இன்றைய நாளில் புதிய படங்களே தட்டு தடுமாறும் இந்தக் காலத்தில் பழைய படம் அதுவும் கருப்பு வெள்ளை படம் தியேட்டரில், விடுமுறை நாட்கள் இல்லாத வாரத்தில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக இருந்த ஒரு வாரத்தில் வெளியாகி ஓடி, அநேகமாக தினசரி குறுக்கிட்ட மழையையும் மதுரையே கொண்டாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி கோவில் திருவிழாவையும் தாக்குப் பிடித்து, பாவ மன்னிப்பு ஒரு வாரத்தில் மொத்த வசூல் ரூபாய் 1 லட்சத்தை தொடுகிறது என்று சொன்னால் அந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் வெற்றியை பாவ மன்னிப்பு படத்திற்கு தேடி தந்த மதுரை மக்களுக்கு நன்றி. விநியோகஸ்தருக்கு நன்றி. தியேட்டர் நிர்வாகத்தினருக்கு நன்றி.
ராமச்சந்திரன் சார்,
திருச்சி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி! அதிக அளவில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு மீண்டும் மீண்டும் சாதனை படைக்க வாழ்த்துகள்!
அன்புடன்