-
இன்று 3-2-2019 பேரறிஞர் அண்ணா 50 ம் ஆண்டு நினைவு நாள் !
எதையும் தாங்கும் இதயம். கடமை கண்ணியம் கட்டுப்பாடு. மாற்றான் தோட்டத்திற்கும் மனம் இருக்கும். எங்கிருந்தாலும் வாழ்க !
தம்பி , எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் நாம் யாரும் அழைத்து நமது கழகத்தில் வந்து சேர்ந்தவர் அல்ல. அவர் மக்களின் அன்பைப் பெறுவதற்கு என்ன வழி என்று பல நாள் சிந்தித்து, மக்களுக்குப் பாடுபடும் கட்சி எது என்று ஆராய்ந்து கடைசி யில் நமது கழகத்தில் வந்து சேர்ந்தார். "
= அறிஞர் அண்ணா..... நன்றி...
-
: பேரறிஞர் அண்ணாவின் உவமைத்திறன் ::
1964ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்று சென்னை சிறையில் இருந்தார். அப்போது, நம் மக்கள் திலகம் அவர்கள் சட்ட மேலவை உறுப்பினர் (M.L.C.) பதவியை துறந்தார்.
இது குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
" பட்டுப் புடவை" யின் வெளிப்புறத்திலே போடப்படும் சரிகையைனால் பட்டுப் புடவையின் மதிப்பு உயர்கிறதே, அதைப்போல் அவர் மதிப்பானவர். அவரால் கட்சிக்கு மதிப்பு உருவாகும் நிலையோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில், கூறினார். Thanks...
-
வாலி பல வரிகள் எழுதியும் திருப்தி கொள்ளாத மக்கள் திலகம் கடைசி முயற்சியாக எம் எஸ் வி கண்ணதாசனிடம் சென்று இந்த காட்சிக்கு பாடல் எழுதி தாருங்கள் ஆனால் வாலியின் பெயர் தான் திரையில் வரும் என்றார்
கவிஞரும் சரி என்று ஒப்புக்கொண்டார் எம் எஸ் வி அவர்கள் இவ்வாறு கூறியதற்கு காரணம் மக்கள் திலகமும் கவிஞரும் இரு துருவங்களாக இருந்ததுதான் காரணம்
எம் எஸ் வி யும் கவிஞர் எழுதிய பாடலை வாலி எழுதியதாக கூறி எம் ஜி ஆரிடம் காண்பித்தார் அதைபடித்த மக்கள் திலகம் இது கவிஞரின்
வரிகள் போல் உள்ளனவே என்றார்
எம் எஸ் வி அசந்து போனார் உடன மக்கள் திலகம் சரி பரவாயில்லை இதில் வள்ளலார் வரவேண்டும் என்றார் எம் எஸ் வி அவர்கள் காதல் பாடலில் வள்ளலார் எப்படி வரமுடியும் என்று கேட்க
அதெல்லாம் கவிஞர் பார்த்து கொள்வார் என்றார்
கவிஞர் ' தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது ' என்று எழுதி கொடுத்தார்
மக்கள் திலகத்திடம் காட்டிய எம் எஸ் வி யிடம் பார்த்திரா இது தான் கவிஞர் அருட் பெரும் ஜோதி என்று வள்ளலாருக்கு வேறொரு பேரும் உண்டு என்றும் மக்கள் திலகம் விளக்கினார் !
மக்கள் திலகத்தின் ஈடுபாடு எம் எஸ் வி யின் பொறுமை
கண்ணதாசனின் கவித்துவம் அது பொற்காலம்
படம் : உரிமைக் குரல்
பாடல் : விழியே கதை எழுது
ஹயாத் !.... Thanks wa.....
-
அழகான வள்ளலே ராமச்சந்திரனே
உனக்கோர் வணக்கம்👁
*******************
எதிரிக்கு எதிரி நண்பனுக்கு நண்பன்
சித்தாந்தம் கொண்ட சீரிய நாயகனே
உயர்ந்தோரை மதித்த
உத்தமபுத்திரன் நீயானாய்
உன்னை
நம்பாமல் கெட்டவர் உண்டு
நம்பிக் கெட்டவர்கள் அவணியில் இல்லை
அசுர ஜாதகத்தை அழகாய்க் கொண்டவனே
விழுவதுபோல் விழுவாய் மற்றவர் முன்பு
நீண்டகால வீழ்ச்சியை சந்திக்காதவன் ஆயிற்றே
ராமனை உன்வடிவில் பார்த்தேன் நான்
சந்திரனையும் அழகால் தோற்கடித்தவன் நீயன்றோ
ஜானகி தெய்வத்தைத் துணையாய்ப் பெற்றவன்
மதுரைவீரனையோ மன்னாதிமன்னனையோ ராஜாதேசிங்கையோ
நாடோடி மன்னனையோ
கண்டதில்லை
என் வாழ்நாளில்
என்றும்
அத்தனைப்
பேரையும் கலந்த கலவையன்றோ
உலகத்தை காப்பது தெய்வம் அன்றோ
அதையும் உன்னில் கண்டது உண்மையன்றோ
பாமரனையும் ரத்தத்தின் ரத்தமாக்கியன் நீமட்டும்தானே
திரைப்படத்திலும் தந்தாய் தரமான சிந்தனைகளை
அநாகரீக வார்த்தைகளை அடியோடு வெறுத்தவன்
நீவெறும் நடிகன் மட்டும் அல்ல
சமுதாய மாற்றங்களை அழகாக பரிணமித்தவன்
சமுதாயத்தின் அத்தனை விடயத்தையும் அலசியவன்
அத்தனையும் சீர்செய்ய ஆவலாய் உழைத்தவன்
எத்தனை எத்தனை திட்டங்கள் நீதந்தாய்
மதிய உணவெனும் ஒரு திட்டம் போதுமே
இன்றளவும் உன்னை துதிக்குதே
இவ்வுலகம்
அன்னையாய் தந்தையாய் அனைவர்க்கும் ஆனாய்
மக்களை வெளியில் சுமந்து கருப்பையானவன்
உன் புகழ்பாடிட எனக்கு ஒருஜென்மம்
ஒரு யுகம் போதாது கருணை
வள்ளலே
எல்லோர்க்கும் எல்லாம் தந்திட நினைத்தாய்
அனைவர்க்கும் அனைத்தும் அளவில்லாமல் தந்தவன்
ஏழைக்கு இறைவனாய் அனைவர்க்கும் பங்காளனாய்
திகழ்ந்த செம்மலே தமிழகத்தின் தலைமகனே
இடையேழு கடையேழு வள்ளல்கள் வரிசையில்
வந்துதித்த வள்ளலும் நீ ஆனாய்
நன்றி மறவா தமிழன் நாடறியும்
வானமும் வையமும் சந்திரனும் சூரியனும்
உள்ளவரை உன் புகழ் மங்காது மாதவனே
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
வணங்குகிறேன் வள்ளளே உன்னாசீர்வாதம் வேண்டியே.
ராமச்சந்திரனாக அன்னை ஜானகியோடு
இணைந்து
என்றும் உன்புகழ் பாடிடவே வரம்தாயெனக்கு........... Thanks wa......
-
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.... Thanks fb., Friends...
-
ஆட்சியில் விலை வாசி கட்டுக்குள் இருந்தது. ஏழைகள் நிம்மதியாக வாழ முடிந்தது. மக்கள் நலன் ஒன்றையே
குறிக்கோளாக கொண்டு, அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவு கண்டு, தமிழகம் மேம்பட நலத் திட்டங்கள்
பல தீட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாக எண்ணாமல் சுமுகமான சூழ் நிலைகளை
சட்ட மன்றத்தில் ஏற்படுத்தினார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது மட்டுமல்லமால், அவர்கள் படும் அவல நிலையினை உணர்ந்து அந்த அவலங்களை
போக்கி, இந்திய நாட்டிற்கே எடுத்துக்காட்டான முதல்வராக, அற்புதமான தலைவராக திகழ்ந்தார். சத்துணவு திட்டத்தை கொண்டு
வந்து ஐக்கிய நாட்டு சபையில் விவாதிக்கும் அளவுக்கு சாதனை படைத்திட்டார்.
தமிழக சட்ட மன்ற வரலாற்றில் தொடர்ச்சியாக தனது இறுதிக் காலம் வரை, தோல்வியே கண்டிராத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
தனிப் பெரும் முதல்வராக, நிஜமாகவே நிரந்தர முதல்வராக, உலா வந்தார்.
மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் துயர் போக்கிட்ட தூய தலைவராக திகழ்ந்தார்.
நாட்டின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" பெற்ற முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒரு மாநில முதல்வராக அவர் இருந்தாலும் தேசிய தலைவராக கருதப் பட்டார். எனவேதான் அவரது மறைவிற்கு, பாரத திரு நாடு அனுதாபம் தெரிவித்து "தேசிய விடுமுறை" அறிவித்தது. இது எவருக்குமே கிடைத்திடாத பெருமை என்றே
கூறலாம்.
இப்படி, அந்த மனிதப் புனிதரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். தமிழக சட்ட மன்ற வரலாற்றில் எம்.ஜி. ஆர். என்ற
மாமனிதர் ஆற்றிய பணிகளை எவரும் மறக்க மாட்டார்கள்....... Thanks fb shares...
-
நன்றி மறந்தவர்கள் ... இன்று ..
ஒளிவிளக்கான ---திருவிளக்கே .........
உங்கள் பாடலே அவர்களுக்கு .........
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)... Thanks wa.,
-
திராவிட இயக்கம் கண்ட பேரறிஞர் பெருந்தகை, அறிஞர் அண்ணா அவர்கள் நினைவு நாள் இன்று.
ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் தலை வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், கட்சியில் தனக்கு கீழே இருந்த மற்ற முன்னணி தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், தன் மீது மிகுந்த தன்னம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய இரண்டாண்டு கால ஆட்சி நடந்த சமயம், தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் சொல்லமுடியாத அளவுக்கு, தூய்மையான ஆட்சியை கொடுத்த உத்தமத்தலைவர்.
புரட்சித்தலைவர், தன்னுடைய படப்பாடல் மூலம் தென்னாட்டு காந்தி என்று பாடி பெருமை செய்யப்பட்ட, பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கிக்கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை..... Thanks Mr.Bhaskaran...
-
#அண்ணனுக்கு செலவு செய்த தம்பி# ---- பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு செலவு செய்தது அரசு பணமா? என சட்டசபையில் திருமதி அனந்த நாயகி கேட்க அண்ணா அவர்கள் நாளை பதில் கிடைக்கும் என்றார். மறுநாள் அண்ணா , அனந்த நாயகிக்கு நன்றி கூறினார். பின்பு..... என் மருத்துவ செலவுகளுக்கு நம் கழக உறுப்பினர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சுமார் ரூபாய் ஒரு லட்சத்து 25000 கொடுத்தார் என்று பெருமிதத்துடன் சொன்னார்... Thanks wa.,
-
மதுரை மாநகர் விரைவில் வருவதாக ஒட்டப்பட்டுள்ள ஓல்டுஇஸ்கோல்டு காவியம் ஆயிரம்தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி என்ற படத்தின் விளம்பரத்தில் மக்கள்திலகம் எம் ஜி.ஆர் அவர்களின் துணைவியார் திருமதி ஜானகிஅம்மையார் நடித்துள்ளார் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள் அப்புறமென்ன பார்திடவேண்டியது தான் குறிப்பு . கோவை ராயல் திரையரங்கில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்புடன் பத்துநாளைக்குமேல் ஓடியது நன்றி மதுரை.எஸ் குமார்.... Thanks wa...