சன் தொலைக் காட்சியில் 19 -01 - 2015 முதல்
பிரியமானவள்
https://www.youtube.com/watch?v=-1TDKiIsWPk
https://www.youtube.com/watch?v=ukKbfBTGDXk
Printable View
சன் தொலைக் காட்சியில் 19 -01 - 2015 முதல்
பிரியமானவள்
https://www.youtube.com/watch?v=-1TDKiIsWPk
https://www.youtube.com/watch?v=ukKbfBTGDXk
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘சிவ ரகசியம்’.
Quote:
சித்தர்கள் காக்கும் பூமிகாத்தான்பட்டி கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு அறியப்படாத, அறிந்திட முடியாத சிவனின் ரகசியங்களை சொல்லும் தொடராக தொடர்கிறது.
இக்கதையில் ராமரத்தினத்தின் மகன் விஜய், சித்தர்களுக்கு எதிராக அவர்களின் சூட்சமங்களை அறிய முற்படுகிறான். தொல்லியல் ஆய்வாளர் விக்ரமன், கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கும் ரகசியக் குறிப்புகளைத் தேடி சித்தவனம் செல்கிறார். மேலும் இக்கதையில் தேனீக்கள் ரூபத்தில் இருக்கும் சப்தகன்னிகள் ஏழுபேர் பறந்து, சுற்றி வந்து சிவலிங்கத்தை பூஜிப்பதை பார்க்கச் செய்தால் பிருந்தா முழுவதும் குணமாவாள் என்று ராஜியின் கனவில் தோன்றி காக சித்தர் கூற, அதன்படி ராஜி தன் மகளை அழைத்துக்கொண்டு திரு கிழாக்குடி செல்ல, அங்கு அவர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
யட்சினி மூலம் சித்தவனத்தில் முருகேசன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்ட நம்பூதிரி, அவன் உதவியோடு வனத்தில் இருக்கும் தைலக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள ஆசை கொண்டு வைத்தியரிடம் அவர் மருமகன் உயிருடன் இருப்பதை நான் காட்டுவதாகக் கூறி அவரை அழைத்துக்கொண்டு சித்தவனம் போக …அங்கு முருகேசனை நம்பூதிரி வைத்தியருக்கு காட்டினாரா, அவர் ஆசைப்பட்டபடி தைலக் கிணறு பற்றிய தகவல் அவருக்கு கிடைத்ததா?, சித்தர்களுக்கு எதிராகச் செயல்படும் விஜய்யின் நிலமை என்ன ஆனது? கல்வெட்டின் குறிப்புகளைத் தேடிச்சென்ற விக்ரமன் சந்திக்க இருக்கும் சவால்கள் என பல்வேறு திருப்பங்களுடன் கதை தொடர்கிறது.
இத் தொடரின் கதை, திரைக்கதையை இந்திரா சௌந்தரராஜன் எழுத, நித்தியானந்தம் இயக்க, அபிராமி புரடக்க்ஷன்ஸ் சார்பில் அபிராமிராமநாதன், அபிராமி நல்லம்மை ராமநாதன் தயாரிக்கின்றனர்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சிவ ரகசியம்’ ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ் – திருப்பங்களுடன் ‘திருமாங்கல்யம்’ தொடர்…
Quote:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரைஇரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘திருமாங்கல்யம்’ தொடர் வெற்றிகரமான 50 வது பகுதியை நெருங்கியுள்ளது.
தனது ஒரே மகளான சந்தியாவை போலீஸ்காரனுக்கு மட்டும் திருமணம் செய்து கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அஸிஸ்டென்ட் கமிஷனரின் மனைவியான ஷோபா, பல்வேறு இடங்களில் வரன் தேடிய பிறகு, போலீஸ் உத்தியோகம் பார்ப்பவன் என்பதை அறியாமலேயே, கான்ஸ்டபிளான திருமுருகனை தன் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு செய்கிறாள். திருமுருகனை சிறுவயதிலிருந்தே காதலித்து வந்த ஹவுஸ் ஓனர் மகள் மகா, திரு தனக்கு இல்லை என்பதை அறிந்து மனமுடைந்து போகிறாள். சந்தியா வீட்டார் திருமண வேலைகளில் தீவிரமாக இறங்குகின்றனர்.
ஆனால், பணக்கார குடும்பத்தில் பிறந்த சந்தியா தன் வீட்டிற்கு திருமணம் செய்து கொண்டு வருவதில் திருவின் அண்ணியான கோகிலாவிற்கு விருப்பமில்லை. அவள் தனக்கு அடங்கி நடக்கும் மகாவை திருவிற்கு மனைவியாக்கும் திட்டத்தில் இறங்குகிறாள். அதனால், திரு – சந்தியா திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட முயற்சிக்கிறாள்.
திரு கட்டும் ‘திருமாங்கல்யம்’ மகாவிற்கா? சந்தியாவிற்கா? என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘திருமாங்கல்யம்’ தொடரை, ஜீ தமிழ்த் தொலைக்காட்சி குழுமத்தின் ஓர்அங்கமான எஸ்ஸெல் விஷன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
Quote:
முன்னணி சேனலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடரை சினிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர் தற்போது 100 வது எபிசோடை தொட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து பல புதுமைகளை அதில் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி தொடரின் இயக்குனர் சி.வி.சசிகுமார் கூறியதாவது: எங்கள் தொடரில் மகாபாரத கதை மைய இழையாக இருந்தபோதும் அது தொடர்பாக இதுவரை பலரும் அறிந்திராத பல புதுமையான, சுவையான சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறோம்.
இதற்காக தமிழில் கம்பராமாயணம் போல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, குஜராத்தி, பெங்காலி, ராஜஸ்தானி, இந்தோனேஷிய மொழிகளில் வெளிவந்திருக்கும் மகாபாரத நூல்களை படித்து நமக்குத் தெரியாத பல சம்பங்களை அறிந்து அதனை மகாபாரதத்தின் இடையில் சேர்க்கிறோம்
இதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்ய இருக்கிறோம். அது தமிழ்நாட்டின் தொன்மை கலைகளான பொய்கால் குதிரை, நடன கதைகள், கிராமிய கூத்து, பஞ்சராத்ர தூது வாத்யம், போன்ற கலைகளை பொருத்தமான இடங்களில் சேர்க்க இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்.
இதுதவிர தொடருக்காக பெங்களூரில் 1 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட் போட்டிருக்கிறோம். தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் செட் போட்டிருப்பது இதுவே முதல் முறை. என்றார் இயக்குனர் சி.வி.சசிகுமார்.
நன்றி: தினமலர்
Quote:
சினிமா ஹீரோவானார் சந்த்ரு
சின்னத்திரையின் ஆட்ட நாயகன் என்று அழைக்கப்படுகிறவர் சந்த்ரு. சின்னத்திரையின் அனைத்து நடன நிகழ்ச்சியிலும் ஆஜர் கொடுத்து விடுவார். ஜோடி நம்பர் ஒண், உங்களில் அடுத்த பிரபுதேவா யார் நிகழ்ச்சிகளில் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வின்னரை பட்டத்தை தவறவிட்டு ரன்னர் ஆனவர். இப்போது சினிமாவில் ஹீரோவாகிவிட்டார்.
இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளர் ஜி.ஏ.சோமசந்திரா இயக்கும் காதல் காலம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா, சார்மி என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். விஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய் ஆனந்த் இசை அமைக்கிறார். கோபி செட்டிபாளையும், கர்நாடகா பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் சந்துரு முறைப்படி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
நன்றி: தினமலர்
Quote:
ஜீ தமிழில் புதிய தொடர் மாப்பிள்ளை
ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்தியில் ஹிட்டான சீரியல்களை டப் செய்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மாப்பிள்ளை என்ற சீரியல். இது பேமிலி டிராமா. ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தில் வரும் மாமியாருடன் மோதும் மருமகன் கதைதான் இதுவும்.
பெரிய கோடீஸ்வரி துர்காவின் ஒரே மகள் ரோஷினி. மகளுக்கு கோடீஸ்வரனை திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க நினைக்கிறார் துர்காதேவி. ஆனால் மகளோ எளிமையான வாழ்க்கையை நேசிக்கிறார். ஒரு ஏழையை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறாள். மற்றொரு கோடீவரரின் மகனான சித்தார்த்துக்கு ரோஷினி மீது காதல். அதற்காக ஏழையாக நடித்து ரோஷினியை காதலிக்கிறார். சித்தார்த்தை ஏழை என்று நினைத்து துர்காதேவி டார்ச்சர் கொடுக்கிறார். இறுதியில் வென்றது ஏழ்மையா, பணக்காரத்தனமாக என்பது மாதிரி கதை போகும். வருகிற 16ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
Quote:
கொரியன் டிராமாக்களில் யூ ஆர் பியூட்டிபுலுக்கு அடுத்த புகழ்பெற்ற தொடர் தி ஹேர்ஸ். கொரியன் டிராமக்களின் நம்பர் ஒண் நடிகர் லீ மின் ஹோவும், நம்பர் ஒண் நடிகை பார்க் கின் இயும் இணைந்து நடித்த டிராமா. உலகம் முழுவதும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட தொடர் இது. அதோடு அமெரிக்க நிறுவனம் தயாரித்த முதல் கொரியன் தொடரும் இதுதான்.
தற்போது இந்தத் தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 23ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது,
கொரியாவைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரன் மகன் ஜேசன் அமெரிக்காவில் படிக்கிறார். அவருக்கு இன்னொரு கோடீஸ்வரரின் மகளை திருமணம் பேசி முடிக்கிறார்கள். இந்த நிலையில் ஜேசன் தன்னுடன் படிக்கும் ஏழை மாணவி ஜெனியை காதலிக்கிறார். படித்து முடித்து விட்டு இருவரும் நாடு திரும்பிய பிறகுதான் தெரிகிறது. ஜேனி சேசன் வீட்டு வேலைக்காரரின் மகள் என்பது. இவர்கள் காதலை பிரிக்க கோடீஸ்வர குடும்பம் சதி செய்வதும். அதனை முறியடித்து இருவரும் காதலில் வெற்றி பெறுவதும்தான் கதை.
நன்றி: தினமலர்
Quote:
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிகழ்ச்சி.
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்2 தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் புதிய தலைமுறை சேனலில் கற்க கடற என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள், பதட்டமில்லாமல் தேர்வை அணுகுவது எப்படி என்பது பற்றி நிபுணர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். பாடம் சார்ந்த அணுகுமுறை, உளவியல் ரீதியான அணுகுமுறையை கற்றுக் கொடுக்கிறார்கள்.
இவைகள் தவிர நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கான தயார்படுத்தலையும் நிகழ்ச்சி மூலம் வழங்குகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அபிநயா தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினமலர்
Quote:
6 ஹீரோயின்கள் நடிக்கும், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 23ந் தேதி முதல் ஒளிரப்பாகும் புதிய தொடர், 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும். இதில் திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி உள்பட 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அசோக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செய்யாறு ரவி இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தான் காதலித்து மணந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் அன்னக்கொடி. திடீரென்று ஒரு நாள் கணவன் கடத்தப்படுகிறான். அவனைத் தேடி தன் ஐந்து மகள்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போதுதான் கணவன் தென்காசியை சேர்ந்தவன் என்றும் பெரிய ஜமீன் குடுபத்து வாரிசு என்றும் தெரிய வருகிறது. ஊர் மக்களும், ஜமீன் குடும்பமும் அன்னக்கொடியையும் அவளது மகள்களையும் துரத்தி அடிக்கிறது. அதையும் மீறி அன்னக்கொடி கணவனை எப்படி மீட்கிறார் என்கிற கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...3818000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
மீண்டும் கேம் ஷோ நடத்துகிறார் ரிஷி
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்திய ரிஷி அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சின்ன பிரேக் விட்டார். இப்போது மீண்டும் கேம் ஷோ மூலம் திரும்பியிருக்கிறார். சூப்பர் சேலன்ஞ் என்ற கேம் ஷோவை கவிதாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார். இது சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கான நிகழ்ச்சி. அவர்களை மூன்று பேர் கொண்ட அணியாக பிரித்து பல போட்டிகளை நடத்துகிறார்.
திரைப்பட நடிகர், நடிகைகளின் சிறுவயது போட்டாவை காட்டி அவர் யார் என்று கேட்பது, ஒரு ஹிட் சினிமா பாட்டை கேட்டு அதனை மற்றவர்களை கண்டுபிடிக்க வைப்பது, ஒரு தலைப்பைச் சொல்லி அதற்கு படம் வரைய சொல்வது, ஒருவரின் எடையை சரியாக கணிக்கச் சொல்வது என விதவிதமான போட்டிகளை நடத்துகிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு கணிசமான தொகை பரிசாக வழங்கப்படுகிறது.
நன்றி: தினமலர்