http://i50.tinypic.com/33lfehh.jpg
Printable View
PURATCHI THALAIVARIN FIRST CABINET IN 1977
http://i45.tinypic.com/14kjx3t.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .
தென்னிந்திய திரைப்படங்களில் 1936-1953 வரை பல படங்கள் வெளியாகி 100 நாட்கள் , வெள்ளிவிழா மற்றும் ஹரிதாஸ் போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடினாலும் முதன் முறையாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்ற பெருமையை பெற்ற முதல் தென்னிந்திய திரை படம் மக்கள் திலகம் நடித்த மலைக்கள்ளன் .
பின்னர் தொடர்ந்து 1954-1977 ஆண்டுகள் வரை அவரது படங்கள் சாதனை புரிந்துள்ளது .
1954 ஆண்டு வெளியான மலைக்கள்ளன் ஆறு மொழிகளில் தயாரிக்க பட்டு தமிழ் மொழியில் மட்டும் பிரமாண்டமான வெற்றி படைத்தது .
http://i1273.photobucket.com/albums/...ps8582aeb4.jpg
1954- மலைக்கள்ளன் முதல் தொடர்ந்து மக்கள் திலகம் MATINEE IDOL - EVERGREEN HERO - BOX OFFICE HIT HERO MGR என்றே அழைக்க பட்டார் .
1955 -குலேபகாவலி . 1956. மதுரை வீரன் . 1957- சக்கரவர்த்தி திருமகள் . 1958 - நாடோடி மன்னன் .
1961- தாய் சொல்லை தட்டாதே - 1962- தாயை காத்த தனயன் . 1963- பெரிய இடத்து பெண் . 1964- பணக்கார குடும்பம்
1965- எங்க வீட்டுபிள்ளை . 1966- அன்பே வா . 1967 . காவல்காரன் . 1968 - குடியிருந்த கோயில் . 1969- அடிமைப்பெண் . 1970 - மாட்டுக்கார வேலன் .
1971- ரிக்ஷாக்காரன் , 1972- நல்லநேரம் . 1973- உலகம் சுற்றும் வாலிபன் . 1974- உரிமைக்குரல் . 1975- இதயக்கனி . 1976-நீதிக்குதலை வணங்கு .
1977. மீனவ நண்பன் .
1959- 1960 இந்த ஆண்டுகளில் வெளியான அவரது படங்கள் சுமாரான வெற்றி பெற்றது .
esvee
மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர்,பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
http://i45.tinypic.com/so96xd.png
M.g. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வினோத் சார் தயவு செய்து தன்னாலும் என்ற வார்த்தையை நீக்கி விடுங்கள். மக்கள் திலகம் அவர்கள் எல்லா படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை விட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்பதே உண்மை. மிக இயல்பாக நாடகத்தன்மையற்றதாக அவரது நடிப்பு அமைந்துள்ளது. தன்னாலும் என்ற வார்த்தை சற்று நெருடலாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்களைத் தவிர மற்ற படங்களில் அவர் நடிக்கவில்லை என்பதாகப் பொருள்படுகிறது. பிளீஸ்.
இனிய நண்பர் திரு ஜெய்
நான் குறிப்பிட்டது மக்கள் திலகம் அவர்கள் 1936-1946 வரை அந்த காலத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பினை சிறு வேடங்களில் நடித்துள்ளார் .
1947-1952 - மக்கள் திலகம் அவர்கள் தனது தனி முத்திரையை பதிவு செய்துள்ளார் .
சமூக படங்கள் - ராஜா ராணி படங்கள் , தெய்வீக புராண படங்கள் என்று திரை உலகம் பயணிக்கும் வேலையில் மக்கள் திலகம் மட்டும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின்
கொள்கைகளுக்காக லட்சிய பிடிப்புடன் தனக்கென்று தனி பாணியினை உருவாக்கி புரட்சி நடிகராக மாறினார் .
சில பத்திரிகை விமர்சகர்கள் மக்கள் திலகம் சமூக படங்களில் நடிக்க முடியாதவர் என்று கூற்றினை உடைத்தெறிந்து தன்னாலும் சமூக படங்களில் நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டியவர் என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிட்டேன் .
அவர் நடித்த 134 படங்களும் என்றும் ரசிகர்களுக்கு ஒரு காவியங்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது .
malaikallan -1954
http://i45.tinypic.com/23t44mt.png
http://i50.tinypic.com/b3myir.png
1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.
அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.
"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.
இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.
உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)
கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.
கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.
பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.
மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.
எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர்.