http://i68.tinypic.com/mj1nip.jpg
Printable View
திரு.கவிகுமரன் (எம்.ஜி.ஆர். பக்தர் ) அவர்களின் குமாரர் திரு.ராஜ் பரத் மற்றும்
மணமகள் கோகிலா ஆகியோரின் திருமணம் இன்று (1/7/18) காலை வடபழனி முருகன் அருகில் உள்ள கந்தசாமி மினி ஹாலில் இனிதே நடைபெற்றது .
சென்னை, மதுரை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதில் சில புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/fc44lz.jpg
தினமலர் -01/07/18
http://i66.tinypic.com/34ifmld.jpg
-01/07/18 தினத்தந்தி
http://i64.tinypic.com/ohs3ya.jpg
http://i63.tinypic.com/ndqu13.jpg
-01/07/18 தினமணி கதிர்
http://i65.tinypic.com/213pz4x.jpg
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 1988 லிருந்து குடியேறி வாழ்ந்து வரும் இலங்கை தமிழரும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகரும், பக்தருமாகிய திரு. சுந்தரதாஸ் அவர்களை நேரில் சந்தித்தேன். சிட்னியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 14 ரயில் நிலையங்களுக்கு அப்பால்; அவர் வீடு அமைந்துள்ளது .வீட்டிற்கு அழைத்து சென்று, தேநீர் அளித்தபின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு நகரங்களில் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார் . அவர் ஏற்கனவே சென்னைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து சென்னை தி.நகர் ஓட்டலில் தங்கியிருந்த சமயம் சந்தித்து உள்ளேன் .
பின்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் / தகவல்கள்,வெப்சைட் /வாட்ஸ் அப் மூலம் அறிவது , தெரிந்து கொள்வது பற்றிய தகவல்களை அளித்தேன் .
பின்னர் தனது காரில், 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருகன் கோயிலுக்கு
அழைத்து சென்றார் . இரவு உணவுக்கு பின்னர், 2000ம் வருடம் சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற ஸ்டேடியம் காண்பித்தார் . இரவு 10மணியளவில் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் . அவரது பரிவு, பாசம், நேசம், அன்பு, நட்பு, உபசரிப்பு, கவனிப்பு அனைத்தும் போற்றத்தக்கவை.
அடுத்த வருடம் சென்னைக்கு விஜயம் செய்வதாக சொன்னார் .
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/28sy6ms.jpg
http://i68.tinypic.com/avpjig.jpg
http://i68.tinypic.com/xd8jsi.jpg
இனிய சகோதரர் திரு லோகநாதன் அவர்களின் ஆஸ்திரேலியா வெளிநாட்டு பயணம் சிறந்த பயனுள்ள நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, நம்முடைய எல்லோரின் நல் வாழ்த்துக்களை தெரிவிப்போம்... நம் மன்னவர் மன்னனின் மக்கள் திலகம் பெயரில் அமையவுள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனம் , இருக்கை சம்பந்தமாக முக்கிய தகவல்களை தோழர்கள் இங்கு பதிவு செய்ய பாசத்துடன் வேண்டுகிறோம்...