http://i50.tinypic.com/209k64y.jpg
Printable View
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் mgr - தேவரின் தயாரிப்பில் எந்த படமும் தரமான படங்கள் தரவில்லை என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது .
உண்மையில் தேவர் பிலிம்ஸ் சார்பில் எடுக்க பட்ட 16 படங்களில் 9 படங்கள் 100 நாட்கள் மேல் ஓடியன .
தாய்க்கு பின் தாரம்
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
குடும்ப தலைவன்
தர்மம் தலைகாக்கும்
நீதிக்கு பின் பாசம்
வேட்டைக்காரன்
முகராசி
நல்ல நேரம்
போன்ற படங்கள் தரமான கதை அம்சத்துடன் , இனிமையான பாடல்கள் , நல்ல நடிப்பு -குடும்ப பாங்கான
தரத்துடன் வந்து வெற்றி கொடி நாட்டியது .
விவசாயி - தாய்க்கு தலை மகன் - தொழிலாளி 10 வரங்கள் மேல் ஓடியது .
தனிப்பிறவி -தேர்த்திருவிழா - கன்னித்தாய் -50 நாட்கள் ஓடியது .
காதல் வாகனம் - தோல்வி படமானது .
COURTESY- SRI MGR .COM
THANKS ROOP SIR
http://i45.tinypic.com/2zoby1i.jpg
MGR and Devar were close friends. Devar films first movie was Thaiku Pin Tharam. From 1956 to 1972 Devar Films produced 16 MGR movies. All the movies had social themes no Historical movies. M.M.A. Chinnappa Devar was the first Producer and who had confidence to book MGR for his subsequent movies in General Hospital during January 1967 when MGR was recuperating from M.R.Radha incident.
No. Date of Release Movie Name MGR Character Name Heroine
1 21.09.1956 Thaikupintharam Muthaiah Banumathy
2 07.11.1961 Thai Sollai Thatathey Raj Sarojadevi
3 13.04.1962 Thaiyai Katha Thanaiyan Sekar Sarojadevi
4 15.08.1962 Kudumba Thalaivan Vasu Sarojadevi
5 22.02.1963 Dharmam Thalaikakum Chandran Sarojadevi
6 15.08.1963 Neethikupinpasam Gopal Sarojadevi
7 14.01.1964 Vettaikaran Babu Savithri
8 25.09.1964 Thozhilali Raj Rathna
9 10.09.1965 Kannithai Saravanan Jayalalitha
10 18.02.1966 Mugarasi Raj Jayalalitha
11 16.09.1966 Thanipiravi Muthaiah Jayalalitha
12 13.01.1967 Thaikuthalaimagan Maruthu Jayalalitha
13 01.11.1967 Vivasahi Muthaiah K.R.Vijaya
14 23.02.1968 Ther Thiruvizha Saravanan & MGR Jayalalitha
15 21.10.1968 Kadhal Vaganam Balu Jayalalitha
16 10.03.1972 Nalla Neram Raj K.R.Vijaya
The only film company which released two movies in one year with MGR as lead is Devar films the years are 1962, 1963, 1964, 1966, 1967 and 1968. The first colour movie of Devar Films is Nalla Neram. MGR gave call sheet for 7 days for Mugarasi and the same movie was shot in 13 days. Other movies shooting was completed in short span are Kannithai and Thanipiravi was completed in 3 weeks, Vivasahi and Kadhal vaganam were completed in 5 weeks, Kudumba Thalaivan, Thozhilali, Thaikuthalaimagan, Ther Thiruvizha, Vettaikaran and Dharmam Thalaikakum were completed in 2 months, Thaisollaithatathey, Thaiyaikatha Thanaiyan and Neethikupin pasam were completed in 3 months.
Look at the titles how it suited MGR when our beloved Leader Puratchi Thalaivar MGR was emerging as Hero in social oriented movies.
100 Days movies are: (Highest number of days)
Thaikupintharam – 147 Days – Trichy – Roxy
Thai Sollai Thatathey – 140 Days – Trichy – Jupiter
Thaiyai Katha Thanaiyan – 140 Days – Trichy – Palace
Kudumba Thalaivan – 105 Days – Salem – Jaya
Dharmam Thalaikakum – 104 Days – Coimbatore – Royal
Neethikupinpasam – 105 Days – Madurai – New Cinema & Salem – Santhi
Vettaikaran – 147 Days – Salem – Sitheswara
Mugarasi – 101 Days – Chennai – Gaiety
Nalla Neram – 132 Days – Salem – Oriental
உங்களுடைய மிகச்சிறந்த படம் எது
எம்.ஜி.ஆர் அவர்களிடம் நான் ஒரு முறை என்னுடைய நல்லபடம் வரும் போது நான் உங்களை அழைக்கிறேன். வந்து பார்த்துவிட்டு என்னை வாழ்த்துங்கள் என்றேன். அதற்கு அவர் நன்றாக இல்லாத படத்தில் கூட நடிக்கிறாயா? ஒவ்வொரு படத்தின் வெற்றியும் நம் கையில் தான் இருக்க வேண்டும். காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று என்று பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்தால் நம்முடைய வெற்றிப் படங்களைக் காட்டிலும் தோல்விப்படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். என்று கூறினார். அப்போது எடுத்த முடிவைத்தான் இப்போது நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு படத்தை முடித்தபின் தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பேன். நூற்றுக்கும் அதிகமான படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தாலும், அவைகளில் பல ஒரே பாணியில் இருப்பதாகக்கூட தோன்றலாம். ஆனால் அத்தனை படங்களிலும், மது மாது சூது, சிகரெட் இவைகள் இல்லாமலே தாய், தங்கை இவர்களின் பாசத்தை மையமாக வைத்து கோடானுகோடி மக்களின் இதயங்களைக் கவர்ந்திருக்கிறார். வித்தியாசங்கள் வேண்டும் என்று எத்தனை கலைஞர்களைக் கேட்கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல், ஏழைப்பங்காளனாகவே அனைத்து படங்களிலும் நடித்து வெற்றி பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர் தான்.
மக்கள் ரசனையைப் புரிந்து கொண்டு நாம் படம் எடுத்தால் தான் வெற்றிபெற முடியும். ஆனால் எம்.ஜி.ஆரோ தன்னுடைய ரசனைக்கு மக்களை மாற்றினார். அவருடைய ரசனை தான் மக்களின் ரசனையாக இருந்தது. அவரிடம் யாரும் வித்தியாசங்கள் வேண்டும் என்று கேட்டதேயில்லை.
ராஜபார்வை, விக்ரம் இவைகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் வெற்றிஅடைந்திருக்குமா?
மக்களுக்குப் பிடித்த மாதிரி அந்தப்படத்தை நாங்கள் கொடுக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை. நேற்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றதாக அந்தப் படம் இல்லை. இன்றைக்கு அந்தப்படங்கள் வெளிவந்தால் அன்றைக்கு இருந்த ரசிகர்களில் சிலர் இப்போதும் இருப்பார்கள். அவர்களுடைய ரசனை மாறியிருந்தால் அப்படத்தை ரசிப்பார்கள். அதே சமயம் இன்றைக்கு இருக்கும் ரசிகர்களின் ரசனையும் ஒன்றாக இருக்கும் என்று நம்மால் கூறமுடியுமா? எந்த ஒரு படமும் எல்லா காலத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட வேண்டும். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் எம்.ஜி.ஆர் நடித்தார். அதனால் தான் அவருடைய படங்கள் எல்லா காலத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படுகிறது. இதுதான் படத்தின் வெற்றி என்று நமக்குத் தெரிந்துவிட்டால் தோல்விப்படங்களையே எடுக்கமாட்டோம். வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டு நடித்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர் தான். மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பது சற்று கடினம். மக்கள் எந்தப் படத்தை ரசிப்பார்கள் என்று அவர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது. ஒரு படம் ஓடிவிட்டால் பலரும் அதே பாணியில் படம் எடுக்கிறார்கள். ஆனால் அத்தனையும் ஓடுவதில்லை. ஆகவே படைப்பாளிகள் தான் மக்களை மாற்றியமைக்க வேண்டும்.
நான் நிஜங்களின் நிழல்தான் என்ற தலைப்பில் 1990 அக்டோபர் மாதம் வெளிவந்த பேசும்படம் தீபாவளி மலர் இதழில் வெளிவந்த கமலஹாசன் அவர்களின் பேட்டியிலிருந்து
ஒரு காலத்தில் ஸ்டண்ட் நடிகர் என்றாலே வீடு கூட வாடகைக்குத் தர மாட்டார்கள். ஏன் தியாகராஜபாகவதர் காலத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் செட்டுக்கு வெளியே பத்தடி தள்ளியே நிறுத்தப்பட்டார்களாம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வருகைக்குப் பிறகுதான் எங்களின் மதிப்பும் மரியாதையும் சினிமா உலகத்தில் உயர்ந்தது. இன்று ரஜினி , கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்றோர் எங்கள் தோளில் கைபோட்டு நட்புடன் பழகும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன.
மே 1992 பேசும் படம் இதழுக்கு ஸ்டண்ட் யூனியன் தலைவராக இருந்த ஜாகுவார் தங்கம் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து