-
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
முதலில் இறைவனுக்கு நன்றி. 'வசந்த மாளிகை' தயாரிப்பை தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புக்களோடு நிறுத்திக்கொண்டதற்காக. அப்படியில்லாமல் பஞ்சாபி, குஜராத்தி, வங்கம், ஒரியா, துளு போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டிருந்தால் அவ்வளவுதான். அத்தனை மொழிப்படங்களையும் கொண்டு வந்து, திரியையே நிறைத்திருப்பீர்கள். தன் அபிமான கலைஞனின் புகழ்பரப்ப உழைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த அளவுக்கா..? அடேயப்பா. மலைத்துப் போகிறோம்.
வசந்த மாளிகையோடு எதையும் ஒப்பிடத் தோன்றவில்லை. வசந்த மாளிகை வசந்த மாளிகைதான், மற்றது மற்றதுதான். இந்தி பிரேம் நகர் பார்த்திருக்கிறேன். ராஜேஷ் கன்னா அவருடைய கெப்பாஸிட்டிக்கு மிக நன்றாகவே செய்திருந்தார். பிரேம் நகர் ராஜேஷை மற்ற பட ராஜேஷ்களோடு ஒப்பிட்டால், இதில் நன்றாகவே நடித்திருந்தார்.
வசந்தமாளிகையின் நிரந்தர கொண்டாட்டம் பற்றிய வர்ணனை வ்குஜோர். உள்ளது உள்ளபடி அப்படியே வடித்திருக்கிறீர்கள். ஸ்டில்கள் அனைத்தும் அட்டகாசம்.
பாராட்டுக்கள், நன்றிகள்.
-
அண்மையில் [24.9.2012] இயற்கை எய்திய மலையாள நடிகர் திலகன் அவர்களின் மறைவுக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 12
நடிகர் திலகம் பற்றி நடிகர் திலகன்
வரலாற்று ஆவணம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 1-15 ஜூன் 1999
["சத்ரியன்(1990)" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கே. சுபாஷ், அதில் வில்லனாக அதகளம் செய்த நடிகர் திலகன், நடிகர் திலகம் பற்றி [தம்மிடம் கூறியதாக] கூறிய கருத்துரையை, தனது பேட்டி வாயிலாக 'சினிமா எக்ஸ்பிரஸ்' வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட மிகமிக அரிய ஆவணம்]
http://i1110.photobucket.com/albums/...GEDC6714-1.jpg
திலகமும், திலகனும் இணைந்து நடித்த "ஒரு யாத்ரா மொழி(1997)" மலையாளத் திரைக்காவியத்தினுடைய முதல் வெளியீட்டு இரண்டாவது வார விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6706-1.jpg
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
-
காலத்தை வென்ற காதல் இதிகாசம்
வாழ்வியல் திலகத்தின் வசந்த மாளிகை
41வது ஆண்டு துவக்கம் : [29.9.1972 - 29.9.2012] : சிறப்புப்பதிவு
நடிகர் திலகம் அளித்த பேட்டிகள் /
எழுதிய கட்டுரைகள் : 4
பொக்கிஷாதி பொக்கிஷம்
"வசந்த மாளிகை" குறித்து வாழ்வியல் திலகம்
வரலாற்று ஆவணம் : மதி ஒளி ["வசந்த மாளிகை" சிறப்பு மலர்] : 1.10.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC6710-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
காலத்தை வென்ற காதல் இதிகாசம்
வாழ்வியல் திலகத்தின் வசந்த மாளிகை
41வது ஆண்டு துவக்கம் : [29.9.1972 - 29.9.2012] : சிறப்புப்பதிவு
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 13
கலையுலகச் சக்கரவர்த்தி குறித்து "வசந்த மாளிகை" தயாரிப்பாளர் திரு. டி. ராமாநாயுடு
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : மதி ஒளி ["வசந்த மாளிகை" சிறப்பு மலர்] : 1.10.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC6711-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப்பதிவு [1]
பத்திரிகை புகைப்படங்கள் : 3
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.10.1972
கலைதெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வங்கள்
http://i1110.photobucket.com/albums/...GEDC6717-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப்பதிவு [2]
பத்திரிகை புகைப்படங்கள் : 4
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.10.1972
அவதார புருஷர் அவதரித்த 'விழுப்புரம்' இல்லம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6719-1.jpg
நடிகர் திலகம் அவதரித்த தேதி : 1.10.1928, திங்கட்கிழமை.
பக்தியுடன்,
பம்மலார்.
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப்பதிவு [3]
பத்திரிகை புகைப்படங்கள் : 5
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.10.1972
விண்ணுலக முதல்வரை வேண்டும் கலையுலக முதல்வர்
http://i1110.photobucket.com/albums/...GEDC6718-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
நடிகர் திலகத்துடன் நடிகர் திலகன் இணைந்து பணியாற்றிய "ஒரு யாத்ரா மொழி(மலையாளம்)(1997)" காவியக் காணொளி, ஸ்டில்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பதிவு, நடிகர் திலகனின் மறைவுக்கு அளிக்கப்பட்ட அம்சமான அஞ்சலிப் பதிவு.
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக்காட்சிகள் தொடர் 6ஐ எனக்கு dedicate செய்தமைக்கு தங்களுக்கு எனது வானளாவிய நன்றிகள்..! இந்தத் "திருடன்(1969)" ஜூடோ ஃபைட்டை நமது ஸ்டண்ட் திலகம் சும்மா 'ஜுஜுபி' யாக ஊதித் தள்ளியிருப்பார். நம்மவரது 306 காவியங்களில், "திருடன்" ஒரு special segmentல் என் மனம் கவர்ந்த காவியம். காரணம் என்ன எனில், slimmest-ever & thinnest-ever தலைவரை நாம் "திருடன்" திரைக்காவியத்தில் தரிசிக்கலாம்..! இதில் ஜோடிதான் அவருக்கு கேடியாகிப் போனது என்பது வேறுவிஷயம்..!
சமீபத்திய 12.9.2012 சினிக்கூத்தில் வந்த நடிகர் திலகத்தின் பக்தர் நடிகர் சாய்குமார் குறித்த தகவல் நன்று..!
அன்புடன்,
பம்மலார்.