டியர் ரவி சார்,
இத்திரியின் பங்கேற்பாளர்களின் உழைப்பை என்றுமே, யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தங்களைப் போன்றவர்கள் திரி மற்றும் இணையதள பதிவுகள் மூலம் நடிகர்திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பதுபோல, என்னுடைய அலுவலகப் பணிக்கிடையே, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை பணியின் காரணமாக திரியின் ஆய்வுகளில் பங்கேற்க இயலவில்லை. என்னைப்போன்ற பலரும் திரைப்பட ஆய்வுகள் / அலசல்களில் பங்கேற்காவிட்டாலும், தொடர்ந்து திரியின் பார்வையாளர்களாக, ரசிகர்களாக இருக்கிறார்கள்.
புதிய(பழைய)பறவை கோபால் அவர்களின் மீள் வருகை அறிவிப்பும் நமக்கு புதுத் தெம்பூட்டியுள்ளது. இதுபோல மற்ற பதிவர்களும் வருவார்கள் என்று நம்புவோம்.
தாங்கள் ஒவ்வொரு முறையும் தெரிவிக்கும் கருத்துக்கள், ஆலோசனைகள் திரியின் நன்மை, வளர்ச்சிக்காகவே என்பதை அனைவரும் அறிவர். இருந்தாலும் சில சமயம் ஆர்வ மிகுதியில் சிலர் இத்தகைய பதிவுகளை இடுவதும் வருங்காலங்களில் தவிர்க்கப்படும் என்று நம்புவோம். நன்றி.