நண்பர்களே, நீங்கள் அனைவரும் எனக்கு தரும் வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களை போன்ற உண்மையான ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கு.
ராகவேந்திரா அண்ணா, நீங்கள் சொன்னதைப்போல சிவாஜி என்னும் அந்த அற்புதக் கலைஞனின் நடிப்பு தான் என்னை கவர்ந்தது . மேலும் என்னுடைய பாட்டி ஒரு தீவிர சிவாஜி ரசிகை. எங்கள் கிராமத்து திரையரங்கில் எப்போதெல்லாம் சிவாஜி படம் போடுகிறார்களோ அப்போதெல்லாம் என்னையும் அழைத்துக்கொண்டு படம் பார்க்க செல்வார்கள். நான் முதன்முதலில் பார்த்த சிவாஜி படம் வசந்த மாளிகை ஆகும். அது 1995 வது வருடம் என நினைக்கிறேன். .மணல் மேடிட்டு என்னுடைய பட்டியுடன் நான் பார்த்தது இன்னும் எனக்கு நல்ல நியாபகம் இருக்கிறது. அதற்கு பின்னர் நான் பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு சிவாஜி படத்திலும் அவர் தருகின்ற வேறுபட்ட நடிப்புகளையும் மற்றும் நடக்கின்ற பாணியையும் நினைத்து வியந்திருக்கிறேன்.