-
http://www.esnips.com/doc/0c4fe6a2-2...13c933fd/ntmgr
நாங்கள் எம்.ஜி.ஆர். படங்களை அந்தக் காலத்தில் அதிகமாகப் பார்த்ததில்லை. ஆனால் தற்காலத் தமிழ்ப்படங்களைப் பார்க்கும் பொழுது தங்கள் படங்களின் அருமை புரிகிறது. எந்தத் தொழில் நுட்ப உதவிகளும் அதிகமாக வந்திராத காலகட்டத்தில் நீங்கள் இருவரும் புரிந்த சாதனைகளின் ஒரு சதவீதம் கூட தற்போது வெளிவரும் படங்களால் செய்ய முடியவில்லை என்பதை உணரும் போது எந்த அளவிற்கு நீங்கள் இருவரும் தமிழ்த் திரையுலகை வாழ வைத்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. எல்லா விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளும் விரலசைவில் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ஏன் மாபெரும் வெற்றியை அல்ல, சாதாராண அடிப்படை லாபத்தைக் கூடக் காணமுடியாமல் தோற்கின்றன என்பது தான் புலனாகவில்லை.
மீண்டும் தமிழ்த் திரையுலகம் வீறுகொண்டு எழுந்து பல சாதனைகளைப் படைப்பதே உங்களுடைய பிறந்த நாளான இன்று (17.01.2010) உங்களுக்கு செய்யக் கூடிய பிறந்த நாள் மரியாதையாக இருக்கும்.
அந்நாள் விரைவில் வர தாங்களிருவரும் அருள் புரிய வேண்டும்
ராகவேந்திரன்
-
மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம்:
(டிசம்பர் 1984, ஜனவரி மற்றும் பிப்ரவரி 1985 பொம்மை இதழ்களிலிருந்து)
"அண்ணன் எம்.ஜி.ஆரைப் போல நானும், என்னைப் போல அண்ணன் எம்.ஜி.ஆரும் தாய்ப்பாசத்தில் அதிகமாகப் பற்று கொண்டவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள். தாயை தெய்வமாக மதிப்பவர்கள். அந்நாளிலும் இந்நாளிலும் நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், குறித்த நேரத்தில், சந்திக்க வேண்டிய இடத்தில், பேசுகின்ற பாஷையில், கண்களில் அன்பு நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து நிற்கின்ற அந்த நிலையை யாரால் விளக்க முடியும்?! இதை வெளியிலே கூற முடியுமா? சொன்னால் மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்?! படிப்புக்கு பலர் இலக்கணம் வகுத்திருப்பார்கள். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.
ராஜாமணி அம்மையாருக்கு உடம்பு செளகரியமில்லை என்றால் தன் உடம்புக்கு வந்து விட்ட மாதிரி அண்ணன் இருப்பார். மூதாட்டி யாரைப் பார்த்தாலும் அண்ணன் தாய்ப்பாசத்தைப் பொழிவார். அந்த மூதாட்டியை அணைத்துக் கொள்வார். அரசியலுக்காக இதைக் கிண்டல் பண்ணலாம். ஆனால் அவருடைய மனதில் எங்கோ ஒரு மூலையில் தாய்ப்பாசம் இருப்பதனால் தானே இப்படிச் செய்கிறார். மற்றவர்களால் முடியுமா?!
திரையுலகில் அண்ணனின் பாணி வேறு. என்னுடைய வழி வேறு. நம்மாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தேன். தம்மாலும் நடிக்க முடியும் என்பதை அவரும் பல படங்களில் காண்பித்தார். எவ்வளவு தான் இருந்தாலும் அவர் அண்ணன், நான் தம்பி. அரசியலில் என்னை விட அவர் திறமைசாலி. நினைத்ததை செய்து காட்டியவர். நான் இன்றும் தொண்டனாகத் தான் இருக்கிறேன். அதனால் தான் அவர் அண்ணன், நான் தம்பி.
அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் நான் சென்று பார்ப்பேன். அவருக்கு கால் உடைந்த போது தொடர்ந்தாற் போல் சிரமங்கள் வந்து கொண்டு இருந்தன. அவருடைய மூத்த மனைவி இறந்து விட்டார். நான் அவருடன் இரண்டு தினங்கள் இருந்தேன். அவருடன் மயானத்திற்குப் போனேன். அங்கு அவருக்கு மயக்கம் வந்து விட்டது. அவரைக் காரில் வீட்டிற்கு அழைத்து வந்து நானே அவருக்கு குளிப்பாட்டி, தலை துவட்டி விட்டு 'ஒரு வாயாவது ஹார்லிக்ஸ் குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தி, அவர் ஹார்லிக்ஸ் குடித்த பிறகே நான் காபி குடித்தேன். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அண்ணன். நாம் அவருடன் பேசும் போது சென்டிமென்டைத் தொட்டு விட்டால் மற்றவற்றை அவர் மறந்து விடுவார். அப்போது அண்ணன் குழந்தை ஆகி விடுவார்.
அவர் மக்களுக்கு இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று கருதிய ஆண்டவன், நம் பிரார்த்தனைகளை ஏற்று அண்ணன் அவர்களை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடல் நலத்துடன் திருப்பி அனுப்பி இருக்கிறான். அவர் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால் இனிமேலாவது மற்றவர்களுக்காகப் பணியாற்றும் போது அண்ணன் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய இந்த சிறு வேண்டுகோளை அண்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டும்."
இன்று (17.1.2010) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 94வது பிறந்த நாள்.
போனஸ் நியூஸ்:
மக்கள் திலகத்தின் படங்களில் ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண் படங்கள் நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்தவை.
அதே போன்று, நடிகர் திலகத்தின் படங்களில் திரும்பிப் பார், ஆலயமணி, தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, மிருதங்க சக்கரவர்த்தி படங்கள் மக்கள் திலகத்திற்கு மிகவும் பிடித்தவை.
அன்புடன்,
பம்மலார்.
-
-
-
நடிகர் திலகம் பற்றி முதல்வர் கலைஞர்:
(தினத்தந்தி, 20.1.2010, சென்னை)
"நான் ஒரு விழாவில் நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றிப் பேசும் போது சொன்னேன். விழாவிற்காக சொன்னதல்ல. சிவாஜியின் நண்பர்களுக்காகச் சொன்னதல்ல. அது எனக்காக நானே சொல்லிக் கொண்டது. சிவாஜியின் நடிப்பை இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் மறுபதிவாக வெளியிடும் போது சில நேரங்களில் - என்னுடைய துணைவியார் கூட இங்கே வந்திருக்கிறார், அவருக்கே தெரியும் - சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, அவருடைய வசன உச்சரிப்பைப் பார்த்து, அவர் கண்ணீர் விட்டு நடிக்கும் போதும், கனல் கக்க வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் அப்பராக நடித்தாலும் சரி, ஏழை சுப்பனாக நடித்தாலும் சரி, அந்த நடிப்பிலே காட்டுகின்ற உணர்வுகளைப் பார்க்கும் போதும் நான் எத்தனையோ முறை அந்தத் தொலைக்காட்சியைப் போய்த் தொட்டு முத்தமிட்டிருக்கிறேன். அதன் அடையாளம் தான் இன்றைக்கு சிவாஜியின் சிலை சென்னை கடற்கரையில் நிற்பது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது."
சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று (19.1.2010) நடைபெற்ற இசையுலக மகான் சீர்காழி கோவிந்தராஜனின் பவள விழாவில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில், நடிகர் திலகம் குறித்து அவர் குறிப்பிட்டது மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
அன்புடன்,
பம்மலார்.
-
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 7)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)
ஒய்.ஜி. தொடர்ந்தார்:
"இனி அடுத்த பாடலுக்கு முன், இந்த இசை விழாவுக்காகவே வருகை புரிந்திருக்கும் நமது முக்கிய, சிறப்பு விருந்தினர் தி கிரேட் சிங்கர் நம்ம எஸ்.பி.பி. அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்."
கந்தர்வக்குரலோன் எஸ்.பி.பி. மேடைக்கு நடந்து வந்தார். கரவொலி விண்ணைப் பிளந்தது. 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பாட்டுலக ராஜபார்ட். வெயிட்டான குரல் கொண்டவர். ஹெட் வெயிட் இல்லாதவர். 'என்றும் பணியுமாம் பெருமை' என்பதற்கிணஙக, பணிவிலும், அடக்கத்திலும் நமது நடிகர் திலகத்தை போன்றவர் நம் எஸ்.பி.பி. மைக் பிடித்து பேசத் தொடங்கினார்.
"நல்ல நெஞ்சங்களே, வணக்கம்! இந்த நிகழ்ச்சில பாட வேண்டியது என்னோட கடமை. இன்னிக்கி இதே தேதில வேற ஒரு நிகழ்ச்சிக்கும் போக வேண்டியதா இருந்தது. அதுனால இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாம போயிடுமோ அப்படின்னு ரொம்ப கவலயாயிருந்தது. ஆனா அந்த இன்னொரு நிகழ்ச்சி நல்ல வேளையா கேன்சல் ஆயிடுத்து. சிவாஜி சாரே, என் விழால வந்து நீ பாடணும் , அப்படிங்கறத்துக்காக அவரே அந்த நிகழ்ச்சியை கேன்சல் பண்ணிட்டார்னு நான் நெனைக்கறேன். அவரோட விழால பாடறது என்னோட பாக்கியம். அதுவும் உங்க எல்லார் முன்னாடி பாடறத நான் ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் நெனக்கறேன். இங்கே இதுக்கு முன்னாடி பாடினவங்க எல்லாருமே ரொம்ப பிரமாதமா பாடினாங்க. எவ்ளோ யங் டலண்ட்ஸ். எத்தனை அழகா, எவ்ளோ அருமையா, ஸ்ருதி சுத்தமா ரசிச்சு இன்வால்மென்ட்டோட பாடறாங்க. இதெல்லாம் பாக்கறதுக்கும், கேக்கறதுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. காட் ப்ளஸ் தெம். நடிகர் திலகம் சிவாஜி சார் கடவுளோட அவதாரம், நடிப்பு தெய்வம், பார்ன் ஆர்டிஸ்ட். பிறவிக்கலைஞர்னா அவர்தான். அவருக்கு நான் பின்னணி பாடின முதல் பாடலதான் இன்னிக்கி இந்த நிகழ்ச்சில என்னோட முதல் பாடலா நான் பாடப் போறேன். அது என்ன பாட்டுன்னு உங்களுக்கே தெரியும். அந்தப் பாட்ட பாடறதுக்கு முன்னாடி, அந்தப் பாடலப் பத்தி உங்ககிட்ட சொல்லியாகணும். நம்ம விசு சார் கம்போஸ் பண்ணின டியுன்ல அந்தப் பாடலோட ரெக்கார்டிங் நடந்துட்டிருக்கு. அப்ப அங்க ஒத்தர் வந்து சொல்றார். பாடல் ரெக்கார்டிங்க கேக்க சிவாஜி சார் வரார் அப்படின்னு வந்தவர் சொல்றார். அது வரைக்கும் நார்மலா பாடிண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போச்சு. சிவாஜி சாரும் வந்துட்டார். பாட்டு ரெக்கார்டிங் நடந்துட்டேயிருக்கு. ஆனா சிவாஜி சார பாத்த பயத்துல என்னால நார்மலா பாட முடியல. எம்.எஸ்.வி. சார் வேற உனக்கு என்ன ஆச்சு அப்படின்னு என்ன கேக்க ஆரம்பிச்சுட்டார்.அத கவனிச்ச சிவாஜி சார் என் பக்கத்துல வந்தார். 'இதப்பாரு, எனக்காக உன் குரல மாத்தியோ இல்லன்னா அட்ஜஸ்ட் பண்ணியோ நீ பாட வேண்டாம், நீ எப்பவும் பாடறா மாதிரி உன்னோட குரல்லயே நார்மலா நல்லா தைரியமா பாடு. நீ பாடறதுக்கு ஏத்தா மாதிரி நான் அட்ஜஸ்ட் பண்ணி ஆக்ட் பண்ணிக்கறேன்' அப்படின்னு எனக்கு தைரியம் சொல்லிட்டு சிவாஜி சார் கிளம்பி போயிட்டார். அவர் குடுத்த தைரியத்துல அந்தப் பாட்டு நல்ல படியா வந்துது. இப்ப உங்களுக்காக அந்தப் பாடல்."
சுமதி என் சுந்தரியிலிருந்து பொட்டு வைத்த முகமோவின் ஆரம்ப பின்னணி இசை, அருவியெனத் துள்ளி வர, "பொட்டு வைத்த முகமோ" என்று பாடத் தொடங்கினார் பாடும் நிலா பாலு. 40 வயதுகள் நிரம்பிய பாடலை, மணி விழா கண்ட எஸ்.பி.பி., அன்று பாடிய் அதே இளமைக் கொஞ்சலுடன், சிலிர்க்கும் விறுவிறுப்புடன் இன்றும் பாடினார். என்றும் இளமை என்றால் அது எஸ்.பி.பி.யின் குரலும், தோற்றமும் தான். அவருக்கும், அவரது குரலுக்கும் விண்ணுலக ஆண்டவரும், நடிப்புலக ஆண்டவரும் தீர்கக ஆயுளைக் கொடுத்து, இசையுலகுக்கு இன்று போல் என்றும் அவர் சேவை செய்ய அருள் புரிய வேண்டும். வசந்தாவின் ஹம்மிங்கை, வசந்த ருதுவென வகையாக வார்த்துக் கொடுத்தார், சைந்தவி. மொத்தத்தில், பாடல் மிக அபாரமாக பாடப்பட்டது. ஆடியன்சின் அப்ளாசுக்கு கேட்கவும் வேண்டுமோ!
தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
-
இன்று ஆனன்த விகடனில் சிவாஜி 25 - நடிகர் திலகம் பற்றி 25 சுவையான செய்திகள்
-
சிவாஜி 25
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
-
Last week saw “ Gnana Oli “ with my f-in-law at his house. The moment I told him that I had bought the DVD, he got excited. On the same day, he had to attend a function and told me, “ poitu seekiram vandhiren – vandhu paakalam “. Finally he came and we sat down to watch the film by around 9.30 p.m.
Both of us are watching the film after a long gap and we thoroughly enjoyed it. Another film where you can say that NT stands as a pillar in the film. What a performance! A normal Anthony in the beginning, then next appearance with one eye blind-folded, and finally, millionaire Arun – both MASS & CLASS :clap: . Lovely & evergreen songs are another value addition.
My FIL told me to forward the Srikanth, VKR, Nagesh scenes and was keen in watching only NT scenes :) . He was waiting for his favourite “ I mean the silver tumbler “ scene and he used to say that whenever we discuss NT. He got so excited that he almost clapped when NT removes his gloves. For me, it was great time watching the film with another die-hard fan. So many wonderful scenes and I would like to mention 2 scenes in particular.
1. Sundarrajan brings NT in parole to meet the priest. First he goes into the room and briefs him about the situation while NT will be waiting near the threshold. Now SR goes out and the priest will call NT to come inside. The distance between NT and the priest would be say about 10 feet and the way in which he moves towards the priest – in pain, in humiliation, in grief, waiting to let down the tears, is just excellent :notworthy: :clap: .
2. NT as Arun, goes to VKR’s house to meet his daughter to give a blank cheque. SR repeatedly refers the name Anthony and this gets registered in NT’s mind and eventually signs the cheque as Anthony. Nicely analysed piece of writing, executed and enacted surpassingly.
Everyone had gone to sleep by the time and we were the only guys watching the film :D . The film got over by around 12 midnight. The next day, both of us woke up late and rushed up to office.
-
Mohan,
Nice and interesting write up about Gnana Oli. The more you watch keenly, more nuances you would find. After I read your post, went back to the previous pages and read Gnana Oli review recently republished by Vikatan and reproduced here. And again read your post. Call it as a coincidence, tonight before coming to hub was discussing something about Gnana Oli and some incidents that happened during the release period of the movie [March 1972]. Thanks again,
Regards