-
http://i60.tinypic.com/194ilh.jpg
அன்னை ஜானகி அவர்களின் 18வது நினைவு நாளினை முன்னிட்டு, அவரைப்பற்றிய தகவல்களும், புகைப்படங்களும் பதிவிட்டு அவரை நினைவு கூர்ந்து, பெருமை சேர்த்த இத்திரியின் பதிவாளர்கள் -
திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், கலியபெருமாள், லோகநாதன், யூகேஷ்பாபு, மற்றும்
அலைபேசியில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்த பெங்களூர் சி. எஸ். குமார், சேலம் ஜெய்சங்கர், ஏ. ஹயாத், கே. பாபு, தம்பாச்சரி, பெருமாள், மற்றும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த அதன் தலைவர் ராஜ்குமார், ஹில்லரி கண்ணன், பிரபு உள்ளிட்ட அனைத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
மிக மிக குறுகிய காலத்தில், அற்புதமான 2000 பதிவுகள் வழங்கி அசத்திய அன்பு சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் சார்பிலும், இத்திரியினை பார்வையிடும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பிலும் உளங்கனிந்த பாராட்டுக்கள் !http://i58.tinypic.com/xlz37l.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
congratulations loganthan sir for completing valuable 2000 posts
-
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சிறப்பான 2000 பதிவுகள் நிறைவு காணும் இந்த இனிய நன்னாளில் தாங்கள் மேலும் மக்கள் திலகத்தின் படங்கள் - அவருடைய சாதனைகள் - விளம்பரங்கள் போன்றவற்றை இங்கு பதிவிட்டு விரைவில் 3000 பதிவுகளை எட்ட வாழ்த்துகிறேன் .
ஆயிரத்தில் ஒருவன் - தேர்தல் முடிவுகள் இரண்டு வெற்றி தகவல்களை உடனுக்குடன் ஆவணங்களை பதிவிட்ட உங்களின் உழைப்பிற்கு நன்றி .
-
-
நுட்பமான நடிப்பு
அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.
-
MY FAVOURITE SCENE AND SONG IN ARASAKATTALAI -1967
http://youtu.be/u5lXbykMdcs
-
-
-