http://i65.tinypic.com/2u59fyd.jpg
Printable View
#சரணாலயம்
My last year fb memory
சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் #எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.
சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் #ஆட்சியைப் #பிடித்துவிடமுடியாது.
நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கி விடுகிறார்கள். அந்தக் கனவு #மாயக்கனவு என்பதை நடந்துமுடிந்த பல சட்டமன்ற தேர்தல்கள் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது.
மேலும் இப்போது, தெருவுக்கு ஒரு தலைவர்...எந்தத்தகுதியுமில்லாமல்... அதற்கு... கூலிக்கு மாறடிக்கும் அடிப்பொடிகள் கூட்டம்...என்பதை காணும் போது "தலை இருப்பவரெல்லாம் தலைவரல்ல" என்ற அடிமைப்பெண் திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது...
வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் வாத்தியார் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு வாத்தியார் இருக்க முடியாது.
சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் #தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவார்...
சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவார்...
'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவார்...
மக்கள்திலகத்தின் படங்களுக்குப் பாடல் எழுதும்போது கவிஞர்களிடம், "நீங்களும் பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்திக்கொண்டிருப்பார்.
அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், "இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்..."
அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் #அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் #திண்ணையாகவும்
பலன் தரக்கூடிய #தென்னையாகவும் திகழ்ந்தவர் #பொன்மனச்செம்மல். சுருக்கமாகச் சொன்னால்
#மனிதப்பறவைகளின் #சரணாலயம் அவர்.
இதயதெய்வத்தை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் உண்மையாகச் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!........ Thanks Friends....
கலைவாணா் என்.எஸ் கிருஷ்ணனின் மூத்த மகள் திருமணத்திற்காக இரவு பன்னிரெண்டு மணிக்கு பூட்டிய நல்லி குப்பு சாமியின் ஜவுளிக்கடையை மீண்டும் திறக்கச்செய்து, உறவுக்காரா்களுக்கு பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்தவா் எம்.ஜி.ஆா்.......... Thanks wa.....
மிக... மிக... விரைவில்...====================
பெங்களூரில்...,
மக்கள் ஆதரவுப் பெற்ற
" அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " யின் ஏற்பாட்டில் ,
சரித்திரத் தலைவர்...
காவிய நாயகர்...
இறைவன் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்கள் நாம் சங்கமிக்கும் விழா, திருவிழா, மாபெரும் மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களின். "புகழ் காக்கும் புனித விழா" நடைபெற இருக்கிறது.
விழாவில் ....,
உலகப்புகழ் பெற்ற மலேசியா மேகநாதன் (பொன்மனச்செம்மல் கலைக்குழு -- மலேசியா) & சிங்கப்பூர் இசை கலைஞர்கள் பாடி நம்மை பிரம்மிக்க வைக்கும்,1958...1968...1978ம் ஆண்டுகால நம் திரை அரசர் , கலையுலக பிரம்மா எம்ஜிஆர் அவர்களின் திரை இசை பாடல்களை கேட்டு ரசிக்க இன்று முதலே நாட்களை எண்ணுங்கள்.
விழா நாளில் இன்னும் பல ஆச்சரிய தகவல்கள் உண்டு. அறிய தயாராகுங்கள்...!
விழாவின் சிறப்பம்சம் ************************
நம் தெய்வம் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களே...
விளம்பரம் தேடாத வியப்புக்குறிய பக்தர்களே....
சாகும்வரை எம்ஜிஆர் புகழ்பாட துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப்போன்ற எம்ஜிஆர் வெறியர்கள்... "நீங்கள் தான் சிறப்பு விருந்தினர்கள்"
(அரசியல் சார்பற்ற விழா) மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ளுங்கள்.....
எம்ஜிஆரின் நிழல்
கானா க. பழனி 9900902321
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
9443019160
எம்ஜிஆர் பக்தன்
சம்பங்கி GSR
9731185524
எம்ஜிஆர் தொண்டன்
ராஜசேகர் K
9880825975
.... Courtesy: wa....
*எம்.ஜி.ஆாின் இறுதி நிகழ்ச்சி*
1987 டிசம்பா் 22ஆம் தேதி தமிழக முதல்வா் என்ற முறையில் எம்ஜிஆா் கலந்து கொண்ட இருதி நிகழ்ச்சி சென்னை மீனம் பாக்கத்திற்கும் கிண்டிக்கும் நடுவில் கத்திப்பார சந்திப்பில் நிறுவப்பட்ட பண்டித நேருஜியின் சிலையே திறந்து வைத்த நிகழ்ச்சி .இந்த நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தியும் கலந்து கொண்டாா். இதுதான் எம் ஜி ஆாின் கடைசி நிகழ்ச்சியாகும்.
🙏🏼🙏🏼🙏🏼😭....... Thanks fb....
சரோஜாதேவி ஜெயலலிதா வுக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் அதிகப் படங்களில் 13 ஜோடியாக நடித்தவர் நடிகை லதா அவர்கள்.1972 அண்ணா திமுக தொடக்க காலத்தில் நாட்டிய நாடகம் நடத்தி 35 லட்சம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்தார். இன்றும் புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று அடித்து சொல்கிறார்.அவருடைய நல்ல மனம் நன்றி உணர்ச்சி பல்லாண்டு வாழ்க ! எம்ஜிஆர் லதா ஜோடி படங்களில் எனக்கு பிடித்த படங்கள் உரிமைக்குரல் நாளை நமதே..... Courtesy: wa.....
#மக்கள்_திலகம் தன்னுடய தலைவர் #பேரறிஞர் #அண்ணா-வை போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை. இதோ இந்த பட்டியலை பாருங்களேன்...
01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .
02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .
03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை
04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்
05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்
06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க
07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி
09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .
10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்
11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை
12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்
13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்
14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா
15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி
16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை
17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்
18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்
பொன்மனச்செம்மல்புகழ்வளர்க ♥சுதர்சன்♥...... Thanks wa Friends.......
திராவிட தலைவர்களில் நாங்கள் வணங்கும் தலைவர்கள் மூவர் மட்டுமே. அதில்அசல் தங்கமாக இருந்த எங்கள் தங்கத்தை( MGR) கொடை என்னும் வழியை காட்டிய கலைவாணர் அவர்களும்.அரசியல் கண்ணியத்தை காட்டிய அறிஞர் அண்ணா அவர்களும் தான்.அந்த பேரறிங்கர் அண்ணா அவர்களின் 50 வது நினைவு நாளில் இருகரம் கூப்பி கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம்.......... Thanks Friends............