-
டியர் வாசுதேவன் சார்,
40 வருடங்களாக "வசந்த மாளிகை" வெள்ளித்திரைவிழாவில் நடைபெற்று வரும் ஆரவாரங்களை-கொண்டாட்டங்களை தங்கள் பதிவின்மூலம் அப்படியே படம்பிடித்து காட்டிவிட்டீர்கள்..! வாழ்வியல் திலகத்தின் நிழற்படங்களும் அருமை..!
"வசந்த மாளிகை"யின் வனப்பான மகாமெகா ஆல்பம், ஹிந்தி 'பிரேம் நகர்'ன் மகா ஆல்பம், தெலுங்கு 'பிரேம் நகர்'ன் மெகா ஆல்பம் என 41வது ஆண்டு துவக்கவிழா நாளில் மூன்று மாளிகைகளிலும் தங்கி இன்புற வழிவகைசெய்துவிட்டீர்கள்..!
பாராட்டுக்கும், நன்றிக்கும் அப்பாற்பட்டதல்லவா தங்கள் சேவை..!
அன்புடன்,
பம்மலார்.
-
தெலுங்கு 'பிரேம் நகர்' படத்தில் 'யாருக்காக' பாடல் 'எவரிக்கோச'மாக.
http://www.youtube.com/watch?feature...&v=iq16LZmEARc
-
டியர் வாசுதேவன் சார்,
26.9.2012 தேதியிட்ட 'குமுதம்' வார இதழின் 'பேசும் படம்' பகுதியில், 'சத்ரபதி சிவாஜி' தொலைக்காட்சி நாடகம் பற்றி நடிகர் திலகத்தின் 40 ஆண்டு கால நண்பர் திரு.டி.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக அரியதொரு தகவல் பொக்கிஷம். அவரது கருத்துரையின் கடைசி பாரா அணுகுண்டையல்லவா நம்மீது வீசியிருக்கிறது. மூலாதாரமே உலகின் எந்த மூலையில் இருக்கிறது என்று தெரியாத இருண்ட சூழ்நிலை..! நமது அரசு ஊழியர்களின் அலட்சியப்போக்குக்கு இந்த நிகழ்வு மேலும் ஒரு சான்று..! தாங்கள் அடிக்கடிக் கூறுவதுபோல் 'நாம் வாங்கி வந்த வரம் அப்படி'. இந்த 'டேப்' என்னும் வெற்றிக்கோப்பை நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது. அடியேனால் முடிந்தது, ஆறுதல் பரிசாக இதுகுறித்த இரு ஆவணங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்காகத் தருகிறேன்..!
[பம்பாய் (1974ல் அது பம்பாய்தானே..) தொலைக்காட்சியில் 'சத்ரபதி சிவாஜி' தமிழ் தொலைக்காட்சி நாடகம் வெளியான தேதி : 21.7.1974 (ஞாயிறு); 'குமுதம்' இதழில் குறிப்பிட்டிருப்பதுபோல் 21.4.1974 அல்ல..]
பம்மலார்.
-
பத்திரிகை புகைப்படங்கள் : 2
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.7.1974
"சத்ரபதி சிவாஜி" தொலைக்காட்சி நாடகப் புகைப்படம் மற்றும் தகவல்
http://i1110.photobucket.com/albums/...GEDC6712-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
அன்புள்ளங்களின் அன்பு வெளிப்பாடுகள் : 1
[நடிகர் திலகத்தின் அன்புள்ளங்களான ரசிகர்கள்-வாசகர்கள், பத்திரிகைகளில் நமது அண்ணலைப் பற்றி எழுதிய கடிதக்கட்டுரைகள், கடிதங்கள், கருத்துரைகள் போன்றவை இந்த நெடுந்தொடரில் இடம்பெறும்.]
"சத்ரபதி சிவாஜி" தொலைக்காட்சி நாடகம் பற்றி அன்புள்ளம் வி.ஜி.பாலகிருஷ்ணன் (பம்பாயிலிருந்து)
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.8.1974
http://i1110.photobucket.com/albums/...GEDC6713-1.jpg
இந்தக் கடிதத்தை எழுதிய அன்புள்ளம் திரு.பாலகிருஷ்ணன், தற்பொழுது நமது 'மய்ய'த்தில் உள்ள நமது திரியை பார்க்க நேர்ந்தால், அவரது கடிதம் இங்கே மறுபிரசுரம் ஆகியிருப்பது குறித்து சந்தோஷப்படாமலா இருப்பார்..!
பக்தியுடன்,
பம்மலார்.
-
[QUOTE=vasudevan31355;959685]வசந்த மாளிகை, பிரேம்நகர் (இந்தி), பிரேம்நகர் தெலுங்கு) மூன்றையும் தந்தாகிவிட்டது. இனி ஒப்பீடு செய்து கொள்வது அவரவர்கள் பொறுப்பு.
டியர் வாசு சார்,
வசந்தமாளிகை கொண்டாட்ட பதிவு அருமை, அது சரி நடிகர்திலகத்துடன் மற்றவர்களை ஒப்பீடு செய்வதா? never!
-
டியர் வாசுதேவன் சார்,
சூப்பர்... தங்களுடைய வசந்த மாளிகை கொண்டாட்ட நினைவுகள் உள்ளத்தில் உள்ளதெல்லாம் சொல்லி விட்ட பின்னாலும் இன்னும் கொஞ்சம் கேட்கத் தோணுதே...
பிரேம் நகர் .... தெலுங்கு மற்றும் ஹிந்தி ... எங்கள் பிரேம் சிவாஜி மட்டும் தான். நீ தூர நகர் .... என்பது போல் உள்ளது.
பிறந்த நாளையொட்டி மகிழ்ச்சியான செய்தியாக வெளிவந்துள்ளது மனிதரில் மாணிக்கத்தின் மனிதரில் மாணிக்கம் திரைப்படத்தின் டிவிடி...
http://i1146.photobucket.com/albums/...ers/MMMMMF.jpg
http://i1146.photobucket.com/albums/...ers/MMMMMR.jpg
-
அன்புள்ள பம்மலார் சார்,
வசந்த மாளிகை களேபரங்களுக்கு நடுவே என்னுடைய பதிவையும் படித்து அதற்கு பதிலளித்த தங்களுக்கு மிகவும் நன்றி.
சென்ற ஆண்டு இதே நாளில் நமது தாய்த்திரியின் ஒன்பதாம் பாகத்தில் "வசந்த மாளிகை" 39-வது உதய தினத்தை முன்னிட்டு தாங்கள் பேசும் படம், பிலிமாலயா, பொம்மை, மதி ஒளி உள்பட பல்வேறு தலைசிறந்த சினிமா ஏடுகளில் வசந்த மாளிகை பற்றிய விசேஷப்பதிவுகள் வெளியானதை அள்ளி அள்ளி வழங்கினீர்கள். அவையனைத்தும் எங்கள் சேமிப்பில் உள்ளன. இன்றைய தினம் அவற்றை மீண்டும் பார்வையிட்டபோது மலைத்துப்போனேன். பம்மலாரின் தொண்டே பெரும் தொண்டு என்று அதிசயித்தேன். அந்த ஒரு திரைக்காவியத்துக்கு மட்டும் எவ்வளவு ஆவணங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள் (சரியாகச்சொன்னால் வசந்த மாளிகைக்கு மட்டுமே 54 ஆவணங்கள். அனைத்தும் விலைமதிப்பில்லா மாணிக்கங்கள்). இவற்றின் பின்னே இருப்பது தங்களது தளராத முயற்சி, அயராத உழைப்பு.
தற்போது தாங்கள் வழங்கியுள்ள இன்னொரு அசத்தும் ஆவணமான 'எதிரொலி' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட ஒர்க்கிங் ஸ்டில் மிக மிக அருமை. நடிகர்திலகம் தன் அற்புத நடிப்பை செய்து காட்ட அதை இயக்குனர் சிகரம் கே.பி. அவர்கள் (ஸ்டில்லில் எவ்வளவு இளமையாக இருக்கிறார்) கூர்ந்து கவனிக்கும் அந்த அற்புதப்பதிவுக்கு ஒரு சிறப்பு நன்றி. ஏனென்றால் இதுபோன்ற அரிய பொக்கிஷங்கள் எங்கும் கிடைக்காது.
வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்கு நடுவே, மறவாமல் 'பாவ மன்னிப்பு' திரைக்காவியத்தின் பாட்டுப்போட்டி விளம்பர ஆவணத்தையும் தந்து அசத்தி விட்டீர்கள். அசத்தல் மன்னருக்கு அளவில்லாத நன்றிகள்.
-
-