அன்புள்ள சாரதி,
நீண்ட நாட்களுக்கு பின் நான் இந்த திரியில் ஒரு நீண்ட பதிவை எழுதியது உண்மைதான். காரணம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய பதிவுகளை ஒரு தொடராக எழுதிக் கொண்டிருக்கும் போது அது எந்த இடையூறும் இன்றி வாசகர்களை சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான். மற்றொரு காரணம் கடந்த பல நாட்கள் நமது ஹப்பின் அரசியல் திரியில் பங்கு கொண்டு அருமை சகோதரர் ஜோ அவர்களுடனும், அருமை சகோதரி சாரதா அவர்களுடனும் வாதப் பிரதிவாதம் செய்துக் கொண்டிருந்தேன் [அங்கேயும் நமது நடிகர் திலகம் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தேன்]. ஆகவே நமது திரியில் அவ்வளவாக பங்கு கொள்ள முடியவில்லை.
அவன்தான் மனிதன் பற்றி நீங்கள் சொன்னதும் மிக சரியாக ஐந்து வருடங்களுக்கு முன் நான் இந்த ஹப்பில் நுழைந்த போது நடிகர் திலகம் திரியில் முதன் முதலில் தெய்வ மகன் மூன்று சிவாஜிகள் சந்திக்கும் இடம் பற்றி எழுதினேன். பிறகு சக்தி பிரபா அவர்களுக்காக தங்கப்பதக்கம் படத்தின் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சி பற்றி எழுதினேன் [ஒரு நாள் சாப்பிடலைனா உயிரா போயிடும்?]. அப்போது ஜோ வந்து முதல் நாள் அவன்தான் மனிதன் பார்த்தேன் என்று சொன்னார். அப்போது எனக்கு மிகவும் பிடித்த காட்சி பற்றி சொன்னேன். "லலிதா, நீ படிச்சவ பண்பு நிறைஞ்சவ உன்னை மனைவியா அடையற அளவிற்கு -- ' என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு சின்ன இடைவெளி விட அதற்கு ஜெஜெ "சந்துரு தகுதியில்லாதவர்னு நினைக்கிறீங்களா" என்று பதில் சொன்னவுடன் நடிகர் திலகம் முகபாவம் மாறும் பாருங்கள்! பின்னியிருப்பார். உள்ளே நுழையும் மேஜர் ஏதாவது உளறி விடப் போகிறாரே என்று ஜெஜெவை அனுப்பி விட்டு [அது ஒரு காலாவதியான பத்திரம்] என்று சொல்லி விட்டு கடிதத்தை கிழித்துக் கொண்டே படியேற "எஜமான் எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா" என்று கேட்க " ஆகா" என்று திரும்புவாரே! மறக்கவே முடியாத காட்சி!
படம் வெளியான முதல் நான்கு வாரங்களில் மட்டும் மதுரை சென்ட்ரலில் 5 முறை பார்த்தேன். பிறகு படம் மறு வெளியிடுகளில் வந்த போதும் பார்த்தேன். இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது நான் தியேட்டரில் பார்த்த கடைசி படம். 2001 பிப்ரவரி மாதம் மதுரை ஸ்ரீதேவியில் வெளியான போது ஞாயிறு மாலைக் காட்சி பார்த்தேன். முதல் வெளியிட்டில் மதுரையில் தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ்புல். முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்தது. பொள்ளாச்சி போன்ற இடைநிலை நகரங்களில் கூட தொடர்ந்து 100 காட்சிகள் ஹவுஸ்புல். தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களிலும் 100 நாட்களை கடந்த இந்த படம் மதுரையில் 105 நாட்களில் சுமார் 4 ,22 ,000/- ரூபாய் வசூல் செய்தது. [அதே சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமாவும், தங்கப்பதக்கமும் 100 நாட்களில் பெற்ற வசூலை கிட்டத்தட்ட நெருங்கியது]. அது போல மதுரையில் மறு வெளியீடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட படம். 2005 காலக் கட்டத்தில் அதே சென்ட்ரலில் வெளியான போது ஒரே வாரத்தில் 60000/- ருபாய் வசூல் செய்தது.
அன்புடன்
பதிந்த பிறகு பார்க்கிறேன். ராகவேந்தர் சார் அதே காட்சியை இங்கே கொடுத்திருக்கிறார்,