டியர் வாசுதேவன் சார், தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள். தங்களின் புதிய வானம் பதிவு அருமை.
நிழற்படப் பதிவுகளைத் தொடர்ந்து, ஆவண்ங்கள் மற்றும் காட்சி அலசல்களையும் கலக்கலாக அளித்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.
Printable View
டியர் வாசுதேவன் சார், தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள். தங்களின் புதிய வானம் பதிவு அருமை.
நிழற்படப் பதிவுகளைத் தொடர்ந்து, ஆவண்ங்கள் மற்றும் காட்சி அலசல்களையும் கலக்கலாக அளித்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தாங்கள் மிகவும் சிலாகித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள். தாங்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடர்ந்து தரவேற்றிக் கொன்றிக்கும் ஆவணப் பொக்கிஷங்களுக்கு என்றென்றும் ஒவ்வொரு நடிகர் திலக ரசிகனும் ஏழேழு ஜென்மங்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளான். அதிலும், குறிப்பாக, மனிதனும் மிருகமும் பட ஆவணங்கள் காணக்கிடைக்காதவை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. கூடவே, ஒரு ஸ்டீரியோக்ராமையும் இணைத்ததற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
தங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றிகள் பல. கூடவே சில செய்திகளையும் சொல்லி, எனக்கு நிறைய வேலை வைத்து விட்டீர்கள். அதற்கும் சேர்த்து நன்றிகள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
தங்கள் எல்லோருடைய பாராட்டுகளும், என்னை மேன் மேலும் ஊக்குவித்து நிறைய எழுதத் தூண்டும்.
டியர் பார்த்தசாரதி சார், தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.
Dear Ramajayam sir, Thanks for your appreciation.
அன்பு பம்மலார் சார்,
திரு.ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள பதிவு அருமை. அன்னை இல்லத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைவரின் திருஉருவப் படத்திற்கு முன்னால் ரஜனி, விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்துவது மனதை நெகிழச் செய்தது.
தலைவரின் 77-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் உணவுப் பொட்டலம் வழங்கிய பெங்களூரூவைச் சேர்ந்த நமது அன்பு ஹப்பர் திரு.குமரேசன் பிரபு அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்.
நம் நல் இதயங்களின் நலத் திட்டங்களை தங்கள் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி!.
அன்னை இல்லத்திற்கு 1-10-2004- க்கே தங்கள் ஆவணங்கள் மூலம் அழைத்துச் சென்று விட்டீர்கள். ரஜினி பிறந்தநாளுக்கு சரியான பரிசுப் பதிவு. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
நீதி பற்றிய பதிவுகளை பாராட்டிய சுவாமி, வாசுதேவன், ராகவேந்தர் சார், சாரதி மற்றும் கார்த்திக் ஆகிய அனைவர்க்கும் மனங்கனிந்த நன்றிகள் பல.
இங்கே பலருக்கும் பயன்படும் ஒரு செய்தி. டி.டி,கே சாலையில் அமைந்துள்ள ஏவிஎம் Sound Zone ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் அந்த கடையின் அருகிலே உள்ள சங்கரா ஹாலில் discount sale நடத்துவது வழக்கம். கடந்த வெள்ளி டிசம்பர் 9 அன்று ஆரம்பித்த sale ஜனவரி 1 வரை நடைபெறுகிறது. அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. பழைய மற்றும் புதிய படங்களில் ஏராளமான படங்களின் டிவிடிகள் கிடைக்கின்றன. தவிர, கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், பக்தி, குழந்தைக்களுக்கான டிவிடிகள் என பல்வேறு பிரிவுகளும் இருக்கின்றன. ஆடியோ டிவிடிகளும், MP3 ஆகியவையும் இடம் பெற்றிருக்கின்றன.
நமது நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை இதுவரை தனி டிவிடி வடிவில் கிடைக்காத தெய்வப்பிறவி மற்றும் பதி பக்தி படங்கள் தனி டிவிடியாக வெளியாகியிருக்கின்றன. ராஜ் வீடியோ vision நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு புது விதமான கவர் வடிவமைப்பை நேர்த்தியாகவும் கவர்ந்திழுக்கும் வகையில் செய்திருக்கின்றனர். அவர்களின் விலைதான் சற்று அதிகம்.
சுருக்கமாக சொன்னால் பழைய புதிய படங்களின் டிவிடி சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இதை தவிர விகடன் பிரசுரம் மற்றும் கிழக்கு பதிப்பகம் ஆகிய புத்தக வெளியிட்டாளர்களும் தங்கள் படைப்புகளை இந்த விற்பனையில் வைத்திருக்கின்றனர்.
அன்புடன்
மனிதரில் மாணிக்கம் பற்றி
திரைப்பட துறையில் உள்ளவர்கள் அதே துறையில் உள்ளவர்களுக்கு உதவுவது என்பது பெரும்பாலும் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். அதிலும் ஒருவர் உச்சத்தில் இருக்கும் போது அப்படிப்பட்ட உதவிகளுக்கு வாய்ப்பேயில்லை. ஆனால் இதிலும் விதி விலக்கானவர் நடிகர் திலகம். அவர் முன்னணி நாயகனாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பல தயாரிப்பாள நண்பர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார். பரதேசி படத்தில் தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த அஞ்சலிதேவிக்கு அவர் பொருளாதார தேக்கத்தில் இருந்த போது செய்துக் கொடுத்த பக்த துக்காராம், பந்துலுவிற்காக செய்துக் கொடுத்த பலே பாண்டியா , முரடன் முத்து, எஸ்.வி.சுப்பையாவிற்காக காவல் தெய்வம் போன்ற பலவற்றை குறிப்பிடலாம். அது போன்ற ஒரு உதவிதான் மனிதரில் மாணிக்கம். அதுவும் 1971-72-73 காலகட்டத்தில் அவர் இருந்த அந்த peak period-ல் அதை செய்தார் என்றால் அவரின் மனிதாபிமானத்தை புரிந்துக் கொள்ளலாம். இயக்குனர் சி.வி.ஆர். என்பதாலும் ஹீரோ ராஜன் என்பதாலும் இது சாத்தியமாயிற்று.
தன்னுடைய திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த நடிகர் திலகம், அவர்கள் தனக்கு எதிரே கடைபிடித்த விரோத போக்கினால் அதிலிருந்து விலகினார் என்பது அனைவருக்கும் தெரியும். பிறகு பெருந்தலைவரினால் ஈர்க்கப்பட்டு தன்னை ஒரு தேசியவாதியாக வார்தெடுத்துக் கொண்டார். நண்பர் ஒருவர் ஒருமுறை கூறியது போல் அந்த தேசியத்தையும் அதன் தலைவர்களையும் தன் படங்களின் வாயிலாக தமிழ் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம் மட்டுமே. இந்திய மொழிப் படங்களில் வேறு எந்த நடிகரும் செய்யாத அளவிற்கு காந்தியையும், நேருவையும் சாஸ்திரியையும் இந்திராவையும் படேலையும், மற்றும் பல பல தலைவர்களையும் கடைக்கோடி தமிழனிடம் கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம். எங்க மாமா திரைப்படத்தில் தன்னால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கெல்லாம் தேசிய தலைவர்களின் பெயர்களை வைத்திருப்பதையும் அவர்களின் பெருமைகளையும் பெருமிதத்தோடு சொல்லும் ஒரு காட்சி போதுமே! எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ஆசிய ஜோதி நேரு அவர்களின் மற்றொரு பட்டமான மனிதரில் மாணிக்கம் என்பதனை இந்தப்படத்தின் பெயராக வைத்ததும் அதனால்தானே! ஆராதனா போன்ற படத்தை தமிழிலே எடுக்கும்போது அதற்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் சூட்ட எந்த ஹீரோ முன்வருவார்? அதை எந்த நெருடலும் இல்லாமல் வைத்ததையும் அதை ரசிகர்களும் பொது மக்களும் ஏற்றுக்கொண்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
மனிதரில் மாணிக்கம் படத்தில் அவருக்கு வெறும் கெஸ்ட் ரோல் என்று சொல்லி விடமுடியாது.அதே நேரத்தில் முழுமையான வேடமும் இல்லை. ஆனால் அவர் முழுமையாக வருவது போல் திரைக்கதை தோற்றமளிக்கும். அவர் வரும் பெரும்பாலான காட்சிகள் அவரின் கிளினிக்-ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் ஒரு விதமான அலுப்பு மக்களுக்கு ஏற்பட்டதோ என்று ஒரு எண்ணம்.
ஒரு விஷயம் பார்த்தோம் என்றால் 1969 காங்கிரஸ் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவிற்கு பிறகு இந்திரா அவர்களின் புகைப்படம் முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்தில் இடம் பெற்றது என்றால் அது இந்தப் படத்தில்தான். ஆனால் அதே நேரத்தில் நடிகர் திலகம் தன் முத்திரையை ஆழமாக பதித்த [அவர் மட்டுமா, மெல்லிசை மன்னர்,டி.எம்.எஸ். போன்றவர்களும்தான்] I will sing for you பாடலில் இரு வரிகள் வரும்
பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடணுமா
ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து பின்பாட்டு பாடணுமா
என்ற வரிகள் அன்றைய பிரதமருக்கு நேராகவே வைக்கப்பட்ட விமர்சனம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேறொரு வகையில் பார்த்தால் படத்தில் அந்தப் புகைப்படம் இடம்பெற்றது அதற்கு பிறகு நடந்த ஒரு இணைப்புக்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தது. ஆம், 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புதுவை சட்டமன்ற பொது தேர்தல், கோவை பாராளுமன்ற மற்றும் கோவை கிழக்கு தொகுதி இடைதேர்தல்களில் பெருந்தலைவரின் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ்-ம் இந்திராவின் இந்திரா காங்கிரஸ்-ம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நமது தோழர்கள் பலரும் பார்த்து ரசித்திருக்கக் கூடிய பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் நடிகர் திலகமும் இணைந்து இருக்கக் கூடிய புகைப்படம் பாண்டிச்சேரியில் நடந்த பிராச்சரக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதுதான். அந்த கூட்டணி புதுவையில் 12 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது கோவை பாராளுமன்ற தொகுதியில் 2000 வாக்குகள் வித்தியாசத்திலும் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெறும் ஐநூற்று சொச்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. தமிழகத்தின் துரதிர்ஷ்டம் அந்த கூட்டணியும் நீடிக்கவில்லை, பெருந்தலைவரும் மறைந்து போனார்.
மீண்டும் படத்திற்கு வருவோம். நமது ரசிகர்களை பொறுத்தவரை ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே அந்தப் படம் பற்றிய செய்திகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பதே இல்லை. தவிரவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கெளரவம் படத்திற்கும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த ராஜபார்ட் படத்திற்கும் நடுவில் வேறு வந்து சிக்கிக் கொண்டது இந்த படத்திற்கு வினையானது. டிசம்பர் 7 அன்று மதுரை - நியூசினிமாவில் ரிலீஸ். நான் இரண்டாவது நாள் சனிக்கிழமை காலைக் காட்சி பார்த்தேன். ஆரவாரங்கள் எல்லாம் இருந்த போதினும் ஏதோ ஒன்று குறைவது போல் ஒரு எண்ணம். படம் pick up ஆவதற்குள் ராஜபார்ட் வெளியாகி விட்டது. இந்தப் படம் பொங்கலுக்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.
அன்றைய நாளில் எங்களுக்கு இது ஒரு வருத்தமளிக்கும் நிகழ்வாகவே இருந்தது. அன்றைய தினத்தை விட அதற்கு ஒரு வருடம் கழித்து அதைப் பற்றி சிந்திக்கும் போதும் வருத்தம். காரணம் முன்பு ஒரு முறை நான் ஒரு பதிவில் ஒரு விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டேன். அது என்னவென்றால் 1971 தீபாவளி முதல் 1974 தீபாவளி வரை நடிகர் திலகம் நடித்து 21 படங்கள் வெளியாகின. அவற்றில்
வெள்ளி விழா கண்ட படங்கள் - 3
பட்டிக்காடா பட்டணமா
வசந்த மாளிகை
தங்கப்பதக்கம்
100 நாட்களும் அதற்கும் மேலே ஓடிய படங்கள் - 12
பாபு
ராஜா
ஞான ஒளி
தவப்புதல்வன்
நீதி
பாரத விலாஸ்
ராஜ ராஜ சோழன்
எங்கள் தங்க ராஜா
கெளரவம்
ராஜபார்ட் ரங்கதுரை
வாணி ராணி
என் மகன்
8 வாரங்கள் முதல் 11 வாரங்கள் வரை ஓடிய படங்கள் - 5
தர்மம் எங்கே
பொன்னுஞ்சல்
சிவகாமியின் செல்வன்
தாய்
அன்பை தேடி
இது போன்ற ஒரு தொடர் சாதனையை தமிழ் சினிமாவின் 80 வருட சரித்திரத்தில் செய்துக் காட்டிய ஒரே நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.
ஆக வெளியான 21 படங்களில் 50 நாட்கள் என்ற கோட்டை தவறவிட்ட ஒரே படம் மனிதரில் மாணிக்கம் மட்டுமே. அது கூட அவர் நாயகனாக நடித்த படம் இல்லை. இருந்தாலும் எங்களுக்கு [மதுரை ரசிகர்களுக்கு] ஒரு ஆதங்கம். இந்தப் படம் நியூசினிமாவில் வெளியாகாமல் வேறு அரங்கில் வெளியாகி இருக்கலாமே என்ற ஏக்கம். காரணம் நியூசினிமாவில் பொங்கலுக்கு புதிய படம் திருமாங்கல்யம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பதிலாக ஸ்ரீதேவியில் வெளியிட்டிருக்கலாம் என்று பேசிக் கொண்டோம் ஏனென்றால் தேவியில் சிவகாமியின் செல்வன் ஜனவரி 26-ந் தேதி ரீலீஸ் செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள விஷயம் எங்களுக்கு தெரியும். எனவே டிசம்பர் 7 அன்று தேவியில் வெளியாகி இருந்தால் ஜனவரி 25-ந் தேதி மனிதரில் மாணிக்கம் 50 நாட்களை நிறைவு செய்திருக்கும். முதலில் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தேவியில்தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் தீபாவளிக்கு ஸ்ரீதேவியில் வெளியான புன்னகை அரசியின் நூறாவது படமான நத்தையில் முத்து படத்தின் விநியோகஸ்தர் 50 நாட்கள் நிறைவு செய்யாமல் படத்தை மாற்ற மாட்டோம் என்று கூறிவிட்டதாக கேள்வி. எனவே நியூசினிமாவில் சுமாராக ஓடிக் கொண்டிருந்த பாக்தாத் பேரழகி படத்தை தூக்கிவிட்டு மனிதரில் மாணிக்கம் வெளியானது. இன்றைக்கும் இந்தப்படத்தை பார்த்தால் நடிகர் திலகம் வரும் காட்சிகளை இப்போதும் ரசிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
மீண்டும் அந்த இனிய நினைவுகளில் மூழ்கிட வாய்ப்பளித்ததற்கு நன்றி.
அன்புடன்
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுப் பதிவுக்கு எனது சிறப்பான நன்றிகள் !
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கும், இணையில்லாப் பெருந்தன்மைக்கும், உச்சமான பாராட்டுதல்களுக்கும் எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள் ! நாமனைவரும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் !
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அன்பார்ந்த பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
"வெற்றிக்கு ஒருவன்" பதிவு டாப். அதில் அந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் மிகமிக அரிய பொக்கிஷம் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
"மனிதரில் மாணிக்கம்" பற்றி... என ஆரம்பித்த தங்கள் பதிவு அக்காவியத்தைப் பற்றி மட்டுமா...எத்தனை அரிய வரலாற்று தகவல்களை, ஆணித்தரமான புள்ளிவிவரங்களை தாங்கி வந்திருக்கிறது. தங்களின் இந்தப்பதிவும் ஒரு மாணிக்கமே !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக சக்கரவர்த்திக்கு சூப்பர் ஸ்டார் அளித்த கௌரவம்
பொக்கிஷப் புதையல்
வரலாற்று ஆவணம் : இதயம் பேசுகிறது : 4.10.1998
http://i1110.photobucket.com/albums/...aar/SR5a-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/SR5b-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/SR5c-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/SR5d-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/SR5e-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
No words can define this legend ..........no one is up to his mark as an actor in India till now....even Marlon Brando remarked him as one of the greatest actor he had ever seen.....he was honored by the french governments "Chevalier" award