Thanks Ragulram,
wish you a happy independance day.
Printable View
நடிகர்திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .பாசமலர் திரைக்காவியம் மாபெரும் வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன் .இந்த இனிய நாளில் நமது வாசு சார் பதிவிடாமல் இருப்பது பெரும் குறை .கூடிய விரைவில் அவர் இங்கு வரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
ஆதி ராம் ,
நான் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன். உங்களின் வாழைபழத்தில் ஊசியேற்றும் கலை அருமை. சற்றே மிகை படுத்தலாம்.ஆனால் காமெடி ஆக விட கூடாது என்பது சிலருக்கு தெரிவதில்லை.
[QUOTE=g94127302;1065333]கர்ணன் படம் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன்..
தலைவர் புகழ் ஆண்டுகள் செல்ல செல்ல மேன் மேலும் வளரப்போகிறது என்பது திண்ணம்.
ஐந்நூறு ஆண்டுகளுக்குப்பிறகு மைகேல் ஏஞ்சலோ புகழ் எப்படி உலகளவில் பேசப்படுகிறதோ
அப்படிதான் தலைவர் புகழும் பேசப்படப்போகிறது.
அவர் உலக அளவில் நடிப்பிற்கே ஒரு icon ஆகப்போகிறார்.
அவர் படங்களின் ஒவ்வொரு frame மும் பொக்கிஷங்களாகப்போகின்றன
அனைத்து நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பாசமலர் ரிலீஸ் எப்படி இருந்தது என்பதை எதிர் பார்க்கிறேன்.
Attachment 2498
'இவரோட போட்டோ எடுத்துக்கணும்’னு நீங்க ஆசைப்பட்டு போட்டோ எடுத்துக்கிட்ட வி.ஐ.பி. யார்?''
''சிவாஜி சார். 'தேவர் மகன்’ ஷூட்டிங் ஆரம்பிச்சபோதே எனக்கு அவரோட போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை வந்திருச்சு. ஏன்னா, நான்லாம் அவரோட படங்கள் பார்த்து வளர்ந்தவன். சினிமா மேல ஆசையை வளர்த்தவன். அந்தச் சின்ன வயசு கிரேஸ் அவரோட வொர்க் பண்ணும்போதும் போகலை. ஷூட்டிங் நடக்கும்போது என் கவனம் முழுக்க ஒளிப்பதிவு மேல இருந்ததால், அவர்கூட போட்டோ எடுக்கிறதைப் பத்தி யோசிக்கவே இல்லை. கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சப்ப, எல்லாரும் அவரோட போட்டோ எடுத்துக்கிட்டப்பதான் 'நாமும் எடுத்துக் கலாமே’னு உறைச்சது. கமல், சிவாஜி சார், டைரக்டர் பரதன் சார் மூணு பேரும் நிக்கும்போது ஓடிப்போய் நாலாவது ஆளா நின்னு, படம் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் இதுவரைக்கும் யார் கூடவும் போட்டோ எடுக்கணும்னு தோணலை!'' By best camera man P.C. Sriram
One more Answer by P.C. Sriram in today Ananda vikatan.
''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த 'டாப்-5’ படங்களைப் பட்டியலிடுங்கள்?''
''அஞ்சுக்குள்ள அடக்க வேணாம். பிடிச்சதெல் லாம் சொல்றேன். கலை, இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்புனு எல்லா விதத்திலும் அட்வான்ஸா இருந்த 'தில்லானா மோகனாம்பாள்’ பிடிக்கும்
இன்று காலை 12 மணி காட்சியில் பாசமலர் காவியத்தை நம் சாந்தியில் ஹப் நண்பர்கள் ராகவேந்தர் சார் ,முரளி சார், வாசுதேவன் சார் (சித்தூர்), மற்றும் யாஹூ குரூப் பால தண்டாயுதபாணி உடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நம் தலைவர் பெயர் title -ல் வந்தவுடன் எழும்பிய கரகோஷம் இறுதி காட்சி வரை தொடர்ந்தது. அகன்ற திரையில் தெளிவான ஒளி அமைப்பும் ஒலி அமைப்பும் இக் காவியத்திற்கு மேலும் மெருகூட்டின என்றே சொல்லலாம்.
இப் படத்திற்கு வசனம் எழுதிய திரு ஆரூர் தாஸ் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளை சமயத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. படம் ஆக்கம் சமயத்தில் நடந்த சம்பவங்களை சுவை பட கூறினார்.
படத்தின் இறுதி காட்சி முடித்து அனைவரும் வெளியே வருகையில் அவர் தம் கண்களை துடைத்து கொண்டே வருவதை காண முடிந்தது.
Hello all,
Yesterday had brief phone chat with Ragavendran sir when he was inside the Shanthi theatre and could able to listen fans allapparai, and Pasa Malar is going to rock all over TN again.
Long live NT fame.
Cheers,
Sathish