-
வேறு யாருக்கும், எவருக்கும் தராத பெருமையை இயற்கை மக்கள் திலகம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது அதற்கு நாம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்... எப்படி... தாய், தந்தை, குரு, தெய்வம்..... என வரிசைப்படி ஆன்றோர்கள் சான்றோர்கள் வகுத்து உலககளாவிய சமுதாய பொது மக்களுக்கு தந்திருக்கிறார்கள்... அதில் மூன்றவதாக குரு... வாத்தியார் எனும் அதி உன்னத பெருமையினை நம் மக்கள் திலகத்துக்கு அல்லவா மக்கள் கூறுகின்றனர்... இதைவிட வேறொரு விருது தேவையா?! என்ன...👍 👌
-
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்மை விட்டு என்றும் எப்போதும் பிரிந்து செல்லவில்லை.அவருடைய உடல் தான் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றது.அவருடைய உயிர் ஆன்மா அனைத்தும் என்றும் எப்போதும் பல்லாண்டு காலமாக நமக்கு அனைவருக்கும் துணையாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்.உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்.அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும். இது தான் எங்களுடைய தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்கள்.எங்களுடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களை போல மீண்டும் யாரும் இந்த உலகத்தில் பிறக்கவும் இல்லை.பிறக்க போவதுமில்லை.நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்.உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை.அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.நம்முடைய புரட்சி தலைவர் MGR அவர்கள் நம்முடைய தமிழக முதலமைச்சராக இருந்து ஆணையிட்டு அவை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டில் நடந்து நம்முடைய தமிழக மக்கள் குறிப்பாக ஏழைகள் எல்லோரும் நம்முடைய தமிழக புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது.என்று ஆசை துடிக்கிறது.எந்த நாடு என்ற கேள்வி இல்லை.என்ன ஜாதி என்ற பேதமில்லை.மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்.மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்.மலையை விட உயர்ந்த மனிதனாக நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்முடைய அனைவரின் மனதிற்குள் என்றும் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...... Thanks Friends....
-
இதயக்கனி மக்கள் திலகம் அபிமானிகள் தொடர்ந்து நல்ல ஆவணங்கள், பதிவுகள் ஐடா பாசத்துடன் வேண்டுகோள் வைக்கும் சகோதரன்...
-
திண்டுக்கல் மாநகரில் மக்கள் திலகம் 102ம் ஆண்டு பிறந்தநாள் விழா வைபவங்கள் சிறப்பு, கருத்துகள், உரையாடல்கள் மற்ற அம்சங்கள் எல்லாம் சென்று பங்கெடுத்த நம் தோழர்கள் பகிரவும்.........
-
புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.
பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
பிற்பகலில் tmx 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.
பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.
ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.
'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.
'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.
இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.
காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்....... Thanks wa...
-
இன்று (4.2.1985)நம் தலைவர் பொன்மனச்செம்மல் பூரண உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு உதித்த நாள். இதயதெய்வம் பாரிவள்ளல் பரங்கிமலையில் பாதம் பதித்தநாள்🙏🙏🙏
புரட்சித்தலைவர் அமெரிக்காவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று தமிழகம் திரும்பிய நாளன்று, அவரை பார்த்து மகிழ, எங்களது கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவைச் சார்ந்த சுமார் 30 சகோதரர்களுடன், சென்னை பாரகன் தியேட்டர் அருகிலிருந்து முதல் நாள் இரவு சுமார் 10 மணிக்கு நடைபயணமாகவே புறப்பட்டு, கிண்டி மைதானத்திற்கு, அதிகாலை சுமார் 2 மணிக்கு வந்து சேர்ந்தோம். காலை தலைவரை பார்த்த சந்தோஷத்தில், மீண்டும் மவுண்ட் ரோடு தேவி தியேட்டர் வளாகத்திற்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தில் உரையாடி விட்டு, மதியத்திற்கு மேல்தான், வீடுகள் திரும்பினோம்.
மறக்க முடியாத நாள். இந்த நாளில் தலைவரை நினைவு கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை... Thanks wa.,
-
திண்டுக்கல் மாவட்டத்தில் நமது எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் சார்பாகவும் அனைத்து மாவட்ட பக்தர்கள் குழுவின் சார்பாகவும் நமது நண்பர் மலரவன் அவர்களும் அவரது நண்பர் சென்றாய பெருமாள் அவர்களும் மிக சிறப்பாக இந்த எம்ஜிஆர் 102 ஆவது பிறந்தநாளை மிக விமர்சியாக சிறப்பாக கொண்டாடினார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி புரட்சித்தலைவரின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டும் என்று எனது இதயதெய்வம் புரட்சித்தலைவரை வேண்டுகிறேன் திண்டுக்கல் பரமசிவம்.... Thanks wa
-
சேலம் மாநகரில் எழுச்சிமிகு விழா கண்ட பொன்மனச்செம்மலின் 102 வது மனிதநேய திருவிழா (03.02.2019.) . காலை 9.00மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சியுடன் இடைவிடாது நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த உயர்திரு சென்னை மாநகர முன்னாள்மேயர் , அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் தலைவரின் தனி உதவியாளர். உடையலங்கார நிபுனர் அண்ணன் திரு. முத்து அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் திரு. துரைகருணா அவர்கள் மற்றும் சென்னை மதுரை திண்டுக்கல் நெல்லை கோவை திருச்சி துறையூர் திருவண்ணாமலை ஆரணி வேலூர் கள்ளக்குறிச்சி ஆத்தூர். சின்னசேலம் திருப்பூர் அரக்கோணம் ஈரோடு திருவள்ளுர் பெங்களுர் புதுச்சேரி தர்மபுரி கிருஷ்ணகிரி தூத்துக்குடி விருதுநகர் மற்றும் சென்னையிலிருந்து பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜு.ஆர். நற்பணி சங்கத்தினர் மக்கள்திலகம் எம். ஜி. ஆர் மன்றத்தினர் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜீ.ஆர் பக்தர்கள் என தலைவரின் அபிமானிகள் பலர் வருகை தந்து விழாவை சிறப்பித்தற்கும் விழாவை சிறப்புடன் ஏற்பாடு செய்த கொடைவள்ளல் பாரத ரத்னா எம். ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் அண்ணன் திரு. குமார் அவர்கள் அண்ணன் திரு மாணிக்கம் அவர்கள் மற்றும் அவர்களுடன் ஒத்துழைத்த நிர்வாகிகள் விழாவிற்கு வருகை தந்த சேலம் மாநகர் தலைவர் பக்தர்கள் தாய்குல பெண்கள் பொதுமக்கள் யாவருக்கும் அன்பு கலந்த நன்றியை விழாகுழு சார்பாகவும் நமது தலைவரின் ஒப்பற்ற புகழை புத்தகம் மூலம் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஒரே உண்மையான மாதஇதழாம் ஒலிக்கிறது உரிமைக்குரல் சார்பாகவும் அன்புடன் .......
தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் வள்ளல் புகழ்பாடும் உரிமைக்குரல் ராஜு...... Thanks fb
-
When shooting in public places, people would often approach Vidyasagar looking for blessings, taken in by his impersonation of MGR.
Photograph/Cop Shiva
Cop Shiva examines the polarity between fantasy and reality, and the roles people play publicly and privately, as Vidyasagar masquerades as Tamilian actor MGR.
My Assignment
Description: I am fascinated with the idea of masquerade and the roles people play in public and private. This led me to document Vidyasagar’s life.
Duration: Six years
Notes: The drama would unfold before my eyes. I had to be sharp enough to capture the moment.
Tamil film icon and politician M G Ramachandran’s (MGR) presence is felt in Karnataka in many ways. His movies are played and replayed by the local television station continuously. His face is on display in the numerous banners that appear in any city of South India, where he is revered.
You could see it even more in Bengaluru resident, Vidyasagar, who woke up every morning, transformed himself into MGR and carried on with his daily routine.
My first reaction on meeting him was curiosity. The juxtaposition of Vidysagar, a very peculiar character himself, and MGR, who had an overpowering influence on the politics and cinema of Southern India, was very difficult to overlook........... Thanks wa.,
-
The Process
Before I actually began photographing Vidyasagar, I built a strong relationship with him. I met him and his family several times without my camera. I spent time with them, cared for them and eventually my presence became familiar for them, and that is when I could start documenting his routine and his transformations.
I documented Vidyasagar’s life for more than six years until his untimely demise a few months ago. He was extremely passionate about MGR and I believe that not only the actor’s charisma but also Vidysagar’s shines through the photographs. At the end of the day, Vidyasagar teaches us to stick to our beliefs no matter what.......... Thanks wa Friends...