Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
'மனிதனும் மிருகமும்' பட வெளியீட்டு நாளை முன்னிட்டு, தாங்கள் அள்ளி வழங்கியிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அருமை. இவ்விளம்பரத்தின் மூலம், சென்னையில் 'திருமகள்' என்றொரு திரையரங்கு இருந்ததென்பது நம் கவனத்துக்கு வருகிறது.
படம் வந்து 58 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஆண்டில் பிறந்த ஒருவர், இந்நாளில் பணியிலிருந்து ரிட்டையர் ஆகியிருப்பார். ஆனால் அத்தனை ஆண்டுகளுக்கு முன் வந்த அனைத்து விளம்பரங்களும் புதுமை மங்காமல் அப்படியே நம் கண்களுக்கு விருந்தாகப் படைக்கப்படுகிறது என்ற நிதர்சன உண்மை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இத்தனைக்கும் அது ஓகோவென்று ஓடிய படமல்ல. அதற்கே இத்தனை ஆவணங்கள் உங்களால் தர முடிகிறதென்றால் அது என்ன ஒரு விந்தை.
அற்புதங்கள் நிகழ்த்துதற்கென்றே பிறவி எடுத்துள்ள எங்கள் பம்மலார் பல்லாண்டு வாழ்க.
ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் கட்டுரைத்தொகுப்பும் மிக அருமை. பதித்தமைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.