-
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த ...மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்...... Thanks wa..
-
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன், அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.
எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.
மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.
வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்..... Thanks wa.,
-
1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!
உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’
ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!
நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’
சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.
எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்..... Thanks wa., Groups...
-
1967 ம் ஆண்டு பெற்றதால் பிள்ளையா படத்தின் வெற்றி விழா சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்டனர்.மக்கள் கூட்டம் அலைமோதியது மேடையில் பேசிய. அனைவரும் படத்தின் பாடல்கள் .கதை. நடிப்பு . காட்சி .போன்றவற்றை குறித்து பேசினர் புரட்சித்தலைவரின் நடிப்பும் பாரட்டி பேசினர் பேரறிஞர் அண்ணா அவர்களும் தனது உரையில் புரட்த்தலைவரைப் புகழ்ந்து பேசினார் கடைசியாக நமது தெய்வம் பேச வேண்டியது மேடையில் வந்து நின்றதும் கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது புரட்சித்தலைவர் பேசினார். இங்கு அனைவரும் படத்தின் பெருமையைப் பற்றி பேசினார்கள் ஆனால் யாரும் படத்தின் தலைப்புக்கு சரியான உதாரணம் கூறவில்லை.
பெற்றால்தான் பிள்ளையா என்றால் மனிதர்கள் மட்டும் அல்ல அனைத்து உயிரினம் நமது பிள்ளைகள்தான் உதாரணம் வேப்பம்பிள்ளை. கருவேப்பிள்ளை தென்னம்பிள்ளை வாழைப்பிள்ளை கிளிப்பிள்ளை கீரிப்பிள்ளை அணீப்பிள்ளை இவையெல்லாம் கூட. நமது பிள்ளைகள்தான்
உங்கள் வீட்டில் ஆண்பிள்ளை பெண்பிள்ளை இல்லையென்று யாரும் வருத்தப்பட.வேண்டாம் ஒவ்வொரும் அவரவர் வீட்டிலே தென்னப்பிள்ளை வாழைப்பிள்ளை வளர்த்தாலே போதும் அவைகள்தான் உங்கள் பிள்ளைகள் ஆகும
தென்னப்பிள்ளை ஆண்பிள்ளை போன்றது அது தானாக வளர்ந்து விடும் அதுப்போல் ஆண்மகன் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் பண்பைக் வளர்த்துக்கொள்ளனும் தென்னப்பிள்ளை எப்படி தன்னையே பிறர்க்காக அர்ப்பணிக்கிறது அதுப்போல் ஒவ்வொரு ஆண்மகனும் நாட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்
வாழைப்பிள்ளை பெண் பிள்ளைப்போன்றது வாழைமரம் எப்படி முறையாக. மண்வளம் கொண்டு வேலி அமைத்து அளவான தண்ணீர் ஊற்றி கவனமாக பராமரித்து வளர்க்கிறோம் அதுப்போல் பெண்பிள்ளைகள் பெண்தெய்வம் போன்றது தெய்வத்துக்கு தரவேண்டிய அனைத்து மதிப்பும் மரியாதையும் பக்தியும் பெண்பிள்ளைகளுக்கு தரவேண்டும்.
வாழையடி வாழையாக வரும் தலைமுறையே வாழைப்பிள்ளை என்கிறோம்
அதுப்போல் பெண்பிள்ளைகள் நமது தலைமுறை காக்க வந்த வாழையடி வாழையாக வருகிறவர்கள்.
அதனால் ஒவ்வொரும் அவரவர் வீட்டீலே வாழைமரம் தென்னைமரம் வைத்து அவைகளையும் தன்பிள்ளைப்போல் வளர்க்கவேண்டும்
அது நமக்கும் நல்லது நமது தலைமுறைக்கும் நன்மை தரும் என்றார் புரட்சித்தலைவரின் பேச்சின் கருத்தைக்கேட்டதும் அண்ணா முதல் நடிகர் நடிகைகள் மக்கள் அனைவரும் வியர்ந்துபோய் கைத்தட்டல் அடங்க. வெகுநேரம் ஆனது............ Thanks fb., Groups..........
-
கடந்த சனியன்று (2/2/19) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற
இன்னிசை நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i65.tinypic.com/2133f4n.jpg
-
-
-
-
-