Originally Posted by saradhaa_sn
சாவு வீட்டிற்கு சென்று பாருங்கள். அம்மா, தங்கை போன்ற நெருங்கிய உறவினர்களை இழந்தவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள்.
அதே சமயம் படங்களில் தாயை அல்லது தங்கையை இழந்த நடிகர் திலகம் வாய்விட்டு கதறி அழுதால் அதுக்கு இவர்கள் கொடுக்கும் பெயர் 'ஓவர் ஆக்டிங்'.
அந்த மாதிரி சமயங்களில், எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரக்கட்டை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருந்தால், அந்த போலித்தனத்துக்கு இவர்கள் சூட்டும் பெயர் இயல்பான நடிப்பு.
இது 'மகேந்திர* மணிரத்ன காப்பியங்க'ளால் ஏற்படுத்தப்பட்ட (தவறான) தாக்கம். அவர்கள் இது போன்ற உணர்ச்சிகளை விஜயன்களிடமும், அரவிந்தசாமிகளிடமும், பிரபுதேவாக்களிடமும் எதிர்பார்த்து ஏமாந்ததன் விளைவு.
அப்படிப்பார்த்தால், 'நாயகன்' படத்தில் மகன் நிழல்கள் ரவியின் பிணத்தைப்பார்த்து கமல் அழுவாரே... ஸாரி, ஒருமாதிரி சவுண்ட் கொடுப்பாரே அதைவிடவா ஒரு ஓவர் ஆக்டிங் இருக்க முடியும்?.