நன்றி முரளி - நல்ல நியூஸ் .உங்கள் உண்மையின் வெள்ளிச்சம் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை ,ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வது இல்லை என்ற வரிகளுக்கு உண்மையில் உயிர் ஊட்டுகின்றது !!
அன்புடன் ரவி
Printable View
நன்றி முரளி - நல்ல நியூஸ் .உங்கள் உண்மையின் வெள்ளிச்சம் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை ,ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வது இல்லை என்ற வரிகளுக்கு உண்மையில் உயிர் ஊட்டுகின்றது !!
அன்புடன் ரவி
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு அவரின் ஒரு சில கதாபாத்திரங்களை வெகுவாக பிடிக்கும். அவரின் ஸ்டைல், gestures, உடல் மொழி அதற்கு காரணமாக இருக்கலாம். அப்படி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட Dr.ராஜா என்ற பட்டாக்கத்தி பைரவன் இன்று முதல் நாகர்கோவில் பயனீர் முத்து அரங்கில் தினசரி 4 காட்சிகளாக உலா வருகிறார். நாஞ்சில் மக்கள் குதூகலத்துடன் வரவேற்பதாக செய்தி.
நாஞ்சில் நகர மக்கள் இன்று முதலே காண்கிறார்கள் என்றால் கொங்கு நாட்டு மக்கள் இன்னும் பத்து தினங்களில் இதே பைரவனை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மக்களை மகிழ்விக்க எங்கள் தங்க ராஜா வரும் மார்ச் 14ந் தேதி முதல் கோவை ராயல் திரையரங்கிற்கு விஜயம் செய்கின்றார். நேற்று குறிப்பிட்ட surprise இதுதான். 14ந் தேதி முதல் வெளியாவதாக இருந்த சொர்க்கம் வேறு ஒரு தேதியில் வெளியிடப்படும் என தெரிகிறது. சரியான தேதி தெரிந்தவுடன் அது இங்கே பதிவிடப்படும்.
அன்புடன்
ரவி,
உங்கள் விமர்சனங்களையும் படித்தேன். உங்கள் ஆதங்கத்தையும் படித்தேன். விமர்சனங்கள் சுருக்கமாக சுவையாக இருந்தது. ஆதங்கத்தை பொறுத்தவரை ஒரு சில வார்த்தைகள்.
எப்போதும் நான் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறோம் என்றால் அதை முழுமையாக எழுதி முடித்து விட்டு பதிவிடுவது நல்லது. காரணம் எழுதுபவர்களுக்கும் சரி படிப்பவர்களுக்கும் சரி, அது முழுமையான ஒரு அனுபவமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் continuity விட்டு போகும். இப்போது கோபால் கௌரவத்தைப் பற்றி எழுதியது அப்படித்தான் ஆகி போனது. ஆகவே முழுமையாக prepare செய்வது நல்லது.
நான் இந்த காரணத்தை சொல்லவில்லை. நான் விமர்சனம் எழுதிய படத்தைப் பற்றி அனைவரும் பங்களிப்பு செய்தவுடன் அடுத்த படத்திற்கு போகலாமே என்றால் அதில் ஒரு நடை முறை சிக்கல் இருக்கிறது. அந்தப் படத்தை பற்றி எனக்கு தெரியாது என்றால் நான் எனக்கு தெரிந்த படத்தை பற்றி எழுதப் போய் விடுவேன். இது public forum. யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நாம் தடுக்க முடியாது.
ஒவ்வொருவரும் மனதில் ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். நமது ரசிகர்களை விடுங்கள். வேறு சிலர் இருக்கிறார்கள். இந்த திரியில் வரும் ஒரு சில பதிவுகளை தனியாக எடுத்து quote செய்து வேறு ஒரு கலர் கொடுக்க முயற்சிப்பார்கள். உதாரணத்திற்கு நான் சந்திப்பு படத்தின் வசூலை பதிவு செய்தேன். உடனே ஒருவர் வருவார். பாருங்கள் சந்திப்பு படத்தை glorify செய்கிறார் என்பார். குறிப்பிட்ட படத்தைப் பற்றிய செய்தியை பதிவு செய்வதற்கும் படத்தை புகழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் [ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்படிபட்டவர்களுக்கு இந்த வித்தியாசம் புரியும். ஆனால் வேண்டுமென்றே அதை திரிப்பார்கள்]. இன்னொருவர் வருவார். பெருந்தலைவர் என்ற வார்த்தை வந்திருக்கிறது. ஆகவே அரசியல் எழுதுகிறார் என்பார். ஆக இதையெல்லாம் நாம் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.
நானுமே உங்கள் பிராப்தம் மற்றும் மூன்று தெய்வங்கள் ஆகிய படங்களைப் பற்றிய விமர்சனங்கள் படித்தவுடன் அந்த காலங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆரம்பித்தேன். நேரம் கிடைக்காததனால் முடிக்க முடியவில்லை. அதே போன்று வேறு சில திரிகளை பற்றி குறிப்பிட்டு ஒரு ஒப்பீடு செய்திருந்தீர்கள். அதை பற்றி சில வார்த்தைகளும் நேரம் கிடைக்கும் போது கூற விரும்புகிறேன்.
சுருக்கமாக சொன்னால் உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள். அதற்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஆதரவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ரவியின் சுருக் விமர்சனங்களை பாராட்டும் இதே நேரத்தில் சிரத்தை எடுத்து தங்க மலை ரகசியம் பற்றி விஸ்தாரமாக எழுதிய தம்பி ராகுல் ராமிற்கு வாழ்த்துகள்!
அன்புடன்
நண்பர்களால் வெளியிடப்பட்ட மலர் ஒன்றில் இருந்து
தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய 'பாவை விளக்கு' நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின.
புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர். அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள். பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.) வேலை பார்த்தார்.
ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி. பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி 'கலைமகள்' முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின. 'கலைமகள்' முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின் 'பெண்' என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உலகில் அகிலன் புகழ் பெற்றார். அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார்.
அகிலனின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால், எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன. 1957 மத்தியில் 'கல்கி'யில் 'பாவை விளக்கு' தொடர் கதையை அகிலன் எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை - வசன ஆசிரியராக விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது.
'பாவை விளக்கு' கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார். கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார். படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன் கேட்டுக்கொண்டார். ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது.
சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற முடிவு செய்தார். அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். ஏ.பி.நாகராஜன் யூனிட்டில் எடிட்டராக இருந்த விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து 'விஜயகோபால் பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியை தொடங்கினர். அந்த பேனரில் 'பாவை விளக்கு' படமாகியது. கதாநாயகனாக (எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார்.
கதாநாயகனை 4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை. 1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல் ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார். 2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும் நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை.
செங்கமலம் வேடத்தில் குமாரி கமலா. 3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள். இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி. 4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில் உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை இழக்கிறாள்.
ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும் உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார். அகிலனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார்.
குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில் தோன்றி, 'காவியமா, நெஞ்சில் ஓவியமா?' என்று பாடும் காட்சி, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்', 'சிதறிய சலங்கைகள்போல' முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.
குறிப்பாக, 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி...' பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1960 தீபாவளிக்கு 'பாவை விளக்கு' வெளியாகியது. படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், 'ஒருவனை 4 பெண்கள் காதலிப்பதா?' என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக பிரிந்து விவாதம் செய்தன.
படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின. சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை. பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம், உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.
சிவாஜிகணேசனை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரை 'படிக்காத மேதை' ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு பலரும் கூறினர். நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படம், நூறு நாட்களை நெருங்கத்தான் முடிந்தது. - courtesy malaimalar
இனிய நண்பர் சிவா அவர்களுக்கு
தாங்கள் தர்மம் எங்கே திரைப்படத்தை பார்த்திருபீர்களேயானால் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" என்ற பாடல் ஒன்று வரும்.
அதில் ஒரு முக்கியமான வரி ஒன்று உண்டு - அது - "ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை " என்பது. அதைப்போல நடிகர் திலகம் அவர்களுடைய புகழ் மறைக்ககூடியது அல்ல !
மேலும் நம் நடிகர் திலகம் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அவருக்கு எப்போதும் புகழ் சேர்க்கும்.
அதற்காக நாம் மற்றவர்களை இகழவேண்டும் என்ற நிர்பந்த நிலைக்கு நம்மை நாமே தள்ளவும் கூடாது.
நடிகர் திலகம் அவர்கள் நன்கொடைகள் வலது கரம் செய்ய இடது கரம் அறியாத வகை. இது நடிகர் திலகத்தின் முடிவு. நாம் அந்த நற்குணத்தை பற்றி எழுதி அல்லது பதிவு செய்யலாம்.
இதில் மற்றவர்களை எதற்கு இழுக்கவேண்டும் ?
உண்மை என்றிருந்தாலும் சக்திவாய்ந்தது !
மார்ச் மாதம் வெளிவர இருக்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்.
ஆயினும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
சென்னை - மார்ச் 14 - தங்கச்சுரங்கம் / வெள்ளை ரோஜா
காஞ்சிபுரம் - மார்ச் 14 - தங்கச்சுரங்கம் / நான் வாழ வைப்பேன் / நீதி
கோவை - மார்ச் 14 - எங்கள் தங்கராஜா
மதுரை - மார்ச் 14 - வைர நெஞ்சம்
நாகர்கோயில் - மார்ச் 14 - சந்திப்பு
MARCH 14th - THANGACHURANGAM @ YOUR FAVORITE THEATER
http://www.youtube.com/watch?v=AgUzhulHAvk