிக அற்புதம்.
வருகை தந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் படம் பார்த்து
ரசித்தனர்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------