-
மலைக்கள்ளன்
http://i50.tinypic.com/micsuu.png
இந்திய ஜனாதிபதியின் பரிசு பெற்ற முதல் தமிழ் திரைப்படம்.
நடிக+நடிகைகள்:-
.மக்கள்திலகம்.
எம்.ஜி.ஆர்
http://i47.tinypic.com/2hxc9y8.png
"பத்மஸ்ரீ"பி.பானுமதி, எம்.ஜி.சக்கரபாணி (மக்கள்திலகத்தின் உடன் பிறந்த சகோதரர்), ரி.எஸ்.துரைராஜ், ஸ்ரீராம், டி.பாலசுப்ரமணியம், ஈ.ஆர்.சஹாதேவன், வி.எம்.ஏழுமலை, எஸ்.எம்.திருப்பதிசாமி, கே.துரைசாமி, எஸ்.எம்.சுப்பையா, தாமஸ் & ராயப்பன், கன்னையா, முருகேசன், செளந்திரராஜன், வெள்ளிங்கிரி, கரீம், ஆறுமுகம், ரத்னவேலு, பி.எஸ்.ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா சாந்தா, சாயி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர்.
இசையமைப்பு:-"இசைமாமணி"எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள்.
வாத்ய கோஷ்டி:- பக்ஷிராஜா ஆர்க்கெஸ்ட்ராபக்ஷிராஜா
பாடல்கள்:- நாமக்கல் கவிஞர் + ரா.பாலசுப்ரமணியன் + ராமய்யாதாஸ் + மக்களன்பன் ஆகியோர்.
தயாரிப்பு+இயக்கம்:-எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
-
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.
-
தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு'' என்ற பாடலைஎழுதியவர் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வெ. ராமலிங்கம்பிள்ளை. அந்தக்காலத்திலே அப்பாடல் ஒலிக்காத இடமேஇல்லை.நாமக்கல்கவிஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைவிமர்சிப்பவர்களில் கலைஞரும் ஒருவர்.இருவருக்கும் இடையே தொடர்பு எதுவும்இல்லாததும் இருவரும் எதிரெதிர் முகாம்களில்இருந்ததும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது.
நாமக்கல் கவிஞர் எழுதிய மிகச் சிறந்த நாவல்"மலைக்கள்ளன்'. அந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த கோவை பட்சி ராஜபிலிம்ஸ் அதிபர் ஸ்ரீராமுலுநாயுடு அதனைப்படமாக்க விரும்பினார். கலைஞரின் திரைக்கதையில் வெளியான படங்கள் பெருவெற்றி பெற்றதால் அப்படத்துக்குக்கதை,வசனம் எழுதும்படி கலைஞரைக்கேட்டார் ஸ்ரீராமுலு நாயுடு.
நாமக்கல் கவிஞரின் நாவலுக்கு திரைக்கதைவசனம் எழுதுவதற்கு கலைஞர்மறுத்துவிட்டார். அப்படத்தின் நாயகனான,எம்.ஜி.ஆரையும் டி.பாலசுப்பிரமணியத்தையும் கலைஞரிடம் தூதுவிட்டார்ஸ்ரீராமநாயுடு. அவர்களின் வேண்டுகோளுக்குமதிப்பளித்த கலைஞர், மலைக்கள்ளன்படத்துக்கு திரைக்கதை வசனம்எழுதினார்.எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் பெரு வெற்றிபெற்றது. ஜனாதிபதி விருது பெற்ற முதலாவதுதமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
அரசியல் பிரச்சினை காரணமாக நாமக்கல்கவிஞருடன் கலைஞர் முரண்பட்டாலும்அவர் முதல்வராக இருந்தபோது நாமக்கல்கவிஞரின் குடும்பத்தின் சிரமங்களைஅறிந்து தமிழக அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார். தமிழக அரசின்சார்பில்கட்டப்பட்ட தலைமைச் செயலகபத்துமாடிக்கட்டடத்துக்கு நாமக்கல் கவிஞர்மாளிகை எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்கலைஞர்.திருச்சியில் ஓவியன் என்ற நாடகம் எம்.ஜி.
ஆரின் முன்னிலையில் கலைஞரின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவிலேபேசிய கலைஞர் ""புரட்சி நடிகர்'' என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டார். அன்றிலிருந்துபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று அனைவரும் அழைத்தார்கள். பின்னர் அதுவே ""புரட்சித் தலைவர்'' என்ற பெயர் வரக்காரணமானது.
-
courtesy - wikpedia - maaalaikkallan -1954
Directed by S. M. Sriramulu Naidu
Produced by S. M. Sriramulu Naidu
Starring M. G. Ramachandran
P. Bhanumathi
Sriram
M. G. Chakrapani
Music by S. M. Subbaiah Naidu
Distributed by Pakshiraja Studios
Release date(s) 22 July 1954
Malaikkallan (aka Malaikallan) (Tamil: மலைக்கள்ளன், English: Thief of The Hills) is a Tamil language film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was "an astounding success".[1] It was the first Tamil film to win a President's Silver Medal.
Production
A blend of Robin Hood and The Mark of Zorro, written by Namakkal Kavignar Va. Ramalingam Pillai (Namakkal Kavignar). A well-known writer, poet, artist and freedom fighter, he was nominated as the Poet Laureate of the Madras Government in 1949. Malaikkallan had been prescribed as the non-detailed text for the high school curriculum in the early 50s, and the story had become very popular.
S.M.Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to make a movie of it, in 6 languages- Tamil (Malaikkallan/ MGR), Telugu (Aggi Ramudu/ N. T. Rama Rao), Malayalam (Thaskaraveeran/ Sathyan), Kannada (Bettada Kalla/ Kalyan Kumar), Hindi (Azaad/ Dilip Kumar) and Sinhalese (Surasena). Sriramulu Naidu booked Bhanumati to play the role of heroine, Poonkothai (Tamil) and Saradha (Telugu).
Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages.
Vijayapuram is a beautiful hillside hamlet appears serene and restful to a casual passerby. But the happenings there are far from tranquil. Dacoities, burglaries and even kidnappings seem to be commonplace occurrences. One established perpetuator of at least some of the crimes is Kaathavarayan, his secret accomplices being some well-known public figures like the rich young wastrel Veerarajan and the Kuttipatti Zamindar.
The other dacoit is apparently the mysterious Malaikkallan. Legends are galore on his fabulous wealth, awe-inspiring exploits, contempt for the unprincipled rich, concern for the poor and needy indeed he seems to be running a veritable empire in some hidden hillock no one actually seen him.
There is also the wealthy middle-aged bachelor Abdul Kareem, who seems to disappear at regular intervals from Vijayapuram, claiming business calls at far-off places. In this hotbed of intrigue and suspicion blooms an innocent rose Poonkothai, daughter of the upright Sokkesa Mudaliar. Veerarajan is the cousin of Poonkothai and desires to marry her, but his evil reputation ensures the impossibility of such an alliance. Having lost her mother at an early age, Poonkothai is brought up by her widowed aunt Kamakshi Ammaal. Kamakshi Ammal's only son Kumaraveeran went missing many years back.
Faced by stringent public criticism for their failure to tackle the audacious crimes, Sub-Inspector Arumugam arrives in Vijayapuram. But his assistant Constable Karuppiah is a bungling coward and is more a hindrance than a help in his investigations. It is at this juncture that one night when mudaliar is away, Poonkothai is kidnapped. The happenings of that eerie night keep the village tongues wagging for many days thereafter. Two sidekicks of Kathavarayan are found tied and hanging upside down, and a piece of Poonkothai’s jewellery is recovered from them. Kamakshi AmmaaL is found tied-up and unconscious, and a mysterious errand-boy hands over to the attending doctor a herb that revives her at once. Poonkothai is said to be in the custody of Malaikkallan, who has cleverly waylaid Kathavarayan’s men and taken away Poonkothai. Kathavarayan faces the ire and ridicule of Veerarajan at the behest of whom he had engineered Poonkothai’s kidnapping. Goaded by this humiliation, he now sends his men far and wide in search of Poonkothai. Meanwhile Poonkothai is safe in the magnificent hideout of Malaikkallan perceiving his genuine concern for the downtrodden and the reverence with which he is held by his people, her contempt and mistrust turn gradually into admiration and leads to love.
Several confounding twists and turns later the truant pieces of the puzzle fall in place. Kathavarayan and Veerarajan get their well-deserved comeuppance. Malaikkallan and Abdul Kareem both turn out to be the same person who is the long missing Kumaraveeran. All is well that ends with the happy marriage of Poonkothai and Kumaraveeran.
Actor Role
M. G. Ramachandran Kumaraveeran / Abdul Kareem
P. Bhanumathi Poonkothai
Sriram Veerarajan
M. G. Chakrapani Sub-Inspector
P. S. Gnanam Kamakshi
D. Balasubramaniyam Sokkesa Mudaliar
T. S. Durairaj Karuppiah
Surabhi Balasaraswathi Janaki
V. M. Ezhumalai Sadaiyan
Sandhya Parvathi alias Chinni
E. R. Sahadevan Kathavarayan
Producer: S. M. Sriramulu Naidu
Production Company: Pakshiraja Studios
Director: S. M. Sriramulu Naidu
Music: S. M. Subbaiah Naidu
Lyrics: Namakkal Kavignar Va. Ramalingam Pillai, Namakkal R. Balasubramaniam, Tanjai N. Ramiah Doss, Makkalanban & Kovai A. Ayyamuthu
Story: Namakkal Kavignar Va. Ramalingam Pillai
Dialogue: M. Karunanidhi
Art Director: Chelliah
Editing: Velusami
Choreography: Muthusami Pillai & T. C. Thangaraj
Cinematography: Sailen Bose
Stunt: R. N. Nambiar
Dance: Sai Subbulakshmi
Tracklist
No. Title Lyrics Singer(s) Length
1. "Yethanai kaalamthan yematruvar" T. M. Soundararajan
2. "Neeli magan nee allava" P. A. Periyanayaki
3. "O amma o ayya" P. A. Periyanayaki
4. "Unnai azhaithathu yaaro" P. Bhanumathi
5. "Pengale Ulangalile" P. Bhanumathi
6. "Nalla sagunam nokki" P. Bhanumathi
7. "Naane inba roja" P. Bhanumathi
8. "Naalai" P. Bhanumathi
9. "Thamizhan endroru inam" T. M. Soundararajan
The film grossed $380,000 at the box office and was graded as the first All-Time Blockbuster in M. G. Ramachandran's career.
This film released in 6 languages.
This film established M. G. Ramachandran as a superstar.
-
courtesy - the hindu
Malaikallan 1954
RANDOR GUY
M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)
runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).
The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)
Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.
All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.
The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.
Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.
Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.
Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.
randor guy
-
மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது
. இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது.
இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.
பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த்.
-
-
-
-