-
புரட்சி நடிகர் எம். ஜி.ஆரின் "அரச கட்டளை " வெளியாகி 47 ஆண்டுகள்
நிறைவு.-சிறப்பு பார்வை.
------------------------------------------------------------------------------------------------------------------------
படம் வெளியான தேதி.- 19/05/1967
படத்தின் இயக்குனர் :திரு எம்.ஜி.சக்கரபாணி.
புரட்சி நடிகர் குண்டடிபட்டு சிகிச்சை முடிந்து வந்த பின் வெளியான படம்.
மக்கள் திலகம் மிகவும் அழகாகவும் , கட்டுடலுடனும் தோன்றி நடித்தார்.
அபிநய சரஸ்வதி சரோஜாதேவி மக்கள் திலகத்துடன் நடித்த கடைசி படம்.
பாடல்கள் :கே.வி.மகாதேவன் அருமையாக இசைத்திருந்தார்.
1.ஆடி வா - சலிக்காத, உற்சாகமூட்டும் பாடல். -25 வயது இளைஞர் போல்
புரட்சி நடிகர் ஆடல், பாடலில் சுறுசுறுப்பு.
2.புத்தம் புதிய புத்தகமே - அருமையான காதல் பாடல்.
3.வேட்டையாடு விளையாடு - பாடலில் மன்மதன் போல் அழகாகவும்,
வீர, ராஜ நடைபோட்டு நடித்தார்.
4.முகத்தை பார்க்கவில்லை - ஜெயலலிதாவுடன் ரம்மியமான காதல்
பாடல்.
5. என்னை பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன் ( எம்.ஜி.ஆர்.)
அப்போது பாடலை பாடி நடித்த ஜெயலலிதா , இப்போது நினைவு
கொள்கிறாரா ?
6. பண்பாடும் பறவையே என்ன தூக்கம் - புரட்சி பாடல்.
முதல் முறை வெளியானபோது எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும்
மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்ட படம். அ. தி.மு.க. தோன்றிய
காலத்திற்கு பிறகு பல அரங்குகளில் வெளியாகி வெற்றிவாகை சூடிய படம்.
சமீபத்தில் டிஜிடல் வடிவில் உருவாகி வெளியாக போவதாக விளம்பரம்
செய்தி தாளில் வந்தது.
ஆர். லோகநாதன்.
-
ஆயிரத்தில் ஒருவன் - 50 வது நாள் விழா -புகைப்படங்கள்.
--------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பக்தர் கோபால் அனைவருக்கும் இனிப்பு வழங்கும் காட்சி.
http://i62.tinypic.com/hvorxy.jpg
-
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வசனகர்த்தா திரு.ஆர். கே. சண்முகம்
அவர்கள் ஆல்பட் அரங்கிற்கு குடும்பத்துடன் வந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மரியாதை செலுத்தி , இறுதி வரை படம் பார்த்தார்.
அருகில் திருவாளர்கள்:லோகநாதன், கே. எஸ்.மணி, பேராசிரியர் செல்வகுமார் , பி.ஜி.சேகர் மற்றும் பலர்.
http://i59.tinypic.com/amy07m.jpg
-
திரு.ஆர். கே. சண்முகம் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் மலர்பூஜை செய்து மரியாதை.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
ஆரத்தி எடுக்க அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார் மற்றும் பலர்.
http://i57.tinypic.com/25z73g8.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.குப்பன்
அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு
வழங்கும் காட்சி.
http://i59.tinypic.com/mb0qcl.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.பொன்னுசாமி அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.
அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
http://i62.tinypic.com/f01yu1.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.ஆர்.லோகநாதன் அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.
அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
http://i59.tinypic.com/4jucye.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.சங்கர் அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.
அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. எஸ். ராஜ்குமார் திரு.ஹயாத் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/n5gboo.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு .ஹயாத் அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.
அருகில் , திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/11alcle.jpg
-
எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள்: குட்டி பத்மினி
குட்டி பத்மினி 'பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த 'நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.
எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-
"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்'' என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.
எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?'' என்று கேட்பார். "இல்லை'' என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, `ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.
மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார்.
ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை''ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் `தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது'' என்றார்.
இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, `அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.
நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது `ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்'' என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.
இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா'' டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்.''
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
courtesy malaimalar