Originally Posted by saradhaa_sn
நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். சில நேரங்களில் உண்மைகள் சுடும். ஆனாலும் கடந்த காலத்தை தெரிந்துகொள்ள விரும்புவோர்க்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.
சிவாஜியை வைத்து படம் எடுத்தவர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கும்போது, படம் பாதி வளர்ந்த நிலையில், ஒருசில 'நிர்ப்பந்தங்கள்' காரணமாக அந்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனரிடம் இருந்து சிவாஜியை தாக்கி அறிக்கைகள் வெளியாகும்.
கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களை எடுத்த பந்துலு "ஆயிரத்தில் ஒருவன்' எடுத்தபோதும், பல சிவாஜி படங்களை இயக்கி விட்டு 'உரிமைக்குர'லுக்காக அவரிடம் போன ஸ்ரீதரிடமிருந்தும் அப்படி அறிக்கைகள் வெளியாயின.
அதில் பெரிய கொடுமை என்னவென்றால் 'நவராத்திரி','திருவிளையாடல்', சரஸ்வதி சபதம், 'தில்லானா மோகனாம்பாள்' போன்ற வெற்றிப்படங்களை எடுத்து பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன், எம்.ஜி.ஆரை வைத்து 'நவரத்தினம்' படத்தை பாதி எடுத்த நிலையில் ஒரு அறிக்கை விட்டார் (நிர்ப்பந்தம்???). அதில் அவர் "நான் சிவாஜியை வைத்து படம் எடுத்தேனே தவிர பணம் எடுக்கவில்லை" என்று மனச்சாட்சிக்கு விரோதமாக சொல்லியிருந்தார்.
அதைப்படித்த சிவாஜி ரசிகர்கள் மற்றும் விவரம் தெரிந்த அனைவருக்கும் கொதிப்பு. நவரத்தினம் படத்தை பெரும் பொருட்செலவுடன் எம்.ஜி.ஆருக்கு ஒன்பது கதாநாயகிகளைப் போட்டு எடுத்தார்.
படம் வெளியானது. ரிஸல்ட்..???. படம் 'அட்டர் ஃப்ளாப்' (படுதோல்வி). ரிஸல்ட்டை அறிந்ததும் ஏ.பி.நாகராஜன் அதிர்ச்சியந்தார். மனத்தளவில் பெரிதும் பாதிப்படைந்த அவர் மாரடைப்பில் காலமானார்.
அப்போது 'நவரத்தினம்' வெளியாகி இருபத்தி ஒண்ணாவது நாள்.