கார்த்திக் சார்..பாராட்டுக்கு நன்றி ( முந்தினதுல்ல விட்டுட்டேன்..ம)
எஸ்.வாசுதேவேன் சார்.. கிலோனா அண்ட் ஒரே பாடல் தூள்..எல்லா இடுகைகளுமே நைஸ் தான்..தாங்க்ஸ்..கிலோனா..அண்ட் எ.வ பற்றி முன்பு எழுதிப் பார்த்திருக்கிறேன்..
Printable View
கார்த்திக் சார்..பாராட்டுக்கு நன்றி ( முந்தினதுல்ல விட்டுட்டேன்..ம)
எஸ்.வாசுதேவேன் சார்.. கிலோனா அண்ட் ஒரே பாடல் தூள்..எல்லா இடுகைகளுமே நைஸ் தான்..தாங்க்ஸ்..கிலோனா..அண்ட் எ.வ பற்றி முன்பு எழுதிப் பார்த்திருக்கிறேன்..
//நண்பர்கள் அவரவருக்கு பிடித்த டைட்டில் இசை வீடியோ பதிவிடலாம் .// எஸ்.வி சார்..எனக்கு வீடீயோ தேடிப் போட்த் தெரியாதே... தாங்க்ஸ்,,
எனக்குப் பிடித்த டைட்டில் என முதலில் வருவது தமிழ்..இருவர் உள்ளம்..பறவைகள் பலவிதம் டைட்டில் சாங்க் என நினைக்கிறேன் பின் ஆங்கிலம்..லிவ்.அண்ட் லெட் டை..பாண்ட் படங்களில் டைட்டில் வித்யாச்ம் தான்..இருப்பினும் இது முதன் முதல் பார்த்த (பரமேஸ்வரி) பார்த்த பாண்ட் மூவி என்பதால் பதிந்து விட்டது.
பழைய ஆனந்த விகடன் பக்கங்கள்
http://2.bp.blogspot.com/-BpT2us38I0.../IMG_37151.jpg
http://3.bp.blogspot.com/-O9jE9Gs2J1.../IMG_37161.jpg
http://3.bp.blogspot.com/-ACLn4T9GyQ.../IMG_37251.jpg
http://4.bp.blogspot.com/-gvOz31a8Ij.../IMG_37261.jpg
http://1.bp.blogspot.com/-DvV_ScE0kV.../IMG_37891.jpg
http://3.bp.blogspot.com/-e2CRVzyOnF.../IMG_36901.jpg
வாங்கோ வாசு ஜி .
நலம் தானே .... இப்போ என்ன பகல் ஷிப்ட் வேலையா
Mr CK the Title song of Live and Let Die for you. Enjoy
http://youtu.be/xr1Ec7a4TZM
வணக்கம் ராஜேஷ்ஜி
நலமே. என்னுடைய நாடலும் அதுவே! இன்று விடுமுறைஜி. நாளை 2 to 10
மதிய ஷிப்ட்.
திரையிசையூடே திரவியம் தேடு…
****
அத்தியாயம் ஒன்று..
******
கழுக்மொழுக் கன்னத்தில் கைதட்டிக் கும்பிட்டே
கொழுக்கட்டை தந்துவிடக் கொள்வீர்..- முழுங்காமல்
நின்றிருக்கும் வார்த்தைகள் நேராய் வருதற்கு
கண்ணாம் கணபதிநீர் காப்பு..
*
(என்ன ஆச்சுடா..
ஏன் மனசாட்சி..ஆரம்ப சீன்லயே ஆஜர் ஆயிட்ட
பின்ன.. திரவியம்கறது யாரு..ஒன்னோட துபாய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ணவன் தானே..
ஏய் .திரவியம்னா செல்வம்..
அதான்..அதான் கேட்டேன்..பாவம் டா இங்க இருக்கற சார்கள்..இப்படி எல்லாம் நீ படுத்தாத ..சிம்ப்பிளா ஏதாவது டைட்டில் வச்சுக்கோயேன்..
எல்லாம் ஒர்க் ஆகும்..அவாள்ளாம் ரொம்ப்ப நல்லவா..என்னை ஒண்ணும் சொல்ல மாட்டா..
ஒழி.! )
*
இளம்பருவத்தில் உள்ள பெண் என்றால் எப்படிச் சொல்லலாம்.
. பாவாடை சட்டை தாவணி அணிந்து தலையில் ஊதாவோ நீலமோ ஏதோ நிறப் பட்டுத் துணியைப் பின்னலுக்குத்துணைக்குக் கொடுத்து அதேசமயம் தாவணிக்குப் பொருந்துவதா எனப் பார்த்துக் கொண்டு,, சிலுங்க் சிலுங்கென சலங்கைகள் ஒலிக்கும் இசைக்கு நடப்பது போல அழகாய் மென்மையாய் நடந்து, கண்களிலே கொஞ்சம் கனவு, கொஞ்சம் அறியாமை,கொஞ்சம் ஆவல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் கெஞ்சல் என எல்லாவற்றையும் சேர்த்தரைத்த பக்குவமான ஒரு பார்வை, இயற்கையோ செயற்கைப் பூச்சோ அவ்வளவாகப் புரிபடாத செவ்விதழில் ஒரு குறுஞ்சிரிப்பு கொண்டு இருப்பவள் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்.. அதுவும் தாவணி போட்டா ஒரு தனி அழகுதான்
சின்னத் துணிதான் ஆமய்யா..
..சேலை இல்லை சரியய்யா
வண்ணம் பலவும் உண்டய்யா
..வாகாய்க் கட்ட எழிலய்யா
எண்ணம் போல மென்மையுடன்
…ஏற்ற ரவிக்கை எழிலூட்டும்
பெண்ணின் ஆடை எனைப்போலே
..புவியில் வேறோ ஏதய்யா
என ஒரு தாவணியே பாடியிருக்குன்னா பாருங்களேன்..!
அந்தக் காலப் பெண்களும் மேற்சொன்ன இளம்பருவப் பெண்களைப் போலத் தான் ..அதுவும் சங்க காலப் பெண்களுக்கு அறியாமை ஜாஸ்தி..
பொசுக் பொசுக்கென்று பார்த்த ஆடவன்பால் மனதைப் பறிகொடுக்கிறதும், அவனோ ஹாய் மை லேடிலவ் எனக் கொஞ்சிக் கொண்டிருந்துவிட்டு போரடித்ததோ அல்லது போரழைத்ததோ ஏதோ ஒரு ரீஸன் சொல்லி ஸீ யூ லேட்டர் எனச் சொல்லிப் பிரிந்து விடுவான்.. இந்த நங்கை தான் பாவம்.. அப்போலாம் மருதாணி தான் க்யூடெக்ஸ்லாம் கிடையாதே.மருதாணிக் கையைப் பார்த்த படி
கன்றிச் சிவந்த கரம் – உன்
கையால் பிடித்த கரம்
நின்ற சிகப்பு நிறம் – மெல்ல
நீள்விழி மாறியதே
பெண்ணைத் தீண்டி விட்டே – இங்கு
பித்தமும் குலைத்து விட்டு
எண்ண வொணா தொலைவு – நீர்
ஏகித்தான் போவீரோ
என்றெல்லாம் பெருமூச்சு விட்டுக்கிட்டுப் புலம்பிக்கிட்டிருப்பாள்.. ஆனா தனியா இல்லை.. தன்னோட தோழிகிட்ட..
இப்படித் தாங்க, ஒரு சங்க காலத் தலைவி கொய்ங்க்னு சோர்ந்து போய் இருக்கா. அவ கிட்ட தோழி என்ன சொல்றான்னாக்க (ஹாஆஆவ்..யாருங்க அது கொட்டாவி விடறது..)..
தலைவன் போய்ட்டு வெரசா வர்றேன்னு சொல்லிட்டுப் போய்டறான்.. ஒரு வாரமாச்சுது..வரவும் இல்லை.. தோழிக்கோ தலைவியைபார்த்துக் கஷ்டம்..பின்ன..தலைவி சும்மா இருந்தா தானே.. என் ஆளு இருக்கானே எவ்ளோ பலசாலி தெரியுமா..அவனோட தோள்ல ஊஞ்சலாடலாமாக்கும்.. நான்.. ஆடியிருக்கேன் தெரியுமா.. என் ஆளு எவ்ளோ நல்லவன் தெரியுமா போன தபா பக்கத்து ஊர்லருந்து வந்த போதுமுழுக்க முழுக்க பசுநெய்யால பண்ணின குழிப்பணியாரம்கொணர்ந்தான் இவளே..அப்புறம் என் ஆள் … இப்படியே பேசிக்கிட்டிருந்தா தோழிக்கு போரடிக்காதா என்ன.. பார்த்தா..
ஒரு வாரம் ஆனவொடனே சொல்றா.. இவளே ச்சும்மா ஒன் ஆள்பத்திச் சொல்லிக்கிட்டிருக்காதே..பெரிய யோக்கியனோ.. அவனோட முதுகப் பாத்தியா..அங்க நல்லவன்னு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தியிருந்துச்சா.. சும்மா..அவனுக்குப் பொழுது போகலை..உன்னை டைம்பாஸாக்கிட்டாங்கறா.. கூடுதலா உன்கிட்ட வந்து மறுபடி உன்னைக் கட்டிக்குவாங்கற.. தோளை அணைச்சுக்குவாங்கற..எனக்கு டவுட்டுத்தான் அப்ப்டின்னும் சொல்றா..
தலைவி பொறுமையாச் சொல்றா தோழிக்கிட்ட.. “ ஒனக்குத் தெரியுமா டியர்..அவங்க ஊர்ல ஏதோ பஞ்சாயத்தாம்.. போய்த் தீர்த்துட்டு அப்படியே அறுவடைக்குல்லாம் ஆள் போட்டுட்டு வர்றேன்னு சொல்லிட்டுத் தான்போனாக.. பாவம் ஏதோ வேலை வந்துடுச்சோ என்னவோ..
இப்போ ஒனக்குத் தெரியுமா நம்ம ஊருல ஒரு ஆறு ஓடுதில்லா..அதே ஆறுஅவரு ஊருக்கும் போகுதில்ல..அவர் குளிப்பாக மொதல்ல அவரு ஊர்ல..அப்புறம் நான் நம்ம ஊர் ஆத்துல குளிப்பேன்.. அப்ப அவரத் தொட்ட தண்ணி என்னையும் தொடும்.. அதுவே அவரு என்னக் கட்டிக்கிட்ட மாதிரிதான் புரியுதா..”ங்கறா..
தோழிக்கு என்ன சொல்ல முடியும்..தலைல அடிச்சுக்கிட்டு ஒன்னலாம் திருத்தவே முடியாதுன்னு போய்டறார்..
இது ஐந்திணை ஐம்பதில் வருகிற ஒருபாடலில் வரும் காட்சி..
கானக நாடன் கலவான் என் தோள் என்று
மான் அமர் கண்ணாய் ! மயங்க நீ ; - நானம்
கலந்து இழியும் நன் மலை மேல் வால் அருவி ஆடப்
புலம்பும் அகன்று நில்லா
மான் போன்ற கண்களையுடைய என்னுடைய அழகிய தோழியே (தோஸ்த்தாடி நீ).. கானக நாட்டில் இருக்கும் என்னுடைய காதலனாகிய தலைவன் என்னுடைய தோள்களை வந்து பற்ற மாட்டான் என்று கலக்கம் கொண்டாயல்லவா.. மயங்காதே.. (டோண்ட் ஒர்ரி)
அழகிய வாசனை கொண்ட நறுமலர்கள், மற்றும் மூலிகைகள் கொண்ட அருவியில் நீராட, அதே அருவியில் நானுமிங்கு நீராடுவேன்..அப்போது அவன் நீராடிய நீரை அருவி கொணர்ந்து என்மேல் தெளிக்க வைக்கும்.. அப்போது அவன் என்னை அணைத்தது போல் ஆகிவிடும்..”
*
அந்தக்காலத்தில் எவ்வளவு கான்ஃபிடன்ஸ்..
இதுவும் அந்தக்காலப்பாட்டு தான்..ஆனா சில டிகேட்ஸ்க்கு முன்னால தான்.. என்னவாக்கும் சொல்றா..
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது.
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது..
தரலாம் பெறலாம் பக்கம் நீ வரும் போது.. (உஷார்ப் பார்ட்டிப்பா)
உன் பாதம் தொட்ட அலைகளே என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது..
இந்த நேரம் பார்த்து நாணம் வந்துகோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது.. (பாவம் கொஞ்சம் ஷையாத் தான் இருக்கும்ம்ம்)
மழைத்தூறல் போட்டுச் சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது..
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துபார்க்குது..
(ஆவலையும் என்ன அழகாச் சொல்றாங்கப்பா)
சுசீலாம்மாவும் எஸ்.பி.பியும் பாடியபாட்டு.. நவக்கிரகம் படம்.. ஏற்கெனவே பேசியிருக்கலாம்.. நல்ல விஷயத்தை இன்னொரு வாட்டிப் பேசறதோ படிக்கறதோ தப்பில்லைன்னு பெரியவங்க சொல்வாங்க..
*
அடுத்ததும் காதல் பாட்டு தாங்க..
அதுல பாருங்க இந்தப் பாட்டு கறுப்பு வெள்ளைல வந்தாலும் படம் ஈஸ்ட்மென் கலர் தான்..பாட்டிலயும் ஒரு நிறம் வருமே..
*
(தேடுவோம்)
சின்னக் கண்ணன் சார்,
திரையிசையூடே திரவியம் தேடு…அருமை. தங்களுள்ளே உரித்தான கவிதை நடை. அதனைத் தொடர்ந்து 'உன்னை தொட்ட காற்று'. பலே! பலே! தங்கள் கவிதை என் மனதை தொட்டது. தோடருங்கள். வாழ்த்துக்கள்.
சி.க.சார்,
அது
http://static.telugumoviepedia.com/i...rtist_2058.jpg
சி.க.சார்,
என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ
பாடலுக்கு நன்றி
'சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம்.
நாம் சரசமாக பேசிகிட்டே சமச்சுடுவோம் சாதம்'
இதுவும் நல்லா இருக்குதானே! சமையலறையில் உதவி செஞ்சு பெண்ணை வாழ விடுங்கள்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f86pzJCEgTU