ஏன் இது... ஏன் அது-ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார் சூர்யா! - 'பிரிவு' பற்றி கவுதம் மேனன்
Printable View
கவுதம் மேனனுக்கு சாதகமில்லாத 'வானிலை'கவுதம் மேனன்- சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வைத்த வேகத்தில் மாறிவிட்டது.இந்தப் படத்துக்கு இரு தினங்களுக்கு முன்புதான் சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்தார்கள். அதை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.இதுகுறித்த செய்திகள் அடுத்தடுத்து மீடியாவில் வரத் தொடங்கியதுமே, ஏற்கெனவே இதே பெயரில் ஒரு படம் முடிந்து ரிலீசுக்கும் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கவுதம் மேனனைத் தொடர்பு கொண்டு, உங்க படத்தின் பாடல் வரியைத்தான் 'சட்டென்று மாறுது வானிலை' என்று வைத்தோம். படம் முடிந்து 2012-லேயே சென்சார் சான்று கூட வாங்கிட்டோம் சார், என்றார்களாம்.வேறு வழியின்றி சரி சொன்ன கவுதம் மேனன், இப்போது தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்.விரைவில் புதிய தலைப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்! - VIKATAN
http://cinema.vikatan.com/uploaded/shanmuga-pandian.jpgவிஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார்.
விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார்.
பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார்.
சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்பினார்கள்.
இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீஷுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.
நல்ல கதை கிடைத்திருக்கிறதாம். படத்துக்கு 'சகாப்தம்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் விஜயகாந்த் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி
சென்னை: எனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ரிலீஸ் நாளன்றே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடப் போவதாக இயக்குநர் சேரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாஸில் நடந்தது.இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு நிக்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?" என்றார்.அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன?," என்று கேள்வி எழுப்பியவர், "யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்," என்றார்.விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ!
there were high stakes for vishwaroopam and a simultaneous release in DTH would have possibly impacted the crucial first two days collection, but for cheran the stakes are less anyway, so there might not be more than a ripple.....
First look Attachment 2785
Jr. Vijayakanth is taller than Satyaraj Attachment 2787